வேளாண் வணிகமையங்களுக்கான திட்டம்

திட்டத்தைப் பற்றி

இந்திய அரசின் வேளாண் அமைச்சகம், நபார்ட் (NABARD) மற்றும் மேனேஜ் (MANAGE) போன்ற நிறுவனங்களுடன் இணைந்து, நாட்டிலுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும், வேளாண்மையில் நல்ல திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் நோக்கமானது வேளாண்பட்டதாரிகளிடமிருக்கும் திறனை வெளிக் கொண்டு வருவதாகும். வேளாண் கிளினிக் மற்றும் வேளாண் வணிக மையங்களை, வேளாண் பட்டப்படிப்பை முடித்த புதிய அல்லது பழைய பட்டதாரிகளோ, வேலையில் இருக்கும் அல்லது இல்லாத வேளாண் பட்டதாரிகளோ ஆரம்பித்து, தொழில்நுட்ப விரிவாக்க சேவைகளை விவசாயிகளுக்காக செய்யலாம்.

அரசானது, இந்த திட்டத்தின் கீழ் வேளாண் பட்டதாரிகளுக்கு, தேவையான தொடக்க நிலை பயிற்சியை அளிக்கிறது. இந்த பயிற்சியை, தோட்டக்கலை, பட்டுபூச்சி வளர்ப்பு, கால்நடை பராமரிப்பு, வனவியல், கோழி வளர்ப்பு, மற்றும் மீன் வளர்ப்பு முடித்த பட்டதாரிகளும் பெறலாம். பட்டதாரிகள் இந்த பயிற்ச்சியை முடித்தவுடன், திட்டம் தொடங்குவதற்கான கடன் உதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின் நோக்கங்கள்

அரசு விரிவாக்க திட்டத்திற்கு உறுதுணையாக இருப்பது.

விவசாயிகளுக்கு வேளாண்மைக்கு தேவைப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவது.

வேளாண் பட்டதாரிகளுக்கு, வேளாண்மையில், வளர்ந்து வரும் துறைகளில், லாபகரமான வேலை வாய்ப்பு அளிப்பது

முக்கிய அம்சங்கள்

வேளாண் கிளினிக்

இந்த கிளினிக்கானது, விவசாயிகளுக்கு, பயிரிடும்முறைகள், தொழில்நுட்பம், பூச்சி மற்றும் நோயிலிருந்து பயிர் பாதுகாப்பு, சந்தை நிலவரம் மற்றும் தானியங்களின் விலை நிலவரங்களை குறித்து, தகவல் மற்றும் அறிவுரைகளை வழங்கி பயிர் மற்றும் கால்நடை உற்பத்தியை அதிகப்படுத்தும்.

வேளாண்வணிகமையம்

விவசாயிகளுக்கான வேளாண் இடு பொருட்கள் மற்றும் பண்ணைக் கருவிகளை வாடகைக்கு அளிப்பது போன்ற சேவைகளை புரிவதற்காக, இந்த வணிக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
திட்டத்தில் பங்கேற்பதற்கான தகுதி
வேளாண் பட்டதாரிகளுக்கும் மற்றும் வேளாண் சார்ந்த தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, வனவியல், பால் உற்பத்தி, கோழி வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் ஏனைய வேளாண் சார்ந்த பட்டதாரிகளும் இந்த திட்டத்தை தொடங்கலாம்.

முக்கிய சேவைகள்

மண், நீர் தரம் மற்றும் வேளாண் இடுபொருள்கள் சோதனை நிலையங்கள்

பூச்சி கண்காணிப்பு, கண்டறிதல் மற்றும் கட்டுப்பாடு சேவைகள்.

வேளாண் கருவி மற்றும் இயந்திரங்கள் பராமரிப்பு, பழுது பார்த்தல் மற்றும் வாடகைக்கு அளித்தல் (சொட்டுநீர் பாசனம் உட்பட.).

மேலே குறிப்பிட்டுள்ள மூன்று சேவைகள் உட்பட பல வேளாண் சேவைகளை புரிதல் (குழு நடவடிக்கை).

விதை பதனிடும் பிரிவு.

திசு வளர்ப்பு ஆய்வகம் மூலம் செடி உற்பத்தி செய்வது மற்றும் ஆய்வகத்தில் உருவாக்கிய செடியை கடினப்படுத்துவதற்கான நர்சரி அமைத்தல்.

மண்புழு உற்பத்தி நிலையங்கள், உயிர் உரங்கள் உற்பத்தி செய்தல், உயிர்பூச்சிகொல்லிகள் உற்பத்தி செய்வது.

