பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம் / செயல்புரிவதற்கு இடையூறு செய்யும் குறைபாடு
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

செயல்புரிவதற்கு இடையூறு செய்யும் குறைபாடு

செயல்புரிவதற்கு இடையூறு செய்யும் குறைபாடு பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

உடல்நலம்தான் நமது சமுதாய வளர்ச்சியை சுட்டிக்காட்டும் ஒரு முக்கியமான குறியீடு. செயல்புரிவதில் இடையூறு உண்டாக்கக்கூடிய குறைபாடுகள் சமுதாய வளர்ச்சியில் ஒரு முக்கியமான பங்கினை வகிக்கின்றன. உடல் குறைபாடு என்பது ஒரு தனி மனிதனின் வாழ்க்கையைக் கட்டுபடுத்தும் ஒன்றாக இருந்து விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் நிலைமையை அனுபவிப்பவராக அவரை மாற்றி அவரது வாழ்க்கையை வெவ்வேறு வழிகளில் கட்டுப்படுத்தி விடுகிறது என்பதாகப் பார்க்கப்படுகிறது. நோய்கள் பற்றிய சமூகப்புள்ளி விவர ஆய்வுகள் காட்டும் சுகாதாரக் குறைபாடுகளும், பரவக்கூடிய தொற்று நோய்களுமே அதிக கவனத்தையும் உந்து கையையும் பெருகின்றன என்பதும், உடல் நலத்தின் மிக முக்கியமான அங்கமான உடல் குறைபாடு மூடாக்கு அகற்றப்படாமல் கவனமின்றி ஒளிமங்கிக் கிடக்கிறது என்பதும் பெரும்பாலும் வெளிப்படையாகவே தெரிகிறது.

மாற்றுத்திறன்

மாற்றுத்திறன் (Disability) எனும் சொல்லுக்கும் அப்பால் வலிமை இழப்பு வாய்ப்பு குறைவான நிலைமை (Handicap) ஆகியவை இதனோடு தொடர்புடையவை. இவற்றிற்கு தனி வகையான அர்த்தங்கள் உள்ளன. வலிமை இழப்பு என்பது உடல் அமைப்பு, தோற்றம், உடல் உறுப்புகள், உறுப்பு மண்டலங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றில் எந்தக் காரணத்திலும் ஏற்படக்கூடிய இயல்பு கடந்த நிலைமைகளோடு தொடர்புடையது என்று உலக சுகாதார நிறுவனத்தின் கையேடு கூறுகிறது. வலிமை இழப்பு என்பது உடலுறுப்புகளின் அளவில் ஏற்படக்கூடிய தடைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்பதே அடிப்படை உண்மை.

திறன்குறைவு (Disability) என்பது ஒரு தனி நபரின் அன்றாடச் செயல்களின் நிறைவேற்றத்தில் வலிமை இழப்பினால் ஏற்படக் கூடிய விளைவுகளை குறிக்கிறது. ஆக, திறன் குறைபாடு என்பது ஒரு நபரளவில் ஏற்படக்கூடிய தடைகளையும், இடையூறுகளையும் குறிப்பதாக இருக்கிறது. வாய்ப்பு குறைவான நிலை (Handicap) என்பது வலிமை இழப்பினாலும், திறன் குறைவாலும் ஒரு தனி நபர் அனுபவிக்கக்கூடிய பாதகங்களோடு தொடர்பு கொண்டதாக இருக்கிறது. ஒரு தனி நபர் தன்னை தகவமைத்துக்கொண்டு, தனது சூழலோடு இடைவினையாற்றுவதை குறிப்பதே வாய்ப்புக்குறைவான நிலை என்பதாகும்.

பிரச்னையின் பரவல்

கீழே தரப்பட்டுள்ள அட்டவனை 2001, 2011ஆம் ஆண்டுகளில் பெறப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தரவுகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஆண், பெண் மாற்றுத்திறனாளிகளின் வசிப்பிடங்கள் பற்றியதாகும் இது. இந்தியாவின் ஊரகப் பகுதிகளிலும், நகர்ப்புறங்களிலும் திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை இது தெளிவாகத் தெரிவிக்கிறது. அட்டவணையின் இன்னொரு பகுதி, மாற்றுத்திறனாளிகளின் விகிதம் நகரங்களைக் காட்டிலும் கிராமங்களில் அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது.

