பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம் / மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் அளித்தல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் அளித்தல்

மாற்றுத்திறனாளிகளுக்கு திறன் அளித்தல் பற்றி இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.


வேலைக்கேற்ற திறன் வளர்ப்பதில் தற்போதைய நிலை

மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெருமளவுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. பெரிய நகரங்களில் உள்ள நிறுவனங்கள் இத்தகையவர்களை வேலைகளில் அமர்த்துகின்றன. உற்பத்தி, தரம் ஆகியவை பற்றிய நிறுவனக் கவலைகள் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்தி அவர்களைப் பணிக்கு உகந்தவர்களாக மாற்றுவதன் மூலம் களையப்பட்டு வருகின்றன. 2008, 2014 ஆகிய ஆண்டுகளில் பின்னடைவு உச்சத்தில் இருந்தபோது சிறந்த ஒன்றை நீங்கள் உருவாக்கினால் அதற்கு சந்தை மதிப்பு எப்போதும் உண்டு என்பதை வலியுறுத்தும் விதத்தில் மாற்றுத் திறனாளிகளையும் வேலைக்கு எடுத்து அமர்த்தி நிறுவனங்கள் கடந்த 5 ஆண்டுகளில் வேகமாக முன்னேறி வருகின்றன. ஆள் பற்றாக்குறை நிலவுவதால் சில நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளை தொடர்ந்து வேலைக்கு அமர்த்த முயற்சித்து வருகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்க்காகத் தொண்டாற்றும் அரசு சாராத அமைப்புகள், பயிற்சி நிறுவனங்கள், சமுதாயத் துணிவாண்மை அமைப்புகள் போன்றவை ஏராளமான மாற்றுத் திறனாளிகளின் திறன்களை மேம்படுத்தி பணியமர்த்துவதில் நகரங்களிலும், மாவட்டங்களிலும் முனைப்பு காட்டி வருகின்றன. குழுத்தலைவர்கள், மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கும் திறன் மேம்பாடு பற்றிய பயிற்சியை அளித்து மாற்றுத்திறனாளி பணியாளர்களுடன் இவர்களையும் வெற்றிகரமாக இணைந்து வேலை வாய்ப்பில் புதிய சாத்தியங்கள் உருவாக்கப்படுகின்றன. குறிப்பிட்ட ஒரு பணிக்குத் தேவைப்படும் பயிற்சியை நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அளிப்பதன் மூலம் தரமான பணியாளர்கள் உருவாவதும், நல்ல வேலைகள் கிடைப்பதும் சாத்தியப்படுகிறது. நிறுவனங்கள் தங்களின் தேவைகளை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப பயிற்சிகளைத் தந்து பொருத்தமானவர்களை நியமிப்பதால் இது ஒரு வெற்றிக் கூட்டணியாக அமைகிறது.

திறன் மேம்பாட்டை அடைவதில் பெரும் பங்கு வகிப்பது அனுபவப் பயிற்சியேயாகும். திறன் பயிற்சியுடன் வாழ்க்கைத்திறன் பயிற்சிகளும், மனப்பான்மை தொடர்பான பயிற்சிகளும் சேர்க்கப்படும் போது பணியாளர்கள் ஒரே நிறுவனத்தில் நீண்ட காலத்திற்கு தொடர்ந்து பணியாற்றுவது சாத்தியப்படுகிறது. தங்கள் குழந்தைகள் வாழ்க்கையிலும், வேலையிலும் கடுமையான யதார்த்தங்களை சந்திக்க வேண்டியிருக்கும் என்று பெற்றோர் நினைப்பதில்லை. எனவே என்னதான் பொருளாதாரத் தேவைகள் உள்ள போதிலும் வெகுதூரம் பயணிப்பது, 24 மணி நேரமும் செயல்படும் நிறுவனங்களில் பணிமுறை மாற்றத்தின்படி வேலை பார்ப்பது, இலக்குகளை அடைவதற்காக விரைந்து பணியாற்றுவது போன்ற நெருக்கடிகளிலிருந்து தங்களின் மாற்றுத்திறனாளி குழந்தைகளை பாதுகாக்கவே பெற்றோர் முனைகின்றனர்.

தகுதி முதலியவற்றில் ஒப்பான நிலையில் இருப்பவர்கள் ஒருவருக்கொருவர் பயிற்றுவிப்பது என்பது மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிப்பதில் வெற்றிகரமான முறையாகத் திகழ்கிறது. பழைய முறைகளை கைவிட்டு இத்தகைய புதிய முயற்சி சிறந்த மாற்றாக மேற்கொள்ள வேண்டும். உளவியல் குறைபாடு உடையவர்களுக்குத் தரப்படவேண்டிய திறன் வளர்ச்சி, வேலைவாய்ப்புப் பயிற்சிகள் உளவியல் ஆலோசகர், மனநல மருத்துவர் ஆகியோரைக் கொண்ட உதவி அமைப்புகளையும் துணையாகக் கொண்டு வழங்கப்படவேண்டும்.

