பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வணிகவரித் துறையின் மக்கள் சாசனம்

வணிகவரித் துறை மக்கள் சாசனம் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்கள்

தமிழ்நாட்டின் வளம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடியவாறு அமையப்பெற்ற எளிய, முற்போக்கான மற்றும் நியாயமான வரிக்கொள்கையையும் திறமையான மற்றும் வெளிப்படையான வரி நிர்வாகத்தினையும் வழங்குதல்

பணி

கீழ்கண்ட முயற்சிகள் மூலம் மேற்கண்ட நோக்கங்கள் நிறைவேற்றப்படும்.

* சிறப்பாகவும், சிக்கனமாகவும் வரி வசூல் செய்தல்.

* வரி செலுத்துவோருக்கு மரியாதையுடனும், உடனடியாகவும் மற்றும் சிறப்பான முறையிலும் சேவை வழங்குதல்.

* சிறப்பான முறையில், வரிசெலுத்துவோரிடம் பயிற்சி மற்றும் தொடர்பு மூலம் அவர்கள் தன்னிச்சையாக விதிகளை பின்பற்ற ஊக்குவித்தல்.

* வரி சட்டங்களை கண்டிப்புடனும், நியாயமான முறையிலும் வெளிப்படைத் தன்மையுடனும் செயல்படுத்துதல்.

* ஊக்கமும், சிறப்பான பணித்திறன்மிக்க பணியாளர்களை கட்டமைத்தல்.

வழிவகைகள்

மேற்கண்ட நோக்கங்களை நிறைவேற்ற வரிவசூல் பணிகளில், சிறப்பாகச் செயல்பட வணிக செயல் முறைகள், அளவுக்கேற்ப மனிதவளம், மற்றும் செயல்முறை கண்டுபிடிப்புகள் மேம்படுத்தப்படும்.

* வணிகர்களின் பல்வேறு துறைவாரியான நியாயமான கோரிக்கைகளில் கவனம் செலுத்தி இக்கோரிக்கைகள் சரக்குகள் மற்றும் சேவைகள் மன்ற கூட்டங்களில் முன்வைக்கப்படும்.

*மனித வளத்தினை மேம்படுத்திடவும் குறிப்பாக பணியாளர்களின் அறிவுத்திறன், மனப்பான்மை மற்றும் திறமைகளை வளர்த்து அதன்மூலம் ஒழுக்கவியல், உறுதி ஆகியவற்றை மேற்கொண்டு நியாயமான மற்றும் வெளிப்படையான வரி நிர்வாகத்தினை உறுதி செய்தல்.

* வணிகர்கள் மற்றும் நுகர்வோரிடம் உரிய முறையில் தொடர்பு கொண்டு வரி செலுத்துவது குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி அதன்மூலம் வரி ஏய்ப்பினை தடுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.

* உயர்ந்த அளவில் உந்துதல் மற்றும் பொறுப்பினை வளர்க்கும் பொருட்டு பணியாளர்களை கண்ணியத்துடனும் மரியாதையுடனும் நடத்துதல் மற்றும் அவர்களது நியாயமான குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்தல்.

* மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப அமைப்பின் மூலமாக வெளிப்படையாகவும், நம்பகமாகவும் வணிகர்களின் வியாபார நடைமுறை சிக்கல்களை நிவர்த்தி செய்தல்.

முக்கிய மதிப்புகள்

பணியாளர்கள் கீழ்க்காணும் பண்புகளுடன் பணி செய்திட உறுதி பூண்டுள்ளார்கள்.

* நேர்மை - பணியில் கடமைகளை உண்மையுடனும் நேர்மையாகவும் மற்றும் வெளிப்படையாகவும் செயல்படுதல்.

* செயல்திறமை - மிக உயர்ந்த பணி மற்றும் தனிப்பட்ட செயல் திறமையுடன் பணியாற்ற அர்ப்பணித்தல்.

* பொறுப்புடைமை - வரி செலுத்துவோர் மற்றும் பிற சம்மந்தப்பட்டவர்களுக்கு உடனுக்குடன் சேவை வழங்குதல்.

* நேர்மை - இயற்கை நீதிக்கான கொள்கைகளை பின்பற்றி கண்டிப்புத் தன்மை, நிலையான தன்மை, நேர்மை மற்றும் பாரபட்சமற்றவாறு வணிகவரி சட்டங்கள் நிர்வகிக்கப்படும்.

