பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் - பாகம் 4

ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மக்கள் சாசனம் நான்காம் பாகம் இங்கு விவரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மகளிர்மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மகளிரை சுய உதவிக்குழுக்களாக அமைத்து, திறன் வளர் பயிற்சிகள் வழங்கி, கூட்டமைப்புகள் மூலம் ஒருங்கிணைத்து, வங்கிகள் மூலம் கடனுதவிகள் பெறச்செய்து, சிறு தொழில்களில் ஈடுபடுத்தி வருவாயைப் பெருக்குவதன் மூலம் வறுமையை குறைத்து சமுதாய மற்றும் பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்திட வேண்டும் என்பதற்காக 'தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்’ 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்நிறுவனம், மாநிலத்திலுள்ள வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு நீடித்த வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித்தரும் நோக்கத்துடன் 2012-13 ஆண்டிலிருந்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தினை செயல்படுத்தி வருகிறது.

சுய உதவிக்குழுக்களுக்கான திட்டங்களும் அதன் செயல்பாடுகளும்

அ. சுயஉதவிக்குழுக்கள் கடன் உதவி பெறுவதற்கான தகுதிகளும் நிபந்தனைகளும்

* குறைந்தபட்சம் 6 மாதகாலம் முடிவுற்ற சுயஉதவிக்குழுக்கள்

* சுயஉதவி குழுக்கள் கீழ்கண்டவற்றை தவறாது கடைபிடித்திருக்க வேண்டும்.

1) கூட்டங்கள் நடத்துதல்

2) சேமிப்பு

3) உள்கடன் கொடுத்தல்

4) கடன் வசூலித்தல்

5) பேரேடுகள் பராமரித்தல்

* தரமதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

திட்டத்தின் செயல்பாடு

* வருமானம் ஈட்டக் கூடிய தொழில்களை மேற்கொள்ள வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்பட்டு சுயஉதவிக்குழு பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வழிவகை செய்யப்படும்.

* சுய உதவிக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் நிலைத்த தன்மையை அடைய இரண்டாவது மறுகடன் மற்றும் தொடர் மறுகடன் இணைப்பு வங்கிகள் மூலமாக வழங்கப்படும்.

கடன் அளவு :-

வங்கிகள் மூலம் முதல் கடன் இணைப்பாக - ரூபாய் 50,000/-

இரண்டாவது கடன் இணைப்பு - ரூபாய் 1,00,000/-

மூன்றாவது கடன் இணைப்பு -ரூபாய் 2,00,000/-

நான்காவது கடன் இணைப்பு- ரூபாய் 5,00,000 முதல் 10,00,000 வரை வழங்கப்படும்.

தொடர்புகொள்ள வேண்டிய அலுவலர் : திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அனைத்து மாவட்டங்கள்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைமக்களைக் கண்டறிந்து சுயஉதவிக்குழுக்களாக ஒருங்கிணைத்து அவர்களுக்கான நிலைத்த தன்மையுடைய அமைப்புகளை உருவாக்கி பல்வேறு திறன் பயிற்சிகள் மூலம் வலுப்படுத்தி, இலாபம் தரக்கூடிய சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதன் மூலம் அவர்களது வாழ்வாதார நிலையை உயர்த்தி, வறுமையை ஒழிப்பதே இவ்வியக்கத்தின் குறிக்கோளாகும்.

திட்டங்கள்

தமிழ்நாட்டிலுள்ள 31 ஊரக மாவட்டங்களில் மக்கள்நிலை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்ட ஏழைமக்களின் குடும்பங்களை 5 முதல் 7 ஆண்டுகளில் வறுமையிலிருந்து விடுபடச்செய்யும் நோக்கில் வலுவான மற்றும் உயிரோட்டமான மக்கள் அமைப்புகளை உருவாக்கி, வாழ்வாதாரத்தை உயர்த்தி, நிதி மற்றும் பல்வேறு சேவைகளை பெற வழிவகை செய்வதே இவ்வியக்கத்தின் நோக்கமாகும்

திட்டத்தின் உத்திகள்

இவ்வியக்கத்தின் குறிக்கோள்களை அடைவதற்காக பின்வரும் திட்ட செயலாக்க உத்திகள் வகுக்கப்பட்டுள்ளது.

* சமூக உள்ளடக்கம் மற்றும் பொது சமூக ஒருங்கிணைத்தல்.

* ஏழைகளுக்கு நிறுவனவசதிகள் செய்தல்.

* நிதி உள்ளடக்கம்.

* பொருளாதார உள்ளடக்கம் – ஏழைகளுக்கு நீடித்த வாழ்வாதாரத்தினை ஏற்படுத்துதல்.

* திறமைகளை வளர்த்தல் மற்றும் வேலைவாய்ப்பு பெற்றுத்தருதல்.

* இறுதிகட்ட சேவை வழங்குதல் (சமூக வல்லுநர்கள் மற்றும் சமூக முனைவோர் மூலமாக).

* அரசின் இதர திட்டங்களை ஒருங்கிணைத்து நிதியாதாரங்களை ஏற்படுத்தித்தருதல்.

திட்டத்தின் செயல்பாடு

• மத்திய அரசு திட்டமான தேசிய ஊரக வாழ்வாதார இயக்கமானது தமிழக அரசு மூலமாக தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கமாக ஏழாண்டுத் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் சுமார் ரூ. 3000 கோடியில் செயல் படுத்தப்பட்டு வருகிறது.

* 2012-13 ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு எடுக்கப்பட்ட 60 வட்டாரங்களில் உள்ள 2,250 கிராம ஊராட்சிகளிலும் 2,316 கிராம வறுமை ஒழிப்புச்சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

* 2013-14 ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு எடுக்கப்பட்ட 110 வட்டாரங்களில் உள்ள 3,391 கிராம ஊராட்சிகளிலும் 3,473 கிராமவறுமை ஒழிப்புச்சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

* 2014-15ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு எடுக்கப்பட்ட 95 வட்டாரங்களில் உள்ள 2,451 கிராம ஊராட்சிகளிலும் 2,480 கிராமவறுமை ஒழிப்புச்சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

* அடிப்படை தகவல் சேகரிப்பு மற்றும் தகவல் தொடர்பு நடவடிக்கைகள் 265 வட்டாரங்களிலும் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

* இத்திட்ட செயல்பாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் மக்கள் நிலை ஆய்வுப்பணி முடிக்கப்பட்டுள்ளது.

