நிலையான வேளாண் நடைமுறைகளுக்கு மத்திய அரசின் ஆதரவு விவசாயம் என்பது மாநிலப் பட்டியலுக்கு உட்பட்ட ஒரு துறையாகும். நிலையான வேளாண் நடைமுறைகளை ஊக்குவிப்பதற்காக மாநில, யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்கள் மூலம் உதவி வருகிறது. இத்திட்டங்களின் கீழ், சமச்சீர் ஊட்டச்சத்து மேலாண்மை, திறமையான நீர் பயன்பாடு, பாதுகாப்பு விவசாயம், ஒருங்கிணைந்த பண்ணை முறைகள், வேளாண் காடு வளர்ப்பு, இயற்கை விவசாயம், பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் விவசாயத் தொழில்நுட்பங்களை ஊக்குவித்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மண் ஆரோக்கியம் மற்றும் சமச்சீர் ஊட்டச்சத்து மேலாண்மை மண் ஆரோக்கியம்ம் வளம் சார்ந்த திட்டத்தின் கீழ், உரங்களைச் சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மையை ஊக்குவிக்க மாநிலங்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. இது உரப் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துவதுடன், சமச்சீர் ஊட்டச்சத்து வழங்குவதையும் ஊக்குவிக்கிறது. இதுவரை 26.18 கோடி மண்வள அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. நீர் பயன்பாட்டுத் திறனை மேம்படுத்துதல் பண்ணை அளவில் நுண்நீர்ப் பாசன முறைகள் மூலம் நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க, 'ஒரு சொட்டு நீருக்கு அதிக பயிர்' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், நீர்ப்பாசனத்துடன் உரங்களைச் சேர்த்து வழங்கும் 'ஃபெர்டிகேஷன்' முறையும் ஊக்குவிக்கப்படுகிறது. இது நீரில் கரையக்கூடிய உரங்களை நேரடியாக வேர் பகுதிக்குச் செலுத்தவும், அதன் மூலம் துல்லியமான ஊட்டச்சத்து விநியோகத்தை உறுதி செய்யவும் உதவுகிறது. 100 லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில், 114.60 லட்சம் ஹெக்டேர் பரப்பளவை நுண்நீர்ப் பாசன வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாரம்பரிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம், வடகிழக்கு மாநிலங்களுக்கான இயற்கை வேளாண் மதிப்புச் சங்கிலி மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றின் மூலம், இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படுகிறது. இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல் இந்தத் திட்டங்களின் கீழ், நேரடிப் பணப் பரிமாற்ற முறை மூலம், விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றிற்கு ரூ. 15,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. பிரதமரின் வேளாண் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 18.93 லட்சம் ஹெக்டேர் நிலம் கொண்டு வரப்பட்டு, 33.63 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்களுக்கான இயற்கை வேளாண் மதிப்புச் சங்கிலி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2.36 லட்சம் ஹெக்டேர் நிலம் இயற்கை விவசாயத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, 2.74 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். வேளாண் காடு வளர்ப்பை ஊக்குவித்தல் விவசாயப் பயிர்களுடன் மரங்களையும் ஒருங்கிணைத்து வளர்ப்பதை ஊக்குவிக்க வேளாண் காடு வளர்ப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தரமான நடவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இத்திட்டத்தின் கீழ் புதிய நாற்றங்கால்களை அமைப்பதற்கும், ஏற்கனவே உள்ள நாற்றங்கால்களில் கன்றுகளை வளர்ப்பதற்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2297851®=6&lang=11 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்