* திறன் - அலுவலக நேரத்தையும் மனித வளத்தையும் திறம்பட உபயோகப்படுத்துதல்

* நம்பிக்கை - மாறாக நிரூபிக்கப்படும் வரை வரி செலுத்துவோரின் சந்தேகிக்கப்பட நம்பகத்தன்மை மாட்டாது.

* சிறந்த சேவைகள் - நடைமுறைகள் மற்றும் அமைப்புகளில் தொடர்ந்து முன்னேற்றத்துடன் செயல்பட்டு உயர்தரமான சேவைகளை வழங்கிட முயற்சிக்கிறோம்.

* புதிய அணுகுமுறை - புதிய யோசனைகள், வழி முறைகள், செயல் முறைகள் மற்றும் நடைமுறைகளை ஊக்குவிக்கிறோம்.

* இணைந்து செயல்படுதல் - இத்துறையில் பங்களிப்பவர்கள் மற்றும் பங்குதாரர்களின் நியாயமான தேவைகளை அவர்களுடன் ஆலோசனை செய்து துறை நடைமுறைகள் மற்றும் செயல் முறைகளின்படி வலுவான தகவல் தொடர்பு அமைப்பின் மூலம் அனைத்து மாற்றங்களும் உடனடியாக அவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

* மதிப்பளித்தல் - துறையில் பணிபுரிபவர்களையும் மற்றும் சேவை பெறுபவர்களையும் மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நடத்துதல்.

* குழுவாகப் பணியாற்றுதல் - துறையின் நோக்கங்களை அடைய குழுவாக இணைந்து செயலாற்றுதல்.

எதிர்பார்ப்புகள்

துறையின் பணி மற்றும் நிர்வாகத்தின் வெற்றி, வணிகர்கள் மற்றும் வணிக பொதுமக்களின் ஒத்துழைப்பைப் பொருத்து அமைகின்றது. எனவே, இத்துறை கீழ்க்கண்டவற்றை வணிகர்களிடம் எதிர்பார்க்கிறது.

* வணிகவரி சட்டங்கள் மற்றும் விதிகளுக்குட்பட்டு உரிய காலத்தில் பதிவு செய்தல்.

* முழுமையான மற்றும் சரியான நமூனாக்கள் குறித்த காலத்தில் தாக்கல் செய்தல்.

* கணக்குகளை சரியான முறையில் பராமரித்தலும் உரிய காலத்தில் கணக்குகளை தாக்கல் செய்தல்.

* தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் அறிமுகப்படுத்தப்படும் புதிய விதி மற்றும் நடைமுறைகளை உடனுக்குடன் கடைபிடித்தல்.

* வரிகளை குறித்த காலத்தில் செலுத்துதல்.

* வரிச் சட்டங்களை முழுமையாகவும் மற்றும் நேர்மையாகவும் கடைபிடித்தல்.

தரமான சேவை வழங்குவதை நோக்கி

* 01.07.2017 முதல் நாடு முழுவதும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

* 30.06.2017 அன்றைய நிலையில் தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டம், 2006-ன் கீழ் பதிவு பெற்றிருந்த வணிகர்கள், எவ்வித தடையுமின்றி 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இணையதளத்திற்கு வெற்றிகரமாக மாறியுள்ளனர்.

* GSTN-ஆல் பராமரிக்கப்படும் இணையதளம் www.gst.gov.in மூலம் பதிவுச் சான்று வழங்கப்படுகிறது.

* வணிகர்கள் பதிவு விண்ணப்பத்தை சமர்ப்பித்த நாள் முதல் மூன்று நாட்களுக்குள் மாநில வாரியாக, நிரந்தர கணக்கு எண். (PAN) அடிப்படையில் பதிவுச் சான்றிதழ்களை இணையதளம் மூலம் பெறுவதற்கு தகுதியுடையவராகிறார்கள். இப்பதிவுச் சான்றிதழ் உரிய அதிகாரியால் ரத்து செய்யப்படும் வரை அல்லது வணிகரால் வியாபாரத்தை மூடும் வரை அல்லது அவர்களே முன்வந்து இரத்து செய்யக் கோரும் வரை செல்லுபடியாகும்.

* தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டம் - 2017-ன் கீழ் பெறப்படும் பதிவுச்சான்று மத்திய மற்றும் மாநிலங்களுக்கும் பொதுவானதாகும்.