வலிமை இழப்பும் பண்பாடும்

பிரச்னைகளோடு வாழ்ந்து வருபவர்களை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பதை வைத்து வலிமை இழப்பை (Disability) இன்னொரு வகையில் விவரிக்க முடியும். ஒரு மனிதன் எங்கே பிறந்திருந்தாலும் வலிமை இழப்பு என்பது ஒரு சவாலாகத்தான் வெளிப்படுத்தப்படுகிறது. இத்தகைய சவால் இந்தியாவைப் போன்ற வளரும் நாடுகளில் வாழ்பவர்களுக்கு பெரிதாகி விடுகிறது. இத்தகைய மனிதர்களுக்கும் இவர்களுக்கு தொண்டு புரிவோருக்கும் பண்பாட்டுப் பின்புலத்தைப் புரிந்துகொள்வதும், பொருத்தமான ஒரு பண்பாட்டு மாதிரியைப் பின்பற்றுவதும் மிக முக்கியமான அங்கமாக இருக்கிறது. ஒரே மாதிரியான மதிப்பீடுகளையும், பார்வைகளையும் கொண்டவர்களாக இருப்பது இருவரின் செயல்களையும் எளிதாக்கும். நமது கண்டுணர்தல் மீதும் பார்வை மீதும் செல்வாக்கு செலுத்துவது பண்பாடே ஆகும் (ஸ்டோன் 2005). மேலும் மனிதர்கள் சமூகத்தை எப்படிப் பார்க்கின்றனர் என்பதை அவர்களின் மொழி வெளிப்படுத்தும்.

சமூகத்தின் மனப்பான்மை மீது செல்வாக்கு செலுத்துவதுடன், தனி நபர்களின் வாழ்க்கையின் மீதும் இது தாக்கத்தை உருவாக்கும். ஆகவே வலிமை இழப்பு பற்றிப் பேசும்போது தனி கவனம் தேவை என்பது வலியுறுத்தப்படுகிறது. சில வெளிப்பாடுகள், அவற்றின் தன்மைகளின் அடிப்படையில் வலிமை இழந்த மனிதர்களை தரக்குறைவாகவும், மட்டப்படுத்தியும் காட்டுவதுடன் அவர்களைப் பற்றிய பொருத்தமற்ற, ஒரே மாதிரியான சிந்தனைகள் தொடர்ந்து நீடித்து நிலவவும் வழி செய்கிறது. 1995ஆம் ஆண்டின் மாற்றுத் திறனாளிகள் சட்டம் (PwD Act 1995) மனிதமாண்பையும், பெருமையையும் பாதுகாப்பதுடன் உடல் குறைபாடு உடையவர்கள், கற்றல் குறைபாடு அழுத்தத்துடன் வாழ்பவர்கள் ஆகியோரை கெளரவத்துடன் குறிப்பிடவும் வகை செய்கிறது.

தலையீட்டின் அவசியம்

பண்பாட்டின் தனித்துவமிக்க, தகுதி வாய்ந்த தன்மையை வெவ்வேறு கோணங்களில் ஆராய்ந்து பார்க்கும்போது வலிமை இழப்பிற்கு அது ஒரு ஆழமான பொருளைத் தருகிறது. வலிமை இழப்பை பொருத்தமாகவும், தகுந்த பொருளுடனும் புரிந்து கொள்வது சேவை அளிப்பவர்களுக்கு பயன்தருவதாக இருக்கும். வலிமை இழந்திருப்பவர்களை பல்வேறு சூழல்களில் பல்வேறு சொற்களைப் பயன்படுத்தி சமூகம் முத்திரை குத்துகிறது. இதன் விளைவாக வலிமை இழப்போடு தொடர்புடைய களங்கம் ஒரு போதும் துடைத்தெறிய இயலாததாக இருந்து வருகிறது. ஒரு தனி நபரின் ஊனமுடைய தோற்றம் குடும்பத்தின் செயல்பாட்டில் எதிர்மறையான செல்வாக்கை செலுத்துகிறது. குடும்ப உறவுகளை பாதித்து மன சஞ்சலங்களையும், செயல்குலைவையும் உருவாக்கி பெற்றோருக்கும் தனிநபருக்கும் அல்லது மற்ற குடும்ப உறுப்பினர்களுக்குமான உறவு நிலையை பாதித்து விடுகிறது. இவற்றையெல்லாம் கவனிக்கத் தவறினால் குடும்பம் ஒரு நிலையான சிக்கலில் சிக்கி விடும். இதனால் குடும்ப அமைப்பு சிதையவும், எதிர்மறையான குடும்பச் சூழல் உருவாகவும் நேரிடும். வலிமை குறைவாக இருப்பவரின் குடும்ப உறுப்பினர்களின் எதிர்பார்ப்புக் குறைவினால் குடும்பம் பொருளாதார, சமூக அந்தஸ்திலிருந்து தாழ்வுறும். பெற்றோரின் கல்வியறிவு, அவர்களின் முன் அனுபவம் போன்றவை இத்தகைய சூழலை நெகிழ்வாக்குவதில் மிக முக்கியமான பங்களிப்பை செய்யும். வீட்டுக்கு வெளியில் உள்ள உறவினர்கள், நண்பர்கள், அண்டை அயலார், பொது வெளியில் உள்ள மனிதர்கள் போன்றோர் மாற்றுத்திறனாளியிடம் நடந்துகொள்ளும் முறை இவர்களின் சமூக நடத்தையை ஒழுங்குபடுத்தும். இதில் எழக்கூடிய பலவிதமான சூழ்நிலைகளுக்கேற்ப தொழில்முறையாளர்களின் இடையீடு தேவையாகிறது. இத்தகைய பிரிவினருடன் பணியாற்றிவரும் சமூகப் பணியாளர்களின் பங்களிப்பு இதனால் மேம்படும்.

