பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம் / மாற்றுத்திறனாளிகள் - கல்வி உரிமை மற்றும் வாய்ப்புகளை அதிகரித்தல்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாற்றுத்திறனாளிகள் - கல்வி உரிமை மற்றும் வாய்ப்புகளை அதிகரித்தல்

மாற்றுத்திறனாளிகள் - கல்வி உரிமை மற்றும் வாய்ப்புகளை அதிகரித்தல் பற்றிய குறிப்புகள்

முன்னுரை

இந்திய மக்கட்தொகையில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 2001-2011 காலக் கட்டத்தில் 22.4 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 2001ல் 219 கோடியாக இருந்த மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 2011ல் 2.68 கோடியாக உயர்ந்தது. அதில் 1.5 கோடி ஆண்களும், 1.18 கோடி பெண்களும் இருந்தனர். மாற்றுத் திறனாளிகளின் வளர்ச்சி விகிதம் நகர்ப்புறங்களிலும், நகர்ப்புறத்திலுள்ள பெண்கள் இடையேயும் அதிகமாக காணப்பட்டது. பத்தாண்டுகளில் நகர்ப்புற பகுதிகளில் இவர்களின் வளர்ச்சி விகிதம் 48.2 சதவிகிதமாகவும் நகர்ப்புற பெண்களின் வளர்ச்சி விகிதம் 55 சதவிகிதமாகவும் இருந்தது. ஷெட்யூல்டு வகுப்பினர் இடையே இது 2.45 சதவிகிதமாக இருந்தது. (மக்கட்தொகை கணக்கெடுப்பு 2011).

தற்போதைய நிலைமை

2011 மக்கட்தொகை கணக்கெடுப்பில் காணப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் மொத்த எண்ணிக்கையையும் சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகள் ஆரம்ப மற்றும் மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இது போன்ற குழந்தைகளின் கல்வித் தேவையை நிறைவு செய்வதில் இந்தியா பயணிக்க வேண்டிய தொலைவு மிகவும் அதிகமாக உள்ளதை காணலாம். 6 வயதுக்குட்பட்ட மற்றும் உயர் கல்வியில் உள்ள சிறப்பு தேவைகள் கொண்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளைப் பற்றிய விவரம் தெரியவில்லை. இவர்களுக்காக திட்டமிடுவதில் இது ஒரு பெரிய இடைஞ்சலாக உள்ளது.

எல்லோருக்கும் கல்வி இயக்கத்தின், அனைவரையும் உள்ளடக்கிய கல்வி திட்டத்தில் 10.71 லட்சம் சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.  (ஆதாரம்: கல்விக்கான ஒருங்கிணைக்கப்பட்ட மாவட்டவாரியான தகவல் முறை (UDISE) 2013–14)

2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி 29 வயதுக்கு குறைவான கல்வி வாய்ப்பு தேவைப்படும் சிறப்பு தேவைகள் உள்ளவர்களின் எண்ணிக்கை 1.23 கோடியாக இருந்தது. இதில் 534 லட்சம் பெண் குழந்தைகளும், மகளிரும் சிறப்பு தேவைகள் உடையவர்களாக இருந்தார்கள். தற்போதைய ஒரு குறைந்தபட்ச கணிப்பின்படி சிறப்பு தேவைகள் உள்ள சுமார் 20 லட்சம் பேர் ஆரம்ப, நடுநிலை மற்றும் சிறப்பு பள்ளிகளில் படிக்கிறார்கள். நமக்கு இப்போதுள்ள சவால் பலவகையான சிறப்பு தேவைகளைக் கொண்ட குழந்தைகள் மற்றும் மற்றவர்களுக்கு எப்படி கல்வி வாய்ப்பு அளிப்பது என்பதாகும்.

அரசியலமைப்பு சட்டத்தில் உறுதி செய்துள்ளபடி 2005 முதல் கல்விக்கான உரிமைச்சட்டம் மற்றும் எல்லாக் குழந்தைகளுக்கும் கட்டாய மற்றும் இலவச கல்வி போன்ற திட்டங்கள் இருந்தும்கூட சிறப்பு தேவைகள் உள்ள குழந்தைகள் மற்றும் மற்றவர்களும் மொத்தத்தில் 20 சதவிகிதத்தினர்தான் கல்வி பெறுகிறார்கள் என்பதில் விவாதம் தேவையற்றதாகும். மாற்று திறனாளிகளின் உரிமைகள் குறித்த பலதரப்பட்ட பன்னாட்டு முழக்கங்களிலும், ஒப்பந்தங்களிலும் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான கமிட்டியின் 24வது ஷரத்தின்படி கல்வித் துறையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அரசுகளுக்கு இரண்டு பொறுப்புக்கள் அளிக்கப்பட்டுள்ளன

மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் மற்றவர்களைப் போலவே சமமான கல்வி அளிக்க வேண்டும். இப்படி வழங்கப்படும் கல்வி எல்லோரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.

