பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம் / தமிழ்நாடு அரசின் ஊனமுற்றோருக்கான திருமணத் திட்டங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு அரசின் ஊனமுற்றோருக்கான திருமணத் திட்டங்கள்

தமிழ்நாடு அரசின் ஊனமுற்றோருக்கான திருமணத் திட்டங்கள் பற்றிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு ஊனமுற்றவர்களைத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

கை, கால் ஊனமுற்றவர்

ஒரு கை அல்லது ஒரு கால் இழந்தோரைத் திருமணம் செய்து கொள்பவருக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உதவிக்கான தகுதிகள்

  • தம்பதிகளில் ஒருவர் கை, கால் ஊனமுற்றவராக இருத்தல் வேண்டும்.
  • பிறவியிலேயே ஊனமுற்றவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
  • குடும்பத்தின் ஆண்டு வருமானம் 24,000க்குக் குறைவாக இருக்க வேண்டும்.

உதவித்தொகை

ரூபாய் 5000 வழங்கப்படும். இதில் ரூபாய் 3000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 2000 காசோலையாகவும் வழங்கப்படும்.

பார்வையற்றவர்

பார்வையற்றவரைத் திருமணம் செய்து கொள்பவருக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உதவிக்கான தகுதிகள்

  • தம்பதிகளில் ஒருவர் பார்வையற்றவராக இருத்தல் வேண்டும்.
  • பார்வையற்றவரைத் திருமணம் செய்து கொள்ளும் பார்வையுடையவரின் ஆண்டு வருமானம் 24,000க்குக் குறைவாக இருக்க வேண்டும்.

உதவித்தொகை

  • ரூபாய் 10000 வழங்கப்படும். இதில் ரூபாய் 7000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 3000 ரொக்கமாகவும் வழங்கப்படும்.

பேசும் திறனற்ற காது கேளாதவர்

பேசும்திறனற்ற காது கேளாதவர்களைத் திருமணம் செய்து கொள்பவருக்கு நிதியுதவி அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உதவிக்கான தகுதிகள்

  • திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளில் ஒருவர் 100 சதவிகிதம் பேசும் திறனற்று காதுகேளாதவராக இருத்தல் வேண்டும்.
  • 35 வயதுக்கு மேற்படாதவர்களுக்கு வருமான வரம்பு எதுவுமில்லை.

உதவித்தொகை

  • ரூபாய் 5000 வழங்கப்படும். இதில் ரூபாய் 3000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், ரூபாய் 2000 ரொக்கமாகவும் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட மறுவாழ்வு அலுவலர் அலுவலகத்தில் தேவையான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று நிரப்பி, தேவையான இணைப்புகளைச் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட மறுவாழ்வு அலுவலர் இந்த விண்ணப்பப் படிவங்களை ஆய்வு செய்து குறிப்பிட்ட உதவித்தொகைகளை வழங்குகிறது.

ஆதாரம் : மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

3.1
மணிகண்ணன். Jul 20, 2020 04:12 PM

Good social work

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top