கிராமப்புற தொழிற்சேவை மையம் (RISC) நோக்கங்கள் வட்டாரத்தில் உள்ள காதி மற்றும் கிராமப்புற தொழிற்கூடத்திற்கான செயல்முறைக்கான முன் மற்றும் பின் இணைப்புகளுக்கு வழிவகுத்தல். மேலும் கிராமப்புற தொழிற் கூட்டமைப்புக்கு, மூலப்பொருளுக்கான உதவி, திறன் மேம்பாடு, பயிற்சி, தரக்கட்டுப்பாடு, சோதனைக்கான வசதிகள், உற்பத்தியான பொருளுக்கு சந்தை வர்த்தக முன்னேற்றம், வடிவமைப்பு மற்றும் பொருள் மேம்பாட்டுக்கான சேவை அளிப்பதாகும். திட்டம் கிராமப்பபுற தொழிற்சேவை மையமானது (RISC), ஒரு பொது வசதி நிலையம். இதன் நோக்கமானது, வட்டார மையங்களுக்கு தேவையான கட்டமைப்பு மற்றும் இதர தேவையான வசதிகளை அளிப்பதாகும். இதன் மூலம், இந்நிலையங்களின் உற்பத்தி, கொள்ளவு திறன், திறன் மற்றும் வர்த்தகத்திற்கு மேம்பாடு அளிப்பதாகும். பின்வரும் ஏதேனும் ஒன்றை RISC புரியவேண்டும் நிறுவப்படும் சோதனைக்கூடத்தில் உற்பத்தியாகும் பொருட்களுக்கான, சோதனைக்கான வசதி அளிக்கவேண்டும். மேம்பட்ட கருவிகள்/ சாதனங்களுடன், அருகிலுள்ள நிலையங்களுக்கு உற்பத்தி அளவை மேம்படுத்த அல்லது மதிப்பு கூட்டுதலுக்கான வழி புரிதலாகும். வட்டார நிலையங்களில் உற்பத்தியாகும் பொருள்கள், மார்க்கெட்டில் நன்றாக விற்பனையாக, கவரக்கூடிய மற்றும் சரியான பேக்கேஜிங் முறையை அளித்தல். மேலே கூறப்பட்டது மட்டுமின்றி பின்வரும் சேவைகளையும் RISC புரியலாம் கைவினை கலைஞர்கள் தங்கள் வருமானத்தை பெறுக்கிகொள்ள, அவர்களுக்கு திறன் மேம்பாட்டிற்கான பயற்சி அளிப்பது. கிராமப்புற உற்பத்தி நிலையங்களுக்கு, புது பொருள் தயாரித்தல் அல்லது புது வடிவமைத்தல், வகையினப்பட்ட பொருள்கள் தயாரித்தல் ஆகியவற்றை வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து அளிப்பது. ஒரு சில காலத்திலேயே கிடைக்கும், மூலப்பொருள்களை வாங்கி அளித்தல். வர்த்தக பொருள் அட்டவணையை தயாரித்தல் அமல்படுத்தும் நிறுவனங்கள் கதர் கிராம மையம் (KVIC) மற்றும் மாநில கதர் கிராம் வாரியம் (KVIB) தேசிய அளவிலான/மாநில அளவிலான காதி மற்றும் கிராமப்புற தொழில் கூட்டமைப்பு KVIC மற்றும் KVIB உடன் பணிபுரிகிற காதி மற்றும் கிராமப்புற தொழில் நிறுவனங்கள் மூன்று திட்டங்களுக்காவது, மாநில மற்றும் மத்திய அமைச்சகங்கள், CAPART, நபார்டு வங்கி மற்றும் ஐ.நா. நிறுவனங்களால் கிராமப்புற கலைஞர்களை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்காக, நிதியுதவி வாங்கிய அரசு சாரா நிறுவனங்கள். RISC உள்ள தொழிற்கள் காதி மற்றும் பாலிவஸ்தரா போன்றவைகளை செய்தபின், மதிப்புகூட்ட கூடிய வசதிகள் மூலிகை பொருட்கள் : அழகு சாதன மற்றும் மருந்து பொருட்கள் உணவு எண்ணைய் தயாரித்தல் சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் தயாரித்தல் தேன் கைவினைக்காகிதம் தயாரித்தல் உணவு