* 8,269 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களிலும் சமூக தணிக்கைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* இவ்வியக்கத்தின் கீழ் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ள 2388 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு மொத்தமாக ரூ.167.84 கோடி வறுமை ஒழிப்புக்காக வழங்கப்பட்டுள்ளது.

* இரண்டாம் கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ள 3,518 கிராமவறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு மொத்தமாக ரூ.114.90 கோடி வறுமை ஒழிப்புக்காக வழங்கப்பட்டுள்ளது.

* மூன்றாம் கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ள 2,451 ஊராட்சிகளுக்கு தலா ரூ. 55,000 வீதம் ரூ. 13.48 கோடி வறுமை ஒழிப்புக்காக வழங்கப்பட்டுள்ளது.

* ஆக மொத்தம் இதுவரை ரூ. 296.22 கோடி ரூபாய் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் : திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அனைத்து மாவட்டங்கள்

திறன் பயிற்சி

அ. தொழில் மற்றும் பணியமர்வு பயிற்சி

தீனதயாள் உபாதியாய கிராமின் கௌசல்ய யோஜனா (DDU-GKY) திறன் பயிற்சி திட்டமானது, தமிழ்நாட்டில் 2012-13 ஆண்டு முதல் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் ஒரு அங்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வியக்கம் கிராமப்புற இளைஞர்களின் தேவைகளின் அடிப்படையில் அவர்களின் குடும்ப வருமானத்தை விரிவு படுத்தும் நோக்கத்துடன் அவரவர் தொழில் விருப்பங்களுக்கு ஏற்றவாறு கற்று தரப்படுகிறது. இத்திட்டமானது, கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் திறன் மேம்பாடு பயிற்சியளித்து, தனியார் நிறுவனங்களில் பணியமர்த்துவதை அடிப்படையாகக் கொண்டிருப்பதுடன், அவர்களுக்குத் தொடர்ந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட NCVT / SSC பாடத்திட்டங்களின் படிபயிற்சி வழங்கும் பயிற்சி நிறுவனங்களை அங்கீகரித்தும், பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றளித்தும், பயிற்சி பெற்றவர்களில் குறைந்தது 70 விழுக்காடு பயிற்சியாளர்களை 6,000/-ரூபாய் மாத வருமானத்திற்கு குறையாமல் பணியில் அமர்த்தியும் உள்ளிட்ட பல்வேறு தொடர் முயற்சிகளின் மூலமும் கிராமப்புறங்களில் வறுமையை ஒழித்திடும் உன்னத நோக்கத்துடன் அரசுநடவடிக்கை எடுத்து வருகின்றது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

* 3 முதல் 12 மாதங்கள் வரையிலான வேலைவாய்ப்புடன் கூடிய சந்தை சார்ந்த தொழில் திறன்பயிற்சிகள்.

* தொழில் திறன்பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்திரவாதம்

திட்டத்தில் பயன்பெறுபவர்கள் விழுக்காடு

* 50 விழுக்காடு அட்டவணை மற்றும் பழங்குடியினர்

* 15 விழுக்காடு சிறுபான்மையினர்

• 3 விழுக்காடு மாற்றுத்திறனாளிகள்

• 33 விழுக்காடு பெண்கள் (அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கியபின்)

பயிற்சியில் சேருவதற்கான தகுதிகள்

* 18 வயதிலிருந்து 35 வயது வரை உள்ள இளைஞர்கள் (ஆண், பெண் இருபாலருக்கும்)

*பெண்கள், மாற்றுத்திறனாளிகள், நலிவடைந்தோர் மற்றும் விளிம்பு நிலை பழங்குடியினர் முதலியோருக்கும் அதிகபட்ச வயது வரம்பு 45 ஆக தளர்த்தப்பட்டுள்ளது.

திட்ட செயல்பாடு

* தீனதயாள் உபதியாய கிராமின் கெளசல்ய யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் மூலமாக நிரந்தர பதிவுஎண் (PRN) பெற்ற பயிற்சி நிறுவனங்களால் இணையதளம் மூலமாக சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து அதன் அடிப்படையில் மாநில அளவிலான உயர்மட்ட குழுவானது சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குகிறது.

* மாநில அளவிலான உயர்மட்ட குழுவின் அனுமதியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க தலைமை அலுவலகத்தின் வாயிலாக பயிற்சி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் இடப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகின்றது.

* ஒவ்வொரு பயிற்சிக்கான திறன் இடைவெளி ஆய்வின் விபரங்களை பயிற்சி அளிக்கும் நிறுவனம் அளிப்பதோடு, அதற்கான வேலை வாய்ப்பிற்கான சாத்தியக் கூறுகள் தற்போது மற்றும் வருங்காலத்தில் இருப்பதையும் உறுதி செய்து அவ்விவரங்களை அந்நிறுவனம் வழங்குகிறது.

* தரமான பாடத்திட்டம் மற்றும் SSC/NCVT ஆகியவற்றால் பரிந்துரைக்கப்பட்ட அடிப்படை பாடத்திட்டத்தினை அனைத்து பயிற்சிகளுக்கும் பின்பற்றுவதுடன் அடிப்படை ஆங்கிலத்தில் பேச்சுத்திறன், அடிப்படை கணினி அறிவுமற்றும் மென்திறன் போன்றதிறன் மேம்பாட்டு பாடங்களையும் கொண்டதாக பாடத் திட்டம் இருக்கும்.

* பயிற்சியின் பாடத்திட்டமானது 40 விழுக்காடு விளக்கப்பாடமும், 60 விழுக்காடு செய்முறைப் பயிற்சியும் கொண்டிருப்பதுடன் பயிற்சியின் போது பாடத்திட்ட குறிப்புகளும் அளிக்கப்படுகின்றது.

* பயிற்சி காலத்தில், பயிற்சிபெறும் இளைஞர்களுக்கு சீருடை வழங்கப்படுகிறது.