எந்த ஒரு பாகுபாடும் இன்றி எல்லா குழந்தைகளுக்கும் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்ற இலக்கை இந்தியா கொண்டிருந்தாலும் இப்பொழுதுள்ள இழிவான நிலைக்கு பல காரணங்களை நாம் கூற முடியும். ஆனால் பொதுவாக மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் அதில் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு அவர்களுடைய குறைபாடுகள் எந்த வகையிலும் ஒரு தடையாக இல்லாத வகையிலும் கல்வி கற்கும் வாய்ப்பும் சுமுகமான சூழ்நிலையும் இருந்தால் அன்றி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் உறுதி மொழி மட்டும் போதுமானதாக இருக்காது. எல்லோரையும் உள்ளடக்கிய கல்வி என்பது பற்றிய கொள்கை தெளிவாக இருக்க வேண்டும். அது, அரசின் பொதுவான நோக்கம், முனைப்பு, கொள்கைகள், செயல் திட்டங்கள் சட்ட நிலைப்பாடு மற்றும் நிதி ஒதுக்கீடுகளில் பிரதிபலிக்க வேண்டும். கடந்த காலங்களில் சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கான கல்வி நம்முடைய பொதுக் கல்வி முறையில் ஒரு அங்கமாக இல்லா திருந்ததை பார்த்திருக்கிறோம். நம்முடைய கல்வி அமைப்பு எல்லோரையும் உள்ளடக்கிய கல்விக்கு ஏற்ற பயிற்சியை பள்ளிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் வழங்கவில்லை.

கல்வி சார்ந்த ஒரு முழுமையான கொள்கை என்பது அரசியல் எண்ணங்களுக்கும், கனவுகளுக்கும் செயல்வடிவம் கொடுக்கக்கூடிய ஒரு முக்கியமான முயற்சியாகும். நலிவடைந்த மக்களை கல்வி ஒட்டத்திலும் வளர்ச்சி பணிகளிலும் ஈடுபடுத்துவதற்கும் அனைவரையும் உள்ளடக்குவதற்கும் தடைகளாக உள்ள சமுதாய, பொருளாதார, பண்பாடு, அரசியல், நிர்வாக தடைகளை கண்டறிந்து முறையாக நீக்க வேண்டும்.

எல்லோரையும் உள்ளடக்கிய கல்வி என்பதை நாம் 2015 ஆண்டிற்கான தேசிய கல்வி கொள்கையில் பார்க்க முடியும். இந்தியாவில் எல்லோரையும் உள்ளடக்கிய கல்வி முறை என்பது ஷெட்யூல்டு வகுப்பினர், ஷெட்யூல்டு பழங்குடியினர், குறைபாடுகள் உள்ள குழந்தைகள், இளம் வயதினர் மற்றும் மிகவும் ஏழ்மையான மற்றும் சவால்கள் நிறைந்த சூழ்நிலையில் வாழும் குழந்தைகளின் பலதரப்பட்ட தேவைகளை உள்ளடக்கியதாகும்.