பதப்படுத்துதல் உயிர் உரங்கள் /உயிர் பூச்சிக்கொல்லி/எரு தயாரித்தல் பானை தயாரித்தல். தோல் பொருள்கள் தயாரித்தல் மரவினைப்பொருள்கள் தயாரித்தல் ஏனைய கிராம தொழிற்கள்/அட்டவணையில் அல்லாது தவிர்த்து நிதி உதவி அமைப்பு (அ) ரூபாய் 25.00இலட்சத்திற்கு உட்பட்ட செயல்முறைக்கு வடகிழக்கு மாநிலங்கள் ஏனைய பகுதிகள் KVIC யின் பங்கு 80% 75% சொந்த பங்கு 20% 25% (ஆ) ரூபாய் 5.00இலட்சத்திற்கு உட்பட்ட செயல்முறைக்கு வடகிழக்கு மாநிலங்கள் ஏனைய பகுதிகள் KVIC யின் பங்கு 90% 75% சொந்த பணம் அல்லது வங்கி லோன் 10% 25% நிதியுதவியின் உருமாதிரி (அ) ரூபாய் 25 இலட்சத்திற்கு உட்பட்ட செயல்முறைக்கு 1 திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி மற்றும்\அல்லது பொருள் அட்டவணை (திறன் மேம்பாட்டுக்கான பயிற்சி முன்பே எடுக்கப்பட்டு இருக்கவேண்டும்) திட்டசெலவில் அதிகபட்சம் 5% 2. திட்டம் தொடங்குவதற்கு முன்னான மற்றும் பின்னான செலவுகள் திட்டசெலவில் அதிகபட்சம் 5% 3. கட்டிடம்/கட்டிடமைப்பு (திட்டம் நிறுவும் நிறுவனங்களிடம் சொந்த நிலம் இருத்தல் வேண்டும். நிறுவும் நிறுவனத்திடம் சொந்த கட்டிடம் இருக்குமாயின், திட்ட செலவில் 15% சதவீதமே ஒதுக்கப்படும்) தகுந்த அதிகாரியின் மதிப்பீட்டுக்கு பின் திட்டசெலவில் அதிகபட்சம் 15% 4 உற்பத்திக்கான மற்றும் சோதனை வசதிகளுக்கான மற்றும் பேக்கேஜிங்குக்கான கருவிகள் (கருவிக்கான செலவுபணத்தை, கருவியை உற்பத்தி செய்பவருக்கே வழங்கப்படும். அவரிடம் தக்க பதிவு, விற்பனை வரிசலுகை எண் மற்றும் சங்கத்திடம் ஒப்பந்தம் இருக்குமாயின்) குறைந்தபட்சமாகதிட்டசெலவில் 50% 5. மூலப்பொருள்/புதிய வடிவமைப்பு, பொருள் வகை கூட்டுதல் மற்றும் இதர திட்டசெலவில் அதிகபட்சம் 25% (திட்ட செலவில், நில மதிப்பை சேர்த்துக்கொள்ள வேண்டும்) (ஆ) ரூபாய் 5 இலட்சத்திற்கு உட்பட்ட செயல்திட்டங்களுக்கு அ கட்டிடம்/கட்டிடமைப்பு அதிபட்சமாக திட்டசெலவில் 15% ஆ உற்பத்திக்கான மற்றம் சோதனைக்கான மற்றும் பேக்கேஜிங்குக்கான கருவிகள் குறைந்தபட்சமாகதிட்டசெலவில் 50% இ மூலப்பொருள்/புதிய வடிவமைப்பு, பொருள் வகை கூட்டுதல் மற்றும் இதர திட்டசெலவில் அதிகபட்சம் 25% ஈ திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி மற்றும் பொருள் அட்டவணை திட்டசெலவில் அதிகபட்சம் 10% இருப்பினும் அ,ஆ,இ,ஈ ஆகியவைகளை, தேவைக்கேற்ப குறைத்துக்கொள்ளலாம். நிதியுதவிக்கான வழிமுறைகள் ரூபாய் 25 இலட்சத்திற்கு உள்ளான திட்டசெயலை மதிப்பீடும் மாநில \ மண்டல அளவிலான குழுகீழே கொடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களைக் கொண்டு இக்குழு (கிராமப்புற தொழிற் சேவை மையத்தை அமைப்பதற்கான திட்டங்களை பரிசீலனை மற்றும் பரிந்துரை செய்ய) அமைக்கப்படும். 