* நிறுவன பயிற்சிக்குப்பின் இரண்டாம் கட்டமாக மொத்த பயிற்சிகால அளவில் மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமல் பணியமர்த்தும் இடத்திலேயே, களப்பயிற்சி (OJT- On the Job Training) அளிக்கப்படுகிறது.

* பயிற்சி நிறைவு பெற்ற உடன் DGET மற்றும் NSDC ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பயிற்சியாளர்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ்கள் ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் வழங்கப்படுகிறது.

* பயிற்சி நிறுவனங்கள், பயிற்சிபெற்ற இளைஞர்களுக்கு குறைந்தது ஓராண்டு காலம்வரை ஆலோசனை வழங்கி அவர்கள் பணியில் தொடர்ந்து நீடிப்பதற்கும் அவர்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கவும் வழிவகை செய்யப்படுகின்றது.

உண்டு உறைவிடப் பயிற்சி

2016-17 முதல் இப்பயிற்சியானது உண்டு உறைவிடப்பயிற்சியாகவும் வழங்கப்படுகிறது. அவ்வாறு தங்கிபயிலாத முறையில் வழங்கப்படும் பயிற்சிக்கு ஒவ்வொரு இளைஞருக்கும் நாளொன்றுக்கு ரூ.100 என்ற வீதத்தில் அவர்கள் வருகைதந்த காலத்திற்கு கணக்கிடப்பட்டு மதிய உணவு மற்றும் போக்குவரத்துக் கட்டணத்திற்காக அவரவது வங்கிகணக்கில் தொகை வரவு வைக்கப்படுகிறது.

பணியமர்வுக்கு பின் அளிக்கப்படும் ஊக்கத்தொகை

மக்கள் நிலை ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ்வாழும் குடும்பங்களை சார்ந்த திறன் பயிற்சி பெற்று பணியில் அமர்த்தப்பட்ட இளைஞர்களுக்கு அவர்களது உடனடி தேவையை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட காலத்திற்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகையாக அவர்களின் வங்கிகணக்கில் வரவுவைக்கப்படுகிறது.

அந்தந்த மாவட்டத்தில் பணியில் இருந்தால் 2 மாதங்களுக்கும், மாவட்டத்திற்கு வெளியே மாநிலத்திற்குள் பணியிலிருந்தால் 3 மாதங்களுக்கும், மாநிலத்தை விட்டு வேறுமாநிலத்தில் பணியிலிருந்தால் 6 மாதங்களுக்கும் இவ்ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

திறன் பயிற்சி சாதனைகள் (2012-2016)

2012 முதல் 2016 ஆண்டு வரை, 40,029 இளைஞர்களுக்கு ஒட்டுநர் பயிற்சி, தகவல் தொழில்நுட்பம், ஆடைகள் மற்றும் ஆயத்த ஆடை, விருந்தோம்பல், கட்டுமானம், சுகாதாரம், சில்லறை வணிகம் மற்றும் அழகுகலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் திறன் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களில் 31,167 இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

2016-17 முதல் 2018-19 ஆண்டு வரை மூன்றாடுகளில் 44,416 இளைஞர்களுக்கு ரூ.565.96 கோடி செலவில் பயிற்சிகள் வழங்கப்பட்டு பணியமாத்தப்பட உள்ளனர்.

ஆ. வேலைவாய்ப்பு முகாமின் மூலம் நேரடி வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு முகாமானது வேலை கொடுப்பவர் மற்றும் வேலை தேடுபவர்களை ஒரு குடையின் கீழ் இணைக்க தமிழக அரசால் துவக்கப்பட்ட ஒரு தனித்துவம் வாய்ந்த முன் முயற்சியாகும். இம்முகாம்களில் இளைஞர்களின் தகுதிமற்றும் திறன்களுக்கு ஏற்றவாறு பணியமர்வு செய்யப்படுகின்றனர்.

இம்முகாம்களுக்கு மேற் கொள்ளப்படும் செயல்பாடுகள் பின்வருமாறு :

* தமிழ்நாடுமாநில ஊரகவாழ் வாதார இயக்கம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்துவதற்கு நாள், இடம் மற்றும் தேதிபற்றி ஊரகபகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

* வேலை வாய்ப்பு அளிக்கும் நிலையில் உள்ள தொழில் மற்றும் உற்பத்தி நிறுவனங்களை இம்முகாம்களில் பங்கேற்க அழைப்புவிடுத்தல்.

* முறையான பதிவு, கலந்தாய்வு மற்றும் நிறுவனங்களின் தேவைக்கேற்ப இளைஞர்களை தேர்வுசெய்தல்.

2015-16 ஆம் ஆண்டில் மாநிலத்தின் அனைத்துமாவட்டங்களையும் உள்ளடக்கிய வாழ்வாதாரப் பகுதிகளில் மொத்தம் 90 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் 2,464 நிறுவனங்கள் பங்கேற்றனர். அவற்றில் 36,653 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, பல்வேறு தனியார் நிறுவனங்களில் குறைந்தது 5,000 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரையிலானமாத வருமானத்திற்கு பணியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2016-17 ஆம் ஆண்டில் 385 வேலைவாய்ப்பு முகாம்கள் மாநிலத்தின் அனைத்து வட்டாரங்களிலும் வட்டாரத்திற்கு ஒன்று வீதம் நடத்திட இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டு அதில் நாளது வரை 266 வட்டாரங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 2,847 நிறுவனங்கள் பங்கேற்றனர். இம்முகாம்களின் வாயிலாக 24,850 இளைஞர்கள் தமிழ்நாடு ஊரகவாழ் வாதார இயக்க செயல்பாடுகளின் மூலம் பல்வேறு நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தொடர்புகொள்ள வேண்டிய அலுவலர் : திட்டஇயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், அனைத்து மாவட்டங்கள் (சென்னை நீங்கலாக)

MGNREGS - PROJECT LIFE - (மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட தொடர் வேலைவாய்ப்பிற்கான வாழ்வாதார திட்டம்)

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பயன் பெற்ற பயனாளி குடும்பங்களுக்கு நிரந்தர வருமானத்தை ஏற்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி திட்டம் உருவாக்கப்பட்டது. இத்திட்டமானது 2015-16ம் ஆண்டு முதல் இம்மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

* இப்பயிற்சி திட்டத்தின் மூன்று முக்கியகூறுகள் : ஊதியம் சார்ந்த வேலைவாய்ப்பு பயிற்சிகள், சுயவேலை வாய்ப்பு திறன் சார்ந்த பயிற்சிகள் மற்றும் வாழ்வாதார முன்னேற்ற பயிற்சிகள். இதில் ஊதியம் சார்ந்த வேலைவாய்ப்பு பயிற்சிகள் மத்திய அரசின் MGNREGS அலகின் நிதி ஆதரவோடு நடத்தப்படுகிறது.