வலிமைக்குறைவும் உதவி அளிப்போரும்

உடல் குறைபாடு உடையவர்களை கையாள்வது ஒரு சவாலான காரியம். இவர்களுக்கு துணையாக இருபவர்களை 2 வகையாக பிரிக்கலாம். 1. முதல் நிலை துணையாளர்கள், 2. இரண்டாம் நிலை துணையாளர்கள். முதல் பிரிவில் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் அடங்குவர். இரண்டாம் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர், இன்ன பிற நெறி முறையாளர்கள் வருவர். இந்த வகையில் பண்பாட்டு அடிப்படையிலான மாதிரிச்செயல்பாடு ஆர்வம் தருவதாக உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் இந்த மாதிரி பற்றி கருத்துருவை பயன்படுத்துகின்றனர். நோயாளியின் சமூகத்தில் உள்ள தொழில்முறை நலம் பேணுநர்கள் நலச்சேவைகள் கிடைக்கும் விதம் பற்றியும், அவற்றைப் பெற்றுக்கொள்ளும் வழிவகைகள் பற்றியும் பாதிக்கப்பட்டவரிடம் விளக்குவதற்கு இது முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. வலிமைக்குறைவு உடையவர்கள் மீது அக்கறை செலுத்தும் அமைப்பில் பணியாற்றும் சேவையாளர்கள் சிறந்த நடைமுறைகளைக் கையாளுவதை ஊக்குவிப்பதுடன், பண்பாட்டு விழுமியங்களை கைக்கொண்டு ஒழுகுவதையும் இந்த மாதிரி உறுதி செய்கிறது. மத இணைவுகள், கல்வி, ஊடகம், தொழில், வருவாய் போன்றவை மாற்றுத்திறனாளிகள் பற்றிய மக்களின் மனப்பான்மை, புரிதல் ஆகியவற்றைப் பாதிக்கக்கூடிய காரணிகளாகும்.

உதவிபுரிவோரை சமூகத்திற்கும் சேவைக்கும் இடைப்பட்ட ஒரு பாலமாக செயல்பட இது வழிசெய்கிறது. இதனால் அந்தத்த சமூகங்களுக்கு ஏற்ற பொருத்தமான தீர்வுகளைத் தரக்கூடியதாக பண்பாட்டு மாதிரி அமைகிறது. பாதிக்கப்பட்டோரை குடும்பம், சமூகம் ஆகியவற்றோடு இணைத்திடவும் செய்கிறது. நம்பிக்கையையும் நல்லுறவையும் ஏற்படுத்தி இடையீட்டை திறம்பட செயல்படுத்தவும், தொடர்புகளை நீடிக்கச் செய்யவும் இது வழி செய்கிறது. இந்த மாதிரியின் படி பணிபுரிபவர் இரு வகைப்பட்ட பங்களிப்புகளைச் செய்யும் பொறுமை உடையவராகவும், இடர்களை எதிர்கொள்ளும் துணிவு கொண்டவராகவும் இருக்க வேண்டும். விளிம்பு நிலையிலும் பணிபுரியக் கூடியவராக இருத்தல் வேண்டும். அனைத்திற்கும் மேலாக சிறப்பான தகவல் தொடர்பு ஆற்றல் உடையவராக இருக்க வேண்டும். வலிவு குறைந்தவர்களுக்கான சேவையில் ஈடுபடும் தொழில்முறையாளர்கள் இவற்றில் கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

