பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் / மக்கள் சாசனம் / தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மக்கள் சாசனம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மக்கள் சாசனம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மக்கள் சாசனம் 2017 - 2018 பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது

அறிமுகம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை சென்னையில் இயங்கி வருகிறது. பல்கலைக்கழக தலைமையகத்தில் துணைவேந்தர், பதிவாளர், நிதி அலுவலர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், ஆராய்ச்சி இயக்குநர், விரிவாக்கக் கல்வி இயக்குநர், கால்நடை உற்பத்திக் கல்வி மைய இயக்குநர், கால்நடைநலக் கல்வி இயக்குனர் மற்றும் உடைமை அலுவலர் ஆகியோருக்கான அலுவலகங்களுடன் செயல்பட்டு வருகிறது.

நோக்கம்

  • கால்நடை மருத்துவம், விலங்கினம், கோழியினம், பால் மற்றும் உணவு அறிவியலில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளுக்கான தரமான கல்வியை அளித்தல்
  • கால்நடை மற்றும் கோழிகளின் நலப் பாதுகாப்பு மற்றும் அவற்றிலிருந்து பெறப்படும் மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் பற்றிய அடிப்படை மற்றும் உயர்மட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்
  • கால்நடை மற்றும் கோழியின் வளர்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் உரிய தொழில்நுட்பத் தகவல்களை கால்நடை பராமரிப்புத் துறையைச் சார்ந்தவர்களுக்கும், பண்ணையாளர்களுக்கும் விரிவாக்கக் கல்வி மூலம் பரப்புதல்

குறிக்கோள்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமானது (TANUVAS) கல்வி அளித்தல், கற்றலை மேம்படுத்தல், ஆய்வு மேற்கொள்ளல், அரசுத் துறைகளின் ஒத்துழைப்புடன் கால்நடை மருத்துவ அறிவியலின் பல்வேறு நுணுக்கங்களை ஊரக மக்களுக்கு கொண்டு செல்லுதல் ஆகிய குறிக்கோள்களுடன் 20.09.1989 அன்று துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இலக்கு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) கால்நடை மருத்துவம் மற்றும் கோழி அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி, அறிவை வளர்த்தல் மற்றும் பரவலாக்கம் செய்தல், குழு சார் அணுகுமுறையை தேர்ந்தெடுத்தல் மூலம் சமூக பொருளாதார மற்றும் சூழல் சார்ந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி முதன்நிலை நிறுவனமாக இருக்க இலக்குடன் செயல்பட்டு வருகிறது.

தோற்றம் மற்றும் வளர்ச்சி

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியானது சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரியின் உருவாக்கத்தோடு நேரடியாகத் தொடர்பு கொண்டது. சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரியானது தொடக்கத்தில் ஒரு நவீன வேளாண்மைப் பள்ளியாகக் கால்நடை மருத்துவ அறிவியல் துறையில் பட்டயம் (Diploma), சான்றிதழ்ப் (Certificate) படிப்புகளை அளிக்கும் வகையில் சென்னை சைதாப்பேட்டையில் 1876ல் உருவானது. சிறந்த நிர்வாகத்தால் பல ஆண்டுகளுக்குப் பிறகு இப்பள்ளி 1903ல் கல்லூரியாக உயர்த்தப்பட்டுச் சென்னை வேப்பேரியில் செயல்படத் தொடங்கியது. 1974ல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தைப் பெற்றது. 1976ல் அப்பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரி ஆனது. இரண்டாவது கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நாமக்கல்லில் 1985ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்த மூன்று கல்லூரிகளும், தமிழக அரசு 1989இன் சட்டம் 42ன் படி பல்கலைக்கழகக் கல்லூரிகளாக உருவாக்கப்பட்டு, 20.09.1989 அன்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் உருவானது.

கடந்த 2012-13ம் ஆண்டில் புதிதாக இரண்டு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் திருநெல்வேலியிலும், தஞ்சாவூரிலும் (ஒரத்தநாடு) துவக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் பால் தொழில்நுட்பக் கல்லுாரி 2012ம் ஆண்டு முதல் கொடுவள்ளியில் துவக்கப்பட்டுள்ளது. ஒசூரில் பன்னாட்டு தரத்தில் கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை கல்லூரி 2012 முதல் துவக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் உயரிய விருதான சர்தார் படேல் விருது - 2011 கடந்த 16.07.2012 அன்று இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தால் வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மேற்கொண்ட தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை ஆய்வு மதிப்பீட்டில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 38வது இடத்தையும் மாநில அளவில் 4வது இடத்தையும் பெற்று முதல் 50 பல்கலைக்கழக பட்டியலில் இடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் உள்ள 14 கால்நடை மருத்துவ பல்கலைக்கழகங்களில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் முதல் இடத்தை பெற்று உள்ளது.

கல்வி

இளநிலை கல்வி பாடங்கள்

சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் 120 மாணவர்களும், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் 80 மாணவர்களும் , திருநெல்வேலி கால்நடை மருத்துவ கல்லூரியில் 60 மாணவர்களும், தஞ்சாவூர் (ஓரத்தநாடு) கால்நடை மருத்துவ கல்லூரியில் 60 மாணவர்களும் ஆண்டுதோறும் சேர்க்கப்படுவர். இதுமட்டுமன்றி, பால்வள தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பம் மற்றும் கோழியின தொழில்நுட்பம் கல்லுாரியில் ஆண்டுதோறும் தலா 20 மாணவர்கள் ஒவ்வொரு பாடபிரிவிலும் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் கால்நடைப் பராமரிப்புப் பட்டம் (B.V.Sc & A. H.)

இப்பட்டப்படிப்பு ஐந்து அரை ஆண்டு (நான்கு அரை ஆண்டு பாடத்திட்டமும் ஒரு ஆண்டு உள்ளிடைப் பயிற்சியையும் கால அளவாகக் கொண்டது.) முழு நேர படிப்பு ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இப்படிப்பில் 320 மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இளநிலை உணவு தொழில்நுட்பப் பட்டம் (B.Tech-Food Technology)

இப்படிப்பிற்கு நான்கு ஆண்டு (எட்டு பருவங்கள்) முழு நேரம் கால அளவாகும். மேலும், ஒரு பருவம் தொழிற்சாலை அனுபவத்தையும் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் 20 மாணவர்கள் இப்படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள்.

