தோற்றம் விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மைல்கல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் விதை தொழில் நுட்பத் துறை 1972 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிறகு அடிப்படை மற்றும் செயல்முறைச் சார்ந்த ஆய்வில் தீவிர ஈடுபாடு ஏற்பட்டதால் இதனை 1998 ஆம் ஆண்டு விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் மொத்தம் 48 விதை விஞ்ஞானிகள் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் கல்வி, ஆராய்ச்சி, விதை உற்பத்தி மற்றும் விரிவாக்க பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் 16 பேர் அமெரிக்கா, சீனா, ஸ்வீடன், டென்மார்க், கனடா, பிரிட்டன், பிலிப்பைன்ஸ் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் பயிற்சி பெற்றவர்கள். கல்வி விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்பை வழங்கி வருகிறது. இது மட்டுமல்லாமல் வேளாண்மை, தோட்டக்கலை வனவியல், வேளாண் பொறியியல் மற்றும் தொழில் நுட்பவியல் பயிலும் இளங்கலை மாணவர்களுக்கு கல்வி வழங்குகின்றது. ஆய்வு இந்த துறை விதை உற்பத்தி, சுத்திகரிப்பு, பரிசோதனை, சேமிப்பு, விதை நலம் மற்றும் விதை துரிதப்படுத்துதல் போன்ற ஆய்வுகளை வேளாண், தோட்டக்கலை தீவனம் மற்றும் மர வகை செடிகளில் தீவிர ஈடுபாடுகளுடன் மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்விற்குத் தேவையான நிதியுதவியை நம் நாட்டினர், அகில உலகத்தினர் மற்றும் தனியார் துறைகளிலிருந்து பெறப்படுகிறது. பயிற்சி மாநிலத்தில் வேளாண் பல்கலைக் கழகம், இந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண் துறை அலுவலர்கள், விதை உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு நடத்தப்படுகிறது. விதை மைய உருவாக்கம் பல ஆராய்ச்சியாளர்களின் நல்ல முயற்சியினால் கண்டுபிடிக்கப்பட்ட இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள் விவசாயிகளுக்குச் சென்றடடையவில்லை. இதற்கு முக்கிய காரணம் நல்ல தரமான விதைகள் இல்லாமைதான். இதனால் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விதை நுட்பச் செயல்பாடுகளை விரிவுபடுத்தி அதன்மூலம் விவசாயிகளுக்கு நல்ல தரமான விதைகள் கிடைக்க வழி செய்துள்ளன. இந்திய விவசாய ஆராய்ச்சி மெகா விதைத் திட்டத்தின் வேளாண் விதைகள் உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்புத் துறையின் முதல் கூட்டம் ஜூன் 27 - 28, 2006 அன்று புதுடெல்லியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் விதைக்கென்று தனிச்சிறப்பு அலுவலர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் பல்கலைக்கழக துணைவேந்தரின் ஆலோசனைப்படி செயல்படுவார் என்று வலியுறுத்தினர். மேற்கூறிய விதிமுறையின்படி விதைமையம் 27.10.2006 அன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது. நோக்கம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் மேம்படுத்தப்பட்ட இரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள் சென்றடையச் செய்தல். பெரும்பான்மை பயிர்களின் விதை மாற்று வீதத்தை விரிவுபடுத்தி உற்பத்தியை பெருக்குதல். நல்ல தரமான விதைகள் கிடைக்க மாநிலத்தில் தகுந்த இடங்களை தேர்வு செய்தல். விதை உற்பத்திக்கான அதிகப்படுத்த மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களை கையாளுதல். விதை மைய பணிகள் விவசாயிகளின் தேவைக்கேற்ப விதை உற்பத்தியை அதிகரித்தல் அதிக இனத் தூய்மை உள்ள வல்லுநர் விதைகளை உற்பத்தி செய்து மாநில் அரசுக்கும் மற்றும் தனியார் விதை நிறுவனங்களுக்கு வழங்குதல். நல்ல தரமான விதைகளை விவசாய மக்களுக்கு வழங்குவதன் மூலம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்ககலைக்கழகம் கண்டுபிடிக்கப்பட்ட இரகங்கள் மற்றும் இதர மேம்படுத்தப்பட்ட இரகங்களை மக்கள் மத்தியில் பரப்புதல். சிறந்த வல்லுநர்களை பயன்படுத்தி நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்து தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம் மிகப்பெரிய விதை உற்பத்தியாளராக விரிவுபடுத்துதல். தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக் கழகத்தின் வருமானத்தை உயர்த்துதல். நடைமுறையில் உள்ள திட்டங்கள் 1. அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டத்தின் தேசிய விதை திட்டம். வல்லுநர் விதை உற்பத்தி விதை நுட்பவியல் ஆய்வு தஷ்ஆய்வு ஓராண்டு எண்ணெய் வித்து விதைத் திட்டம் 2. இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் “மெகா விதைத் திட்டம்” 3. இந்திய அரசாங்கத்தின் கிராம விதைத் திட்டம் 4. இந்திய விவசாய ஆராய்ச்சிக் கழகத்தின் சணல் விதை உற்பத்தித் திட்டம். 5. தேசிய வேளாண்மை மேம்பாட்டுத் திட்டத்தின் பயறு மற்றும் எண்ணெய் வித்துக்கள் விதை உற்பத்தி. தனியார் திட்டங்கள் மதிப்பூட்டப்பட்ட விதைகளுக்கு பிரைமிங் மற்றும் விதை முலாம் பூசுதல் - நிதி உதவியாளர் ஜே.கே.விதைகள், ஹைதராபாத். கே.சி.பி.எல் இரண்டாம் நிலை புரதங்களைக் கொண்டு விதைகளை துரிதப்படுத்துதல் - நிதி உதவியாளர் கேரளா கெமிக்கல்ஸ் மற்றும் புரதங்கள் லிமிடெட், கொச்சின். விதை உற்பத்தி மூல விதை உற்பத்தி மூல விதையான அடிப்படை விதைகளை அந்தந்த பயிர் வல்லுநர்களின் தீவிர கண்காணிப்பினால் உற்பத்தி செய்யப்படுகிறது. விதைகள் த.வே.பல்கலைக் கழகத்தின் வெவ்வேறு விதை உற்பத்தி மையங்களிலும் நல்ல மேலாண்மையினால் அதிக விளைச்சல் மற்றும் நல்ல தரமான விதைகளை உற்பத்தி செய்கிறார்கள். அதிக பருமனுள்ள விதைகளக்கு ஒன்று/அதற்கு மேற்பட்ட அடிப்படை விதைப்பெருக்கம் தேவைப்படுகிறது. இதனை தகுந்த வல்லுநர்களால் தீவிரமாக சோதிக்கப்பட்டு தேவையான அளவு விதை உற்பத்தி செய்யப்படுகிறது. வல்லுநர் விதை உற்பத்திக்கு மூல விதைதான் அடிப்படை பொருளாகும். வல்லுநர் விதை உற்பத்தி அதிக பருமன், குறைந்த மதிப்புள்ள விதைகளான தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள், பருத்தி தீவன பயிர்கள் மற்றும் காய்கறிகள். பயிர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தேவைக்கேற்ப வல்லுநர் விதை உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும். ஏறக்குறைய 175 வெவ்வேறு இரகங்களுக்கான வல்லுநர் விதைகள் 33 வல்லுநர் விதை உற்பத்தி மையங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆதார மற்றும் பல்கலைக்கழக ஆதாரப்படுத்தப்பட்ட விதை உற்பத்தி ஆதார விதை உற்பத்தி என்பது மிக முக்கியமான விதைப் பெருக்கச் செயல்களில் ஒன்றாகும். இதன் மூலம் பொது மற்றும் தனியார் உற்பத்தியாளர்களுக்குத் தேவையான விதைகளை இனத் தூய்மையும் இதிலிருந்து மேலும் உற்பத்தியை பெருக்குவதற்காக உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விதை உற்பத்தி மையங்கள் வ.எண் விதை உற்பத்தி மையங்கள் மற்றும் முகவரி 1 விவசாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை - 625 104 போன் - 0452 -2422956 2 விவசாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம், தூத்துக்குடி - 628 252. போன் - 2261226 3 அன்பில் தர்மலிங்கம் விவசாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,நாவலூர் குட்டப்பட்டு, திருச்சி - 620 009. போன் - 0431 - 2690692 4 வேளாண் பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிலையம்,குமுளூர்-621712 போன் - 0431 2541281 5 வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பவானி சாகர் - 638 451 போன் - 04295-240244,240032 6 வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், கோவில்பட்டி, தூத்துக்குடி, 628501. போன் - 04632 - 220533 7 வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பரமகுடி - 623707 போன் - 04564 – 222139 8 வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், பட்டுக்கோட்டை - 641 602 9 வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், 45-A,சைமன் காலனி ரோடு, திருப்பதிசாரம். 