உலக கால்நடை மருத்துவ தினம், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் கடைசி சனிக்கிழமையன்று கொண்டாடப்படும். இவ்வாண்டு ஏப்ரல் 26, 2025 அன்று கொண்டாடப்பட உள்ளது. 2025 கருப்பொருள் இந்த ஆண்டு உலக கால்நடை தினமான 2025-ன் உலகளாவிய கருப்பொருள் "விலங்கு ஆரோக்கியம் ஒரு குழு செயல்பாடு" என்பதாகும். விலங்கு ஆரோக்கியம் என்பது ஒரு தனிநபர் பணி அல்ல; கால்நடை மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பொது சுகாதார நிபுணர்கள் மற்றும் விவசாயிகளை உள்ளடக்கிய ஒரு கூட்டு தேசிய முயற்சி என்ற கருத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. கால்நடை மருத்துவர்கள், விஞ்ஞானிகள், பொது சுகாதார நிபுணர்கள் மற்றும் விவசாயிகள் கால்நடைகளை மட்டுமல்ல, நாட்டின் ஆரோக்கியத்தையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்கின்ற ஒன்றையொன்று சார்ந்திருக்கின்ற வலையமைப்பை உருவாக்குகிறார்கள் என்பதை அங்கீகரித்து, விலங்கு ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் ஒத்துழைப்பின் சக்தியை இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது. இந்திய கொண்டாட்டங்கள் இந்தியாவின் கால்நடைப் பொருளாதாரத்தின் அமைதியான காவலாளிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, 2025 ஆம் ஆண்டு உலக கால்நடை தினத்தை புதுதில்லியில் ஒரு தேசிய பயிலரங்குடன் கொண்டாடியது. கால்நடை பராமரிப்பு சமூகம் கிராமப்புற பொருளாதாரம் மற்றும் தேசிய உயிரியல் பாதுகாப்பின் முதுகெலும்பு. இந்தியாவில் 536 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகள் உள்ளன. இது உலகிலேயே மிகப்பெரியது. சுமார் 70% கிராமப்புற குடும்பங்களின் வருமானம், உணவு மற்றும் பாதுகாப்பிற்கு கால்நடைகளை நம்பியுள்ளன. இருப்பினும், அந்த கால்நடைகள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்பவர்கள் அரிதாகவே தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகிறார்கள். ஆரோக்கியமான கால்நடைகள் இல்லாமல் ஆரோக்கியமான இந்தியா இல்லை. அதே நேரத்தில் கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பை நவீனமாக்குதல், திறன் மேம்பாட்டை அதிகரித்தல் மற்றும் இந்தியாவின் கால்நடை சுகாதார அமைப்புகளை எதிர்காலத்திற்கு ஏற்ப மாற்றுவதில் அரசு உறுதியுடன் உள்ளது. கால்நடை, மனிதர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை உறுதி செய்ய கால்நடை மருத்துவர்கள், துணை கால்நடை ஊழியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களிடையே ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிகள் முக்கியமானது. தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் முக்கிய முயற்சியாக உள்ளது தேசிய கால்நடைநோய் கட்டுப்பாட்டு திட்டம். இது 2030-ம் ஆண்டுக்குள் கால் மற்றும் வாய் நோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் இதுவரை 114.56 கோடிக்கும் அதிகமான கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிகளும் 4.57 கோடி ப்ருசெல்லோசிஸ் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்