இளநிலை கோழியின உற்பத்தி தொழில்நுட்பப் பட்டம் (B.Tech-Poultry Technology)

இப்படிப்பிற்கு நான்கு ஆண்டு (எட்டு பருவங்கள்) ஒரு பருவம் தொழிற்சாலை அனுபவத்தையும் கொண்டது.

இளநிலை பால்வள உற்பத்தி தொழில்நுட்பப் பட்டம் (B.Tech Dairy Technology)

இப்படிப்பிற்கு நான்கு ஆண்டு (எட்டு பருவங்கள்) முழு நேரம் கால அளவாகும். மேலும், ஒரு பருவம் தொழிற்சாலை அனுபவத்தையும் கொண்டது. ஒவ்வொரு ஆண்டும் 20 மாணவர்கள் இப்படிப்பில் சேர்க்கப்படுகிறார்கள்.

இளநிலை பட்ட படிப்புகளுக்கான இடஒதுக்கீடு விபரங்கள்

இட ஒதுக்கிட்டு பிரிவின் விபரங்கள்

 

பி.வி.எஸ்சி மற்றும் ஏ.எச்

 

பி.டெக் (உணவு அறிவியல்)

 

பி.டெக் (கோழியின தொழில்நுட்பம்)

 

பி.டெக் பால்வள தொழில்நுட்பம்

 

வெளிநாடு வாழ் இந்தியர்கள்

9

2

-

-

அயல் நாட்டினர்

5

2

-

-

காஷ்மீர் குடிபெயர்ந்தேர்

2

-

-

-

மாற்று திறனாளிகள்

10

1

1

1

விளையாட்டு வீரர்கள்

 

5

(3 ஆண்கள் + 2

பெண்கள்)

 

1

1

1

விடுதலைபேராட்ட தியாகிகள்

1

1

1

1

முன்னாள் இராணுவத்தினர்

2

1

1

1

தொழிற் பிரிவு பாட மாணவர்கள்

 

5%

(மொத்த இடங்களில்)

 

 

 

-

இந்திய கால்நடை

மருத்துவ குழு

 

15%

(மொத்த இடங்களில்)

 

 

 

-

முதுநிலை கால்நடை மருத்துவ அறிவியல் பால்வள அறிவியல் பட்டம் (M.V.Sc. / M.Tech)

இந்தப் பட்டங்களுக்கான படிப்புக் காலம் இரண்டாண்டு முழு நேரமாகும் (நான்கு பருவங்கள்)

முனைவர் பட்டம் (பி.எச்.டி) கால்நடை மருத்துவம்

இப்பட்டத்திற்கான படிப்புக் காலம் மூன்றாண்டு முழு நேரமாகும். (ஆறு பருவங்கள்)

முதுநிலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளில் சேரும் மாணவர்கள் இளநிலை ((B.V.Sc.) மற்றும் (B.Tech.)) மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் (M.V.Sc. / M.Tech.) உரிய பாடத்தில் முறையே 7.00/10.00 அல்லது 3.00/4.00 0GPAக்குக் குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும். SC/ST பிரிவு மாணவர்கள் குறைந்தபட்சம் தேர்ச்சிபெற்றால் போதுமானது.

கால்நடை மருத்துவ அறிவியல் மற்றும் அடிப்படை அறிவியல் புலங்களில் அளிக்கப்படும் பட்டங்கள் / பட்டய படிப்புகள்

M.V.Sc (முதுநிலை கால்நடை அறிவியல்) - 22 துறைகள்

M.Tech (முதுநிலை பால்வள அறிவியல்) - 01 துறை

Ph.D (கால்நடை மருத்துவம்) - 20 துறைகள்

Ph.D (உணவு தொழில்நுட்பம்) - 01 துறை

M.Sc (Bio-Statistics) முதுநிலை உயிர் புள்ளியல்

M.Sc (Bio-Informatics) முதுநிலை உயிர் தகவலியல்

M.Phil (Bio-Technology) முதுநிலை ஆய்வியல் நிறைஞர் - உயிர் தகவல் தொழில்நுட்பம்

P.G. Diploma in Companion Animal Practice முதுநிலை பட்டயம் - செல்லப்பிராணி மருத்துவம்

P.G. Diploma in Veterinary Laboratory Diagnosis முதுநிலை பட்டயம் - கால்நடை நோய் ஆய்வுக்கூடம்

P.G. Diploma in Business Management in Animal and Fisheries Sciences முதுநிலை பட்டயம் - கால்நடை மற்றும் மீன் அறிவியல் தொழில் மேலாண்மை

P.G. Diploma in Bio- Informatics முதுநிலை பட்டயம் – உயிர் தகவலியல்

பின்வரும் பட்டய படிப்புகள் தொலைநிலைக் கல்வி (அச்சு இணையவழி) பிரிவாக வழங்கப்படுகிறது

PG Diploma in Advanced Reproductive Biotechnology in Animal Models (PGDARB)

முதுநிலை பட்டயம் - கால்நடைகளில் நவீன இனப்பெருக்க உயிர் தொழில்நுட்ப மாதிரியமைப்புகள்

PG Diploma in Acaro-Entomology (PGDAENT) முதுநிலை பட்டயம் - பூச்சியல் பாடம்

PG Diploma in Bovine Infertility and its Management (PGDBIM) முதுநிலை பட்டயம் - கறவைமாடுகளில் இனப்பெருக்க மேலாண்மை

PG Diploma in Bovine Production Diseases (PGDBPD) முதுநிலை பட்டயம் - கறவைமாடுகளில் உற்பத்தி நோய்கள் மேலாண்மை

PG Diploma in Commercial Poultry Production and Management (PGDCPPM) முதுநிலை பட்டயம் - வியாபாரீதியான கோழி உற்பத்தி மேலாண்மை

PG Diploma in Dairy Processing and Quality Assurance (PGDDPQA) முதுநிலை பட்டயம் - பால் உற்பத்தி மற்றும் தர ஆய்வு

