பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி

கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி பற்றிய விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி

புதுவாழ்வு திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கும் (கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியாக) குறைந்த பட்சம் ரூ.8.00 இலட்சம் முதல் ரூ.12.00 இலட்சம் வரை ஒதுக்கீடு செய்யப்படும். மேலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் குடும்பங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி மூன்று தவணைகளாக (40 : 40 : 20) குறிப்பிட்ட இலக்குகளை அடைந்த பின்பு விடுவிக்கப்படும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் துவக்க நிதியில் செயல்படுத்த வேண்டிய செயல்பாடுகள் அனைத்தையும் செய்து முடித்த பிறகு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் முதல் தவணை மற்றும் அடுத்தடுத்த தவணைகள் கீழ்கண்ட நிபந்தனையின் அடிப்படையில் விடுவிக்கப்படும். மேலும் முதல் தவணை விடுவிக்கப்படும் போது பிற்சேர்க்கை - 1 கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி ஒப்பந்தத்தில் கிராம வறுமை ஒழிப்பு சங்கமும் மாவட்ட சங்கமும் கையொப்பமிட வேண்டும்

அ. மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு குழுவின் திருப்திகரமான மதிப்பீட்டின் அடிப்படையில்

ஆ. சமூக தணிக்கைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில்

இ. கிராம சபையின் ஒப்புதலின் அடிப்படையில் கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி விடுவிக்கப்படும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியின் கீழ் செலவினம் மேற்கொள்ளும் முன் கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி கையேட்டினை கிராம சபையில் வைத்து விவாதித்து ஒப்புதல் பெறவேண்டும்.

இந்நிதியை முதல் மற்றும் இரண்டாவது தவணையில்

1. திறன் வளர்ப்பு நிதி (35 சதவிகிதம்)

2. சிறப்பு நிதி (50 சதவிகிதம்)

3. இளைஞர் மேம்பாட்டு நிதி (15 சதவிகிதம்) என மூன்று வகையாக பிரிக்கலாம்.

இந்நிதியை மூன்றாம் தவணையில்

1. திறன் வளர்ப்பு நிதி (60 சதவிகிதம்)

2. இளைஞர் மேம்பாட்டு நிதி (40 சதவிகிதம்) என இரு வகையாக பிரிக்கலாம்.

1. திறன் வளர்ப்பு நிதி

மக்கள் அமைப்புகளை வலுப்படுத்தவும்,

2. சிறப்பு நிதி

மாற்றுத்திறனாளி மற்றும் நலிவுற்றோர் வளர்ச்சி பெற்று சமூக மேம்பாடு அடையவும்,

3. இளைஞர் மேம்பாட்டு நிதி

இளைஞர் அமைப்புகளை உருவாக்கி பொருளாதார மேம்பாடு அடையவும் பயன்படுத்தப்படும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியின் முக்கிய விதிகள்

கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியானது திட்டத்தின் உயிர் மூச்சு கொள்கைபடி பயன்படுத்தப்படும்

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் கிராம சபையால் குறைந்தது 70ரூ இலக்கு மக்களாலும் அதில் 50ரூ மகளிராலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட விதிகள், வழிமுறைகள் மற்றும் திட்டத்தின் அடிப்படையில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் முடிவுகளை எடுக்கும்.

கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியானது இலக்கு மக்களின் வறுமை குறைப்பு மற்றும் இலக்கு மக்களின் ஆற்றல் மேம்படுத்த உதவும் செயல்பாடுகளுக்கு பயன்படும். கிராம வறுமை ஒழிப்பு சங்க கையேட்டின் நிதி நிர்வாகம், கொள்முதல் சமூக மேம்பாட்டின் விதிகளுக்கு உட்பட்டு நிதி பயன்படுத்தப்படும். ஒவ்வொரு கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியின் தவணையும் இலக்குகளை அடைந்துள்ளது என்று சமூக தணிக்கை குழுவின் பரிந்துரையின் பேரிலும் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு குழுவின் மதிப்பீட்டின் படியும் விடுவிக்கப்படும்.

பொருட்கள், சேவைகள் மற்றும் வேலைகள் போன்றவற்றை கொள்முதல் விதிகளைப் பின்பற்றி கண்டிப்பாக சமூகமே மேற்கொள்ளும்.

