பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மாற்றுத் திறனாளிகள் நலம் / மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுக்காக செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுக்காக செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள்

மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வுக்காக செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள்

திட்டம் தகுதி உதவி/இலவச உபகரணங்கள்

 1. மூன்று சக்கர வண்டி வழங்குதல் இரண்டு கால்களும் செயல் இழந்து கைகளால் மட்டும் இயக்கக்கூடிய தகுதி, 12 முதல் 65 வயது வரை. 12 முதல் 15 வயது வரை சிறிய மூன்று சக்கர வண்டி. 16 முதல் 65 வயது வரை பெரிய மூன்று சக்கர வண்டி
 2. சக்கர நாற்காலி வழங்குதல் இரண்டு கால்களும், இரண்டு கைகளும் செயல் இழந்தவர்கள். 5 முதல் 70 வயது வரை. சக்கர நாற்காலி
 3. கால்தாங்கிகள் (காலிப்பர்) மற்றும் ஊன்றுகோல் வழங்குதல் மறுவாழ்வு முகாமில் தேர்வு செய்யப்பட்டவராய் இருக்க வேண்டும். காலிப்பர்- கிரட்சஸ் (ஊன்றுகோல்)
 4. காதொலி கருவி வழங்குதல் 3 முதல் 70வயது வரை காதொலி கருவி
 5. சூரிய ஒளியால் சக்தி பெறும் பேட்டரி வழங்குதல் காதொலி கருவி உபயோகப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை சோலார் பேட்டரி
 6. பார்வையற்றோர்களுக்கு கருப்பு கண்ணாடி, மடக்கு ஊன்றுகோல் வழங்குதல் இரண்டு கால்களும் பார்வை இல்லாமை, 12 வயதுக்கு மேல் உள்ளவர்கள். கருப்புக் கண்ணாடி, மடக்கு ஊன்றுகோல்
 7. பார்வையற்றோர்களுக்கு பிரெய்லி கைக்கடிகாரம் வழங்குதல் சுயதொழில் செய்பவராகவோ, அமைப்பு சாரா நிறுவனங்களில் வேலை செய்பவராகவோ 10ஆம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணாக்கர்களாகவோ இருக்கலாம். பிரெய்லி கைக்கடிகாரம்
 8. கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கைக்கால் வழங்குதல் மூன்று சக்கர வேண்டி வழங்குதல் விபத்தினாலோ பிற காரணத்தினாலேயோ லோ கால் துண்டிக்கப்பட்டவர்கள். செயற்கை;க கால்
 9. பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வண்டி இலவசமாக மாணவர்களுக்கு வழங்குதல் கல்வி பயிலும் நிறுவனத்தின் சான்று பெற்று சமர்பிக்க வேண்டும். 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்மு;. மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர வண்டி

திருமண உதவித்தொகை

 1. பார்வையற்றவரை திருமணம் செய்யும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ.25,000 மற்றும் 4 கிராம் தங்கம் வழங்குதல்: இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும்; 21 வயது பூர்தியாகி இருக்க வேண்டும்; ரூ.12,500 ரொக்கமாகவும், ரூ.12,500 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்;

திட்டம் தகுதி உதவி

 • அ) பேசும் திறனற்ற காது கேளாத வரை திருமணம் செய்யும் நல்ல நிலையிலுள்ள நபருக்கு ரூ. 25,000 மற்றும் 4 கிராம் தங்கம் வழங்குதல் இருவருக்கும் இது முதல் திருமணமதக இருக்க வேண்டும். ஆரசின் திருமண உதவி ஏதும் பெற்றிருக்கக் கூடாது. 21 வயது பூர்த்திhகி இருக்க வேண்டும். ரூ.12,500 ரொக்கமாகவும் ரூ.12,500 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்.
 • ஆ) ஒரு கை (அல்லது) ஒரு கால் (அல்லது) இரண்டு அவயங்களும் முழுவதுமாக மாற்றுத்திறனாளியை திருமணம் செய்யும் நல்ல நிலையில் உள்ளவர்க்கு ரூ.25,000 மற்றும் 4 கிராம் தங்கம் வழங்குதல். இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும். அரசின் திருமண உதவி ஏதும் பெற்றிருக்கக் கூடாது. 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். ரூ.12,500 ரொக்கமாகவும் ரூ12500 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்.
 • இ) மாற்றுத்திறனாளியை மாற்றும் திறனாளி திருமணம் செய்யும் நபருக்கு உதவித்தொகை ரூ.25,000 மற்றும் 4 கிராம் தங்கம் வழங்குதல். இருவருக்கும் இது முதல் திருமணமாக இருக்க வேண்டும். அரசின் திருமண உதவி ஏதும் பெற்றிருக்கக் கூடாது. 21 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். ரூ.12,500 ரொக்கமாகவும் ரூ12500 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்.
 • உ) மேற்கண்ட நான்கு வகையான திருமண நிதியுதவி திட்டத்திலும் பட்டயம், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயின்ற பெண்களுக்கு மட்டும் ரூ.50,000 மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும். பட்டயம், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயின்ற பெண்களுக்கு மட்டும் ரூ.25,000 ரொக்கமாகவும், ரூ.25,000 தேசிய சேமிப்பு பத்திரம் மற்றும் 4 கிராம் தங்கம் வழங்கப்படும்.