PG Diploma in Diversified Poultry Production (PGDDPP). முதுநிலை பட்டயம் - தீவன உற்பத்தி தொழில்நுட்பம்

PG Diploma in Ethno Veterinary Practices (PGDEVP) முதுநிலை பட்டயம் - கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவம்

PG Diploma in Feed Manufacturing Technology (PGDFMT) முதுநிலை பட்டயம் - தீவன உற்பத்தி தொழில்நுட்பம்

PG Diploma in Participatory Rural Appraisal (PGDPRA) முதுநிலை பட்டயம் - ஊரக தன்னார்வு ஆய்வு முறைகள்

PG Diploma in Post Harvest Technology and Quality Assurance of Meat and Meat Products (PGDQAMP) முதுநிலை பட்டயம் - இறைச்சி மற்றும் இறைச்சிப் பொருட்கள் பதப்படுத்துதல் தொழில்நுட்பம்

PG Diploma in Regenerative Medicine (PGDRM) முதுநிலை பட்டயம் - மறுசீரமைப்பு மருத்துவம்

PG Diploma in Small Animal Dermatology (PGDSAD) முதுநிலை பட்டயம் - சிறு பிராணிகள் தோல்சிகிச்சையியல்

PG Diploma in Small Animal Diagnostic Ultrasound (PGDDUS) முதுநிலை பட்டயம் - சிறிய பிராணிகள் நூண் ஒலி முறையில் நோய் ஆய்வு

PG Diploma in Small Animal Emergency and Critical Care Medicine (PGDECM)

முதுநிலை பட்டயம் - சிறு பிராணிகளுக்கான அவரச சிகிச்சை தீவிர பாதுகாப்பு மருத்துவம்

PG Diploma in Small Animal Orthopedics (PGDORT) முதுநிலை பட்டயம் - சிறுபிராணிகள் எலும்பு சிகிச்சையியல்

PG Diploma in Veterinary Clinical Laboratory Diagnosis (PGDVOLD) முதுநிலை பட்டயம் - கால்நடை மருத்துவ ஆய்வு கூடம் மூலம் நோய் பகுப்பாய்வு

PG Diploma in Veterinary Endoscopy (PGDVEN) முதுநிலை பட்டயம் - கால்நடைகளில் உடற்குழாய் உள்நோக்கு சிகிச்சை

PG Diploma in Veterinary Ophthalmology (PGDOPH) முதுநிலை பட்டயம் - கால்நடைகளுக்கான கண் சிகிச்சையியல்

PG Diploma in Wild Animal Disease Management (PGDWADM). முதுநிலை பட்டயம் - வனவிலங்களுக்கான நோய் தடுப்பு மேலாண்மை

PG Diploma in Zoonoses (PGDZ) முதுநிலை பட்டயம் - விலங்கு வழி மனிதர்களை தாக்கும் நோய்கள்

மருத்துவ சிகிச்சைக்கான வசதிகள்

சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை சிறிய மற்றும் பெரிய கால்நடைகளுக்குச் சிகிச்சை அளித்தல் மற்றும் நோயறிதலுக்கான உயர்நிலை மருத்துவ வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகளைப் பெற்றிருக்கின்றன. மருத்துவமனை மருந்தகம், அறுவைச் சிகிச்சை, உள் மற்றும் புறக் கால்நடைக்கான மருத்துவம், இனப்பெருக்கம் மற்றும் ஈனியல் வசதிகள் என மூன்று முக்கியப் பிரிவுகளைக் கொண்டது. மேலும் ஒரு மருத்துவமனை மாதவரம் பால்பண்ணையில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் புறநகர் மருத்துவமனை என்னும் பெயரில் செயல்பட்டு வருகிறது.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற கல்வி முன்னிலை துறைகள் - பட்டமேற்படிப்பு மையம்

* கால்நடைச் சிகிச்சை, நன்னெறி மற்றும் சட்டவியல் துறை, சென்னைக் கால்நடை மருத்துவ அறிவியல் கல்லூரி, சென்னை

* பறவையின் அறிவியல், கோழியின அறிவியல் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல்

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அங்கீகாரம் பெற்று கல்வி முன்னிலை துறைகள் - உயராய்வு மையம்

* உயிர் தொழில்நுட்பவியல் மற்றும் நோய் தடுப்பியல், சென்னைக் கால்நடை மருத்துவ கல்லூரி, சென்னை

உயிர் தகவல் நுட்ப மையம்

சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரியில் இந்திய அரசின் உயிர் தொழில்நுட்பவியல் துறையின் நிதி உதவியுடன் 1991ல் உயிர் தகவல் நுட்பவியல் மையம் ஏற்படுத்தப்பட்டது. இந்த மையத்தில் இணையம், நிக்நெட், மெட்லர்ஸ் மூலம் ஆன்லைனில் வேண்டிய தரவுகளைப் பெறுவதற்கான வன்பொருள் மற்றும் மென்பொருள், IBM வழங்கல், அதிக எண்ணிக்கையிலான கணினிகள் இவற்றோடு விசாட் மைக்ரோ எர்த் ஸ்டேஷன் (VSAT MICRO EARTH STATION) உடனான தரவுத்தள அடிப்படையிலான குறுந்தகடுகள் CD-ROM வசதி கொண்ட ஆப்லைன் ஆகியவை உள்ளன.

கால்நடை மற்றும் கோழியினங்களுக்கான மரபுசார் மூலிகை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள்

கால்நடைகள் மற்றும் கோழியினங்களுக்கான மரபுசார் மூலிகை பயிற்சி மையங்கள் தஞ்சாவூர் மற்றும் நாமக்கல்லில் துவக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

ஆராய்ச்சி நிதி முகமைகள்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமானது மாநில, தேசிய, பன்னாட்டு அளவிலான வெளிநிலை நிதி முகமைகளின் தொடர்ச்சியான பல்வேறு நிதி ஆதாரங்கள் மூலம் ஆராய்ச்சித் திட்டங்களில் மிகுந்த உத்வேகத்தோடு ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம், மத்திய உயிர் - தொழில் நுட்பத் துறை, இந்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை போன்றவற்றையும் மற்றும் பி.பி.ஆர்.சி, இங்கிலாந்து போன்ற வெளிநாட்டு துறைகளுடன் இணைந்து பல முன்னோடி ஆராய்ச்சி திட்டங்களை அளித்து வருகிறது. 2016- 17ம் ஆண்டில் மொத்தம் 178 வெளிநிலை நிதி ஆதரவு மையங்கள் வாயிலாக ரூ.11818.30 இலட்சம் நிதியை பெற்று கால்நடை மருத்துவம், உணவு அறிவியல் மற்றும் அடிப்படை அறிவியல் புலம் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளது.

