பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மூத்த குடிமக்கள் நலம் / முதியோர் பஸ் பாஸ் திட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

முதியோர் பஸ் பாஸ் திட்டம்

முதியோர் பஸ் பாஸ் திட்டம் திட்டம் பற்றிய குறிப்புகள்

நோக்கம்

"மூத்த குடிமக்களுக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்ய கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கப்படும்.

இதன்படி, 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் குளிர் சாதன வசதி இல்லாத சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழக அனைத்து பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்யலாம். இதற்கென மாதத்திற்கு 10 டோக்கன்கள் வழங்கப்படும். பேருந்து நடத்துநரிடம் இந்த டோக்கன்களை கொடுத்து கட்டணம் ஏதும் இல்லாமல் மூத்த குடிமக்கள் பயணம் செய்யலாம்.

இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள விழைவோர் அதற்குரிய படிவத்தில் தங்களது புகைப்படத்தினை இணைத்து அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான விண்ணப்பப் படிவத்தை போக்குவரத்து துறையின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போக்களிலும் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட பஸ் டெப்போக்களில் கொடுத்து அடையாள அட்டை மற்றும் டோக்கன்களை பெற்றுக் கொள்ளலாம். எந்தெந்த பஸ் டெப்போக்களில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் போக்குவரத்துத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

விண்ணப்பங்கள் கொடுப்பதற்கென கடைசி தேதி என்று எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. தேவைப்படுவோர் இதற்கான விண்ணப்பத்தை எப்போது வேண்டுமானாலும் அளிக்கலாம்.

சென்னை மாநகரப் பேருந்துகளில் முதியோர் கட்டணமின்றி பயணம் செய்யும் திட்டம் பிப்ரவரி 24-ம் தேதி முதல் செயல்படுத்தப்படுகிறது.

எப்படி விண்ணப்பிப்பது?

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக இணையதளத்தில் (www.mtcbus.org) முழுமையான தகவல்களுடன் விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆவணங்கள்

 • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் தேதியில் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
 • வயதுச் சான்றாக ஆதார் அட்டை,
 • ரேஷன் அட்டை,
 • வாக்காளர் அட்டை,
 • ஓட்டுநர் உரிமம்,
 • பள்ளிச் சான்றிதழ் போன்ற சான்றுகளில் ஏதேனும் ஒன்றின் நகலை இணைத்து, கையெழுத் திட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம்  கொடுக்க வேண்டிய இடங்கள்

 • சைதாப் பேட்டை,
 • தாம்பரம்,
 • வடபழனி,
 • திருவான்மியூர்,
 • அடையார்,
 • வியாசர்பாடி,
 • தண்டையார் பேட்டை

நிபந்தனைகள்

 • அவர்களுக்கு அடையாள அட்டையுடன், டோக்கனும் வழங்கப் படும். இந்த அட்டை, டோக்கனை நடத்துநர்களிடம் காண்பித்து பயணம் செய்யலாம்.
 • முக்கியமாக விண்ணப்பதாரர் நேரில் வந்தால் மட்டுமே அடையாள அட்டை வழங்கப்படும்.
 • மாதந்தோறும் தலா 10 டோக் கன் வழங்கப்படும். ஒரு டோக் கனை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
 • அந்த டோக்கன் மூலம் அந்த பஸ்சின் கடைசி நிறுத்தம் வரை அவர்கள் பயணிக்கலாம்.
 • ஏசி பஸ்கள் தவிர, மற்ற மாநகர பஸ்கள், சிறிய பஸ்கள் அனைத்திலும் அவர்கள் பயணம் செய்யலாம்

ஆதாரம் : தமிழ்நாடு அரசு

3.13953488372
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
ஆர். முத்துராஜன் Mar 21, 2020 09:57 AM

பிற மாவட்டங்களில் இத்திட்டம் நடை முறையில் உள்ளதா?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top