அசோலா பற்றி

தமிழில் மூக்குத்தி மற்றும் கம்மல் செடி என்று அழைக்கப்படுகிறது.

பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரம்.

மிக மிக சிறிய இலையையும் துல்லியமான வேர்களையும் கொண்டவை. தண்டு மற்றும் வேர்பகுதி நீரினுள் மூழ்கி இருக்கும்.

பச்சை அல்லது இலேசான பழுப்பு நிறத்தில் இருக்கும்.

வேகமாக வளரும் தன்மை கொண்டவை.

அசோலா- தீவனமாக

அசோலாவில் புரதம், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டசியம், இரும்பு, தாமிரம், மெக்னீசியம் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் அதிகம் உள்ளன.

உலர்ந்த நிலையிலுள்ள அசோலாவில் புரத சத்து - 25-35 %, தாதுக்கள் - 10-15% மற்றும் அமினோ அமிலங்கள் - 7-10 % உள்ளன.

அசோலாவின் செரிக்கும் தன்மை கால்நடைகளில் மிகவும் நன்றாக இருக்கிறது.

அசோலாவை தனியாகவும் அல்லது அடர்தீவனத்துடன் கலந்தும் கால்நடைகளுக்கு கொடுக்கலாம்.

செம்மறியாடுகள், வெள்ளாடுகள், பன்றிகள், கோழிகள் மற்றும் முயல்களுக்கும் தீவனமாக அளிக்கலாம்.

அசோலா உற்பத்தி

மர நிழல் உள்ள சுத்தமான, சமமான இடத்தை தேர்வு செய்து கொள்ளவேண்டும்.

செங்கல்களை பக்கவாட்டில் அடுக்கி 2 மீ X 2 மீ அளவுள்ள தொட்டி போல் அமைத்து கொள்ளவேண்டும்.

புல் மற்றும் மர வேர்களின் வளர்ச்சியை அசோலா குழியினில் தடுக்க தொட்டியின் கீழே உர சாக்கினை பரப்பி விட வேண்டும்

அதன் மேல் சில்பாலின் பாயை ஒரே சீராக பரப்பிவிட வேண்டும்.

சில்பாலின் பாயின் மீது 10-15 கிலோ சலித்த செம்மண்ணை சம அளவில் பரப்பிவிட வேண்டும்.

புதிய சாணம் 2 கிலோ மற்றும் 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை 10 லிட்டர் நல்ல தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.

மேலும் தண்ணீரை 10 செ.மீ. உயரம் வரை ஊற்ற வேண்டும்.

500 - 1 கிலோ அசோலா விதைகளை அதன் மேல் தூவி லேசாக தண்ணீர் தெளிக்கவும்.

ஒரு வாரத்தில் அசோலா நன்றாக வளர்ந்து தொட்டி முழுவதும் பரவி இருக்கும்.

தினமும் 500 கிராம் அசோலா அறுவடைக்கு புதிய சாணம் 1கிலோ மற்றும் 20 கிராம் சூப்பர் பாஸ்பேட்டு கலந்த கலவையை ஒவ்வொரு 5 நாட்களுக்கு ஒரு முறை தொட்டில் இடவேண்டும்.

மெக்னீசியம், இரும்பு, தாமிரம் மற்றும் சல்பர் கலந்த நுண்ணூட்ட கலவையை ஒவ்வொரு வாரத்திற்கு ஒருமுறை இட்டால் அவை அசோலாவில் தாது உப்புகளின் அளவை அதிகரிக்கும்.

மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை மாற்றி புதிய மண்ணை இடவேண்டும்.

10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை மாற்றி புதிய தண்ணீரை ஊற்ற வேண்டும்.

அசோலா விதைகளை தவிர ஆறு மாத்த்திற்கு ஒரு முறை அனைத்து இடு பொருட்களையும் வெளியேற்றி பின்னர் புதியதாக இடுபொருட்களை சுத்தமான

சரியான அளவில் இட்டு தயார் செய்ய வேண்டும்.

அசோலா அறுவடை

அசோலா பசுந்தீவனம் 15 நாட்களில் நல்ல வளர்ச்சி அடைந்து விடும். பின்பு நாள் ஒன்றுக்கு 500 கிராம் முதல் 1 கிலோ வரை அறுவடை செய்யலாம்.

ஒரு சதுர செ.மீ. ஓட்டை அளவுள்ள சல்லடையை பயன்படுத்தி அறுவடை செய்யலாம்.

அசோலாவை சுத்தமான தண்ணீரில் அலசினால் சாணத்தின் வாசனை இல்லாமல் இருக்கும்.

மாற்று இடுபொருட்கள்

புதிய சாணத்திற்க்கு பதிலாக சாண எரி வாயு கலனில் இருந்து வெளியேறும் சாணத்தை உபயோகப்படுத்தலாம்.

குளியலறை மற்றும் மாட்டுகொட்டகையிலிருந்து வெளியேறும் கழிவு நீரை அசோலா குழியில் நிரப்ப பயன்படுத்தலாம்.

அசோலா உற்பத்தியில் கவனிக்க படவேண்டியவை

அசோலாவை சல்லடை கொண்டு அலசும்போது கிடைக்கும் நீரில் உள்ள சின்ன சின்ன அசோலா நாற்றுகளை திரும்ப தொட்டியில் ஊற்றலாம்.

தொட்டியில் உள்ள நீரின் வெப்பநிலையை 250C கீழே இருக்குமாறு பார்த்து கொள்ளவேண்டும்.

நிழல் வலைகளை உபயோகப்படுத்தி வெளிச்சத்தின் அளவை குறைக்கலாம்.

அசோலாவை தினமும் அறுவடை செய்து தொட்டியில் ஏற்படும் இடநெருக்கடியை குறைக்கலாம்.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்