பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மூத்த குடிமக்கள் நலம் / பத்திரிகையாளர் ஓய்வூதியம் பெறுவதற்கான விதிகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பத்திரிகையாளர் ஓய்வூதியம் பெறுவதற்கான விதிகள்

பத்திரிகையாளர் ஓய்வூதியம் பெறுவதற்கான விதிமுறைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

 • விண்ணப்பம் செய்பவருக்கு 58 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். (விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நாள் அன்று)
 • விண்ணப்பம் செய்பவர் 20 ஆண்டுகளுக்கு ஆசிரியர், உதவி ஆசிரியர், நிருபர், புகைப்படக்கலைஞர், பிழைதிருத்துபவர் அல்லது செய்தி பிரதிநிதி ஆகிய பதவிகளில் ஒன்றில் முழுநேரம் பணியாற்றி இருத்தல் வேண்டும்.
 • விண்ணப்பம் செய்பவர் குணப்படுத்த இயலாத நோயாலோ அல்லது உடல் ஊனமுற்றிருந்தாலோ 10 ஆண்டுகள் பத்திரிகை அனுபவம் போதுமானது.
 • விண்ணப்பம் செய்பவர் விண்ணப்பம் அளிக்கும்போது எல்லா விதத்திலும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72000/-க்கு மேல் இருத்தல் கூடாது.
 • விண்ணப்பம் செய்பவர் பணிக்கொடை (Gratuity) முன்னர் பணிபுரிந்த நிறுவனங்களிடமிருந்து பெற்ற தொகை ரூ 100000/-க்கு மேற்பட்டு இருத்தல் கூடாது.
 • விண்ணப்பும் செய்பவர் பணியிலிருந்தபோது எந்த ஒரு குறிப்பிட்ட ஆண்டிலும் பெற்ற வருமானம் ரூ 200,00க்கு மேல் இருந்திருக்கக் கூடாது.
 • விண்ணப்பத்துடன் கீழ்க்கண்ட சான்றிதழ்களை தவறாது அனுப்ப வேண்டும்.
  • வயது குறித்து கல்வி நிறுவனத்திடமிருந்து சான்றிதழ்
  • பணியாற்றிய பதவி மற்றும் இடம் தொடர்பான சான்றிதழ்கள்
  • பணியிலிருந்து ஒய்வுபெற்ற நாள் குறித்த சான்றிதழ்
  • விண்ணப்பதாரர் ஓய்வு பெற்றபோது கிடைத்த பணிக்கொடைக்கான (Gratuity) சான்றிதழ்
  • பணியிலிருந்தபோது பெற்ற அதிகபட்ச ஆண்டு வருமானம் மற்றும் பிற வருமானங்கள் குறித்த சான்றிதழ்
  • விண்ணப்பதாரர் மத்திய-மாநில அரசின் ஓய்வூதியம் பெற்றிருந்தால் அவற்றின் விவரங்கள் குறித்த சான்றிதழ்கள்
  • பாஸ்போர்ட் அளவுள்ள இரண்டு புகைப்படங்கள்
  • தற்போதைய ஆண்டு வருமானம் (வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து பெற வேண்டும்)
  • விண்ணப்பதாரர் உடல்நலமின்மையால் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்கான மருத்துவ சான்றிதழ் (அரசு மருத்துவமனை அல்லது பதிவு செய்த மருத்துவர்கள் (Registered Medical Practitioner) வழங்க வேண்டும்)
  • ஓய்வூதியம் பெறுபவர் மறைவெய்தினால் அவருடைய முதல் வாரிசான மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் அளிப்பதற்கு ஏதுவாக மனைவியின் பெயர், முகவரி மற்றும் புகைப்படம்.

ஆதாரம் : செய்தி - மக்கள் தொடர்புத்துறை

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top