ஆதார் வடிவங்கள் ஆதார் நான்கு வெவ்வேறு வடிவங்களில் கிடைக்கிறது ஆதார் கடிதம் -ஆதார் பதிவு செய்த பிறகு, யுஐடிஏஐ (UIDAI) ஆதார் விவரங்களை கடித வடிவில், இந்திய அஞ்சல் துறை மூலம் வழங்கப்படுகிறது. அதில் உங்கள் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் பாதுகாப்பான கியூஆர் (QR) குறியீடு போன்ற விவரங்கள் உள்ளன ஆதார் பிவிசி (PVC) அட்டை: ஆதார் பி. வி. சி கார்டு என்பது மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன், நீடித்து உழைக்கக்கூடிய , கிரெடிட் கார்டு வடிவத்திலான பதிப்பாகும். இந்த அட்டையின் பாதுகாப்பு அம்சங்கள் பின்வருமாறு: டாம்பர்-ப்ரூஃப் கியூஆர் கோட் ஹோலோகிராம் மைக்ரோ உரை மறைக்கப்பட்ட (Ghost) புகைப்படம் வெளியீட்டு தேதி மற்றும் அச்சிடும் தேதி கில்லொச் (Guilloche) முறைமை பொறிக்கப்பட்ட ஆதார் சின்னம் இதை ஆன்லைனில் யுஐடிஏஐ இணையதளம்/ மை ஆதார் போர்ட்டல் அல்லது எம் ஆதார் செயலி மூலம் ரூ. 50க்கு ஆர்டர் செய்யலாம் இ-ஆதார்: இ-ஆதார் என்பது உங்கள் ஆதார் கடிதத்தின் மின்னணு பதிப்பாகும். இது கடவுச்சொல்லால் பாதுகாக்கப்பட்டு யுஐடிஏஐ ஆல் டிஜிட்டல் முறையில் கையொப்பமிடப்பட்டுள்ளது. எனது ஆதார் இணையதளம்/அல்லது எம் ஆதார் செயலி மூலம் எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது டிஜிட்டல் கையொப்பம் மற்றும் கியூஆர் குறியீட்டைக் கொண்ட கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட பி. டி. எஃப் (PDF) கோப்பு ஆகும். eAadhaar இன் கடவுச்சொல் என்பது உங்கள் பெயரின் முதல் 4 எழுத்துக்கள் மற்றும் பிறந்த ஆண்டு (YYYY) ஆகியவற்றின் கலவையாகும். எம் ஆதார் - எம் ஆதார் செயலியை இந்தியாவிற்குள் எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம். ஒருபுறம், எம் ஆதார் அடையாளச் சான்றாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மறுபுறம், ஆதார் எண் வைத்திருப்பவர்கள், தங்கள் ஈகேஒய்சி (eKYC) அல்லது கியூஆர் (QR) குறியீட்டை சேவை வழங்குநர்களுடன் அவர்கள் விருப்பப்படி பல சேவைகளைப் பெற பகிர்ந்து கொள்ளலாம். அனைத்து வகையான ஆதார் அட்டைகளும் நாடு முழுவதும் சமமாக செல்லுபடியாகும் மற்றும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை. ஆதார் பயன்பாடு அரசு, சேவை முகமைகளுக்கு ஆதார் மற்றும் அதன் தளம், நலத்திட்டங்களின் விநியோக பொறிமுறையை நெறிப்படுத்த, அரசாங்கத்திற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்கிறது. ஆதார் அட்டையை ஒரு அடையாள ஆவணமாகப் பயன்படுத்துவதன் மூலம், பயனாளிகள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க பல ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதன் அவசியத்தைத் தவிர்த்து தங்கள் உரிமைகளை நேரடியாக, வசதியான மற்றும் தடையற்ற முறையில் பெற உதவுகிறது. ஆதார் பயன்பாடு வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது மத்திய மற்றும் மாநில அரசுகள் மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் வழங்கும் 3000 க்கும் மேற்பட்ட திட்டங்கள் மற்றும் சேவைகள் சீராக வழங்கப்பட ஆதார் அட்டையை பயன்படுத்தப்படுகிறது. இது, மக்கள் சேவைகளை எளிதாக அடைவதற்கும், நிறுவனங்கள், வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும் உதவுகிறது. ஆதார் இணைத்தல் மூலம், பல்வேறு திட்டங்களின் கீழ், பயனாளர் மோசடிகளை அகற்ற உதவுகிறது. இது அரசாங்க கருவூலத்திற்கு கணிசமான சேமிப்புக்கு வழிவகுக்கிறது. பயனாளிகள் பற்றிய துல்லியமான தரவுகளையும் அரசாங்கத்திற்கு வழங்குகிறது. நேரடி நன்மை பரிமாற்ற (DBT) திட்டங்களை செயல்படுத்த உதவுகிறது. சேவை/சலுகைகள் வழங்கும் நேரத்தில், தகுதியான பயனாளிகளை கண்டறியவும், மேலும் அவர்களுக்கு நன்மைகளை வழங்குவதையும் உறுதி செய்கிறது இந்த நடவடிக்கைகள் அனைத்தும் பின்வருவனவற்றிற்கு வழிவகுக்கின்றன: பயனாளிகளுக்கு இலக்கு விநியோகத்தின் மூலம் கசிவுகளைத் தடுப்பது: சமூக நலத் திட்ட பயனாளிகளுக்கு சேவை வழங்குவதற்கு முன்பு, உறுதிப்படுத்தப்பட வேண்டிய அனைத்து தரவுகளும் கிடைக்க, யுஐடிஏஐயின் அங்கீகார சேவைகள் பயனடைகின்றன. இது கசிவுகளைத் தடுக்கிறது மற்றும் தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே சேவைகள் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது. பொது விநியோகத் திட்டத்தின் (பி. டி. எஸ்) பயனாளிகளுக்கு மானிய விலையில் உணவு மற்றும் மண்ணெண்ணெய் விநியோகம், தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் பயனாளிகளின் பணியிட வருகை போன்றவை எடுத்துக்காட்டுகளில் அடங்கும். செயல்திறன் மேம்படுத்துதல்: ஆதார் தளம் சேவை வழங்கல் பொறிமுறையைப் பற்றிய துல்லியமான மற்றும் வெளிப்படையான தகவல்களை வழங்குவதன் மூலம், அரசாங்க சேவை முறைகளை மேம்படுத்தலாம் மற்றும் அதன் மேம்பாட்டு நிதியை மிகவும் திறம்படவும் திறமையாகவும் பயன்படுத்தலாம். ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்கு ஆதார் எண் வைத்திருப்பவர்களுக்கு, நாடு முழுவதும் ஒற்றை அடையாள எண் மூலம், ஆஃப்லைன்/ஆன்லைன் அடையாள சரிபார்ப்பை ஆதார் அமைப்பு வழங்குகிறது. ஆதார் எண் வைத்திருப்பவர்கள், பதிவு செய்தவுடன், அவர்கள் ஆன்லைன்/ஆஃப்லைன் அங்கீகார முறையைப் பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை உறுதி செய்ய பயன்படுத்தலாம். நாட்டின் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு குடிபெயரும் கோடிக்கணக்கான மக்கள், எப்போதும், எங்கும், தங்கள் அடையாளத்தை எளிதில் சரிபார்க்க இது உதவுகிறது. ஆதாரம்:யுஐடிஏஐ