கணக்காளர், சமூக மாற்றுத்திறனாளி ஊக்குநர், சமூக சுய உதவிக்குழு பயிற்றுநர் மற்றும் சமூக வல்லுநர்களின் சேவைகளைப் பெறுவதற்கான வெளிப்படையான விதிகள் பின்பற்றப்படுவதோடு அதற்கான முடிவெடுத்தலும் ஒப்புதலும் கிராம சபையில் நடைபெறும்

கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதி பெறும் வழிமுறைகள்

1)கிராம சபை ஒப்புதலுடன் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைத்தல்

2)கிராம வறுமை ஒழிப்பு சங்க திட்டம் தயாரித்து கிராம சபை ஒப்புதல் பெறுதல்

3)மாவட்ட அலுவலகத்துடன் கூட்டுநிதி ஒப்பந்தம் கையெழுத்திடல்

4)கிராம வறுமை ஒழிப்பு சங்கம் முதல் தவணை பெறுவதற்கு பிற் சேர்க்கை 1 ஒப்பந்தத்தில் கையொப்பமிடுதல் மற்றும் தகவல் பலகையில் தெரிவித்தல்

5)திட்டத்தின் கையேட்டில் உள்ளபடி கிராம வறுமை ஒழிப்பு சங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்

6)அடுத்தடுத்த தவணைகள் நிதிகள் பெற தகுதி பெற்று சமூக தணிக்கை குழு சான்றிதழுடன் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு குழுவின் பரிந்துரையுடன் விண்ணப்பித்தல்

7)கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மீதமுள்ள தவணையை பெறுதல் மற்றும் தகவல் பலகையில் வெளியிடுதல்

கிராம வறுமை ஒழிப்பு சங்க திறன் வளர்ப்பு நிதி

கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியின் மூன்று தவணை நிதியிலிருந்து மொத்தமாக 40 விழுக்காடு நிதியை திறன் வளர்ப்பு நிதியாக பயன்படுத்தலாம்.

இந்த நிதி

 • கிராம வறுமை ஒழிப்பு சங்கத் திட்டம் மற்றும் வாழ்வாதார திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தும் அளவிற்கு மக்கள் அமைப்புகளின் திறன்களை வளர்க்கவும்.
 • விடுபட்ட இலக்கு மக்களை சுய உதவிக்குழுக்களாக அமைத்து வலுப்படுத்தவும்
 • வேலை வாய்ப்புப் பெறும் அல்லது (குறிப்பாக இளைஞர்களின்) தொழில் துவங்கும் அளவிற்கு இலக்கு மக்களின் தொழில் திறன்களை வளர்க்கவும் பயன்படுத்தலாம்.

திறன் வளர்ப்பு நிதியில் செய்யக்கூடிய தகுதியான நடவடிக்கைகள்

1. செய்தித்தொடர்பு செயல்பாடுகள்

2. கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலகத்தினை அமைத்தல் மற்றும் அதன் நிர்வாக செலவுகளை மேற்கொள்ளுதல், குடியிருப்பு கூட்டங்கள் நடத்துதல்.

3. கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் தொலைநோக்கு திட்டம் தயாரித்தல்.

4. திறன் வளர்ப்பு-பயிற்சிகள் மற்றும் களப்பயணங்கள் மேற்கொள்ளுதல்

5. சுய உதவிக்குழுக்களை உருவாக்குவது மற்றும் பலப்படுத்துவது

6. சமூக சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் சமூக மாற்றுத்திறனாளி ஊக்குநர் மற்றும் சமூக வல்லுநர்களை உருவாக்குவது

7. ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழு கூட்டமைப்புகளை உருவாக்குவது மற்றும் பலப்படுத்துவது

8. இளைஞர் பிரிவை சாராதவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளித்தல்

9. வாழ்வாதார வள ஆய்வு மூலம் வளங்களை கண்டறிதல்

10. தொழில் திட்டங்கள் தயாரிக்க உதவுதல்

11. மதிப்பீடு செய்வதற்கான செலவுகள் மேற்கொள்ளுதல்

12. இதர செலவினங்கள்

1. செய்தித்தொடர்பு செயல்பாடுகள்

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்தவும், மக்கள் பங்கேற்பு முறையில் முடிவுகள் எடுக்கவும், கீழே குறிப்பிட்டது போல கூட்டம் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை கிராம வறுமை ஒழிப்பு சங்கம் நடத்தலாம்.