சிறு வணிகம், விருந்தோம்பல், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், ஆயத்த ஆடை, ஜவுளித் தொழில், வங்கித் தொழில் ஆகிய வளரும் துறைகளில் திறன் மேம்பாடு அதிகரித்துள்ளது. சுய தொழிலில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், ஒப்பனை, கைபேசி பழுதுபார்ப்பு போன்ற அவ்வப் பகுதிகளைச் சார்ந்த தொழில்களில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

எதிர்கால நிலைமை

  • தேசிய திறன்மேம்பாட்டுக் கொள்கையை பிரதமர் செயல்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார். அடுத்த 7 ஆண்டுகளில் 38 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு திறன்களை மேம்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் மேம்பாட்டுத்துறை (DePWD) சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஒரு அங்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயல்திட்டமும், எங்கும் எளிதில் சென்றடைதல் (Accessible India) என்ற திட்டமும் மாற்றுத்திறனாளிகளைச் சுற்றி சிலவும் சூழலின் மீது கவனத்தை ஏற்படுத்தியுள்ளன. திறன் மேம்பாட்டுக் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதற்கான மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் குழுமம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் உழைக்கும் மக்களின் ஒரு பகுதியாக மாற்றுத்திறனாளிகளும் வருவதற்கான சூழல் கனிந்திருக்கிறது. பற்பலவிதமான திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கும், மிகக்கடுமையான உடல், அறிவாற்றல் குறைபாடுகள் உடையவர்களுக்கும் எல்லா இடங்களிலும் எல்லா வகையான வேலைகளிலும் சமமான முக்கியத்துவத்தை அளித்து சிறந்த பயிற்சி மாதிரிகளின் படி பயிற்சிகளைத்தர வேண்டும்.
  • தற்போது நம்மிடம் இருக்கும் 600க்கும் மேற்பட்ட தரமான ஊரக வேலைவாய்ப்பு நிறுவனங்களின் கட்டமைப்பை (RSETIs) நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு சுயவேலை வாய்ப்புப் பயிற்சிகளைத் தரவேண்டும். வெவ்வேறான சுயதொழில் வாய்ப்புகளுக்கு பொருத்தமான சிறப்புப் பயிற்சிகள் தேவை. தரமான மாற்றுத்திறனாளி பயிற்றுநர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர். இவர்கள் ஒரு முன்மாதிரியாக அமைந்து மற்றவர்களுக்கும் ஊக்கமளிப்பார்கள்.
  • கடந்த 10 ஆண்டுகளில் 273க்கும் அதிக மான 26 துறைகள் மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்புகளைத் தந்துள்ளன. மிகக் கடுமையான பாதிப்பு உடையவர்களை பணியமர்த்துவதற்கு ஏற்ற தீர்வுகளையும், பயிற்சிகளையும் கண்டறிந்து இன்னும் அதிக வேலைகளை உருவாக்குவதற்கு முனைந்திட வேண்டும். மாற்றுத் திறனாளிகளை பணிக்கு அமர்த்திக்கொள்ளும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • பணி பகுப்பாய்வு சேவைகள், பணியிடத் தீர்வுகள், உள்ளடக்கிய சேவைகள், விழிப்புணர்வு, கூர்ந்தறியும் திறனை உருவாக்குதல், தலைமைப் பண்பு வளர்ச்சி போன்றவற்றில் சேவை வழங்க முழுமையான ஆதரவு அமைப்புகள் பெருக வேண்டும். திறன் மேம்பாட்டு முன்முயற்சிகள் வெற்றிபெற இவை மிகவும் முக்கியம். இந்த ஆண்டில் கொண்டு வரப்பட்டுள்ள Enable Academy அமைப்பு மாற்றுத்திறனாளி சமூகங்கள் இணைந்து செயலாற்றுவதற்கு ஒரு தளமாக அமைந்து அவர்களின் வாழ்வாதாரம் உயர்வதற்குப் பாடுபட வேண்டும். தொடர்புடைய அனைவரின் வளப்பகிர்விற்கும், பரப்புரைகள் செய்வதற்கும் முழுமையான ஆதரவை வழங்கவும் இது ஒரு தளமாக அமைந்திட வேண்டும். கர்நாடக மாநிலத்தின் கிராமப் பகுதிகளில் மாற்றுத் திறனாளிகளை ஒருங்கிணைப்பதற்கு நம்மவாணி என்ற புதிய முறை செயல்பாட்டில் இருந்து வருகிறது. தங்களது அனுபவங்கள், பிரச்னைகள் ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கும் விழிப்புணர்வையும், நம்பிக்கையையும் பெற்று அன்றாட சந்திக்கவும், பொருளாதார ரீதியில் சுதந்திரமாக செயல்படவும் நம்மவாணி உதவுகிறது. தொழில்நுட்பம் சார்ந்த இதுபோன்ற தளங்கள் பெருத்த மாற்றத்தை உருவாக்கி மாற்றுத்திறனாளிகள் திறன் மேம்பாட்டை அடைவதில் ஒளிமிகுந்த எதிர் காலத்தை உருவாக்கித்தரும்.

இந்தியாவில் மாற்றம் (Change in India) நிகழும் போதுதான் இந்தியாவில் உற்பத்தி (Make in India) என்பது வெற்றிபெறும். வெற்றிகரமாகப் பணிபுரிந்து வரும் மாற்றுத் திறனாளிகள் மாற்றத்தின் முன்னோடிகளாவர்.

ஆதாரம் : சாந்தி ராகவன், Enable என்ற அமைப்பின் அறங்காவலர் – திட்டம் மாத இதழ்

3.125
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top