செயல்முறை ஆராய்ச்சிப் பண்ணைகள்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கால்நடை, கோழியினம் மற்றும் மீன்பண்ணையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுதல் பொருட்டுப் பல்வேறு ஆராய்ச்சித் திட்டங்களில் முனைப்புடன் ஈடுபட்டுவருகிறது. ஆராய்ச்சிப் பண்ணைகள் கால்நடை இடுபொருட்கள், பல்வேறு கால்நடை உற்பத்தி மற்றும் பராமரிப்பில் உள்கட்டமைப்பு வசதி மற்றும் செய்முறைப் பயிற்சி ஆகியவற்றை மாணவர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு அளித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றுகினறன.

பல்கலைக்கழகம் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி செயல்பாடுகளுக்குரிய உயர்வகை நோயறிதல் வசதிகள் கொண்ட ஆய்வகங்களைப் பெற்றிருப்பதோடு, அவற்றின் மூலம் பொதுமக்களுக்கும் சேவை அளித்துவருகிறது.

* பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணை, மாதவரம் பால்பண்ணை, சென்னை

* கால்நடை அறிவியல் முதுநிலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம்

* கோழியின் ஆராய்ச்சி நிலையம், மாதவரம் பால்பண்ணை, சென்னை

* மேச்சேரி செம்மறியாடு ஆராய்ச்சி நிலையம், பொட்டனேரி, சேலம்

* செம்மறியாடு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையம், சாந்திநல்லா, நீலகிரி

* மண்டல ஆராய்ச்சி மையம், புதுக்கோட்டை

* பயிற்றுவிக்கும் கால்நடை பண்ணை வளாகம் - நாமக்கல், திருநெல்வேலி மற்றும் ஒரத்தநாடு கல்லுாரி வளாகம்

* கால்நடை ஊட்டச்சத்து மையம், காட்டுப்பாக்கம்

* மைய தீவன தொழில்நுட்ப பிரிவு, காட்டுப்பாக்கம்

* பர்கூர் மாட்டின ஆராய்ச்சி மையம், ஈரோடு

* பல்கலைக்கழக நவீன தொழில்நுட்பம் மற்றும் கருவிமையமாக்கல் பிரிவு

* பல்கலைக்கழக மைய ஆய்வகம்

* மைய சிகிச்சையில் ஆய்வகம்

* கால்நடை உயிர் தொழில்நுட்பவியல் ஆய்வகம்

* நச்சுயிரித் தடுப்பூசி ஆய்வகம்

* கால்நடைத் தீவனப் பகுப்பாய்வு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம்

* நுண்ணுயிரித் தடுப்பூசி ஆய்வகம்

* லெப்டோஸ்பைரோஸிஸ் (எலி காய்ச்சல்) ஆராய்ச்சிக் கூடம்

* பறவையின நோயறி ஆய்வகம்

* கோழியின் நோய் ஆய்வு மற்றும் கண்காணிப்பு ஆய்வகம்

* பல்கலைக்கழக சிகிச்சையியல் ஆய்வகம்

* கால்நடை தீவன, தரகட்டுபாடு மற்றும் மருந்தறி ஆய்வகம்

விரிவாக்கம்

பல்கலைக்கழகம் தன்னுடைய இணைப்பு விரிவாக்க மையங்கள், கல்லூரிகள் ஆகியவற்றின் மூலம் வேளாண் சமூகத்தினருக்கு வேண்டிய தேவைகளை அளித்து வருகிறது. 20 கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், 3 உழவர் பயிற்சி மையங்கள், 3 வேளாண் ஆராய்ச்சி மையங்கள், ஒரு பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆய்வு மையம், பல்கலைக்கழக ஆராய்ச்சி பண்ணை மற்றும் நிலையங்கள் ஆகியவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. இவை விஞ்ஞானிகளுக்கும் பயனாளிகளுக்கும் இடையே நிலையான தொடர்பை உண்டாக்கியுள்ளன. மேலும் வானொலி நிகழ்ச்சிகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பத்திரிகைச் செய்தி, வெளியீடுகள், மடிப்பிதழ்கள், துண்டறிக்கைகள், நூல்கள், இதழ்கள், செய்தி மடல்கள் ஆகியவை மூலம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வழிமுறை நாள்தோறும் பரவலாக்கப்பட்டு வருகின்றது.

மேலும், கால்நடை அறிவியல் தகவல் சேவை மையம் ஒன்றும் விரிவாக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் ஒளி/ஒலி பாடங்களை உருவாக்கி கால்நடை பண்ணைத் தொழில் தகவல் பரிமாற்றத்தை மேற்கொண்டு வருகிறது.

தொடுதிரைக் கணினித் தகவல் வசதி

மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரி, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம் வேளாண் தொழில்நுட்பத் தகவல் மையம், கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மை நிலையம், மாதவரம், புதுக்கோட்டை கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக மண்டல ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூர், கடலுார், தர்மபுரி, ஈரோடு, கரூர், திருப்பூர், நாகர்கோவில் ஆகியவற்றில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், மதுரையில் உள்ள கால்நடை மருத்துவ பயிற்சி மற்றும் நோயறி மையம், தேனி, காஞ்சிபுரம் ஆகியவற்றில் உள்ள உழவர் பயிற்சி மையங்கள் - இவற்றில் சுயக் கற்றல் தேவைக்காக 21 தொடுதிரைக் கணினித் தகவல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொலைநிலைக் கல்வி

தொலைநிலைக் கல்விப் பிரிவானது மகளிர், வேலைவாய்ப்பு அற்ற இளைஞர், தொழில் முனைவோர், கால்நடைத் தொடர்புத் துறை சார்ந்தவர் ஆகியோருக்குப் பொருத்தமான கற்றல் கருவிகள் மூலம் (அச்சுசாதனம், CD ROM / குறுந்தகடு உரையாடல் வழிக் கலந்துரையாடல், இணையதளம் அடிப்படை) சுயக் கற்றல் வாய்ப்புகளை உண்டாக்குதல் பொருட்டு தொடங்கப்பட்டது.