தேனீ வளர்ப்பு மற்றும் தேனீ சார்ந்த பொருட்கள் பதனீடு செய்யும் நிலையங்கள் அமைத்தல்.

விவசாயிகளுக்கான விரிவாக்க ஆலோசனை சேவை வழங்கும் மையங்கள்

மீன் வளர்ப்பு, முட்டை பொறித்தல் மற்றும் மீன்குஞ்சு உற்பத்தி செய்தல்

கால்நடை சுகாதாரம், கால்நடை மருத்துவம் மற்றும் ஏனைய சேவைகள் (குளிரூட்டப்பட்ட விந்துவங்கி மற்றும் திரவ நைட்ரஜன் வழங்கும் சேவைகள்)

வேளாண் சார்ந்த பலவிதமான முகவைகளை, விவசாயிகள் அணுகுவதற்காக தகவல் தொழில்நுட்ப கூடாரங்கள் அமைத்தல்.

தீவனம் பதனிடுதல் மற்றும் பரிசோதனை நிலையம் அமைத்தல்

மதிப்புக்கூட்டப்படும் மையங்கள் அமைத்தல்

பதப்படுத்தபட்ட வேளாண்சார் உற்பத்தி பொருள்களை விற்பதற்காக சில்லறை சந்தை கிளைகளை அமைத்தல்

கிராமப்புற வேளாண் உள்ளீட்டு மற்றும் வெளியீட்டு பொருள்களுக்கான டீலர்ஷிப்பு வழங்குவது

மேலே கூறப்பட்டுள்ளைவகளில் ஏதேனும் இரண்டு அல்லது அதிகமான நடவடிக்கைகளையும் மேலும் பொருளாதார ரீதியில் இலாபம் தரக்கூடிய நடவடிக்கைகளையும், வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யலாம் (வங்கி ஏற்றுக்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள்)

திட்ட மதிப்பு

வேளாண் பட்டதாரிகள், தனியாகவோ அல்லது குழுவாகவோ இந்தத்திட்டத்தை தொடங்கலாம். தனி நபருக்கான உச்சவரம்பு இந்த திட்டத்திற்கு ரூ.10 இலட்சமாகும். குழுவுக்கான உச்சவரம்பு ரூ.50 இலட்சமாகும். ஐந்து நபர்களை கொண்ட குழுவாகவும், அதில் ஒருவர் வேளான்மை பட்டதாரியாகவோ அல்லது வர்த்தக முன்னேற்றம் மற்றும் மேலாண்மையில் அனுபவம் உடையவராகவும் இருக்க வேண்டும்.
விளிம்பு தொகை (ஆரம்ப கட்டணம்); RBI-யின் சட்டதிட்டப்படி

1. ரூ.10,000 வரை

விளிம்புத் தொகை இல்லை

2. ரூ.10,000த்திற்கு மேல்

திட்ட மதிப்பு தொகையில் 15-25 சதவீதம்

வட்டிவிகிதம்

கடனுதவி அளிக்கும் வங்கிகளின், பயனாளிகளுக்கான வட்டிவிகிதம்

பயனாளிகளின் வட்டி விகிதம்

வர்த்தகவங்கிகள்

கிராமபுரவங்கிகள்

கூட்டுறவுவங்கிகள்

ரூ.25,000 வரை

வங்கியின் முதன்மை வட்டியை பொறுத்தது

வங்கியால் நிர்ணயிக்கப் பட்டது

மாநில கூட்டுறவு வங்கிகளால் நிர்ணயிக்கப்படுவது(குறைந்தது)

ரூ.25,000 - ரூ. 2 இலட்சம்

ரூ.2 இலட்சத்திற்கு மேல்

வங்கியால் நிர்ணயிக்கப் படுவது

திரும்ப செலுத்துதல்

கடன் திரும்ப செலுத்துவதற்கான காலம், திட்டத்தின் நடவடிக்கையைப் பொருத்து, 5 முதல் 10 வருட காலமாகும். இந்த காலத்திலேயே, கருணை காலமும் அடங்கும். (கருணை காலம் - கடனுதவி செய்யும் வங்கியால் திட்டத்தின் நடவடிக்கையை பொறுத்து அமையும்). கருணை காலம் அதிகபட்சம் இரண்டு வருடம் ஆகும்.

கடன் வாங்குபவர்களுக்கான தேர்வு

கடன் வாங்குபவர்களையும், திட்டத்திற்கான இடத்தையும், வங்கிகள் முடிவு செய்யும். தேவைபட்டால், அந்த இடத்திலுள்ள வேளாண் பல்கலைக்கழகம், வேளாண் துறையுடன் ஆலோசித்து வங்கிகள் முடிவு செய்யும்.

ஆதாரம்: www.agriclinics.net