* பல்வேறுவகையான திறன்மேம்பாட்டு பயிற்சிகள் : ஓட்டுநர் பயிற்சி, தகவல் தொழில்நுட்பம், ஆடைகள் மற்றும் ஆயத்த ஆடை, விருந்தோம்பல், கட்டுமானம், சுகாதாரம், சில்லறை வணிகம் மற்றும் அழகுகலை.

* ஊதியம் சார்ந்த வேலை வாய்ப்புபயிற்சிகள் : இப்பயிற்சிகள் DDU - GKY திட்டத்தின்வழி முறைகளின்படி நிரந்தரபதிவு எண் மற்றும் சிறந்த உட்கட்டமைப்பினை கொண்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படுகின்றன.

* சுயவேலை வாய்ப்புதிறன் பயிற்சிகள் :சுயவேலை வாய்ப்பிற்கான பயிற்சிகள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முன்னோடி வங்கிகளால் நடத்தப்படும் ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் (RSETI's) மூலமாக வழங்கப்படுகிறது.

* வாழ்வாதார முன்னேற்ற பயிற்சிகள் :தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ்திறன் பயிற்சிகள் தேவையின் அடிப்படையில் சுயஉதவிக்குழு மற்றும் ஒத்த தொழில் குழுக்களில் உள்ள தனிநபரின் தேவைக்கிணங்க வழங்கப்படுகிறது. இதன்தொடக்கமாக நீடித்த நிலைத்த வேளாண்மையில் ஈடுப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு மண்புழு உரம் தயாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் : திட்டஇயக்குநர், மாவட்ட இயக்கமேலாண்மைஅலகு, தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம். அனைத்து மாவட்டங்கள்

சுயஉதவிக்குழுக்களுக்கான வட்டிமானியம்

மத்தியஅரசு வட்டிமானியதிட்டத்தின்கீழ் மகளிர்சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிகளிடமிருந்து பெறப்படும் 3 லட்சம் ரூபாய் வரையிலான கடன்தொகையின் மீது 7 விழுக்காட்டிற்கு மேல் விதிக்கப்படும் வட்டித் தொகையில் அதிகபட்சமாக 5.5 விழுக்காடு மட்டும் வட்டி மானியமாக தமிழ்நாட்டில் தர்மபுரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகியமாவட்டங்கள் தவிரநீங்களாக 22 மாவட்டங்களில் தமிழ்நாடு மாநிலஊரகவாழ் வாதார இயக்கத்தினால் வழங்கப்படுகிறது,

இத்திட்டம் வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மத்திய அரசால் நேரிடையாக செயல்படுத்தப்படுகிறது.

விருதுகள்

சிறந்த சுயஉதவிக்குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கான விருதுகள்

சிறப்பாக செயல்படும் 10 சுயஉதவிக்குழுக்களுக்கு தலா ரூ.1.00 இலட்சம் வீதம் மாநில அளவிலான விருதுகள் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் சிறந்த மூன்று சுய உதவிக்குழுக்களுக்கு அனைத்து மாவட்டங்களில் தலா ரூ.25,000 வீதம் மூன்று விருதுகள் வழங்கப்படுகிறது.

சிறப்பாக செயல்படும் 5 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.3.00 இலட்சம் வீதம் மாநில அளவிலான விருதுகள் வழங்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களில் மாவட்ட அளவில் சிறந்த ஒரு ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு தலா ரூ.1.00 இலட்சம் விருதுகள் வழங்கப்படுகிறது.

சிறப்பாக செயல்படும் வங்கியாளருக்கான விருது :

சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கிகடன் இணைப்புவழங்குவதில் சிறப்பாக செயல்படும் வங்கியாளர்களை ஊக்குவிக்கும் விதத்தில் மாநில மற்றும் மாவட்ட அளவில் சிறந்த கீழ்க்காணும் வங்கி /வங்கிகிளைகளுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

வ.

எண்

 

விருதுகளின்பெயர்

பரிசுவிபரம்

அ)

 

மாநில அளவில் சிறப்பாக செயல்பட்ட வங்கிக்கான விருது

 

முதல் மூன்று வங்கிகளுக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்

 

ஆ)

மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டு சுய உதவிக்குழு / பெண்களுக்கான தனி வங்கிக் கிளைக்கான விருது

 

முதல்பரிசு ரூ.1 லட்சம் இரண்டாவது பரிசு ரூ.75,000/-

 

இ)

மாநில அளவில் சிறப்பாக செயல்பட்ட-பிற வங்கிக் கிளைக்கான விருது

 

முதல்பரிசு- ரூ.1 லட்சம் இரண்டாவது பரிசு- ரூ.75,000/- மூன்றாம்பரிசு- ரூ.50,000/-

ஈ)

மாவட்ட அளவில் சிறந்த வங்கிக்கான விருது

 

ஒரு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்

 

உ)

மாவட்ட அளவில் சிறந்த வங்கிக்கிளைக்கான விருது

 

முதல் பரிசு ரூ.15,000/- இரண்டாவது பரிசு- ரூ,10,000/-மூன்றாவது பரிசு- ரூ.5,000/-

 

சுயஉதவிக்குழுக்கள் / ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு விருதுகள்

சுயஉதவிக்குழு இயக்கத்தினை வலுப்படுத்தும் பொருட்டு, முக்கியத்திட்டப் பங்காளர்களாக செயல்படுபவர்களை ஊக்குவிக்கும் வகையில், பலவிருதுகள் வழங்கப்படுகின்றன.

