பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உடல் ஊனமுற்றோர்

உடல் ஊனமுற்றோரின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான அரசாங்க திட்டங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கணக்கெடுப்பு

இந்தியாவில் 2001இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் 2,31 சதவிகிதம் ஊனமுற்றவர்கள் இருக்கிறார்கள். 2,19 கோடி பேர் ஊனமுற்றவர்களாக உள்ளனர்; பார்வையில்லாதோர், காதுகேளாதோர், பேச முடியாதோர், கால் ஊனமுற்றோர் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியோர் ஆகியோர் இதில் அடங்குவர்.

ஊனமுற்றோர்களில் எழுபத்தைந்து சதவிகிதத்தினர் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். உடல் திறன் குறைந்தோரில் 49 சதவிகிதத்தினர் படித்தவர்களாகவும், 34 சதவிகிதத்தினர் பணிபுரிபவர்களாகவும் உள்ளனர். முன்னர் மருத்துவ சீரமைப்புக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் இப்போது சமுதாயச் சீரமைப்புக்குத் தரப்படுகிறது.

இந்தியக் கணக்கெடுப்பின்படி 2001இல் ஊனமுற்றோர் குறித்த தகவல்கள்

இயங்கும் திறன் (Movement) 28%

பார்க்கும் திறன் (Seeing) 49%

கேட்கும் திறன் (Hearing) 6%

பேசும் திறன் (Speech) 7%

மூளைத் திறன் (Mental) 10%

மூலம் (Source) : Census India 2001

தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு 2002இல் ஊனமுற்றோர் குறித்து தரும் தகவல்கள்

இயங்கும் திறன் (Movement) 51%

பார்க்கும் திறன் (Seeing) 14%

கேட்கும் திறன் (Hearing) 15%

பேசும் திறன் (Speech) 10%

மூளைத் திறன் (Mental) 10%

மூலம் (Source) : National Sample Survey Organisation 2002

சமுதாய நீதி மற்றும் அதிகார அமைச்சகத்தின் ஊனமுற்றோர் நலப்பிரிவு (The Disability Division in the Ministry of Social Justice & Empowerment), ஊனமுற்றோரின் அதிகாரங்களை, உரிமைகளை மேம்படுத்தி ஊக்கமளிக்கிறது. இந்தியாவில் 2001இல் எடுக்கப்பட்டக் கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகையில் 2.31 சதவிகிதம் ஊனமுற்றவர்கள் இருக்கிறார்கள். 2.19 கோடி பேர் ஊனமுற்றவர்களாக உள்ளனர்; பார்வையில்லாதோர், காது கேளாதோர், பேச முடியாதோர், கால் ஊனமுற்றோர் மற்றும் மூளை வளர்ச்சி குன்றியோர் ஆகியோர் இதில் அடங்குவர்.

இந்திய அரசியலமைப்பு

இந்திய அரசியலமைப்பு, சமுதாயத்தில் அனைத்து மனிதர்களுக்கும் சமஉரிமை, சுதந்திரம், நீதி மற்றும் கண்ணியம் போன்றவற்றைத் தர உறுதியளிப்பது போலவே, அச்சமுதாயம் ஊனமுற்றோரையும் சேர்த்துக் கொண்டதாகவே அமைய வேண்டும் என்று ஐயத்திற்கு இடமின்றி ஆணை பிறப்பித்துள்ளது. அரசியல் அமைப்பானது, பொருள் விவரப் பட்டியல் (schedule of subjects), ஊனமுற்றோருக்கான உரிமைகளை, அதிகாரங்களைப் பெற்றுத்தரும் பொறுப்பினை மாநில அரசுக்கே நேரடியாகத் தந்துள்ளது.

ஆகவே, ஊனமுற்றோரின் உரிமைகளையும் அதிகாரங்களையும் பெற்றுத் தருவதில் முதன்மைப் பொறுப்பு மாநில அரசுக்கே உரியதாகிறது.

அரசியலமைப்பின் சட்டப்பகு 253-இல் யூனியன் பட்டியல் எண் 13படி, இந்திய அரசாங்கமானது, “ஊனமுற்றோருக்கான (சம உரிமை, உரிமைப்பாதுகாப்பு மற்றும் முழுமையான பங்களிப்பு) சட்டம் 1995” (The Persons with Disabilities (Equal Opportunities, Protection of Rights and Full Participation) Act, 1995) என்ற சட்டத்தை இயற்றியது.

ஊனமுற்றோருக்குச் சமஉரிமையைத் தருவதும் நாட்டின் முன்னேற்றத்திற்கு, உருவாக்குதலுக்கு ஊனமுற்றோரின் பங்களிப்பை உறுதி செய்வதுமே இச்சட்டம் இயற்றியதன் முக்கிய நோக்கங்களாகும். இச்சட்டம் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் ஜம்மு - காஷ்மீர் நீங்கலாகப் பரவியுள்ளது. ஐம்மு - காஷ்மீர் அரசாங்கம் “ஊனமுற்றோருக்கான (சம உரிமை, உரிமைப்பாதுகாப்பு மற்றும் முழுமையான பங்களிப்பு) சட்டம் 1998” (The Persons with Disabilities (Equal Opportunities, Protection of Rights & Full Participation) Act, 1998) என்ற சட்டத்தை இயற்றியுள்ளது.

