ஆதார் எண் வைத்திருப்பவர்கள், தங்கள் ஆதார் எண்ணைக் கொடுக்கும்போது, செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பின்வருமாறு. செய்ய வேண்டியவை ஆதார் என்பது உங்கள் டிஜிட்டல் அடையாளமாகும். உங்கள் அடையாளத்தை நிரூபிக்க உங்கள் விருப்பப்படி அதை நம்பிக்கையுடன் பயன்படுத்தவும். எந்தவொரு நம்பகமான நிறுவனத்துடனும் உங்கள் ஆதார் எண்ணைப் பகிர்ந்து கொள்ளும்போது, உங்கள் மொபைல் எண், வங்கிக் கணக்கு எண் அல்லது பாஸ்போர்ட், வாக்காளர் ஐடி, பான் (PAN), ரேஷன் கார்டு போன்ற வேறு எந்த அடையாள ஆவணத்தையும் பகிர்ந்து கொள்ளும் போது நீங்கள் செய்யக்கூடிய அதே அளவிலான எச்சரிக்கையைப் பயன்படுத்துங்கள். உங்கள் ஆதார் பகிர கேட்கும் நிறுவனங்கள் உங்கள் ஒப்புதலைப் பெற வேண்டிய கடமையும் கடைப்பிடிக்க வேண்டும். ஒப்புதல் பெரும் போது, எந்த நோக்கத்திற்காக ஆதார் பகிரப்படுகிறது என்பதைக் குறிப்பிட வேண்டும். தயவுசெய்து அதை வலியுறுத்தவும். உங்கள் ஆதார் எண்ணைப் பகிர்ந்து கொள்ள விரும்பாத இடங்களில், மெய்நிகர் அடையாளங்காட்டி (விஐடி) உருவாக்கும் வசதியை யுஐடிஏஐ (UIDAI) வழங்குகிறது. நீங்கள் எளிதாக விஐடி உருவாக்கலாம் மற்றும் உங்கள் ஆதார் எண்ணுக்கு பதிலாக, அங்கீகாரத்திற்கு அதைப் பயன்படுத்தலாம். இந்த விஐடி குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகு மாற்றப்படலாம். கடந்த ஆறு மாதங்களாக உங்கள் ஆதார் அங்கீகார வரலாற்றை யுஐடிஏஐ வலைத்தளம் அல்லது எம் ஆதார் செயலியில் காணலாம். அவ்வப்போது அதை சரிபார்க்கவும். யுஐடிஏஐ ஒவ்வொரு அங்கீகாரத்தையும் உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கிறது. எனவே, உங்கள் ஆதார் எண் அங்கீகரிக்கப்படும் ஒவ்வொரு முறையும் உங்களுக்கு தகவல் கிடைப்பதை உறுதி செய்ய, உங்கள் புதுப்பிக்கப்பட்ட மின்னஞ்சல் ஐடியை உங்கள் ஆதார் எண்ணுடன் இணைப்பதை உறுதி செய்யுங்கள். ஓடிபி (OTP) அடிப்படையிலான ஆதார் அங்கீகாரத்துடன் பல சேவைகளைப் பெறலாம். எனவே, எப்போதும் உங்கள் மொபைல் எண்ணை ஆதார் உடன் உபயோகிக்ககூடிய நிலையில் வைத்திருங்கள். ஆதார் பூட்டுதல் வசதி பயோமெட்ரிக் பூட்டுதலுடன் யுஐடிஏஐ (UIDAI) வழங்குகிறது. நீங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஆதார் பயன்படுத்த வாய்ப்பில்லை என்றால், உங்கள் ஆதார் அல்லது பயோமெட்ரிக்ஸை அத்தகைய காலத்திற்கு பூட்டலாம். தேவைப்படும்போது அதை வசதியாகவும் உடனடியாகவும் திறக்க முடியும். உங்கள் ஆதார் அட்டையை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதாக நீங்கள் சந்தேகித்தால், அல்லது ஆதார் தொடர்பான வேறு ஏதேனும் கேள்விகள் இருந்தால், 24 மணி நேரமும் கிடைக்கும் கட்டணமில்லா ஹெல்ப்லைன் 1947 இல் யுஐடிஏஐ-ஐ தொடர்பு கொள்ளவும். அல்லது help@uidai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். மேலும், அண்மை தகவல்களுக்கு யுஐடிஏஐயின் சமூக ஊடக சேனல்களைப் பார்வையிடவும். செய்யக்கூடாதவை உங்கள் ஆதார் கடிதம்/பி. வி. சி கார்டு அல்லது அதன் நகலை கவனக் குறைவுடன் விட்டுவிடாதீர்கள் குறிப்பாக, சமூக ஊடகங்கள் (எக்ஸ் (X), பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவை) மற்றும் பிற பொது தளங்களில் உங்கள் ஆதார் எண்ணை பகிர வேண்டாம். உங்கள் ஆதார் ஓடிபியை (OTP) எந்த அங்கீகரிக்கப்படாத நிறுவனத்திற்கும் பகிர வேண்டாம். உங்கள் எம்-ஆதார் பின் (PIN) எண்ணை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஆதாரம்:யுஐடிஏஐ