அனைத்து உறுப்பினர்களையும் எழுத்தறிவு பெற்றவர்களாக உருவாக்கும் 30 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தலா ரூ.50,000/- பரிசுடன் கூடிய விருது வழங்கப்பட்டு வருகிறது. சமூக அநீதிகளுக்கு எதிராக அசாதாரணமான துணிவுடன் போராடும், சுயஉதவிக்குழுக்களை கௌரவிக்கும் வகையில் 5 சுயஉதவிக்குழுக்களுக்கு தலா ரூ.1 இலட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுகள் மூலம் சுயஉதவிக்குழுக்கள் சமூகநீதிக் காவலர்களாக, சமூக அநீதிகளை எதிர்த்து போராட எழுச்சி பெறுவர்.

ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்குப் பெருங்கடன் பெறுவதற்கான தகுதிகளும் நிபந்தனைகளும்

• தரமதிப்பீட்டில் தேர்வு பெற்ற ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள்

திட்டத்தின் செயல்பாடு

*ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளால் வங்கிகளிலிருந்து கடன்பெற்று உறுப்பினர் சுயஉதவிக்குழுக்களுக்குக் கடன் வழங்கப்படுகின்றன.

வழங்கப்படும் கடன் தொகை

• கடன் விண்ணப்பம் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டு, கடன்தேவை மற்றும் நுண்கடன் திட்டத்தின் அடிப்படையில் பெருங்கடனுக்கான தொகை நிர்ணயம் செய்யப்படும்.

*பொதுவாக பெருங்கடன் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இணைந்துள்ள குழுக்களின் எண்ணிக்கை அடிப்படையில் ரூ.20 இலட்சம் முதல் ரூ.1 கோடி வரைபெறப்பட்டு, உறுப்பினர் குழுக்களுக்கு அவர்களது தேவையின் அடிப்படையில் தொழில் துவங்கிட மற்றும் தொழில் மேம்பாட்டுக்கும் கடனாக வழங்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் : திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மைஅலகு, தமிழ்நாடு மாநிலஊரகவாழ்வாதார இயக்கம் அனைத்து மாவட்டங்கள்.

சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களைச் சந்தைப்படுத்துதல் திட்டங்கள்

அ. கண்காட்சிகள் :

மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விளம்பரப்படுத்தும் பொருட்டும் சந்தைப்படுத்தும் வண்ணமும் தேசிய அளவில் நடைபெறும் கண்காட்சியில் பங்கு பெறுவதோடு மட்டுமல்லாமல் மாநில அளவில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வருடத்திற்கு மூன்று முறை விற்பனைக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. இவ்வாறு கடந்த 2016-17 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 2 கண்காட்சியில் 262 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு ரூ.97.02 இலட்சம் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்து பயனடைந்துள்ளனர்.

ஆ. கல்லூரிசந்தை:

மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச்செல்லும் நோக்கத்துடன் கல்லூரிகளில் விழாக்கள் மற்றும் முக்கிய பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் போது, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் கல்லூரி சந்தைகள் (College Bazaars) நடத்தப்படுகின்றன. கடந்த ஆண்டில் மாநிலஅளவில் 136 கல்லூரிகளில் நடத்தப்பட்ட இக்கண்காட்சிகளில் 2921 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு ரூ.217.67 இலட்சம் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்துள்ளனர்.

இ. மதிபஜார் :

மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்திப்பொருட்களை இணையதளம் மூலம் விற்பனை செய்வதற்கு மதிபஜார் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு பொருட்களை கொண்டு சேர்த்து, விற்பனைத் தொகையை இணையதளம் மூலம் செலுத்திடும் வசதியை ஏற்படுத்தி தருவதால் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்திப்பொருட்களை விற்பனை செய்வதற்கு நல்லசந்தை வாய்ப்புகளை ஏற்படுத்திதந்து அனைத்து மாவட்டங்களிலும் தனிக்கணக்குகள் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஈ. நடமாடும் மதிவிற்பனை அங்காடி :

அரசாணை எண்.117 ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை நாள்.05.09.2013ன் வழியே, மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு மக்கள் அதிகமாககூடும் இடம் மற்றும் சுற்றுலாத்தலங்களில் 137 மதி நடமாடும் விற்பனை அங்காடிகள் மாவட்டந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கீட்டின்படி அமைக்கப்பட்டு கடந்த ஆண்டு ரூ.224.90 இலட்சத்திற்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

உ. மாநில வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் :

மகளிர் சுயஉதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை மாநில, தேசியமற்றும் சர்வதேச சந்தைப்படுத்தும் நோக்கத்தோடு, மாநில அளவில், மாநில வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் (SSMS) அமைக்கப்பட்டு மாவட்டங்களில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப, விற்பனை செய்திட மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைசங்கம் (DSMS) மாநில அளவில் ஏற்படுத்தியுள்ள மாநில வழங்கல் மற்றும் விற்பனை சங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது.

கலாச்சாரப் போட்டிகள்

மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின் உறுப்பினர்களிடையே மறைந்துள்ள திறனை வெளிப்படுத்தும் வகையிலும் அவர்களிடையே ஒற்றுமை மற்றும் கூட்டு முயற்சியை ஏற்படுத்தவும் பல்வேறு விளையாட்டு போட்டிகளுடன் கூடிய கலாச்சார போட்டிகள் வட்டார மற்றும் மாவட்ட அளவில் நடத்தப்படுகின்றன. இக்கலாச்சாரப் போட்டிகள் சுயஉதவிக்குழு மகளிரிடையே பெற்றுள்ள ஆதரவையும் வரவேற்பையும் மற்றும் அதன் பயன்களையும் கருத்தில் கொண்டு இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. வருடந்தோறும் பொங்கல் திருநாள் சமயத்தில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.

தொடர்புகொள்ள வேண்டிய அலுவலர் : திட்டஇயக்குநர், மாவட்ட இயக்கமேலாண்மைஅலகு, தமிழ்நாடு மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம், அனைத்து மாவட்டங்கள்.