அனைத்து அரசாங்கங்களும் இணைந்து (மத்திய அமைச்சகம் / மாநில அரசு / யூனியன் பிரதேசம் / மத்திய அல்லது மாநில அரசின் கீழ் பணிபுரியும் நிறுவனங்கள் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் தகுதியுடைய அதிகாரிகள்) இத்திட்டத்தின் பல்வேறு பகுதிகளை செயல்படுத்துவது நடைமுறையிலுள்ளது.

ஆசியா பசிபிக் பகுதியில், ஊனமுற்றவர்களின் சமஉரிமை மற்றும் முழு பங்களிப்பு குறித்த அறிக்கையில் இந்தியா கையொப்பமிட்டுள்ளது. மேலும் எல்லோரும் இணைந்த தடைகளற்ற உரிமைகளை உடைய சமுதாயத்தை விரும்பும் பிவாக்கோ மில்லேனியம் ஃபிரேம்ஒர்க் (Biwako Millennium Framework) ஒப்பந்தத்திலும் இந்தியா கையொப்பம் இட்டுள்ளது. ஊனமுற்றோரின் உரிமைகளையும், கண்ணியத்தையும் காக்கும் அதிகரிக்கும் நோக்கத்துடன் உலக நாடுகள் கலந்து கொண்ட மாநாடு மார்ச் 30, 2007-இல் நடைபெற்றது; இந்தியா உலகநாடுகளின் ஒப்பந்தத்தை 1.10.2008-இல் ஒப்புக்கொண்டது.

அரசாங்கத் திட்டங்கள்

 

உடல் ஊனமுற்றோருக்குத் தேவையான உபகரணங்களை வாங்க / பொருத்த உதவுதல் ஏழ்மை நிலையிலிருக்கும் ஊனமுற்றோருக்கு தேவைப்படும் உபகரணங்களை வாங்க உதவுவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். நீடித்து உழைக்கக்கூடிய எளிமையான நவீனமான, தரமான உபகரணங்கள் வாங்க உதவுவதன் மூலம் ஊனமுற்றவர்களின், உடல் நிலையையும், மனநிலையையும் சமுதாய நிலையையும், இத்திட்டம் உயர்த்துகிறது. மேலும் அவர்களுடைய ஊனத்தினால் ஏற்படும் துன்பத்தைக் குறைத்து பொருளாதார ரீதியிலும் மேம்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் தரப்படும் உபகரணங்கள் யாவும் இந்திய தரச்சான்று (ISI) பெற்றிருத்தல் அவசியம்.

உடல் ஊனமுற்றோருக்குத் தேவையான உபகரணங்களை வாங்க / பொருத்த உதவும் திட்டத்தின் கீழ் செய்யப்படும் மொத்த உதவிகளும், அவ்வுதவிகளைப்பெறத் தகுதியான வருமான வரம்பும்:

மொத்த வருமானம் உதவித்தொகை

(i) மாதம் ரூ 6500 வரை (i) உபகரணத்தின் மொத்த விலை

(ii) மாதம் ரூ 6,501 முதல் ரூ 10,000 வரை (ii) உபகரணத்தின் விலையில் 50 சதவிகிதம்

இத்திட்டம் அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் (NGOs) இவ்வமைச்சகத்தின் கீழ் இருக்கும் தேசிய நிறுவனங்கள் (National Institutes under this Ministry) மற்றும் ALIMCO (a PSU).

ஊனமுற்றோருக்குத் தரப்படும் தேசிய உதவித்தொகைத்திட்டம்

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் முயன்று படித்து வரும் முதுநிலை மெட்ரிக் தொழில் சார்ந்த மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளுக்கு 500 புதிய உதவித் தொகை உருவாக்கப்பட்டுள்ளது. ஆயினும் அப்படிப்பின் காலம் ஓராண்டுக்கு மேல் இருக்க வேண்டும்.

மூளை முடக்குவாதம் (cerebral palsy), மூளைத்திறன் குறைந்தோர், ஒன்றுக்கு மேற்பட்ட ஊனமுடையோர், அதிகமாக செவித்திறன் குறைந்தோர் போன்றோருக்கு ஒன்பதாம் வகுப்பிலிருந்தே அவர்கள் தொடர்ந்து கல்வி கற்க உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சகத்தின் இணைய தளத்திலும், முன்னணி தேசிய மற்றும் வட்டார செய்தித் தாள்களிலும் உதவித் தொகைக்கான விண்ணப்பங்களை வரவேற்று ஜூன் மாதத்தில் விளம்பரங்கள் தரப்படுகின்றன. மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களும் இத்திட்டத்தை விளம்பரப்படுத்த வேண்டப்பட்டுள்ளன.