கல்வி உதவித் தொகை

கல்வி உதவித் தொகை வழங்குதல் 8ஆம் வகுப்புக்கு மேல் அரசு பள்ளியிலோ அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியிpலோ கல்வி நிறுவனங்களிலோ பயில வேண்டும். ஆண்டுக்கு ரூ.500 கல்வி உதவித்தொகை (1ம் வகுப்பு முதுல் 5ம் வகுப்பு வரை படிப்பவர்க்கு) ஆண்டுக்கு ரூ.1500 கல்வி உதவித் தொகை (6 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிப்பவர்க்கு)

வங்கிக் கடன்

சுயவேலை வாய்ப்பு வங்கிக் கடன் அரசு மானியம் வழங்குதல் மாற்றுத் திறனாளி என்பதற்கு அரசு அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். வங்கிகளில் ஏற்கெனவே கடன் பெற்று நிலுவைத் தொகை இல்லாதவராக இருக்க வேண்டும். வங்கிக் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது ரூ.3000 இதில் எது குறைவோ அது அரசு மானியமாக வழங்கப்படும்.

பயனச் சலுகை

பேருந்து பயணச்சலுகை (பார்வையற்றோர்) பார்வையற்றோர் அரசு அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். நகர மற்றும் புறநகரப் பேருந்துகளில் மாவட்டம் முழுவதும் மட்டும் சென்றுவர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.

ஊனத்தை ஆரம்ப நிலையில் கண்டறிந்து பயிற்சி அளிக்கும் மையம்

ஆரம்ப ஊனத்தை கண்டறிதல் மனவளர்ச்சி குன்றிய இளம் சிறுவர்களுக்கான ஆரம்ப பயிற்சி மையம் (0-6 வருடங்கள்) மூளை முடக்கு வாதம், மனவளர்ச்சி குறைவு ஆட்டிஸம் போன்ற பாதிப்புள்ள குழந்தைகள் இலவச பயிற்சிக்கு தகுதி உடையவர்கள். இலவச தசைப்பயிற்சி, பேச்சு பியற்சி சிறப்புக் கல்வி மற்றும் சிற்றுண்டி வழங்கப்படும்.

பராமரிப்பு உதவித் தொகை

கடும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் மூளைவளர்ச்சி பாதிக்கப்பட்டவர்கள் கடும் உடல் மாற்றுத் திறனாளிகள் (ஊனத்தின் அளவு 60மூக்கு மேல்) மாவட்ட தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மட்டும் உதவித் தொகை வழங்கப்படும். மாதம் ரூ. 1000 வீதம் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படும். அதன்பின்பு வட்டாச்சியர் அலுவலகங்களுக்கு பரிந்துரை செய்யப்படும்.

தேசிய அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிக்ளுக்கான தேசிய அடையாள அட்டை மாற்றுத்திறனாளிகள் தூத்துக்குடி மாவட்ட அரசு மருத்துவமனையில் வியாழன் கிழமைகளில் நடைபெறும் மருத்துவக்குழுவிலும் மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் செவ்வாய் கிழமை தோறும் நடைபெறும் மருத்துவக் குழுவில் ஊனத்தின் தன்மை மற்றும் அளவு குறிப்பிட்டு சான்று பெற வேண்டும். ஊனத்தின் சதவிகிதம் 40% மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். குடும்ப அட்டை நகல் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் நான்கு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். மாற்றுத்திறனாளிக்கான தேசிய அடையாள அட்டை வழங்கப்படும். (தமிழக அரசின் அனைத்து உதவிகளையும் பெற பயன்படும்.)