அஞ்சல் வழி சான்றிதழ் பயிற்சிகள்

வ.எண்

பாடத்தலைப்பு

பயிற்சி காலம்

1,

நாட்டுக் கோழி வளர்ப்பு

3மாதம்

2,

வெள்ளாடு வளர்ப்பு

 

3மாதம்

3,

கறவைமாடு வளர்ப்பு

 

3மாதம்

4,

கால்நடைகளுக்கான பசுந்தீவன உற்பத்தி

 

3மாதம்

5,

ஜப்பானியக் காடை வளர்ப்பு

 

3மாதம்

6,

வான்கோழி வளர்ப்பு

 

3மாதம்

7,

கால்நடை மற்றும் கோழிப் பண்ணை மேலாளர்

 

3மாதம்

8,

விலங்கு நலம் பேணல்

3மாதம்

9,

கால்நடைகளுக்கான அடர்தீவன உற்பத்தி

3மாதம்

10,

கால்நடைத் தீவன ஆலை மேலாண்மை

3மாதம்

11,

செம்மறியாடு வளர்ப்பு

3மாதம்

12,

வெண்பன்றி வளர்ப்பு

 

3மாதம்

13,

முயல் வளர்ப்பு

 

3மாதம்

14,

இறைச்சி கோழி வளர்ப்பு

 

3மாதம்

15,

முட்டை கோழி வளர்ப்பு

 

3மாதம்

16,

உள்ளுர் தீவன பயிர் வளங்களைக் கொண்டு உகந்த தீவனங்களைத் தாயரித்தல்

3மாதம்

17,

கோழி குஞ்சு பொரிப்பக மேலாண்மை

 

3மாதம்

18,

மதிப்பூட்டிய பால் பொருட்கள் உற்பத்தி

3மாதம்

19,

மதிப்பூட்டிய இறைச்சி பொருட்கள் உற்பத்தி

 

3மாதம்

20,

பண்ணை கழிவுகள் மேலாண்மை

 

3மாதம்

21,

கால்நடை நோய் தடுப்பு மேலாண்மை

3மாதம்

22,

சுத்தமான இறைச்சி உற்பத்தி

3மாதம்

செயல் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்

வ.எண்

 

பயிற்சியின் பெயர்

 

கல்வித் தகுதி

 

பயிற்சிக் காலம்

 

1,

பால்பண்ணை உதவியாளர்

தமிழில் எழுத, படிக்க

1மாதம்

2,

பால் பதன நிலைய உதவியாளர்

10ஆம் வகுப்பு

11/2 மாதம்

3,

பால் மற்றும் பால் பொருட்கள் தரக் கட்டுப்பாடு உதவியாளர்

10ஆம் வகுப்பு

1மாதம்

4,

தீவன ஆலை மேற்பார்வையாளர்

10ஆம் வகுப்பு

1மாதம்

5,

தீவன பகுப்பாய்வுத் தொழில்நுட்ப உதவியாளர்

பட்டப் படிப்பு

3 மாதம்

6,

கால்நடைப் பண்ணை மேலாளர்

12ஆம் வகுப்பு

3 மாதம்

7,

கோழிப்பண்ணை மேலாளர்

12ஆம் வகுப்பு

3 மாதம்

8,

குஞ்சுப் பொறிப்பக மேற்பார்வையாளர்

10ஆம் வகுப்பு

1 மாதம்

 

9,

கோழிப்பண்ணை மேற்பார்வையாளர்

10ஆம் வகுப்பு

11/2 மாதம்

 

10,

கோழியின் இனப்பெருக்கப் பண்ணை மேற்பார்வையாளர்

10ஆம் வகுப்பு

2 மாதம்

 

11,

வான்கோழிப் பண்ணை உதவியாளர்

8ஆம் வகுப்பு

1 மாதம்

 

12,

கோழிகளுக்கான நோய்த் தடுப்பூசியாளர்

8ஆம் வகுப்பு

1 மாதம்

 

13,

ஆய்வக உதவியாளர்

12ஆம் வகுப்பு

3 மாதம்

 

14,

அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்க அறை உதவியாளர்

10ஆம் வகுப்பு

6 மாதம்

 

15,

செல்லப் பிராணிகளுக்கான உதவியாளர்

 

8ஆம் வகுப்பு

2 மாதம்

 

சுய வேலை வாய்ப்பு பயிற்சிகள்

வ.

எண்

 

பயிற்சியின் பெயர்

 

கல்வித் தகுதி

 

பயிற்சிக் காலம்

1,

கறவைமாட்டுப் பண்ணையம்

 

தமிழில் எழுத, படிக்க

1 மாதம்

 

2,

செம்மறியாடு வளர்ப்பு

தமிழில் எழுத, படிக்க

1 மாதம்

 

3,

வெள்ளாடு வளர்ப்பு

தமிழில் எழுத, படிக்க

1 மாதம்

 

4,

பசுந்தீவனம் மற்றும் விதை உற்பத்தி

தமிழில் எழுத, படிக்க

1 மாதம்

 

5,

உறைமோர் மூலம் பால் பொருட்கள் தயாரித்தல்

10ஆம் வகுப்பு

1 மாதம்

 

6,

கால்நடைப் பண்ணை கழிவினைப் பயன்படுத்துதல்

தமிழில் எழுத, படிக்க

1 மாதம்

 

7,

முயல் வளர்ப்பு

தமிழில் எழுத, படிக்க

1 மாதம்

 

8,

வெண்பன்றி வளர்ப்பு

தமிழில் எழுத, படிக்க

1 மாதம்

 

9,

ஜப்பானிய காடைப் பண்ணை

தமிழில் எழுத, படிக்க

1 மாதம்

 

