கன்றுகளைத் தாயிடமிருந்து பிரித்தல்

தற்போது கன்றுகளைத் தாயிடமிருந்து சீக்கிரம் பிரித்துவிடுவது மேலாண்மை முறைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

சீக்கிரமே கன்றுகளைத் தாயிடமிருந்து பிரிப்பது பண்ணையினை நன்றாக மேலாண்மை செய்யவும் உதவுகிறது.

இம்முறையில் தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட கன்றுகள் தனியாக கொட்டகைகளில் வளர்க்கப்பட்டு அவற்றுக்குத் தேவையான தீவன பராமரிப்பு முறைகளும், மேலாண்மை முறைகளும் பின்பற்றப்படுகின்றன.

இந்த மேலாண்மை முறையில் கன்றுகள் சீம்பாலை குடித்தவுடன், மீண்டும் தாயிடம் பால் குடிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனால் மாட்டிடமிருந்து பாலை முழுவதும் கறந்து, போதுமான அளவு பால் கன்றுகளுக்கு தனியாக அளிக்கப்படுகிறது.

தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட கன்றுகள் தனியாக தட்டுகளிலோ அல்லது பால் பாட்டில் போன்ற அமைப்புடைய தட்டுகளிலிலோ பால் குடிக்க பழக்கப்படுத்தப்படுகின்றன. இவ்வாறு செய்வதால் தீவன மேலாண்மையும் எளிதாகிறது.

தாயிடமிருந்து பிரிக்கப்பட்ட கன்றுகளின் உடல் எடை வாரம் ஒரு முறை எடுக்கப்பட்டு அவற்றின் உடல் எடைக்கேற்ப பால் அளிக்கப்பட வேண்டும்.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்