 1. மாற்றுத்திறனாளி குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோர் கல்வி முதன்மை நீரோட்டத்தில் இணைக்கப்படாத வரையில் அனைவருக்கும் கல்வி என்ற கொள்கையை அடைய முடியாது.
 2. எல்லோருக்கும் கல்வி என்பதை அடைவதற்கான செயல் வடிவம் மாற்றுத்திறனாளி குழந்தைகளையும், இளைஞர்களையும் புறக்கணிக்கிறது.
 3. அனைவருக்கும் கல்வி அளிப்பதில், திட்டமிடுதல், நிர்வாகம், கண்காணிப்பு மற்றும் செயலாக்க பணிகளில் உள்ள இடர்பாடுகளை கண்டறிந்து களைவதில் தோல்வி.
 4. மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் எல்லோரையும் உள்ளடக்கிய கல்வி திட்டத்தில் ஷெட்யூல்டு வகுப்பினர், ஷெட்யூல்டு பழங்குடி வகுப்பினர், சிறுபான்மையினர், ஆண் பெண் பாகுபாடு போன்ற பலவகையான உட் பிரச்சினைகள் சமுதாயத்தில் இருப்பதை முழுமையாக கண்டு கொள்ள முடியாமை.
 5. மாற்றுத்திறன் என்பது மாநிலங்களின் கீழ் வரும் ஒரு பிரிவாகவும், கல்வி என்பது, மத்திய மாநில அரசுகள் இருவரின் கீழ் வரும் ஒரு பிரிவாகவும் இருப்பதால் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு கல்வி வசதி அளிப்பதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
 6. மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி அளிப்பது இரு அமைச்சகங்களின் பொறுப்பாக உள்ளது. எல்லோரையும் உள்ளடக்கிய கல்வி என்பது மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழும், சிறப்புக் கல்வி என்பது சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழும் வருகின்றன. இதைப் போலவே, மாநிலங்களின் அளவிலும் இதனால், சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதில் முரண்பாடான கொள்கைகள் மேற் கொள்ளப்படுகின்றன.
 7. எல்லோருக்கும் பயனளிக்கக்கூடிய எல்லோரையும் உள்ளடக்கிய கல்வி என்பது ஆரம்ப நிலையிலேயே எல்லோருக்கும் கல்வி வழங்கக்கூடிய ஒரு சாத்தியக் கூறாக கருதப்படாமல் இது ஒரு கூடுதலான பணியாகவே கருதப்படுகிறது.
 8. மாற்றுத் திறனாளி பெண் குழந்தைகள், மகளிர் ஆகியோரின் புனரமைப்பு திட்டங்கள் செயல்படுத்துவதில் சமூக பண்பாட்டு நிலைமைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும். மாற்றுத்திறன் கொண்ட மகளிரின் தேவைகளையும், உரிமைகளையும் சார்ந்த மிகப்பெரிய விழிப்புணர்வு திட்டம் அவசியம். இன்றைய நவீன உலகில் அவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்றைய உலகம் அவர்களை அவர்களுடைய இயல்பான திறமைகளுக்கு மதிப்பு அளிக்காமல், ஊடகங்களிலும் அழகியல் துறைகளில் காணப்படும் பெண்களை அடையாளமாகக் கொண்டு காணப்படுகிறார்கள்.