10,

நாட்டுக்கோழி வளர்ப்பு

தமிழில் எழுத, படிக்க

1 மாதம்

நூல்வெளியீட்டுப் பிரிவு

மாதவரம் பல்கலைக்கழக வளாகத்தில் அச்சிடுவதற்கு ஏற்ற அனைத்து வசதிகளுடன் கூடிய அச்சகத்தைக் கொண்ட நூல்வெளியீட்டுப் பிரிவு உள்ளது. இதில் கால்நடை மற்றும் கோழியினம் தொடர்பான நூல்கள் அச்சிடப்பட்டு விற்பனைக்கு அளிக்கப்படுகின்றன. மாத இதழாகக் “கால்நடைக் கதிர்”, மற்றும் இரு மாத இதழாக “இந்திய கால்நடை மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி இதழ்” மற்றும் கால்நடை தொழில்நுட்ப இதழ் ஆகியவற்றையும், மாத இதழாகச் “செய்திமடல்” என்பதை ஆங்கிலத்திலும் தமிழிலும் முன்னுரிமை அடிப்படையில் வெளியிட்டு வருகிறது.

பல்கலைக்கழக மாணவர் கலந்தாய்வு மற்றும் வேலைவாய்ப்பு மையம்

உயர்ந்த இலட்சியம் கொண்ட பட்டதாரி மாணவர்களுக்குச் சிறந்த எதிர்கால வாய்ப்பு உண்டாக்குதல், ஆளுமைத்திறன் மேம்பாடு, திறமையை அதிகப்படுத்துவற்கான தன்னம்பிக்கை வளர்த்தல், பிற மனித ஆற்றல் மேம்பாட்டுச் செயல்முறைகள் போன்றவற்றை அளித்தல் பொருட்டுப் பல்கலைக்கழக மாணவர் கலந்தாய்வு மற்றும் வேலைவாய்ப்பு மையம் 2007ம் ஆண்டு முதல் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியிலும், 2001ம் ஆண்டு முதல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், நாமக்கல்லிலும் பின்வரும் நோக்கங்களுடன் நிறுவப்பட்டது.

  • இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய தகவலை மாணவர்களுக்கு அளித்தல்
  • இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள உயர்கல்வி வாய்ப்பு பற்றிய தகவலை அளித்தல்
  • இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மேற்படிப்பு மேற்கொள்ளல் பல்வேறு அமைப்புகள் மூலம் நிதி உதவி பெறுவது தொடர்பான தகவல் அளித்தல்
  • மாணவர்கள் தங்கள் கல்வியறிவை மேம்படுத்துதல், பயிற்சி அளித்தல், போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு உதவித் தொகை மற்றும் ஊக்கத் தொகை பெறுதல் ஆகியவற்றுக்கான ஆலோசனை வழங்குதல்

இந்த மையமானது மாணவர்கள் நலன் கருதி ஊக்கத்திறன் பயிற்சி, வெளிநிலையப் பயிற்சி ஆகியவற்றோடு வளாக, புறவளாக நேர்முகத் தேர்வுகளையும் தொடர்ச்சியாக நடத்திவருகிறது.

கல்லூரி மையங்கள் ஆய்வகங்கள் இவற்றின் தொடர்பு முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள்

கல்லூரிகள்

1. சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி,

வேப்பேரி சென்னை - 600 007.

தொலைபேசி எண்: 044-25304000 2.

2, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் - 637 002.

தொலைபேசி எண்: 04286-266469

3, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருநெல்வேலி - 627 001.

தொலைபேசி எண்: 0462-2336345

4, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு, தஞ்சாவூர் - 614 625.

தொலைபேசி எண்: 04372-234011

5, உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லூரி கொடுவள்ளி, சென்னை - 600 052.

திருவள்ளூர் மாவட்டம்.

தொலைபேசி எண்: 044-26321345

6, கோழியின உற்பத்தி மேலாண்மை கல்லூரி,

மத்தகிரி, ஒசூர் - 635 110.

தொலைபேசி எண்: 04344-689005

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள்

1, இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

எண். 63, காளப்பட்டிப் பிரிவு,

சரவணம்பட்டி அஞ்சல், சக்தி சாலை,

கோயம்புத்தூர் - 641035,

தொலைபேசி எண் : 0422 - 2669965.

2. இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

எண். 35, திருவள்ளுவர் தெரு,

வரதராஜன் நகர், செம்மண்டலம்,

கடலூர் - 607 001.

தொலைபேசி எண்: 0442-220049.

3, பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

குண்டலப்பட்டி ரோடு,

தருமபுரி- 636703.

தொலைபேசி எண்: 04342-288420.

4, பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

திண்டுக்கல் - 624 41.

தொலைபேசி எண்: 0451-2460141.

5. உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

எண். 150, சத்தி சாலை,

வீரப்பன் சத்திரம்,

ஈரோடு -638 004.

தொலைபேசி எண்: 0424 -2291482.

6. பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

எண். 4/221, பண்டுதகாரன் புதூர்,

மண்மங்கலம் அஞ்சல்,

கரூர் - 639 006.

தொலைபேசி எண்: 04324-294335.

7. பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

சமந்தமலை அஞ்சல், ஆர்.டி.ஒ. அருகில்

இராமாபுரம் எஸ்.ஒ.

கிருஷ்ணகிரி - 635 115.

தொலைபேசி எண் : 04343-235105.

8, இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், ஜி.பி. வளாகம்,

மேல்மருவத்தூர் – 603319.

தொலைபேசி எண்: 044-27529548.

9, உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

எண், 4/114, பறக்கை அஞ்சல், நாகர்கோவில்,

கன்னியாகுமரி மாவட்டம் - 629 61.

தொலைபேசி எண்: 04652-286843.

10, பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

எண்.2 முதல் தளம்,

கொட்டுப்பாளையம்,

கிணத்தடி சந்து நாகப்பட்டினம் - 611001.

தொலைபேசி எண்: 04365-224123

11, இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

இந்திரா நகர்,

இளம்பூர் அஞ்சல் பெரம்பலூர் - 621220.

