இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் வேளாண்மையானது மக்கள்தொகையில் பாதி அளவு மக்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்குவது மட்டுமல்லாமல், தேசிய உணவுப் பாதுகாப்பையும் ஆதரிக்கிறது. வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வை தீவிரமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த இலக்கை அடைய, வளர்ச்சியடைந்த வேளாண்மை, நவீன விவசாய நடைமுறைகள் மற்றும் வளமான விவசாயிகள் ஆகியவற்றுக்கான அடித்தளத்தை உருவாக்குவது அவசியம். நாடு முழுவதும் உள்ள விவசாயிகளை ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் சென்றடைய உதவும் வகையில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் ஒரு முயற்சியே வளர்ச்சியடைந்த வேளாண் சங்கல்ப இயக்கம் ஆகும். காரீப் மற்றும் ராபி பயிர்களின் விதைப்பு பருவங்களுக்கு முன்பு ஆண்டுதோறும் இந்த இயக்கம் தொடங்கப்படும். 2025 காரீஃப் பருவ இயக்கம் மே 29 முதல் ஜூன் 12, 2025 வரை நடைபெற உள்ளது. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் நாட்டின் 1.45 பில்லியன் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதும், சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்வதும், விவசாயிகளின் வருமானத்தை மேம்படுத்துவதும், எதிர்கால சந்ததியினருக்கு இயற்கை வளங்களைப் பாதுகாத்து அளிப்பதும் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் முதன்மை நோக்கமாகும். இலக்குகளை அடைய, அமைச்சகம் ஆறு அம்ச உத்தியை வகுத்துள்ளது. உற்பத்தியை அதிகரித்தல், உற்பத்திச் செலவுகளைக் குறைத்தல், விளைபொருட்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்தல், இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்தல், மதிப்பு கூட்டல் மற்றும் உணவு பதப்படுத்துதல் மூலம் பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவித்தல் மற்றும் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல் ஆகியவை இந்த அம்சங்களாகும். இயக்கம் பற்றியா கண்ணோட்டம் "விக்சித் கிருஷி சங்கல்ப் அபியான்", ICAR இன் 113 ஆராய்ச்சி நிறுவனங்கள், வேளாண் பல்கலைக்கழகங்கள், மாநில அரசு துறைகள், புதுமையான விவசாயிகள் மற்றும் விவசாயிகள்-உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகளின் முயற்சிகளை ஒருங்கிணைக்கும். இந்த கூட்டு அணுகுமுறை, நிகழ்நேர விவசாயத் தேவைகளுடன் அறிவியல் ஆராய்ச்சியை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தற்போது, சுமார் 16,000 வேளாண் விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த இயக்கம் அவர்களின் பணிகளை விவசாயிகளுக்கு நேரடியாக அணுகக்கூடியதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, குறைந்தது நான்கு விஞ்ஞானிகளைக் கொண்ட 2,170 நிபுணர் குழுக்கள் மே 29 முதல் ஜூன் 12, 2025 வரை 723 மாவட்டங்களில் 65,000 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் செல்லும். இந்தக் குழுக்களில் வேளாண் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், அரசுத் துறைகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய குழுக்கள் ஆகியோர் இடம்பெறுவார்கள். அவர்கள் தினமும் காலை, மதியம் மற்றும் மாலை நேரங்களில் விவசாயிகளுடன் நேரடியாகப் பயிற்சி அமர்வுகளை நடத்துவார்கள். இந்தக் குழுக்கள் உள்ளூர் வேளாண்-காலநிலை நிலை, மண் ஊட்டச்சத்து விவரங்கள், பாசன் நீர் நிலைமை மற்றும் மழை அளவு ஆகியவற்றை மதிப்பிடுவார்கள். மண் ஆரோக்கிய அட்டைகளைப் பயன்படுத்தி, அவர்கள் பொருத்தமான பயிர்கள், அதிக மகசூல் தரும் விதை வகைகள், சிறந்த விதைப்பு நுட்பங்கள் மற்றும் சீரான உரப் பயன்பாட்டை பரிந்துரைப்பார்கள். செலவுகளைக் குறைத்து மண் ஆரோக்கியத்தை மேம்படுத்த அறிவியல் விவசாயத்தை வலியுறுத்துவார்கள். இயக்கத்தின் எதிர்பார்க்கப்பட்ட விளைவு முக்கியமாக, இந்தப் இயக்கம் இருவழித் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் சவால்களைப் பகிர்ந்து கொள்வார்கள், கேள்விகள் கேட்பார்கள், பூச்சித் தொல்லைகள் போன்ற கள அளவிலான பிரச்சினைகளைக் குறிப்பிடுவார்கள். இது எதிர்கால ஆராய்ச்சி திசைகளைத் வகுக்க உதவும். இந்த முயற்சி 731 வேளாண் அறிவியல் மையங்கள் (KVKs) மற்றும் ICAR விஞ்ஞானிகளின் கூட்டு வலிமையைப் பயன்படுத்தி, அறிவியல் மற்றும் விவசாயம் கைகோர்த்து முன்னேறுவதை உறுதி செய்யும். 1.3 கோடிக்கும் அதிகமான விவசாயிகளின் நேரடி ஈடுபாட்டுடன், இந்த புதுமையான இயக்கம் இந்தியாவில் விவசாய மாற்றம் மற்றும் விழிப்புணர்வில் ஒரு புதிய அளவுகோலை அமைக்கத் தயாராக உள்ளது. மூலம்: PIB