1 மாநில அரசின் இயக்குனர் (தொழிற்) அல்லது கூடுதல் இயக்குனர் தகுதிக்கு கீழ் அல்லாத நபர் உறுப்பினர் 2. அந்த மாநிலத்தின் KVI வாரியத்தின் CEO உறுப்பினர் 3. மாநிலத்தின் முன்னோடி வங்கியிலிருந்து பிரதிநிதி உறுப்பினர் 4. NABARD - ன் பிரதிநிதி உறுப்பினர் 5. மாநிலத்தில் அதிக வருமானம் ஈட்டும் KVI யின் செயலாளர் உறுப்பினர் 6. S & T இன்டர்பேசின் பிரதிநிதி உறுப்பினர் 7. KVIC, மாநில இயக்குனர் உறுப்பினர் விதி மற்றும் குறிப்புகள் இந்த குழுவானது நிறுவனத்தின் திட்டத்தை செயல்படுத்தும் திறனை மதிப்பீடு செய்யும். இந்த குழுவானது திட்டத்தின் வர்த்தக மற்றும் தொழில் நுட்ப திறனை மதிப்பீடு செய்யும். கிராமப்புற தொழில் சேவை மையத்தில், குழுவானது திட்ட நடைமுறையை மதிப்பீடு மற்றும் கண்காணிக்கவும் செய்யும் தொழில்நுட்ப சாத்தியக் கூறுகள் திட்டத்தின், தொழில்நுட்ப நடைமுறைத்தன்மையை KVIC/ பொறியியல் கல்லூரி/ வேளாண் கல்லூரி, பல்கலைக்கழகம்/ பாலிடெக்னிக், மதிப்பீடு செய்யும். இதற்கான செலவை, திட்டத்தில் நடைமுறைக்கான, முன்னால் ஆன செலவில் சேர்த்துவிடலாம். திட்டத்தை ஏற்றுக் கொள்ளும் முறை ரூபாய் 25 இலட்சத்திற்கு உட்பட்ட திட்டத்தை மாநில அளவிலான பரிந்துரை குழு, தொழில்நுட்ப ரீதியாக பரிசீலனை செய்த பின்னர், மாநில இயக்குனர் திட்டத்தை அவரின் பரிந்துரையுடன், தலைமை அலுவலக திட்ட இயக்குனருக்கு அனுப்பிவைப்பார். இவர், தன்னுடைய ஒப்புதலை காதி அல்லது கிராமப்புற தொழில்துறைக்கு அனுப்பிவைப்பார். நிதி அளிக்கும் முறை அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின், தன்னுடைய சொந்த பங்கை அளித்த பின்னர், கமிஷன் ஆனது மூன்று தவணையில் பங்கை அளிக்கும். 1. திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி மற்றும் \அல்லது பொருள் அட்டவணை (நிறுவனமானது ஊழியர்களுக்கு, திட்டத்தை நடத்துவதற்க்கான/பொருள் அட்டவணை தயாரிப்பதற்கான தகுந்த பயிற்சியினை தன் சொந்த பங்களிப்பில் பெற்றிருக்க வேண்டும்) திட்டசெலவில் அதிகபட்சமாக 10% 2. திட்டம் தொடங்குவதற்கு முன்னால் மற்றும் பின்னாலான செலவுகள் (நிறுவனமானது திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான மற்றும் இதர செலவுகள் போக்குவரத்து மற்றும் ஏனைய செலவுகள் தன் சொந்த பங்களிப்பிலிருந்து) திட்டசெலவில் அதிகபட்சமாக 5% 3. கட்டிடம்/கட்டமைப்பு (திட்டத்தை நிறுவும் நிறுவனமானது சொந்த நிலம் வைத்திருக்க வேண்டும். ஏற்கனவே கட்டிடம் இருப்பின் திட்ட செலவில் 15% வீதத்திற்கு நிர்ணயம் செய்யப்படும்) திட்டசெலவில் அதிகபட்சமாக 15% 4. பொருள் உற்பத்திக்கான கருவி மற்றும் அல்லது சோதனைக்கான வசதி மற்றும் பேக்கேஜிங்கு (கருவிக்கான பணத்தை ஒப்பந்தம் செய்யப்பட்ட தயாரிப்பாளருக்கே/வினியோகஸ்தர்கோ தகுந்த பதிவு, விற்பனைவரி