இத்திட்டத்தின் அடிப்படைக் கொள்கைகள், திட்ட செயல்பாடுகள் குறித்த பல்வேறு தகவல்கள் போன்றவற்றை தேவையின் அடிப்படையில் தொடர்ந்து குடியிருப்பு வாரியாக விழிப்புணர்வு முகாம்களை நடத்தி எடுத்து கூறுவது.

மாற்றுத்திறனாளிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் அவர்களைக் கண்டறிவது குறித்த விழிப்புணர்வு முகாம்களை குடியிருப்பு வாரியாக நடத்துவது.

மருத்துவ முகாம்கள் நடத்துவது.

சமூக பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்துவது.

தொழில் வளங்களை கண்டறியும் முகாம் போன்ற செய்தி தொடர்பு செயல்பாடுகளை கிராம அளவில் மேற்கொள்ள வேண்டும்.

2. கிராம வறுமை ஒழிப்பு சங்க அலுவலகத்தினை அமைத்தல் மற்றும் அதன் நிர்வாக செலவுகள்:

அலுவலகக் கட்டடத்திற்கு ஒரு முறை மட்டும் பாராமரிப்பு / பழுதுபார்ப்பு செலவு செய்வது மற்றும் சரியான விலையில் அலுவலகத்திற்கு தேவையான பீரோ, மேஜை மற்றும் நாற்காலி போன்ற பொருட்கள் வாங்குதல்

அலுவலக வாடகை , எழுது பொருட்கள், மின் கட்டணம், போக்குவரத்து செலவு, கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு கணக்கர், சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர், சமூக வல்லுநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ஊக்குநரின் சேவைகளைப் பெறுவதற்கான ஊக்கத் தொகை, பதிவேடுகளைக் கொள்முதல் செய்வது போன்றவை.

விதிமுறைகள்:

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தினை செயல்படுத்த தேவையான உதவிகளை பொது மக்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக கணக்கு பராமரித்தல், மாற்றுத்திறனாளி மற்றும் நலிவடைந்தோர் தேவைகளை கவனித்தல்.

இதற்கான விதிமுறைகளை கிராம வறுமை ஒழிப்பு சங்கம் முடிவு செய்து (தகுதி, மதிப்பூதிய தொகை, வேலை நேரம் போன்றவை) கிராம சபையில் ஒப்புதல் பெற வேண்டும்.

3. கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் தொலைநோக்கு திட்டம் தயாரித்தல்

கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் தொலைநோக்கு மற்றும் அதற்கான திட்டமிடல் பயிற்சியினை பங்கேற்பு முறையில் நடத்தி குடியிருப்பு வாரியாக திட்டம் தயாரித்து பின்னர் அதனை தொகுத்து விவரங்களை (தொலைநோக்கு திட்டத் தொகுப்பு) அறிவிப்புப் பலகையில் குறைந்தது 7 நாட்களுக்கு வெளியிட வேண்டும்.

4. திறன் வளர்ப்பு-பயிற்சிகள் மற்றும் களப்பயணங்கள்

திட்ட செயல்பாடுகளை உள்வாங்குவது குறித்த பயிற்சியினை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும், சமூக தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கும், அலுவலகப் பிரநிதிகளுக்கும், துணைக்குழுக்களுக்கும், கூட்டமைப்பின் அலுவலகப் பிரதிநிதிகளுக்கும் அளிப்பது.

கணக்கு மற்றும் பதிவேடுகள் பராமரிப்பு பயிற்சியினை கிராம வறுமை ஒழிப்பு சங்க கணக்காளர், செயலாளர், பொருளாளர் மற்றும் ஒரு சமூக தணிக்கைக் குழு உறுப்பினர் ஆகியோருக்கு அளிப்பது.

நன்றாக செயல்படும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் செயல்பாடுகள் மற்றும் அனுபவங்களை அறிய கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் சமூக தணிக்கை குழு உறுப்பினர்கள் களப்பயணம் செல்வது.

விதிமுறைகள்:

 • புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பொழுது அவர்களுக்கும் பயிற்சி கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
 • கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மூலம் கொடுக்கப்படும் பயிற்சிகளில் உறுப்பினர் பங்கேற்பு முழுமையாக இருத்தல் வேண்டும்.
 • பயிற்சி கொடுப்பவரின் ஊக்கத்தொகை மற்றும் காபி, தேநீர், மதிய உணவு, பயிற்சிக்கான பொருட்கள் போன்ற செலவினங்களை மேற்கொள்ளலாம்.
 • பயிற்சியின் போது உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை எதுவும் வழங்கக் கூடாது.

