முன்னுரை

தொழிற்சாலைகளில் இருந்து அதிக அளவிலான கழிவு நீர் வெளியேற்றப்படகிறது.

இக்கழிவு நீரில் அதிக அளவு கன உலோகங்கள் மற்றும் நச்சுத் தன்மையுடைய வேதி வினைப் பொருட்களும் கலந்துள்ளன.

இக்கழிவு நீரை சரியான முறையில் அப்புறப்படுத்தாமையின் மூலம் மண் மற்றும் நீர் மாசுபாடு ஏற்படுகின்றது.

தற்போதுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு முறைகள் மிகுந்த செலவுடையதாக உள்ளன.

தாவர படுக்கை சுத்திகரிப்பு முறை சுற்றுச் சூழலுக்கு உகந்ததாகவும், குறைந்த செலவினை உடையதாகவும் உள்ளது.

தாவர படுக்கை முறை

இம்முறையில் தாவரங்கள் மற்றும் புவியியல் பொருட்களை ஒருங்கிணைத்து கழிவு நீரிலிருந்து நச்சு பொருட்கள் நீக்கப்படுகின்றன.

கோரை புற்கள்

கன உலோகங்கள் மற்றும் உப்புக்களை உறிஞ்சுதல் மூலம் கழிவுநீரிலிருந்து இவற்றை நீக்குகின்றன.

வேர் கசிவு வேதிப் பொருட்கள் மூலம் வேர் பகுதியில் உள்ள கன உலோகங்களை மண்ணில் முடக்கி விடுகின்றன.

ஆகாய தாமரை

நைட்ரேட் மற்றும் பாஸ்பேட் உப்புக்களை உறிஞ்சுதல் மூலம் கழிவு நீரிலிருந்து இவற்றை நீக்குகின்றன.

வெர்மிகுலைட்

இது அதிக அளவு நேர்மின் அயனி பரிமாற்று திறனை உடைய சிலிகேட் தாதுப் பொருளாகும்.

இதன் மூலம் அதிக அளவிலான உலோகங்களை ஒட்டுதல் மூலம் நீக்குகிறது.

நன்மைகள்

கழிவு நீரிலிருந்து 90-100% கன உலோகங்களை நீக்குகிறது.

வேதியியல் மற்றும் உயிரியல் ஆக்ஸிஜன் தேவையை குறைக்கிறது.(70-90%).

கரைந்திருக்கும் திடப் பொருட்களை குறைக்கிறது (>90%)

கழிவு நீரிலிருந்து நைட்ரேட் மற்றும் பாஸ்பேட்டை நீக்குகிறது (80 - 98%).

பயன்பாடுகள்

தோல் பதனிடும் தொழிற்சாலை, சாயத் தொழிற்சாலை மற்றும் காகித தொழிற்சாலை ஆகியவற்றின் கழிவுநீரை சுத்திகரிக்க பயன்படுத்தலாம்.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்.