வாழ்வாதார மேம்பாடு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள பண்ணை மற்றும் பண்ணை சாரா தொழிலில் ஈடுபடும் மகளிரின் வருமானத்தை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு வாழ்வாதார நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவைபின் வருமாறு : பண்ணைதொழில் (Farm Activity)

முதன்மை / முதல்நிலை உற்பத்திகுழு :

விவசாயத்தில் ஈடுபடும் மகளிரை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒரேபயிரை (same crop) விளைவிக்கும் 30 மகளிரை ஒருங்கிணைத்து முதல்நிலை உற்பத்திகுழு அமைக்கப்படும். பயிர் உற்பத்தி மட்டுமல்லாது, ஆடு, மாடுகள் வளர்க்கும் மகளிரையும் ஒருங்கிணைத்து அந்தந்தகுழுக்கள் அமைக்கப்படும்

இக்குழு உறுப்பினர்களுக்கு, அவர்கள் விளைவிக்கும் பயிருக்கு ஏற்றாற் போலும் மற்றும் அவர்கள் வாழும் பகுதிக்கு ஏற்றாற் போலும் (Crop and area Specific) திறன் பயிற்சி மற்றும் புதிய தொழில்நுட்ப பயிற்சி வேளாண்துறை அலுவலர்களைக் கொண்டு நடத்தப்படும்.

மேலும், ஒவ்வொரு குழுவிற்கும், சுழல்நிதி மற்றும் உள்ளீடு பொருட்கள், சந்தைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றிற்காக ரூ.30,000/- நிதிஉதவி அளிக்கப்படும். முதல் கட்டமாக 2016-17ஆம் ஆண்டில் இத்திட்டம், 758 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 30320 மகளிர் பயன் பெறுவர்.

பண்ணை சாரா தொழில்மேம்பாடு : (Non Farm Activity)

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி, பண்ணைசாரா தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு கிராமஊராட்சியிலும் 10 நபர்கள் கிராம வறுமை ஒழிப்புச்சங்கம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொருக்கும் தலா ரூ.10,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இத்தொகையினை அவர்கள் புதிதாக தொழில் தொடங்கவோ, ஏற்கனவே செய்துவரும் தொழிலை மேம்படுத்தவோ அல்லது மாற்றி அமைக்கவோ பயன்படுத்தலாம். இத்திட்டமானது முதல் கட்டமாக 800 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கென தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்படும் மாவட்டங்களுக்கு ரூ.4.58 கோடியும், தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் செயல் படுத்தப்படும் மாவட்டங்களுக்கு சமூகமுதலீட்டு நிதியிலிருந்து ரூ.3.42 கோடி செலவிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 8000 மகளிர் பயன்பெறுவர்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்

திட்டஇயக்குநர்,

மாவட்ட இயக்க மேலாண்மைஅலகு,

தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம்,

அனைத்து மாவட்டங்கள்.

ஒத்ததொழில்குழு

ஒரு கிராம ஊராட்சியைச்சார்ந்த, ஒரே தொழில் புரியும் மகளிரை ஒருங்கிணைத்து ஒத்த தொழில் குழுக்கள் உருவாக்கப் பட்டுள்ளன. பண்ணை மற்றும் பண்ணைசாராத பல தொழில் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிற்கும் தலா ஒருலட்சம் நிதிஉதவி அளிக்கப்படுகிறது. இந்நிதியானது பொது கட்டமைப்பு உருவாக்கம், திறன்வளர்ச்சி, சந்தை மதிப்பு கூட்டல் ஆகியவற்றிற்கு பயன்படுத்தலாம். சென்னை நீங்கலாக 31 மாவட்டங்களில் இதுவரை 919 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சமூகமுதலீடு உருவாக்கம்:

தேசியஊரக வாழ்வாதார வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சமூகமக்களே தங்கள் சமூகத்தை திறம்பட மேலாண்மை செய்ய வேண்டும். இக்குறிக்கோளை அடையும் வகையில் ஒவ்வொரு கிராமஊராட்சியிலும் வாழ்வாதார நடவடிக்கைகளை கண்காணிக்கும் பொருட்டு ஒரு சமூகவள பயிற்றுநர் (CRP) கண்டறியப் பட்டுள்ளனர். இதுவரை 2016-17 ஆண்டில் வாழ்வாதார திட்டம் செயல் படுத்தப்படும் 758 கிராமஊராட்சிகளில் 758 சமூகவள பயிற்றுநர்கள் தேர்வுசெய்யப்பட்டு, திறன்பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர்.

பெண்விவசாயிகள் மேம்பாட்டு திட்டம் – மகிளா கிசான்ச சக்திகரன் பரியோஜனா (MKSP)

தேசியஊரகவாழ் வாதார இயக்கத்தின் ஒருதுணைக்கூறாக “பெண்விவசாயிகள் மேம்பாட்டு திட்டம்” மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், விவசாய தொழிலில் ஈடுபடும் மகளிரை கண்டறிந்து அவர்கள் விளைவிக்கும் பயிருக்கு ஏற்றாற் போல் நிலைத்த வேளாண்மை (Sustainable Agriculture) உள்ளிட்ட பல தொழில் நுட்பபயிற்சிகளை அளித்து அதன் மூலம் உற்பத்தி மற்றும் உற்பத்திதிறனை அதிகரித்து அவர்களின் வருமானத்தை பெருக்குவதே ஆகும்.

இத்திட்டம் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களைச் சார்ந்த 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 166 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மொத்தம் ரூ.15.96 கோடி மதிப்பிலான இத்திட்டம் மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 16,800 மகளிர் பயன்பெறுவர்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் : திட்டஇயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மைஅலகு, தமிழ்நாடு மாநில ஊரகவாழ் வாதார இயக்கம், அனைத்து மாவட்டங்கள்.

