மூலிகை வளர்ப்பின் அவசியம்

இந்தியாவில் நமது தேவைக்கேற்ப மூலிகைத் தாவரங்கள் உற்பத்தியாவதில்லை. இயற்கையாக காணப்படும் மூலிகைகளே தேவையை ஓரளவு நிவர்த்தி செய்து வருகிறது. ஆகையால் மூலிகைப் பாதுகாப்பு மற்றும் அதன் தேவைகளைக் கருத்தில் கொண்டு மூலிகை தாவர வளர்ப்பை ஊக்குவிக்கும் பொருட்டு மூலிகைப் பயிர் வாரியமானது 57 தாவரங்களைப் பயிரிடுவதற்கு மானியம் வழங்கி வருகிறது.

மானியம்

இவ்வாரியமானது அழிந்து வரும் அரிதான மூலிகைகளை பயிரிடுவதற்கு 75%ம், உற்பத்தி குறைந்து வரும் நீண்ட காலப் பயிர்களுக்கு 50% மும் மற்ற மூலிகைகளுக்கு 20%ம் மானியம் வழங்குகிறது. மானியத்தை தனி விவசாயியாக அல்லாமல் குழுவாக செயல்பட்டால் பெறுதல் எளிதாகும்.

தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலையில் நன்கு வளரும் மூலிகைகள் மற்றும் அதனை 1 எக்டேரில் சாகுபடி செய்ய மூலிகைப் பயிர் வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள மானியத்தைக் காண்போம்.

தாவர வகை

வசம்பு - 20%

சோற்றுக்கற்றாழை-20%

பேரரத்தை - 20%

சித்தரத்தை -20%

தண்ணீர்விட்டான் கிழங்கு - 20%

வேம்பு - 20%

நீர் பிரம்மி - 20%

சாரணத்தி - 20%

சென்னா (அ) அவுரி - 20%

நித்திய கல்யாணி - 20%

வல்லாரை -20%

சங்குபுஸ்பம் -20%

மாகாளி - 20%

வாவிலங்கம் -20%

நெல்லி -20%

சிறுகுறிஞ்சான் - 20%

நன்னாரி -20%

கச்சோலம் -20%

பூனைக்காலி -20%

துளசி-20%

கீழாநெல்லி -20%

திப்பிலி -20%

செங்கொடிவேலி-20%

குறுந்தொட்டி-20%

மணத்தக்காளி-20%

சீனித்துளசி-20%

நீர்மருது-20%

தான்றி-20%

கடுக்காய்-20%

சீந்தில் -20%

நொச்சி-20%

வெட்டிவேர்-20%

அமுக்கிரா-20%

வில்வம்-50%

வாகை-50%

மாவிலங்கம்-50%

கண்வலிக்கிழங்கு- 50%

பாலா-50%

கொடிவேலி -50%

வேங்கை-50%

நஞ்சறுப்பான்-50%

சந்தன வேங்கை - 75%

சந்தனம் - 75%

கவனத்தில் கொள்ள வேண்டியவை

சந்தைப்படுத்த வாய்ப்புள்ள மூலிகைகளை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். மானியத்தைக் கருத்தில் கொண்டு சாகுபடி செய்யக்கூடாது.சிறந்த மூலிகைக் கம்பெனிகளுடன் ஒப்பந்த சாகுபடியை மேற்கொள்வது நல்லது.

இடவசதி மற்றும் நீர் வசதியைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தரமான விதைகளை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.

சாகுபடி முறை, அறுவடை முறை, பதப்படுத்தும் முறை மற்றும் செலவினங்களை மூலிகைகளை தேர்வு செய்யும் முன் அறிந்து கொள்வது அவசியமாகும்.

மானியம் பற்றிய விபரங்களை அருகில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்தை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

ஆதாரம்: மாநில தோட்டக்கலைத்துறை