 • மாற்றத்திற்கான ஓர் ஊக்கியாக செயல் படுவது
 • மிகப்பரவலான ஆதரவுச் சேவைகளை வழங்குவது
 • வலைமைக்குறைவுடைய தனிநபர்களுடன் பணியாற்றும்படி குடும்பதினரையும், சமூகத்தையும் உற்சாகப்படுத்துவது
 • வேறுபட்ட விரும்பத்தகாத சூழலை சந்தித்து மீள்வதற்கு தனிநபருக்கும், குடும்பத்தினருக்கும் உதவுவது
 • வெளிப்படைத் தன்மையை ஊக்குவிப்பது
 • இரு பக்கத்தினருக்கும் ஆதரவு காட்டுவது
 • ஆதரவு தரும் ஆதார அமைப்புகளோடு குடும்பங்களை இணைப்பது
 • உளவியல் ஆலோசனை வழங்குவது, மனநலத்தலையீடு, நடத்தைப் பிணி நீக்கல், எடுத்துக்கூறுதல், பயிற்றுவித்தல், பட்டறைகள், கருத்தரங்குகள், பொம்மைகள், புத்தகங்கள், நூலகம், மறுவாழ்வுக் கருவிகள், உதவிக் கருவிகளை வழங்குவதன் மூலம் குடும்பத்தினரின் புரிதலையும், திறன்களையும் மேம்படுத்துவது. குறுகியகால, நீண்ட கால இடை ஓய்வு கவனம், சமூக உதவியும் துணையும், தகவல், கலந்தாய்வு, வழிகாட்டுதல், போக்குவரத்து தேவைகளை நிறைவு செய்வது. பாதிக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கிடையே பரஸ்பர தொடர்பை உருவாக்குவது.
 • கலாச்சார போட்டி நிலவும் சூழலை உருவாக்குவது.
 • வலிவு குறைவுடைய தனி நபர்கள் ஒவ்வொருவரும் பங்கேற்கக் கூடிய வளர்ச்சியை ஆதரிப்பது.

இவற்றோடு கூட தனிநபர்களின் தேவைகளுக்கு ஏற்ப ஆரம்ப நிலையிலேயே தரப்படக்கூடிய தொடர்ச்சியான பல்துறை பிணி நீக்கல் முயற்சிகள், தனி நபரின் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை ஆராய்ந்து அதற்கேற்றபடி மாற்றங்களை ஏற்படுத்தி வழங்கப்படும் நோய் நீக்கல் பயிற்சிகள், திட்டங்கள். பெற்றோரின் அறிவாற்றலையும், புரிதலையும் மேம்படுத்தக்கூடிய உளவியல் ஆதரவு, பாதிக்கப்பட்ட தனிநபரின் தேவையை உணர்ந்துகொண்டு செய்யப்படும் உதவி போன்றவையும் தொழில்முறை உதவுநர்களின் செயல்களாக அமைய வேண்டும். இந்தியாவில் நிலவக்கூடிய நிலைமைகளை கருத்தில் கொண்டு தங்கள் செயல்பாடுகளையும் பொறுப்புகளையும் மேம்படுத்துவது என்பதை விடவும், தவிர்ப்பது என்ற நிலையைச் சுற்றியே இங்குள்ளவர்கள் மையமிட்டுள்ளனர் (உஸ்கல் 2010). மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி என்பது குடும்பங்களின் உதவியையும் உள்ளடக்கியது. பாதிப்புக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கு மருத்துவ உதவி, சமூக ஆதாயங்கள், வீடு போன்றவை கிடைக்கவும் தனிப்பட்ட உதவிகள், மறுவாழ்வு உபகரணங்கள் கிடைக்கவும், பணிபுரிய இயலாதவர்களுக்கு சமூக மறுவாழ்வு அமைப்பும், மறுவாழ்விற்கான தொழில் பயிற்சி, தனிப்பட்ட உதவி, ஆதரவுக்கரம், சட்டப் பாதுகாப்பு, அர்த்தமுள்ள துடிப்புமிக்க ஓய்வு நேரச் செயல்பாடுகள், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவையும் பாதிக்கப்பட்டோருக்கு தேவையாகின்றன.

எனவே, இதில் ஈடுபடும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களின் பின்னலமைப்பை உருவாக்கும் திறன் கொண்டவராக, நெகிழ்வும் கற்றுக்கொள்ளும் ஆர்வமும், செயலாற்றும் சிந்தனையும் உடையவராக இருத்தல் அவசியம்.

திறன்குறைவு உடையவர்களை சக்தி உடையவர்களாக மாற்றுவதே முக்கியமான நோக்கமாக இருக்க வேண்டும். இதன் மூலம் சிறப்பான அணுகுமுறைதான் சிறந்தது, உயர்ந்தது என்பது இல்லை. சூழலைப் புரிந்துகொண்டு அவ்வப்போது எழக்கூடிய நிலைமைகளுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேற்கொள்வதே சிறந்தது. இந்தத் தருணத்தில் தேவைப்படுவதும் அதுதான்.

ஆதாரம் : அருணிமா டே, உதவி போராசிரியர், வித்யாசாகர் சமூக பணி பள்ளி, வித்யாசாகர் பல்கலைக்கழகம், கொல்கத்தா

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top