ஆதார் சேவை மையம் தஞ்சாவூர் நகரில் மக்கள் மையப்படுத்தப்பட்ட ஆதார் சேவைகளை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் [Unique Identification Authority of India (UIDAI)] தஞ்சாவூரில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய ஆதார் சேவை மையத்தை (ASK) 22 ஜூலை 2026 அன்று செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தது. முக்கிய சேவைகள் ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தடையற்ற ஆதார் சேவைகளை வழங்கும் வகையில், தஞ்சாவூர் ஆதார் சேவை மையத்தில் 8 செயல்பாட்டுக் கருவிகள் (Operational Kits) அமைக்கப்பட்டுள்ளன. பொது விடுமுறை நாட்களைத் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இம்மையம் செயல்படும் என்பதால், மக்களுக்கு எளிதான அணுகலும் வசதியும் உறுதி செய்யப்படுகிறது. ஆதார் பதிவு, மக்கள் தொகை மற்றும் பயோமெட்ரிக் விவரங்களைப் புதுப்பித்தல், குறைகளைத் தீர்த்தல் மற்றும் பிற ஆதார் தொடர்பான சேவைகள் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் இந்த ஆதார் சேவை மையம் வழங்குகிறது. பதிவு மற்றும் விவரங்களைப் புதுப்பித்தல் பணிகளுடன் கூடுதலாக, ஆதார் எண் வைத்திருப்பவர்களின் குறைகளையும் இம்மையம் பெற்று, மண்டல அலுவலகம் மூலம் அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். ஆதார் சேவை மையங்களின் விரிவாக்கம் தஞ்சாவூரில் ஆதார் சேவை மையம் [Aadhaar Seva Kendra (ASK)] தொடங்கப்பட்டதன் மூலம், தமிழ்நாடு முழுவதும் இதுவரை 10 ஆதார் சேவை மையங்கள் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் மேலும் 20 மையங்கள் செயல்பாட்டிற்கு வரவுள்ளன; இதன் மூலம் மாநிலத்தில் UIDAI-யால் இயக்கப்படும் ஆதார் சேவை மையங்களின் மொத்த எண்ணிக்கை 30-ஆக உயரும். ஆதார் சேவை மையங்களின் வசதிகள் சக்கர நாற்காலி வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள் மற்றும் பிரத்யேகக் குறைதீர்க்கும் வழிமுறை போன்ற வசதிகளுடன், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மக்களுக்கு உகந்த சூழலைக் கொண்டதாக ஆதார் சேவை மையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. UIDAI-யின் முன்பதிவு இணையதளமான https://bookappointment.uidai.gov.in/ மூலமாகவும், ஆதார் சேவை மையங்களில் [Aadhaar Seva Kendras (ASKs)] ஆதார் சேவைகளைப் பெறுவதற்கான முன்பதிவுகளை மக்கள் இணையவழியில் மேற்கொள்ளலாம். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்