தமிழ்நாடு திட்டக் குழுவானது 1971 ஆம் ஆண்டு 25ம் தேதி மேமாதம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் இதன் தலைவர் ஆவார். மாநில திட்டக்குழுவானது பலதரப்பட்ட துறைகளின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசுக்கு அறிவுரைகள் வழங்குகிறது. இக்குழு 19.05.2006 ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்டது.

குறிக்கோள் – XI வது திட்டத்தின் இறுதியில் 4.1% வளர்ச்சியை வேளாண் துறையில் அடைய வேண்டும்.

திட்டத்தின் பின்னணி

இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முக்கியக் காரணங்கள்

வேளாண் துறையின் முதலீடு குறைவதால்

GDP யில் வேளாண் துறையின் பங்கு குறைதல்

வேளாண் துறையில் கவனம் குறைதல்

ஊரக பகுதி மக்கள் வேளாண் மற்றும் அதைச் சார்ந்த துறைகளை முற்றிலும் சார்ந்திருத்தல்

பொருளாதாரத்தின் மற்ற துறைகளின் துரித வளர்ச்சி

வேளாண் துறையில் துயர நிலை

ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா – ன் நோக்கங்கள்

மக்களை வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளில் முதலீடு செய்வதற்கு ஊக்குவித்தல்

மாநிலங்களுக்கு திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வேளாண் துறையில் செயல்படுத்த அதிகாரம் வழங்குதல்

மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் வேளாண் திட்டங்களை வகுப்பதற்கு உத்திரவாதமளித்தல்

குறிக்கோளை அடைவதற்கு முக்கிய தானியங்களுக்கான அறுவடை காலத்தைக் குறைத்தல்

அதிகபட்சம் ஆதாயத்தை விவசாயிகளுக்கு அளித்தல்

வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு பூரண முகவரி அளித்தல்

அடிப்படை தன்மைகள் (RKVY)

இது மாநில அளவிலான திட்டம்

ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா– ல் அங்கத்தினராக ஒவ்வொரு மாநிலமும் மாநிலத்திட்டச் செலவை வேளாண் மற்றும் அதை சார்ந்த துறைகளில் அதிகப்படுத்த வேண்டும்.

அடிப்படை செலவீனம் கணக்கிடுவதற்கு மாநிலங்களின் சராசரி செலவீனம் கடந்த மூன்று வருடங்களாக இதற்கு முந்தைய ஆண்டிலிருந்து

திட்டக்குழு சுட்டிக்காட்டுதலின் படி வேளாண் சார்புத் துறைகளை வரிசைப்படுத்துதல்

மாநில மற்றும் மாவட்ட வேளாண் திட்டங்கள் தயாரிப்பதற்கு உத்திரவிடுதல்

NREGS, SASY, BRGF மற்றும் பல திட்டங்களுக்குல் அடங்குவதற்கு ஊக்குவித்தல்

இது முற்றிலும் மத்திய அரசின் முதலீடு

மாநில அரசுகளின் முதலீடு வரும் ஆண்டுகளில் குறைவாக இருந்தால் அந்த முதலீடு RKVY – யிடம் சென்று அதன் மீத வளம் தொடங்கப்பட்ட திட்டத்திலேயே மேற்கொண்டு தெதடரப்படும்.

இது ஆரோக்கியமான திட்டம் – தன்னிச்சையாக பங்கிடப்படுவதில்லை

RKVY வேளாண் மற்றும் அதன் சார்புத் துறைகளை குறிப்பிட்டு காட்டுகிறது.

இது மாநில அரசுகளுக்கு அதன் எல்லைக்குட்பட்டு சுதந்திரமாக செயல்பட நெகிழ்வுத் தன்மையைத் தருகிறது.

திட்டங்களின் உறுதியான கால நேரங்களை நிர்ணயிப்பதை ஊக்குவித்தல்.

மாநில அளவிலான அங்கீகாரக்குழு

இதன் தலைவர் தலைமை செய்லாளர்

ஏ.பி.சி / முதன்மை செயலாளர் வேளாண்மை – துணைவேந்தர்

செயலாளர், வேளாண்மை – உறுப்பினர் – செயலாளர்

DAC, DAHD மற்றும் திட்டக்குழு இவைகளின் பரிந்துரைத்தல் படி

மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது கலந்துரையாடல்

விரைவில் மாநில அளவிலான குழு அமைத்தல்

மாநில அளவிலான அங்கீகாரக்குழுவின் பொறுப்புகள்

திட்டங்களை ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா கீழ் அங்கீகரித்தல்

அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களை மீண்டும் மறுபரிசீலனை செய்தல்

திட்டங்களை ஒழுங்குபடுத்துவதில் உத்திரவாதம் அளித்தல்

எடுக்கப்படும் முயற்சிகள் தவறானவை அல்ல என்பதை உறுதிப்படுத்துதல்

திட்டங்களை மதிப்பிடுதல் மற்றும் முறைப்படுத்துதல் தொடர்பான குழு அறிக்கை

2007 – 2008 ஆண்டிற்கான தொகை ரூ. 1500 கோடி

11 ஆம் ஐந்தாண்டுத் திட்டம் வரை ஒவ்வொரு ஆண்டின் தொகை ரூ. 58.75 கோடி

11 ஆம் ஐந்தாண்டுத் திட்டத்தின் மொத்த முதலீட்டுத் தொகை ரூ. 25,000 கோடி

நிர்வாகச் செலவுகள்

மாநில அரசு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 1% வரை ராஷ்ட்ரிய கிரிஷி விகாஷ் யோஜனா கீழ் நிர்வாக செலவுகள் பின்வருமாறு

ஆலோசனை கட்டணம்

செயல்படுத்துவதற்கான செலவுகள்

செயல்படுத்தும் முகமைக்கான செலவும் பணியாளர்களுக்கான செலவும்

வாகனங்கள் எதுவும் வாங்க முடியாது

நிரந்தர வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்