5. சமூக சுய உதவிக்குழு பயிற்றுநர்களை உருவாக்குவது

தேவைக்கேற்ப சமூக சுய உதவிக்குழு பயிற்றுநர்களைக் கண்டறிந்து அவர்களை சுய உதவிக்குழுக்களுக்கு உறுதுணை செய்யும் வகையில் உருவாக்குவது.

உரிய கால இடைவெளியில் சமூக சுய உதவிக்குழு பயிற்றுநர்களின் தரத்தினை கண்டறிந்து மேம்படுத்துவது.

6. சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுனர்களை தேர்ந்தெடுக்கும் போது

 • நன்கு செயல்படகூடிய 2 வருட குழுக்களில் உள்ளவர்கள், நன்கு பேசும் திறமை வாய்ந்தவர்கள், கூர்மையான அறிவுடையவர்கள், சேவை மனப்பான்மை உள்ளவர்கள், குடும்பத்தினரின் ஒப்புதல் பெற்றவர்கள் மற்றும் நேரம் ஒதுக்க கூடியவர்களை பயிற்சி எடுப்பவருக்கு தேவையான தகுதியாக நிர்ணயிக்க வேண்டும்.
 • சமுதாய சுய உதவிக்குழு பயிற்றுநர் பணி குறித்து ஆர்வமுள்ள சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு விளக்கி கூறுதல்.
 • தகுதியான, அனுபவமுள்ள உறுப்பினர்கள் மூலம் (கூட்டமைப்பு, திட்ட பணியாளர்கள்) தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்தல்.
 • தேர்வானவர்களின் விபரங்களை தகவல் பலகையில் வெளியிடுதல் மற்றும் கிராம சபை ஒப்புதல் பெறுதல்.
 • தேர்வு பெற்றவர்களுக்கு தேவையான பயிற்சி அளித்தல்.
 • சமூக வல்லுநர்களின் சேவையை, எப்போது, எங்கு தேவையோ அப்போது பயன்படுத்தி கொள்ளுதல்.

7. கிராம மாற்றுத்திறனாளிகள் ஊக்குநர் நியமனம் செய்வது

ஒரு ஊராட்சியில் பத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பயிற்சி தேவைப்படும் பட்சத்தில், ஒரு மாற்றுத்திறனானியோ அல்லது மாற்றுத்திறனாளியின் பெற்றோரையோ கிராம மாற்றுத்திறனாளி ஊக்குனராக, கிராம சபையின் ஒப்புதலுடன், கிராம வறுமை ஒழிப்பு சங்கம் நியமனம் செய்யலாம்.

குறைவான எண்ணிக்கையினர் இருந்தால், பக்கத்து ஊராட்சியிலுள்ள மாற்றுத்திறனாளிகள் ஊக்குனரின் உதவியுடன் மறுவாழ்வு பணியினை மேற்கொள்ளலாம்

இவர், தனிப்பட்ட முறையில் பயணம் செய்பவராகவும், குறைந்தது பத்தாம் வகுப்புவரை படித்தவராகவும் இருக்க வேண்டும். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம்.

இவரை, சிறப்பு குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் அந்த ஒன்றியத்திற்காக நியமிக்கப்பட்ட ஊனமுற்றோருக்கான தொண்டு நிறுவனத்தின் ஆலோசனையின் பேரில் தேர்வு செய்யலாம்.

8. சுய உதவிக்குழுக்களை உருவாக்குவது மற்றும் பலப்படுத்துவது:

கிராமத்திலுள்ள ஏழை எளிய மக்கள் ஒன்றாக சேரும் போது வலிமை உடையவராய் ஆவர். அதற்கு சுய உதவிக் குழு மிகச் சிறந்த அமைப்பு ஆகும். விடுபட்ட இலக்கு மக்களை (மிகவும் ஏழை, ஏழை குடும்பங்கள், மாற்றுத்திறனாளி, நலிவுற்ற உறுப்பினர்கள்) சுய உதவிக் குழுவாக சேர்த்து வளர்ச்சி பெற உதவி செய்வது கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்தின் முக்கிய பொறுப்பாகும்.