ஏழை மகளிரை தலைவராகக் கொண்ட குடும்பங்களுக்கான சிறப்பு வாழ்வாதாரத் திட்டம்

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைகணக்கெடுப்பின் படி 25.88 இலட்சம் குடும்பங்கள் பெண்களை குடும்பத்தலைவராக கொண்டுள்ளன. இக்குடும்பங்களுக்கு நேரடியாக உதவி செய்யும் வகையில், சுயதொழில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புடன் கூடியபயிற்சி அளித்திடும் புதியதிட்டம் அரசு ஆணை எண் 82 ஊரகவளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ்துறை (சிஜிஎஸ் 3) நாள் 25.5.2015 வழியே துவக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு தேவைப்படும் நிதியானது தமிழ்நாடு திறன் வளர்ப்பு கழகத்தில் மட்டுமல்லாது ஊரகநகர்ப் புறபகுதிகளில் செயல்படுத்தப்படும் மற்றவாழ் வாதார திட்டங்களில் இருந்தும் பெறப்படும். இத்திட்டத்திற்கென பிரத்யேகமாக ரூ.3.14 கோடி தமிழ்நாடு திறன் வளர்ப்புகழகத்தின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்களை குடும்பத்தலைவராக கொண்ட குடும்பங்களைச் சார்ந்த 2522 நபர்கள் பல்வேறு தொழில்களில் பயிற்சிபெற்று பயனடைய உள்ளனர்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் : திட்டஇயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மைஅலகு, தமிழ்நாடு மாநில ஊரகவாழ் வாதார இயக்கம். அனைத்து மாவட்டங்கள்.

தீன்தயாள் அந்தியோதய யோஜனா-தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கம்(DAY- NULM)

அடித்தட்டு அளவில் ஏழைகளுக்கான வலுவான நிறுவன அமைப்புகளை உருவாக்கித் தருவதன் மூலம் நகர்ப்புர ஏழைக் குடும்பங்களின் ஏழ்மை மற்றும் நலிவுற்றதன்மையினைக் குறைத்து, இலாபம் தரக்கூடிய சுயவேலை வாய்ப்பு மற்றும் திறன் வேலை வாய்ப்புகளைப் பெற்றுத்தர வழிவகைசெய்து, அதன் பயனாக தொடர்வாழ்வாதார

மேம்பாட்டினை உறுதி செய்வதே தீன்தயாள் அந்தியோதய யோஜனா-தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NULM) நோக்கமாகும். இத்திட்டம் 2014-15 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசுத் திட்டமான தேசிய நகர்ப் புரவாழ்வாதார இயக்கம் 2015-16 ஆம் ஆண்டு முதல் மத்திய மற்றும் மாநில அரசுகளால் 60:40 என்ற நிதி விகிதாச்சார அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தேசியநகர்ப் புரவாழ் வாதார இயக்கத்தின் கூறுகள் பின்வருமாறு:

1. சமூக அணி திரட்டல் மற்றும் நிறுவன மேம்பாடு (SM&ID)

2. திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி (CB&T)

3.திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மூலம் வேலை வாய்ப்பினை உருவாக்குதல் (EST&P)

4. சுய வேலை வாய்ப்புத் திட்டம் (SEP)

5. நகர்ப்புர தெரு வியாபாரிகளுக்கு வாழ்வாதாரம் (SUSV)

6. நகர்ப்புர வீடற்றோருக்கு உறைவிடம் (SUH) மற்றும், புதிய முயற்சிகள் மற்றும் சிறப்புத் திட்டங்கள் (1&SP) என்ற பிரத்தியேகத் திட்டக் கூறினையும் கொண்டுள்ளது.

அரசாணை (நிலை) எண்.62, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (ந.நி.2) துறை, நாள்-04.03.2016 ன் படி தேசிய நகர்ப்புரவாழ்வாதார இயக்கத்தினை செயல்படுத்திடும் அலகாக நகராட்சி நிர்வாக ஆணையகரகத்திலிருந்து, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாணையின் அடிப்படையில் இத்திட்டத்தின் மேலே கொடுக்கப்பட்டுள்ள முதல் நான்கு முக்கிய திட்டக்கூறுகள் (SM&ID,CB&T, EST&P மற்றும் SEP) 2016-17ம் ஆண்டு முதல் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மீத முள்ள மூன்று திட்டக்கூறுகள் நகராட்சி நிர்வாக ஆணையகரகத்தினால் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

1. திட்டஇயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மைஅலகு, தமிழ்நாடு மாநில ஊரகவாழ்வாதார இயக்கம், அனைத்து மாவட்டங்கள்.

2. நகராட்சி நிர்வாகம் ஆணையர், எழிலகம், சேப்பாக்கம், சென்னை-600 005.

மகளிர் திட்டம் மாவட்ட செயலாக்க அலகின் முகவரிகள்

அலுவலகம்

முகவரி

 

தொலைபேசி

அரியலுார்

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்க மேலாண்மை அலகு மகளிர்திட்டம் /

மாநில ஊரகவாழ்வாதார இயக்கம்,

மாவட்டஆட்சியர் அலுவலகவளாகம்,

அரியலூர்

04329-228505

சென்னை

திட்டஇயக்குநர், மகளிர்திட்டம், 100,

அண்ணாசாலை,

கிண்டி. சென்னை - 600 032

044-2235063

கோயம்புத்தூர்

திட்டஇயக்குநர்,

மாவட்ட இயக்க மேலாண்மைஅலகு மகளிர்திட்டம்

/ மாநில ஊரகவாழ்வாதார இயக்கம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

கோயம்புத்துார் -641 008

0422-2301855

கடலுார்

திட்டஇயக்குநர்,

மாவட்ட இயக்க மேலாண்மைஅலகு மகளிர்திட்டம் / மாநிலஊரகவாழ்வாதார இயக்கம்,

பீச்ரோடு , வண்ணாரபாளையம்,

இராதாநகர், கடலுார் -607 001

04142 -294143

தருமபுரி

திட்டஇயக்குநர், மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு

மகளிர்திட்டம் / மாநில ஊரகவாழ்வாதாரஇயக்கம், மாவட்டஆட்சியர்அலுவலகம்,

இரண்டாவதுமாடிடிடிடிசிகட்டிடம்

.தருமபுரி -636 705.

04342-233298

திண்டுக்கல்

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு

மகளிர்திட்டம் / மாநிலஊரகவாழ்வாதார இயக்கம், மாவட்டஆட்சியர்அலுவலகம்

.தரைத்தளம், திண்டுக்கல் - 624 005.

