அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட பயிர்கள் மஞ்சளாதல், வளர்ச்சி குன்றி காணப்படும். மேலும் காய் பிடித்தல் மற்றும் பயிரின் வீரியம் குறைந்து காணப்படும். துவரை, தட்டைப்பயிறு, பச்சைப்பயிறு, சோயாபீன்ஸ், உளுந்து மற்றும் எள் போன்ற பல பயிர்கள் நூற்புழுவால் பாதிக்கப்படுகின்றன.

பயிரின் நாற்றுப்பருவத்தில், முத்து போன்ற (அ) எலுமிச்சை வடிவ வெள்ளைப் பெண் நூற்புழுக்கள் வேருடன் ஒட்டிக்கொண்டு இருக்கும்.

கட்டுப்பாடு

வெப்ப காலங்களில் கோடை உழவு செய்தல் வேண்டும்.

2-3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெவ்வேறு பயிர்களை கொண்டு பயிர் சுழற்சி செய்தல் வேண்டும்.

விதைக்கும் போது சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் (அ) டிரைகோடெர்மா விரிடி @ 2.5 கிலோ/ எக்டர் என்ற அளவில் மண்ணில் இட வேண்டும்.

ஒரு கிலோ விதைக்கு சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் மற்றும் டிரைகோடெர்மா விரிடி @ 5 + 5 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்