தொலைபேசி எண்: 04328-291459

12. பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

எண். 16 ஏ அன்னமராஜா நகர்,

புதிய பேருந்து நிலையம் எதிரில்

இராஜபாளையம் -626 117.

தொலைபேசி எண்: 04563-220244.

13. பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், எண்.111994,

சாய் இப்ராகிம் நகர்,

பாரதி நகர்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக அஞ்சல்,

இராமநாதபுரம் - 623 503

தொலைபேசி எண்: 04567 - 231807

14. உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

கால்நடை மருத்துவ வாளகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக பின்புறம்,

சேலம் -636 001.

தொலைபேசி எண் : 0427-2410408

15, உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

கால்நடை மருத்துவமனை வளாகம்,

காமராஜர் சாலை,

திருப்பூர்- 648 604.

தொலைபேசி எண்: 0421-2248524.

16. பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

எண். 7/2, கோழி பண்ணை ரோடு,

கொட்டப்பட்டு,

ஸ்ரீலங்க ரோபியுஸ் வாளாகம் எதிரில்

திருச்சிராப்பள்ளி - 620 003.

தொலைபேசி எண் : 0431-2331715.

17. இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,

பைபாஸ் சாலை,

அரசு மருத்துவ கல்லுாரி அருகில் வட அண்டபட்டு,

திருவண்ணமலை - 606 604.

தொலைபேசி எண் : 04175-206577

18. உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

வல்லம் அஞ்சல்,

தஞ்சை திருச்சி நெடுஞ்சாலை,

தஞ்சாவூர் - 613 403.

தொலைபேசி எண்: 04362-204009.

19. உதவிப்பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,

சத்துவாச்சாரி,

வேலூர் - 632 009.

தொலைபேசி எண்: 0416-2253022.

20. பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,

டி மேட்டுப்பாளைம் போஸ்ட்

விழுப்புரம் - 605 601.

தொலைபேசி எண் : 04146-225244

கால்நடை மருத்துவ பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையம்

(அ) பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை மருத்துவ பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆய்வு மையம்,

திருப்பரங்குன்றம்,

மதுரை - 625 005.

தொலைபேசி எண்: 0452-2483903.

வேளாண் அறிவியல் நிலையம்

1. பேராசிரியர் மற்றும் தலைவர்,

வேளாண் அறிவியல் நிலையம்,

காட்டாங்குளத்தூர் அஞ்சல்,

காஞ்சிபுரம் மாவட்டம் - 603 203.

தொலைபேசி எண் : 044-27452371

2. பேராசிரியர் மற்றும் தலைவர்,

வேளாண் அறிவியல் நிலையம்,

குன்றக்குடி சிவகங்கை மாவட்டம் - 630 206.

தொலைபேசி எண்: 04577-264288

3. இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்,

வேளாண் அறிவியல் நிலையம்,

கால்நடை மருத்துவ கல்லூரி வளாகம்,

நாமக்கல்-637 002.

தொலைபேசி எண்: 04286-266345

உழவர் பயிற்சி மையம்

1. பேராசிரியர் மற்றும் தலைவர்,

உழவர் பயிற்சி மையம், துணை கருவூல அலுவலகம்,

மதுரை ரோடு,

தேனி - 625531.

தொலைபேசி எண்: 04546-260047

2. இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்,

உழவர் பயிற்சி மையம்,

குறிஞ்சி நகர்,

திருவாரூர் - 613701.

தொலைபேசி எண் : 04366-226263

3. உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்,

உழவர் பயிற்சி மையம்,

ஏனாத்தூர்,

காஞ்சிபுரம் - 631561.

தொலைபேசி எண் : 044-27264019

ஆராய்ச்சி நிலையங்கள்

1. பேராசிரியர் மற்றும் தலைவர்,

பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணை,

மாதவரம் பால்பண்ணை,

சென்னை - 600 051.

தொலைபேசி எண்: 044-25551571

2. பேராசிரியர் மற்றும் தலைவர்,

கோழியின ஆராய்ச்சி மையம்,

மாதவரம் பால்பண்ணை,

சென்னை - 600 051.

தொலைபேசி எண்: 044-25552650

3. பேராசிரியர் மற்றும் தலைவர்,

மேச்சேரி செம்மறியாடு ஆராய்ச்சி நிலையம்,

பொட்டனேரி,

சேலம் மாவட்டம் - 636453.

தொலைபேசி எண்: 04298-262023

4. பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலையம், காட்டுப்பாக்கம் - 603203.

தொலைபேசி எண்: 044- 27452224

5. பேராசிரியர் மற்றும் தலைவர்,

செம்மறியாடு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையம்,

சாந்திநல்லா- 643237.

தொலைபேசி எண்: 0423-2253089

6. இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர்,

மண்டல ஆராய்ச்சி மையம்,

கால்நடை பண்ணை வளாகம்,

அண்டகுளம் சாலை,

புதுக்கோட்டை - 622004.

தொலைபேசி எண்: 04322-271443.

7. பேராசிரியர் மற்றும் தலைவர்,

மைய தீவன தொழில் நுட்பப் பிரிவு,

கால்நடை அறிவியல் முதுகலை ஆராய்ச்சி நிலைய வளாகம், காட்டுப்பாக்கம் - 603203.

தொலைபேசி எண்: 044-27453029

8. பேராசிரியர் மற்றும் தலைவர்,

கால்நடை ஊட்டச்சத்துயியல் மையம்,

கால்நடை ஆராய்ச்சி நிலைய வளாகம்,

காட்டுப்பாக்கம் - 603203.

தொலைபேசி எண் 044-27451525.

நோய் ஆய்வகங்கள்

1. உதவிப் பேராசிரியர் மற்றும் தலைவர்,

பறவையின நோய் ஆய்வகம்,

கால்நடை மருத்துவமனை வளாகம்,

பட்டுத்துறைச் சாலை,

தலைவாசல்-636 112.

தொலைபேசி எண்: 04282-231645.

2. பேராசிரியர் மற்றும் தலைவர்,

கோழியின நோய் ஆய்வக மற்றும் கண்காணிப்பு மையம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், லத்துவாடி,

நாமக்கல் - 637 001.