பாதுகாவலர் நியமனம்

மனவளர்ச்சி குன்றியவர், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டவர் புற உலக சிந்தனையற்றவர் மற்றும் பலவைக மாற்றுத்திறனாளிகளுக்கு பாதுகாவலர் நியமன (கார்டியன்சிப்) சான்று வழங்குதல் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் குடும்ப அட்டை மற்றும் ஊனமுற்றவர்களுக்கு வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். 18 வயது பூர்த்தியானவர்களுக்கு பாதுகாவலரை நியமிக்க பெற்றோர் அல்லது நிறுவனம் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு அறக்கட்டளை சட்டம் 199ன் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையிலான குழு மூலம் பாதுகாவலர் நியமனச் சான்று வழங்கப்படும். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

தொழிற்பயிற்சிகள்

கை கால் ஊனமுற்ற காது கேளாத நபர்களுக்கு கணிணி பயிற்சி மாற்றுத்திறனாளிகள் 102 தேர்ச்சி கணிதம் பௌதீகம் இரசாயனம் தாவரவியல் விலங்கியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி ஆய்வுக்கூடத்தில் தன்னிச்சையாகச் செயல்படும் மற்றும் பொருட்களை உபகரணங்கள் தானே சுயமாக எடுத்துப் பயன்படுத்தும் உடல் தகுதி. வருமானச் சான்று தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரியில் இலவச இரண்டு வருட பயிற்சி அளிக்கப்படும். மாதம் ரூ. 300 உதவித்தொகை.

எலும்பு முறிவு மருத்துவர், மனநல மருத்துவர். காது மூக்கு தொண்டை மருத்துவர், செவிதிறன் அளவீடு, கண் பார்வைதிறன் அளவீடு, தேசிய அடையாள அட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலர், வருவாய்த்துறை மாற்றுத் திறனாளிக்ள உதவித்தொகை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தாட்கோ அலுவலர், மகளிர் திட்ட சுயஉதவிக்குழு அமைத்தல்,. வேலைவாய்ப்புத்துறை,. பேருந்து பயண சலுகை ஆகிய துறைகள் மாற்றுத்திறனாலிகள் மறுவாழ்வு முகாமில் செயலாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

3.01282051282
சந்ரமேனன் Feb 02, 2018 08:29 PM

மாற்று திறனாளிகளுக்கு இட ஒதக்கீடு எல்லாம் வெறும் கண் துடைப்பு

ம ப கனேசன் Aug 25, 2016 12:38 PM

நான் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்தவன் எனக்குஅடையாளஅட்டைஎங்கு பெறவேன்டும்

M. Saroja Apr 08, 2016 03:54 PM

நானும் ஒரு மாற்றுத் திறனாளி காது கோளத வாய் பேச இயலாத பையனின் தாய் என்பதhல் சொல்கிறேன். படித்தும் வேலை கிடைக்கவில்லை. காது கோளத வாய் பேச இயலாதவர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். மிகுந்த கிரமப்பட்டு படித்து பிறகும் மறுபடி தேர்வு எழுதினhல் தான் வேலை கிடைக்கும் என்ற நிலை அவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தருவதாகவே உள்ளது. மேலும் மாநில அரசு அடையாள அட்டை வழங்கிய பிறகு சரிபடுத்த முடியாத நிரந்தர தன்மை உடையது என்று தெரிந்த பின்னும் மறுபடிமறுபடி ஒவ்வொரு முறையும் அரசு மருத்துவர்களைப் போய் பார்த்து கையெழுத்த வாய்குங்கள் என்று சொல்கிறார்கள். நான் ரயில்வே பாஸ் வாங்குவதற்காக மருத்துவரைப் போய் பல தடவை பார்த்த பிறகும் அந்த மருத்துவர் இதற்கெல்லாம் நாங்கள் கையெழுத்து போடனும் என்ற அவசியம இல்லை என்று சொன்னார். இந்த நிலை தான் ஒவ்வொன்றிலும் உள்ளது.

மு.சரவணன் Mar 09, 2016 10:46 AM

மாற்றுத்றனாலி சதவீதம் 60% இருந்து40% தாக குறைக்கபட்டது

தாமோதரக்கண்ணன் Jan 10, 2016 12:04 PM

மாற்றுத்திறனாளி மறுவாழ்வு குறித்த சட்டங்கள் படிப்பதற்கு மட்டும் இனிமையாக இருக்கிறது. ஆனால் மாற்றுத்திறனாளி நடமுறைக்கு கசப்பாக உள்ளது. ஏட்டுச்சுரைக்காய் கறி சமைக்க உதவாது. நான் இதில் பாதிக்கப்பட்ட அனுபவத்தால் சொல்கிறேன்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top