0451-2460050

ஈரோடு

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு

மகளிர்திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம்,

முதல்மாடி, பூமாலைவணிகவளாகம்,

பெருந்துறைரோடு,குமலன்குட்டை.

ஈரோடு - 638 011.

0424-2257087

காஞ்சிபுரம்

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு

மகளிர்திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம், மாவட்டஆட்சியர்அலுவலகம்.

காஞ்சிபுரம் - 631 502.

044-27236348

கன்னியாகுமரி.

திட்டஇயக்குநர்,

மாவட்ட இயக்கமேலாண்மைஅலகு

மகளிர்திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம்,

நாகர்கோவில், பூமாலைவணிகவளாகம்

வடச்சேரி, கன்னியாகுமரி - 629 001.

04652-272275

கருர்

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு மகளிர்திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம்,

மாவட்ட ஆட்சியர்அலுவலகம்.

இரண்டாவதுமாடி, கருர் -639 005.

04324-257377

கிருஷ்ணகிரி

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு மகளிர்திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம், மாவட்டஆட்சியர் அலுவலகம்.எண். 106 & 107,

இரண்டாவதுமாடி

கிருஷ்ணகிரி- 635 001

04343-235267

மதுரை

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு மகளிர் திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம்,

புதுநத்தம்ரோடு, மதுரை - 625 014

0452-2566220

நாகப்பட்டினம்

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு மகளிர் திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம், மாவட்டஆட்சியர் அலுவலகவளாகம்.

மூன்றாவாதுமாடி, நாகப்பட்டினம் - 611 003.

04365-253061

நீலகிரி

திட்டஇயக்குநர்

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு மகளிர் திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம்,

அலெக்சாண்டர்காலேஜ்,

பேங்க்லைன், வண்டிச்சோலை,

நீலகிரி -643 001.

0423-2444430/35

சிவகங்கை

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு மகளிர் திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம்,

44/69, எழில்காம்ப்ளக்ஸ்,

தரைதளம், மேலூர்தெரு,

சிவகங்கை-630 561.

04575-240962

நாமக்கல்

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு மகளிர் திட்டம் /

மாநில ஊரகவாழ்வாதாரஇயக்கம்,

மாவட்டஆட்சியர் அலுவலகவளாகம்,

இரண்டாவதுமாடி,

நாமக்கல் - 637 003.

04286 - 281131

திருநெல்வேலி

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு மகளிர்திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம்,

கொக்கிரகுளம்பழைய ஆட்சியர்அலுவலகவளாகம்

,திருநெல்வேலி-627 009

0462-2500302

பெரம்பலூர்

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு மகளிர்திட்டம் / மாநிலஊரகவாழ்வாதார இயக்கம், மாவட்டஆட்சியர்அலுவலகவளாகம்

பெரம்பலுார் - 621 212.

04328-225362

திருவண்ணாமலை

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு மகளிர்திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம்,

எண் 4/15, 7வதுதெருகாந்திநகர்,

திருவண்ணாமலை - 606 601.

04175 227476

புதுக்கோட்டை

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு மகளிர்திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம், மாவட்டஆட்சியர்அலுவலகவளாகம்,

52, எழில்நகர்,

புதுக்கோட்டை - 622 005.

04322-230950

தஞ்சாவூர்

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு மகளிர்திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம்,

எண் 223 இரண்டாவதுமாடி,

புதியமாவட்டஆட்சியர்அலுவலகம்,

திருச்சிரோடு, தஞ்சாவூர் -613 007.

04362-277907

இராமநாதபுரம்

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு மகளிர்திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம்,

1/314, பாரதிநகர், வெளிப்பட்டினம் (அஞ்சல்)

இராமநாதபுரம்-623 535.

04567-231341

தேனி

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு மகளிர்திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம்,

அறைஎண். 71, 4 வதுமாடி,

மாவட்டஆட்சியர்அலுவலகவளாகம்,

தேனி- 625 531.

04546-255203

திருச்சி

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு மகளிர் திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம், மாவட்டஆட்சியர்அலுவலகவளாகம்,

திருச்சி-620 001.

0431-2412726

சேலம்

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு மகளிர்திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம்,

207, 2வதுமாடி,

மாவட்டஆட்சியர்அலுவலக | வளாகம்,

சேலம் - 636 001.

0427241552

திருவள்ளூர்

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு

மகளிர்திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம்,

1வதுமாடி, மாவட்டஆட்சியர்அலுவலகவளாகம்,

திருவள்ளூர்-602 001.

044-27664528

திருவாரூர்

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு

மகளிர்திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம்,

2வதுமாடி, புதியஆட்சியர்அலுவலகவளாகம்,

திருவாரூர் - 610 101.

04366-221031

விழுப்புரம்

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு

மகளிர்திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம்,

TAHDCO பில்டிங்,

நெ. 62/56-ஏசென்னைநெடுஞ்சாலை,

விழுப்புரம்-605 602.

04146-223736

துாத்துக்குடி

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு மகளிர்திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம்,

2வதுமாடி, ஆட்சியர்அலுவலகவளாகம்,

கோரம்பாளையம்,

துாத்துக்குடி- 101.

0461-2341282

விருதுநகர்

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு மகளிர்திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம்,

மாவட்டஆட்சியர்அலுவல

கவளாகம், விருதுநகர்.

04562-252036

வேலுார்

திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு மகளிர்திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம்,

பூமாலைவணிகவளாகம்,

கற்பகம்சூப்பர்மார்க்கெட்எதிரில்,

அண்ணாசாலை,

வேலுார் -632 001

0416-2215765

திருப்பூர்

. திட்டஇயக்குநர்,

மாவட்டஇயக்கமேலாண்மைஅலகு மகளிர்திட்டம் / மாநிலஊரகவாழ்வாதாரஇயக்கம்,

மாவட்டஆட்சியர் அலுவலகவளாகம்,

திருப்பூர்.

0421-2218770

2.83928571429
ரங்கபிரபு Aug 30, 2018 08:10 AM

நல்லது.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top