எண் மற்றும் சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு இருக்க வேண்டும்/நேரடியாக அளிக்கப்படும்) திட்டசெலவில் குறைந்த பட்சமாக 50% 5. மூலப்பொருள்/புதிய வடிவம், பொருள் வகையின்மை ஆகியன திட்டசெலவில் அதிகபட்சமாக 25% குறிப்பு மாநில பரிந்துரை குழுவினர் பரிந்துரைப்படி சில திட்டங்களில் 1 மற்றும் 4-ன் சதவீதம் மாற்றியமைக்கப்படலாம். கள நிர்வாரிகளின் தொழில்நுட்ப அறிக்கையின் பெயரில் முதல் தவணையும், மாநில இயக்குனர் திருப்தியின் பெயரிலும் மற்றும் மாநில நிர்வாகத்தின் கள நிர்வாகிகள் உபயோகிப்பு சான்றிதழை பார்த்த பின்னரும் அடுத்த தவணை வழங்கப்படும். திட்ட செயல் நெறிகள் ரூபாய் 25 இலட்சம் வரையிலான கிராம தொழில் சேவை மையம் அமைப்பதற்கு, அந்த வட்டாரத்திலுள்ள குறைந்தது 125 தனி கைவினை கலைஞர்கள் அல்லது 25 நிலையங்கள்/ நிறுவனங்கள், குழுமங்கள் பயன்பெறவேண்டும். திட்டத்தை நிறுவபோகும் நிறுவனத்திற்கு சொந்த நிலம் இருக்க வேண்டும். இதில் தான் RISC-யை நிறுவ வேண்டும் திட்டத்தை 6 மாதத்திற்குள் தயார் செய்ய வேண்டும். நிறுவபோகும் நிறுவனம், திட்டத்தின் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் அறிக்கையுடன் சேர்த்து, மாநில அளவிலான குழுவின் முன் சமர்ப்பிக்க வேண்டும். திட்டத்திற்கான வேலை அறிக்கையை மாநில இயக்குனரிடமிருந்து கிடைத்ததும், மற்றும் திட்டத்தின் செயல்பாடுகளைப் பொறுத்தும், மேலும் குறிப்பிட்ட கால வரையில் திட்டம் முடிவடையவும் நிதி வழங்கப்படும். திட்டம் எங்கு செயல்படுத்தப்படுகிறதோ அந்தந்த மாநில இயக்குனர் திட்டத்தை கண்காணிப்பதுடன் திட்டம் செயல்கள் வரையறுக்கப்பட்ட காலத்தில் நடைபெறுகிறதா என்பதையும் கண்காணிக்கவேண்டும். திட்டம் நிறுவுவதற்கான ஒப்புதலை மாநில அளவிலான குழு தெரிவித்தபின்னர், மாநில இயக்குனர், மத்திய கமிஷனில், அதற்குரிய தொழில் திட்ட இயக்குனருக்கு தெரிவிப்பார். கண்காணிப்பு கமிஷனின் மாநில அலுவலகம், தவறாமல் சோதனை மேற்கொண்டு, திட்டமானது விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணித்துவரும். திட்டமானது, முழுவதுமாக நிறுவப்பட்டு, செயல்முறைக்கு வந்தபின்னர், அதற்குரிய தொழில்/திட்ட இயக்குனர் சோதனை மேற்கொள்ளுவார். திட்டம் செயல்முறைக்கு வந்து ஒரு வருடம் ஆன பின்னர், VIC-யின் இயக்குனர், இருப்பு தணிக்கை மேற்கொள்ளுவார். ரூபாய் 5 இலட்சம் வரையிலான திட்டத்திற்கான மதிப்பீடும் குழு இவ்வகையான கிராமபுற சேவை மையங்களை பரிசோதித்து ஏற்பதற்கு, மாநில/மண்டல அளவிலான குழு பின்வருபவர்களை உறுப்பினராக கொண்டு இருக்கும். 