2015 தேசியக் கல்விக் கொள்கை சமூக இடைவெளிகளை குறைக்கும் முயற்சி

 • 2015 தேசியக் கல்விக் கொள்கையில் கீழிருந்து மேல் எழும் வகையாக கருத்து பரிமாற்றங்களும், சமுதாயத்தினர் கொள்கை வடிவமைப்பில் பங்கு கொள்ளும் வகையிலும் நிலைமை உள்ளது. இதுதான் 2015 தேசியக் கல்விக் கொள்கையின் சிறப்பு அம்சமாகும். கொள்கை வடிவமைப்பாளர்கள் சமுதாயத்தின் அடித்தள மக்களின் உண்மை நிலைகளை கண்டறிந்து அதற்கு தகுந்தவாறு கொள்கைகளை வடிவமைக்க இந்த முயற்சிகளில் மக்கள் நேரடியாக பங்கு பெறுவது அவசியமாகும், இதில் 2015 தேசியக் கல்விக் கொள்கை வெற்றி பெற்று எல்லோருக்குமான கல்வியை வழங்க முற்பட்டிருக்கிறது. கல்வி கொள்கை வடிவமைப்பில் எல்லோரையும் உள்ளடக்கும் கொள்கையின் தெளிவை நாம் காண முடியும். சிறப்புத் தேவைகளுக்கான குழந்தைகளை கல்வியில் ஈடுபடுத்துவது ஒரு தனி முயற்சியாக இதுவரை இருந்தது. 2015 தேசியக் கல்விக் கொள்கையில் கல்வித் துறையின் ஒரு ஒருங்கிணைந்த முறையாக அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பலதரப்பட்ட குறைபாடுகள் கொண்ட குழந்தைகளும், இளைஞர்களுக்குமான ஆரம்ப கல்வியிலிருந்து உயர் நிலை கல்வி வரை அவர்களின் தேவைகள் அறிந்து கொள்ளப்பட்டுள்ளன. 2015ல் தேசியக் கல்விக் கொள்கையின்படி ஒவ்வொரு மாணவரின் தனித் தேவையையும் நிறைவு செய்யும் வண்ணம் ஆசிரியருக்கு தகுதிகள் இருக்க வேண்டும். எல்லா மாவட்டங்களிலும் இவர்களை கல்வியில் ஈடுபடுத்த முற்போக்கான அணுகுமுறையைக் கொண்ட கல்வி நிர்வாகிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்பதை 2015 தேசியக் கல்விக் கொள்கை புரிந்து கொண்டுள்ளது.
 • 2015 தேசியக் கல்விக் கொள்கை பற்றி வலைதளங்கள் மூலம் நடந்த கருத்துப் பரிமாற்றங்களில் பள்ளிகளில் கணிணி மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் சிறப்புக் கல்வி அளிக்க வசதிகள் செய்யப்பட வேண்டும் என்பது தெரிவிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள், அவர்கள் குடும்பத்தினர், இந்தத் துறையில் பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இம்மக்களின் தனித் தேவைகளுக்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று கூறினர்.
 • குறைபாடுகள் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் நிலைமையில் நகர்ப்புறங்களுக்கும், கிராமப்புறங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை நிறைவு செய்வது ஒரு மிகப்பெரிய சவால் என்று இந்தக் கருத்து பரிமாற்றங்களில் தெரிவிக்கப்பட்டது.
 • 2015 தேசியக் கல்விக் கொள்கையில் மாற்றுத்திறனாளிகளின் எல்லா கவலைகளும் கல்வித் துறையின் எல்லா அம்சங்களுமான பள்ளி சேர்க்கை, அது சார்ந்த கொள்கைகள், ஆசிரியர் பயிற்சி, பாடதிட்ட முன்னேற்றங்கள், கல்வி கற்பிக்கும் முறையில் சீர்திருத்தங்கள், கற்பதற்கு ஏற்ற பொருள்கள், மாணவர் திறன்களை மதிப்பிடுதல், கணிணி மூலம் தொலை தூரக் கல்வி ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
 • 2015 தேசியக் கல்விக் கொள்கையில், முன்பிருந்த மாற்றுத்திறனாளிகள் அணுகு முறை என்பதற்கு பதிலாக எல்லோரையும் உள்ளடக்கிய கல்வி என்ற மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரு குழந்தை உடல் ஊனம் காரணமாகவும் பாலினம் காரணமாகவும் எந்தவொரு வேறுபாடும் இல்லாமல் கல்வி பெற வேண்டும் என்ற உரிமை அளிக்கப்பட்டு தெளிவான குறிப்பிட்ட இலக்குகளோடும் கண்காணிக்கப்படக்கூடிய, அளவிடப்படக்கூடிய மற்றும் அடையக்கூடிய நடவடிக்கைகளை வகுத்து, எல்லோரையும் உள்ளடக்கும் அணுகுமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
 • ஒரு நல்ல சுமுகமான சூழ்நிலையில் சிறப்புத் தேவைகள் கொண்ட அனைத்து குழந்தைகளும் கல்வி பெறும் வாய்ப்பை ஏற்படுத்தும் எல்லோரையும் உள்ளடக்கிய கல்வி அளிப்பதற்கு கதவுகளை நாம் திறந்தே வைத்திருக்க உழைப்போம். நிலைமைக்கு ஏற்ற மாறும் கல்வி முறை, கணிணி மூலம் கற்கும் வசதிகள், வலைதளம் சுயமாக கற்கும் முறை, எல்லோருக்கும் கல்வி அளிக்கும் வண்ணம் ஆசிரியர் பயிற்சி திட்டம், தேசிய திறன் மேம்பாட்டுத் திட்டம், தற்போதுள்ள ஆசிரியர்களுக்கு திறன்களை வண்ணம், வழங்கும் திட்டம் போன்றவைகளால் இந்தியாவில் எல்லோருக்கும் கல்வி என்பது சாத்தியமாகும்.

ஆதாரம் : இந்துமதி ராவ். வட்டார ஆலோசகர், உறுப்பினர். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியம் – திட்டம் மாத இதழ்

2.98245614035
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top