மத்திய அரசு மண்டலம், குறைந்தபட்ச கூலியின் சட்டம், 1948 கீழ், 2010 அக்டோபர், 1ல் குறைந்தபட்ச கூலி விகிதத்தை மாற்றியமைத்தது. மாநில அரசு மண்டலத்தில் அந்தந்த அரசானது குறைந்த பட்ச கூலியை அவ்வப்போது மாற்றியமைக்கின்றது. வேளாண் தொழில் உட்பட அனைத்து அட்டவணையிடப்பட்ட வேலைவாய்ப்புகளுக்கு நியமிக்கப்பட்ட கூலியானது ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளி துறைகளுக்குப் பொருந்தும். மத்திய அரசு மற்றும் மாநில அரசு மண்டலங்களில் திறன் தேவைப்படாத பணியாட்களுக்கான அட்டவணையிடப்பட்ட இதர மற்றும் விவசாய வேலைகளுக்கான குறைந்தபட்ச கூலித் தொகை பற்றிய தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. (ஒரு நாள் கூலி ரூபாயில்) எண் மாநிலம்/யூனியன் பிரதேசம் அட்டவணையிடப்பட்ட திறன் தேவைப்படாதவேலைகளுக்கான பணியாட்களுக்கு திறன் தேவைப்படாத வேளாண் பணியாட்களுக்கு 1 2 3 4 A B மத்திய அரசு மண்டலம் * மாநில அரசு மண்டலம் 146.00-163.00 146.00- 163.00 1 ஆந்திர பிரதேசம் 69.00 112.00 2 அருணாசல பிரதேசம் 134.62 134.62 3 அசாம் 66.50 100.00 4 பீகார் 109.12 114.00 5 சட்டீஸ்கர் 100.00 100.00 6 கோவா 150.00 157.00 7 குஜராத் 100.00 100.00 8 ஹரியானா 167.23 167.23 9 ஹிமாசல பிரதேசம் 110.00 110.00 10 ஜம்மு காஷ்மீர் 110.00 110.00 11 ஜார்கண்ட் 111.00 111.00 12 கர்நாடகா 72.94 133.80 13 கேரளா 100.00 150.00 (எளிதான வேலைகளுக்கு)200.00 (கடினமான வேலைகளுக்கு) 14 மத்திய பிரதேசம் 110.00 110.00 15 மகாராஷ்ட்ரா # 90.65 100.00- 120.00 16 மணிப்பூர் 81.40 81.40 17 மேகாலயா 100.00 100.00 18 மிஜோரம் 132.00 132.00 19 நாகலான்ட் 80.00 80.00 20 ஒரிஸா 90.00 90.00 21 பஞ்சாப் 127.25(உணவுடன்)142.68 (உணவு இல்லாமல்) 127.25 (உணவுடன்)142.68 (உணவு இல்லாமல்) 22 இராஜஸ்தான் 81.00. 100.00 23 சிக்கீம் 100.00 - 24 தமிழ்நாடு 87.60 100.00 25 திரிபுரா 81.54 100.00 26 உத்தர பிரதேசம் 100.00 100.00 27 உத்தர்காண்ட் 91.98 113.68 28 வெஸ்ட் பெங்கால் 96.00 96.00 29 அந்தமான் நிகோபார் தீவுகள் அந்தமான் 156.00 156.00 நிகோபார் 167.00 167.00 30 சன்டிகார் 170.44 170.44 31 தாதர்,நாகர் ஹவேலி 130.40 130.40 32 டாமன் டையு 126.40 - 33 டெல்லி 203.00 203.00 34 லட்சத்தீவு 147.40 - 35 புதுச்சேரி புதுச்சேரி/காரைக்கால்மாஹே 100.00 100.00 (6 மணி நேரத்திற்கு)120.00 (8 மணி நேரம் பெண்கள்புரியும் சாதரண வேலைகளுக்கு)160.00 (8 மணி நேரம் ஆண்கள்புரியும் கடினமான வேலைகளுக்கு) நிறைவேற்றப்பட்ட சட்டமானது, இரண்டு நிலைகளில் பாதுகாக்கப்படுகிறது. மத்திய மண்டலத்தில் கண்காணிப்பு அதிகாரிகள் மூலம் தலைமை தொழிலாளர் ஆணையர் (மத்திய அரசு) மூலம் கண்காணிக்கப்படுகிறது. இவர் மத்திய தொழில்துறை உறவு அமைப்பு என்று அழைக்கப்படுவார். மாநில மண்டலத்தில், மாநில சட்டம் நிறைவேற்றும் அமைப்பு மூலம் கண்காணிக்கப்படும். இவர்கள் அவ்வப்போது சோதனைகள் மேற்கொண்டு, எங்கேனும் கூலி கொடுக்கவில்லையென்றாலோ அல்லது குறைவாக கொடுக்கப்பட்டாலோ, வேலை அளிப்பவர்களை சரியான கூலி கொடுக்க வற்புறுத்துவார்கள். இதன் பிறகும் சரியில்லையென்றால், சரிசெய்யாதவர்கள் சட்டத்தின் பகுதி 22 படி தண்டிக்கப்படுவர். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்