1 மாநில அரசின் இயக்குனர் (தொழிற்) அல்லது கூடுதல் இயக்குனர் தகுதிக்கு கீழ் அல்லாத நபர்) உறுப்பினர் 2. அந்த மாநிலத்தின் கதர் கிராம வாரியத்தின் தலைவர் உறுப்பினர் 3. மாநிலத்தின் முன்னோடி வங்கியிலிருந்து பிரதிநிதி உறுப்பினர் 4. நபார்டு வங்கியின் பிரதிநிதி உறுப்பினர் 5. மாநிலத்தில் அதிக வருமானம் ஈட்டும் KVI யின் செயலாளர் உறுப்பினர் 6. S & T இன்டர்பேசின் பிரதிநிதி உறுப்பினர் 7. KVIC, மாநில இயக்குனர் உறுப்பினர் விதி மற்றும் குறிப்புகள் குழுவானது, திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிறுவனத்தின் திறனை மதிப்பீடு செய்யும். திட்டத்தின் வர்த்தக தன்மையை சோதிக்கும் ரூபாய் 5 இலட்சம் வரையிலான திட்டத்திற்கான ஒப்புதலை வழங்கும். கிராமப்புற தொழில் சேவை மையத்தில் நடைமுறையில் உள்ள திட்டத்தின் மதிப்பீடு மற்றும் கண்காணிப்பை செய்யும். நிதி வழங்கப்படும் முறை குழு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்த பின்னர், நிதியானது இரண்டு தவணையில், மாநில/மண்டல இயக்குனரால் விடுவிக்கப்படும். முதல் தவணையில், 50% சதவீகித நிதியுதவி அளிக்கப்படும். முதல் தவணை நிதியும், நிறுவனத்தின் நிதி பங்கில் 50% உபயோகித்த பின்னர், இரண்டாவது மற்றும் கடைசி தவணை வழங்கப்படும். திட்ட நிறுவு மற்றும் செயல்முறையாக்கம் ரூபாய் 5 இலட்சம் வரையிலான கிராம தொழில் சேவை மையம் அமைப்பதற்கு, அந்த வட்டாரத்திலுள்ள குறைந்தது 25 தனி கைவினை கலைஞர்கள் அல்லது 25 நிலையங்கள், நிறுவனங்கள், குழுமங்கள் பயன்பெறவேண்டும். திட்டத்தை நிறுவபோகும் நிறுவனத்திற்கு சொந்த நிலம் இருக்க வேண்டும். இதில் தான் RISC-யை நிறுவ வேண்டும் திட்டத்தை 6 மாதத்திற்குள் தயார் செய்ய வேண்டும். ஒரு நிறுவனம் தனது திட்டத்தை சமர்பித்த பின்பு, திட்டத்தை தொழில்நுட்ப ஆக்கம் செய்து மாநில அளவிலான குழுவின் முன், மாநில இயக்குனர் சமர்ப்பிக்க வேண்டும். திட்டத்திற்கான வேலை அறிக்கையை மாநில இயக்குனரிடமிருந்து கிடைத்ததும் மற்றும் திட்டத்தின் செயல்பாடுகளைப் பொறுத்தும் மேலும் குறிப்பிட்ட கால வரையில் திட்டம் முடிவடையச் செய்யும் வகையில் நிதி வழங்கப்படும். திட்டம் எங்கு செயல்படுத்தப்படுகிறதோ அந்தந்த மாநில இயக்குனர் திட்டத்தை கண்காணிப்பதுடன் திட்டம் செயல்கள் வரையறுக்கப்பட்ட காலத்தில் நடைபெறுகிறதா என்பதையும் கண்காணிக்கவேண்டும். திட்டம் நிறுவுவதற்கான ஒப்புதலை மாநில அளவிலான குழு தெரிவித்தபின்னர், மாநில இயக்குனர், மத்திய கமிஷனில், அதற்குரிய தொழில் திட்ட இயக்குனருக்கு தெரிவிப்பார். திட்டம் நிறுவுதற்கான நிலைகள் (5 மற்றும் 25 இலட்சம் வரையிலான திட்டங்களுக்கு) வட்டாரம் கண்டுபிடித்தல் வட்டார மேம்பாட்டு நிறுவனம் உருவாக்குதல் தொழில்முறை நடைமுறையாக்கத்தை வல்லுனர் அல்லது நிறுவனம் கொண்டு ஆராய்தல் திட்டம் உருவாக்குதல் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தல் மற்றும் நிதி பெறுதல். கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு ஆதாரம்: www.kvic.org.in