ஒரு குழந்தையை நல்ல குழந்தையாக வளர்க்கும் பொறுப்பு ஒரு தாயினுடையது. அது போல ஊராட்சியிலுள்ள சுய உதவிக்குழுக்களை நல்ல வலுப்பெற்ற குழுவாக உருவாக்குதல் கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்தின் பொறுப்பாகும். குழுக்களை வலுப்படுத்த கீழ்காணும் உதவிகளை கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் வழங்கலாம்.

 • திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்குதல் (உறுப்பினர்கள், நிர்வாகிகள், பதிவேடுகள் பராமரித்தல்)
 • கணக்குப் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை ஒரு முறை மட்டும் அளித்து உதவுவது
 • சுய உதவிக்குழு உறுப்பினர்கள், அலுவலகப் பிரதிநிதிகள், கணக்காளர் போன்றவர்களின் திறன்களை வளர்ப்பது.
 • சுய உதவிக்குழுக்களை கண்காணிப்பது மற்றும் தர மதிப்பீடு செய்வது.
 • குழு வங்கி கணக்கு தொடங்கி மூன்று மாதத்திற்கு பின் சமூக தரமதிப்பீடு செய்து தகுதியான ஒவ்வொரு சுய உதவிக்குழுவிற்கும் ஆதார நிதி ரூ.10000 முதல் ரூ.20000 வரை வழங்குதல் (தகுதியான குழுக்கள் என்பது சமுதாய தரமதிப்பீட்டில் நன்று மற்றும் மிக நன்று பெற்ற குழுக்கள்)
 • சுய உதவிக்குழுக்கள் தொடர்ந்து நிதி இணைப்புகளையும், பிற தேவைப்படும் இணைப்புகளையும் பெற உதவுவது.
 • சுய உதவிக்குழுக்கள் தொடர்ந்து தணிக்கை செய்ய உதவி செய்வது.
 • தணிக்கை செய்யும் போது ஒருமுறை மட்டும் செலவுகளை மேற்கொள்ளலாம்
 • ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழு கூட்டமைப்புகளை உருவாக்குவது

9. ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழு கூட்டமைப்புகளை உருவாக்குவது மற்றும் பலப்படுத்துவது:

சுய உதவிக்குழு கூட்டமைப்பு உறுப்பினர்கள், அலுவலகப் பிரதிநிதிகள் மற்றும் கணக்கரின் திறன்களை மேம்படுத்துவது.

கணக்குப்புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை ஒரு முறை மட்டும் அளித்து உதவுவது.

அமுதசுரபி நிதி (வாழ்வாதார நிதி) வழங்கிய முதல் 6 மாதத்திற்கு மட்டும் சுய உதவிக்குழு கூட்டமைப்பின் நிர்வாக செலவுகளை வழங்குவது.

10. திறன் வளர்ப்பு பயிற்சி - இளைஞர் பிரிவை சாராதவர்களுக்கு

இளைஞர் பிரிவை சாராத மற்றவர்களுக்கு (35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு) தொழில் சார்ந்த திறன் வளர்ப்பு பயிற்சிகளை அளிப்பது.

11. வாழ்வாதார வள ஆய்வு:

இலக்கு மக்கள் மற்றும் மக்கள் அமைப்புகளின் உதவியுடன் உள்ளூர் வளங்களை கண்டறிதல்.

வளஆய்வுக்கு தேவையான பொருட்களை வாங்குவது

12. தொழில் திட்டங்கள் தயாரிக்க உதவுதல்:

தொழில் குழுக்களுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைக்கு ஏற்பாடு செய்தல்

தொழில் திட்டம் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தல்

13. மதிப்பீடு செய்வதற்கான செலவுகள்:

தொழில் திட்டத்தின் மதிப்பீடு சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தல்

கிராம வறுமை ஒழிப்பு சங்க தவணை நிதியினை விடுவிப்பதற்கான இலக்குகளை அடைந்துள்ளதை மதிப்பீடு செய்தல்

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு தவணை நிதிகளை(அமுதசுரபி) பெறுவதற்கான இலக்குகளை அடைந்துள்ளதை மதிப்பீடு செய்தல்.

14. ஒத்த தொழில் குழுக்களை உருவாக்குதல்:

ஒரே தொழில் / சேவை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களை ஒருங்கிணைத்து ஒத்த தொழில் குழுக்கள் உருவாக்குவது

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாடு

2.94444444444
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top