குடற் புழு நீக்கம்

ஒல்லியான மற்றும் பொலிவற்ற தோற்ற கொண்ட ஆடுகளில் குடற் புழு தாக்கம் இருக்கும். எனவே அந்த ஆடுகளை இனபெருக்கத்திற்கு முன் குடற் புழு நீக்கம் செய்யவேண்டும்.

சினை ஆடுகளை முதல் 2 மாத சினையில் குடற்புழு நீக்க செய்தால் கரு சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு.

சினை ஆடுகளை குட்டி போடுவதற்கு 2-3 வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

குட்டிகள் பிறந்த 30 நாட்களிலும் பிறகு 60 நாளிலும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்

தடுப்பூசிகள்

துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டி போடுவதற்கு 4-6 வாரத்திற்கு முன்னும், இனப்பெருக்கத்திற்கு 4-6 வாரத்திற்கு முன்னும் போட வேண்டும்.

துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை குட்டிகளுக்கு பிறந்த 8 வது வாரமும், பிறகு 12 வது வாரமும் போட வேண்டும்.

கிடாக்களுக்கு வருடம் ஒரு முறை துள்ளுமாரி நோய் மற்றும் டெட்னஸ் தடுப்பூசிகளை போட வேண்டும்.