40 சதவிகிதம் அல்லது அதற்கு மேற்பட்ட ஊனமுடையோர், குடும்ப வருமானம் ரூ.15,000/-க்கு மேற்படாதோர் உதவித்தொகை பெற தகுதியுடையவர்களாவர்.

தொழில் துறை சார்ந்த இளங்கலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படிப்பவர்களில் வீட்டிலிருந்து வருபவர்களுக்கு மாதந்தோறும் ரூ.700/-ம், விடுதியில் தங்கிப் பயில்வோருக்கு மாதம் ரூ.1000/-ம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

தொழில் துறை சார்ந்த சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகளுக்கு, வீட்டிலிருந்து வருவோருக்கு ரூ.400/-ம், விடுதியிலிருந்து கற்போருக்கு ரூ.700/-ம் மாத உதவித் தொகைகளாக வழங்கப்படுகின்றன. மேலும் ரூ.10,000/- வரை கல்விக் கட்டணத்திலிருந்து மாணவர்களுக்கு திரும்பத் தரப்படுகிறது.

பார்வையற்ற மற்றும் செவித்திறனற்ற தொழில் துறை சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு மாற்று மென்பொருளுடன் (editing software) கணிணி வாங்கவும் நிதியுதவி செய்யப்படுகிறது. மேலும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவும் ஆதார மென்பொருளுடன் (support access software) கணிணி வாங்கவும் நிதியுதவி செய்யப்படுகிறது.

தேசிய நிறுவனங்கள் / உயர்தர நிறுவனங்கள்

ஊனமுற்றோரின் உரிமை அதிகாரம் குறித்த செயல்திட்டத்தோடு இசைந்தும் அவர்கள் எதிர்நோக்கம் பன்முகச் சிக்கல்களைத் தீர்க்கவும் பின்வரும் தேசிய நிறுவனங்கள் / உயர்தர நிறுவனங்கள் ஊனமுற்றோர் அதிகமாக இருக்கும் முக்கிய இடங்களில் காட்டப்பட்டுள்ளன.

1. பார்வைத் திறனற்றவர்களுக்கான தேசிய நிறுவனம், டேராடுன் (National Institute for the Visually Handicapped, Dehradun)

2. கை கால் ஊனமுற்றோருக்கான தேசிய நிறுவனம், கல்கத்தா (National Institute for the Orthopaedically Handicapped, Calcutta)

3. செவித்திறனற்றோர் அலி யுவார் ஜங் தேசிய நிறுவனம், மும்பை (Ali Yavar Jung National Institute for the Hearing Handicapped, Mumbai)

4. மூளைத்திறன் குறைந்தோருக்கான தேசிய நிறுவனம், செகந்தரபாத் (National Institute for Mentally Handicapped, Secunderabad)

5. மறுவாழ்வு பயிற்சி மற்றும் ஆய்வு குறித்த நிறுவனம், கட்டாங் (National Institute for Rehabilitation Training and Research, Cuttack)

6. உடல் ஊனமுற்றோர் சங்கம், புது டெல்லி (Institute for the Physically Handicapped, New Delhi)

7. பல்வகை ஊனமடைந்தோருக்கு உரிமை அதிகாரம் தரும் தேசிய நிறுவனம், சென்னை (National Institute for Empowerment of Persons with Multiple Disabilities (NIEPMD), Chennai)

மூலம் : http://www.disabilityindia.com/ and Min of Social Justice

2.82191780822
செந்தில் குமார் மேலக்கிடாரம் Nov 03, 2016 07:45 PM

ஊானமுற்றோர் அட்டை பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் திங்கள் கிழமை தோறும் முகாம் நடைபெறும் உங்கள் ஒாிஜினல் ரேசன் கார்டு மற்றும் 4 புகைப்படங்கள் கொன்டு செல்லுங்கள்

TASNA Feb 22, 2016 10:44 AM

அருகில் உள்ள வங்கி மேலாளரை அணுகிப் பயன்பெறவும். நன்றி

செந்தில் Feb 21, 2016 03:17 PM

வீட்டுகடன் பெருவது எப்படி

eeramjrenu Dec 26, 2015 04:50 PM

தாராளமாக நீங்களும் மாற்றுத் திறநாளிகளுக்கான உதவிகள் பெரும் அடையாள அட்டை பெற முடியும். இது தொடர்பாக உங்களுக்கு உள்ள சந்தேகங்களை இந்த எண்ணில் தோடர்பு கொண்டு தீர்த்து கொள்ளலாம். திரு.ஈரம்.ஜெ.ரேணு 99*****24

DEENATHAYALAN.G Dec 28, 2015 10:43 AM

அரசாங்கத்திடம் இருந்து ஊனமுற்றோர் சான்றிதழை எப்படிப் பெறுவது? உதவி செய்யுங்கள்

ஆனந்த குமார் Jul 07, 2015 08:33 AM

எனக்கு சிறு வயதில் இருந்து எலும்பு குறைபாடு உள்ளது, இதுவரை 11 முறை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது து. எனவே நான் ஊனமுற்றோர் சான்றிதழ் வாங்க இயலுமா ?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top