* www.ctd.tn.gov.in GSTN (GST Network) என்ற இணையதளத்தில் வணிகவரித் துறையின் பொதுத்தகவல்களை அறிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. உதவி மையம்: 0124-4688999 மின்னஞ்சல்: helpdesk.gst.gov.in

* “மிகை லாப நோக்கத்திற்கு எதிரான நடவடிக்கை ” - சரக்குகள் மற்றும் சேவைகள் தொடர்பான வரி, குறைக்கப்படும்போது அதன் தொடர்ச்சியாக இச்சரக்குகள் மற்றும் சேவைகளின் விலை அதற்கு ஈடாக குறைக்கப்பட்டு அதன் பலன் நுகர்வோருக்குச் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்கும் பொருட்டு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தில் அதிகாரக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

* "முன்னதாகத் தீர்மானிக்கும் அதிகார அமைப்பு" - பதிவு பெற்ற வணிகர்களின் சரக்குகள் மற்றும் சேவைகள் அல்லது இவை இரண்டிற்கும் செலுத்த வேண்டிய வரி விகித வகைபாடுகள், வழங்கப்பட்ட அறிவிக்கையின் பொருந்தும் தன்மை, சரக்குகள் அல்லது சேவைகள் அல்லது இவை இரண்டிற்கும் வழங்கும் நேரம் மற்றும் வழங்கும் இடத்தினை அல்லது இவை இரண்டையும் உறுதி செய்வது, உள்ளீட்டு வரவு வரி செலுத்துவது அல்லது செலுத்தியதாக கருதப்படுவது உள்ளிட்ட நிகழ்வுகளில் உரிய தெளிவுரை வழங்க சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தில் “முன்னதாக தீர்மானிக்கும் அதிகார அமைப்பு” ஒன்று மத்திய மற்றும் மாநில அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

* தற்போது அமலாக்கப்பட்டுள்ள சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தின் கீழ் எழும் புகார்கள் மற்றும் குறைகள் குறித்து வணிகர்களும் பொதுமக்களும் சென்னை, சேப்பாக்கம், வணிகவரி ஆணையர் அலுவலகத்தில் செயல்படும் கூடுதல் ஆணையர் (வரிவிதிப்பு) அவர்களுக்கு மனு அளிக்கலாம்.

* வரிவிதிப்பு முறைகளை மற்றும் கொள்கைகளை அவ்வப்போது மீளாய்வு செய்யப்படும்போது வணிகம் மற்றும் தொழிற்சங்கங்கள் மற்றும் நுகர்வோர் சங்கங்களுடன் கலந்து ஆலோசிக்கப்படும்.

* வரிச் சட்டங்கள் மற்றும் விதிகளில் செய்யப்படும் திருத்தங்கள், சுற்றறிக்கை, அறிவிக்கைகள், மாதாந்திர நமூனா தாக்கல் செய்யும் முறை மற்றும் ஏனைய விவரங்களை சரியான நேரத்தில் www.ctd.tn.gov.in மற்றும் www.cbec.gov.in ஆகிய இணைய தளங்களில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* தகவல் அறியும் உரிமைச் சட்டம் இத்துறையில் செயல்படுத்தப்பட்டு அதனுடைய அமலாக்கம் துறையில் உயர்மட்ட அளவில் நெருக்கமாக கண்காணிக்கப்படுகிறது.

* வணிகர்களுக்கு மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான மருத்துவச் சிகிச்சை , படிப்பு செலவு போன்றவற்றிக்கு நிதி உதவி வழங்கும் நோக்கத்திற்காக வணிகர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

முடிவுரை

வணிக பொதுமக்கள் மற்றும் துறைக்கு இடையே உள்ள பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை மட்டுமே மத்திய மற்றும் மாநில அளவில் பொருளாதார வளர்ச்சியை பெருக்கவும் நிதிப்பற்றாக்குறையினை குறைக்கவும் கணிசமாக பங்களிக்க முடியும். அரசு வருவாயினை சேகரிப்பதில் திறமையை மேம்படுத்த இத்துறை தொடர்ந்து பாடுபடுவதுடன் அதே சமயத்தில் வியாபார சீர்திருத்தம் மற்றும் வரி வசூல் பணி செய்வது மட்டுமல்லாது வணிகர்களின் நலனில் அக்கறை கொண்டு வர்த்தகர்களுடன் நட்புணர்வு கொண்ட துறையாகவும் உருமாறியுள்ளது. எப்போதும் வர்த்தகர்களுடன் நட்புணர்வோடு செயல்படுவதன் மூலம் வணிகர்கள் எளிதாக வணிகம் செய்ய ஏற்ற மாநிலமாக திகழும் என்று இத்துறை உறுதியளிக்கிறது.

ஆதாரம் : வணிகவரித்துறை, தமிழ்நாடு.

3.23076923077
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top