629 901 கன்னியாகுமரி மாவட்டம். போன் - 04652 -276728 10 வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், வைகை அணை, ஆண்டிப்பட்டி - 625 512, போன் - 04546 - 244112. 11 வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், விருஞ்சிபுரம் - 632 104, போன் - 0416 – 2272221 12 கடற்கரை உப்புமண் ஆராய்ச்சி நிலையம், கேணிகரை, இராமநாதபுரம் - 623 501. போன் -04567-230250 13 தென்னை ஆராய்ச்சி நிலையம், நாட்டு சாலை, ஆழியார் நகர் - 642 101.போன் - 04253 2288722 14 தென்னை ஆராய்ச்சி நிலையம், நாட்டு சாலை, வேப்பங்குளம் - 614 906. போன் 04373 - 260 205 15 பருத்தி ஆராய்ச்சி நிலையம், ‚வில்லிபுத்தூர் - 626 125. போன் - 04563 -260736 16 மத்திய பண்ணைத்துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் - 642 003 போன் - 0422-6611203/403 17 தீவனப் பயிர் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் - 641 003 18 தானியப்பருத்தி துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் - 641 003 19 எண்ணெய் வித்துத் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் - 641 003 20 நெல் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் 21 பயறு வகைத் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் 22 பருத்தி துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் 23 தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம் - 625 604. போன் - 04546 – 231726 24 தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயமுத்தூர் 25 தேசிய பயறுவகை பயிர்கள் ஆராய்ச்சி மையம், வம்பன் 622 303, போன் 04322 - 205 745 26 எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையம், ஏரயனூர் கிராமம் (அஞ்சல்), திண்டிவனம் - 604 025 போன் - 04147 – 222293 27 மண்டல ஆராய்ச்சி நிலையம் விருதாச்சலம் - 606 001. போன் 04143 260231 28 மண்டல ஆராய்ச்சி நிலையம், கோவிலாங்குளம், அருப்புக்கோட்டை - 626 101. போன் - 220562 29 மண்டல ஆராய்ச்சி நிலையம், பையூர் 30 நெல் ஆராய்ச்சி நிலையம், அம்பாசமுத்திரம் - 627 401. போன்: 04634-250215,255424(FAX) 31 நெல் ஆராய்ச்சி நிலையம், சேவா பேட்டை ரோடு, திருவள்ளூர் அருகில், திåர் - 602 025. போன் - 044 - 27620233, 26383947 32 மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம், காட்டுத் தோட்டம், தஞ்சாவூர் - 613 501, போன் - 04362 267619 33 கரும்பு ஆராய்ச்சி நிலையம், 33 - B, சண்முகம் பிள்ளை தெரு, கடலூர் - 607 001. போன் - 04142 - 220630 34 கரும்பு ஆராய்ச்சி நிலையம், மேலாலத்தூர் 635 203 போன் - 04171 – 220275 35 கரும்பு ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி - 639 115 போன் - 0431 – 2614217 36 தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம், ஆடுதுறை 37 மரவள்ளிக் கிழங்கு மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையம், ஏத்தாப்பூர் - 636 119. போன் - 04282 – 221901 38 காய்கறி ஆராய்ச்சித் துறை, நடுவீரப்ட்டு, பாலூர் - 607 102. போன் : 04142 – 275222 விதை ஆய்வகம் சோதனை செய்யப்படும் மாதிரி விதைகள் ஆதாரப்படுத்தப்பட்ட விதைகள் மற்றும் மரபியல் துறை, ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் தனியார் துறையிடமிருந்து வரும் விதைகள். விதைகளின் முளைப்புத்திறன், இனத்தூய்மை, பிற இரகங்களின் கலப்பற்ற தன்மை, 100 விதைகளின் எடை போன்ற குணங்களை ஆராய்ந்து சான்று வழங்கப்படுகிறது. கட்டணம் ரூ.100/ 1 விதை மாதிரி தகவலுக்கு பேராசிரிய மற்றும் தலைவர் விதை மையம் தமழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கோயமுத்தூர்-641003 தொலைபேசி எண்:0422-661232 மின்னஞ்சல்: seedunit@tnau.ac.in ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்