மடி நோய் என்றால் என்ன ?

மடிநோய் என்பது பராமரிப்பு சம்பந்தப்பட்ட நோய். கிருமிகளின் தாக்குதலால் மடிவீக்க நோய் வருகிறது.

எப்படி பரவுகிறது ?

சுத்தமின்மை

சுத்தமில்லாத கட்டுத்தரை / தொழுவம்

சுத்தமில்லாத கறவையாளர் கைகள்

சுத்தமில்லாத மடி / காம்பு

எதனால் வருகிறது ?

பால் கறந்த பின் மடி காம்பின் துவாரம் ஒரு மணி நேரம் வரை திறந்து இருக்கும், அச்சமயத்தில் பசு கிழே அமர்ந்தால் கிருமிகள் காம்பு துவாரம் மூலமாக கிருமிகள் உட்புகுந்து மடி நோய் வரும்.

காரணிகள்

பலவகையான கிருமிகளால் மடிநோய் வரக்கூடும்

பாக்டீரியா, வைரஸ், பாசி ஆகிய அனைத்து வகையான கிருமிகளால் மடிநோய் வரும்

தடுப்பு முறைகள்

சுத்தமான பால் உற்பத்தியின் மூலம் மடிநோயை தவிர்க்கலாம்.

சுத்தமான கட்டுத்தரை / கொட்டகை

ஒரு நாளுக்கு இருமுறை கட்டுதரையை சுத்தம் செய்யவேண்டும்

மாட்டின் சாணம் மற்றும் கோமியம் கட்டுதரையில் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்

கட்டுதரையில் சுண்ணாம்பு மற்றும் ப்ளீசிங் பவுடர் தெளிப்பதன் மூலம் கிருமிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்

சுத்தமான கறவைமாடு

கறவை மாடுகளை தினமும் சுத்தபடுத்துதல் நல்லது (அ) இரு நாட்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்தலாம்

கறவை மாடுகளின் கால் / தொடை / மடி / காம்புகளில் சாணம் இருந்தால் பால் கறப்பதற்கு முன் சுத்தம் செய்ய வேண்டும்

சுத்தமான நீர் (அ) வெந்நீர் (அ) KMnO4 பயன்படுத்தலாம்

சுத்தமான கறவையாளர் கைகள்

பால் கறவையாளர் பால் கறப்பதற்கு முன்பு தன் இரு கைகளையும் சுத்தமாக கழுவிய பின்னரே பால் கறக்க வேண்டும்

கறவை இயந்திரம் பயன்படுத்தினால் இயந்திரத்தை சுத்தமாக கழுவிய பின்னரே பால் கறக்க வேண்டும்

KMnO4 / சோப்பு பயன்படுத்தலாம்

சுத்தமான மடி / காம்பு

பால் கறப்பதற்கு முன்னர் மடி / காம்புகளை சுத்தமான வெந்நீர் / KMnO4 / SAAF KIT பயன்படுத்தி கழுவலாம்

பால் கறந்த பின் காம்புகளை KMnO4 / SAAF KIT நனையும் படி செய்யவும்

குறிப்பு : பால் கறந்த பின்னர் ஒரு மணி நேரம் வரை கறவை மாட்டை அமராமல் பார்த்து கொள்வது அவசியம் . தீவினம் அளிப்பதன் மூலம் இதை நடைமுறைப்படுத்தலாம். மேலும் மேற்குறிய தடுப்பு முறைகளை தினம் பின்பற்றினால் மடி நோயினை 95 % கட்டுப்படுத்தலாம்

மடி நோயால் வரும் நஷ்டங்கள்

மடி நோய் பால் உற்பத்தியை குறைக்கும்

மடி நோய் தாக்குதலால் ஒரு காம்பு முழுவதும் வீணாகும் வாய்ப்புள்ளது

10 லிட்டர் கறந்த பசு 7-8 லிட்டர் கறக்கும் நிலை வரலாம்

மடி நோயால் பாதிக்கப்பட்ட பசு தன் இயல்பான பால் உற்பத்தி நிலைக்கு திரும்ப வருவது கடினமாகிவிடும்

குறைந்த பட்சம் 100 மில்லி ஒரு நாளைக்கு குறைந்தால் கூட, சராசரி 30 லிட்டர் பால் (கறவை காலத்தில்) நஷ்டமாகும்

இதன் மூலம் விவசாயிக்கு 2000 - 3000 ரூபாய் மறைமுகமான இழப்பு ஏற்படலாம்.

மடி நோய் சிகிச்சை, பால் உற்பத்தி குறைவு , தீவின செலவு என பல வகைகளில் நஷ்டம் ஏற்படும் வாய்புள்ளது

சரியான நேரத்தில் மடி நோயை குணப்படுத்தவில்லை என்றால் பால் உற்பத்தியின் அளவு பழைய நிலைக்கு திரும்புவது கடினமாகிவிடும்

அதனால் இந்த மடி நோய் வராமல் தடுப்பதே சிறந்த வழியாகும்

ஆதாரம்: கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு துறை, புதுச்சேரி