தொலைபேசி எண் : 04286-266226

வேளாண் தொழில் நுட்பத் தகவல் மையம்

1. மேலாளர், வேளாண் தொழில் நுட்பத் தகவல் மையம்

காட்டுப்பாக்கம் - 603203.

தொலைபேசி எண்: 044-27452371

நூல் வெளியீட்டுப் பிரிவு

பேராசிரியர் மற்றும் தலைவர்,

நூல் வெளியீட்டுப் பிரிவு,

தொலைநிலைக் கல்வி இயக்ககம்

சென்னை - 600 051.

தொலைபேசி எண். 044-25554375

கால்நடை அறிவியல் மற்றும் தகவல் சேவை மையம்

இணைப்பேராசிரியர்

கால்நடை அறிவியல் மற்றும் தகவல் சேவை மையம், விரிவாக்கக் கல்வி இயக்ககம் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்

சென்னை - 600 051.

தொலைபேசி எண். 044-25550940

பல்கலைக்கழக பிரிவுகளின் தொலைபேசி எண்கள்

i. தலைமை அலுவலக தொலைபேசி எண்கள்

தொலைபேசி பிரிவு : 044 - 25551586/87, 25554555 56, 25550550

பல்கலைக்கழக மைய ஆய்வகம், : 044-25551581

மாதவரம் பால் பண்ணை மைய உயிர்தொழில்நுட்பப்பிரிவு மாதவரம்பால்பண்ணை : 044-25550033

கால்நடை மையத் தீவனம் மற்றும் தீவன நச்சு : 044-௨௫௫௫௦௧௧௧

ஆய்வுக்கூடம், மாதவரம் பால்பண்ணை சூனோசிஸ் (லெப்டோஸ்பைரோசிஸ்) ஆராய்ச்சிக்கூடம், : 044-255593067 25550551

மாதவரம் பால்பண்ணை நச்சுயிரி தடுப்பூசி ஆராய்ச்சி மையம், மாதவரம் : 044-25551573

பால்பண்ணை புறநகர் மருத்துவமனை, மாதவரம் பால்பண்ணை : 044- 25559046

ii. பல்கலைக்கழக அலுவலர்கள்

பதிவாளர் : 044 - 25551584

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் : 044-25550541

ஆராய்ச்சி இயக்குநர்: 044 - 25551583

இயக்குநர், கால்நடை நலக் கல்வி : 044-25555151

இயக்குநர், கால்நடை உற்பத்தி கல்வி : 044 - 25555386

இயக்குநர், விரிவாக்கக் கல்வி : 044 - 25551579

இயக்குநர், தொலைநிலைக் கல்வி : 044 - 24320411

நிதி அலுவலர் : 044 - 25551582

உடமை அலுவலர் : 044 – 25551580

iii. சென்னைக் கால்நடை மருத்துவக் கல்லூரியின் பல்வேறு பிரிவுகளின் தொலைபேசி எண்கள்

தொலைபேசி பிரிவு : 044 - 25381506/07/09/25385701/25385508/ 25361894

அவசரப் பிரிவு (அலுவலக நேரத்திற்குப் பிறகு) :044 - 25381509

உயிர் தகவல் தொழில்நுட்பவியல் மையம்: 044 - 2536010612536014 /25365418

கால்நடை உற்பத்தி மேலாண்மைத் துறை: 044 -25368702

புள்ளியியல் மற்றும் கணினிப் பயன்பாட்டுத்துறை: 044 – 25392737

வனவிலங்கு அறிவியல் துறை : 044 - 25360700

பல்கலைக்கழக விருந்தினர் இல்லம் :044 – 25612636

மாணவியர் விடுதி: 044 - 25610490

மாணவர் விடுதி : 044 – 25615604

iv. நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத் தொலைபேசி எண்கள்

தொலைபேசி பிரிவு : 04286 -26649192/93

நூலகம் : 04286 – 266485

கால்நடைத் தீவனப் பகுப்பாய்வுக் தரக்கட்டுபாடு கூடம் : 04286 – 266288

விருந்தினர் இல்லம் : 04286 - 266743

நோய் ஆய்வகம் : 04286 – 220650

கணினி மையம் : 04286 -266447

V. திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத் தொலைபேசி எண்கள்

தொலைபேசி பிரிவு : 0462-2330675

நூலகம் : 0462-2336343

ஸ்ரீபுரம் வாளகம் :0462-2330775

ஏ.ஜி.பி மற்றம் கணினி ஆய்வகம் : 0462-2335075

மாணவியர் விடுதி : 0462-2335077

மாணவர் விடுதி : 0462-2335078

ஐ.எல்.எப்.சி, இராமையன்பட்டி : 0462-2337309

vi. ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத் தொலைபேசி எண்கள்

முதல்வர் அலுவலகம் : 04372 - 234012 /13

டி.வி.சி.சி : 04372 - 234014

கணினி மையம் : 04372 -234015

நூலகம் : 04372 -234016

டி.டி. அலுவலக வாளகம் : 04372 – 233777

விடுதி : 04372 - 234123

மாணவியர் விடுதி : 04372 - 234124

மாணவர் விடுதி : 04372 – 234125

vii. உணவு மற்றும் பால்வள தொழில்நுட்பக் கல்லூரி, கொடுவள்ளி, சென்னை தொலைபேசி எண்கள்

முதல்வர் அலுவலகம் : 04427680214/127680218/127680217/127680215

viii. கோழியின உற்பத்தி மேலாண்மை கல்லூரி, ஒசூர்

முதல்வர் அலுவலகம் : 04344 - 689005

பல்கலைக்கழக இணையதளம் : www.tanuvas.ac.in

ஆதாரம் : கால்நடை பராமரிப்புத்துறை

2.84615384615
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
ம.விஜயலட்சுமி Dec 28, 2019 07:03 AM

கால்நடை பராமரிப்பு உதவியாளர் நிலை 2 பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு syllabus கிடைக்குமா ?

நாராயணன் Apr 24, 2019 05:19 PM

அருமையான விரிவான தகவல் போன் எண் உடன் சிறப்பு....நன்றி விகாஸ் பீடியா......இதற்க்கு உழைத்தவர்களுக்கு நன்றி

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top