இந்தியா உணவு உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் உடல் ஆரோக்யம் சம்பந்தமான துறைகளில் வியத்தகு முன்னேற்றங்களை கண்டுள்ளது. பால், கரும்பு, முந்திரி மற்றும் நறுமண பொருட்கள் உற்பத்தியில் முதலிடத்தையும், அரிசி, கோதுமை, பயறு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறி உற்பத்தியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. இருப்பினும், உலக ஏற்றுமதி சந்தையில், வெறும் 3% பங்கை மட்டுமே இந்தியா பெற்றுள்ளது. இந்த பங்கை அதிகரிக்க, பல முக்கியமான விஷயங்கள் கவனிக்க பட வேண்டும். இந்த குறைந்த பங்கிற்கான முக்கிய காரணங்கள் - நிறுவனங்கள் இடையே ஒருங்கிணைப்பற்ற தன்மை, தொழில்நுட்ப தன்மை இன்மை மற்றும் சரியான கருவியின்மை, புதுபிக்கப்பட்ட தரக்கோட்பாடு, பொறுப்புள்ள கண்காணிப்பு திட்டமில்லாமை, பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டுக்கான விழிப்புணர்வுயின்மை, பெருகி வரும் உணவு சார்ந்த நோய்கள், புதிதாக உருவாகும் நோய் காரணிகள், பெருகிவரும் மரபியல் மாற்றியமைக்கப்பட்ட உணவு மற்றும் WTO வின் தரத்திற்கு உட்பட்ட உணவு இறக்குமதி மேலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அடிப்படை தகவல்களை புதுப்பிப்பதில் உள்ள நலிவும் காரணமாகும். இத்தருணத்தில், தகவல்கள், மத்திய அரசிடமிருந்து மாநில அரசுக்கும், மாநில அரசிடமிருந்து மத்திய அரசிற்கும், வேகமாக பரவ வேண்டும். உணவு பாதுகாப்பு தர நிலையின் அவசியம் சர்வேதச உணவு வர்த்தகமானது, பண்முக, தொழில்நுட்ப மற்றும் நிர்வாக செயலாக்கம் கொண்ட அமைப்பாகும். இதில், அதிக அளவிளான உணவு மற்றும் பல்வேறு உணவுகளை, பல நாடுகளுக்கு அனுப்பச் செய்வதாகும். உணவு உற்பத்தியானது, அறிவியல் சார்ந்தது. உணவை, நாம் அதன் தரம் குறையாமல், அது சேர வேண்டிய இடத்திற்கு எடுத்துச் செல்லலாம். முன்பைவிட, உலகம் முழுவதும், நுகர்வோர்கள் நல்ல தரம் வாய்ந்த பலவிதமான உணவுகளை கிடைக்க பெறலாம். அதிகமான மற்றும் பலவிதமான உணவுகள், சர்வேதச சந்தையில் இடம் பெறுவதற்கு, இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. ஒன்று, பல வளர்ந்து வரும் நாடுகள் ஏற்றுமதிக்கான உணவு உற்பத்தியில் வியத்தகு முன்னேற்றம் கண்டது. இரண்டு, உணவு ருசி மற்றும் உணவு பழக்கம் சர்வேதச மயமாக்கப்பட்டது. முதல் காரணமானது, பொருளாதார மேம்பாடு, வர்த்தக முறை மற்றும் அந்நிய செலாவணி சம்மந்தப்பட்டதாகும். இரண்டாவது காரணமாவது, பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் எல்லா வகையான உணவுகளிலும் விருப்பம் கொள்வதாகும். ஒரு நாடானது, முன்னேறிய உணவு ஏற்றுமதியாளராக விளங்க வேண்டுமானால், அந்த நாடானது இறக்குமதி செய்யும் நாட்டின் நுகர்வோர்கள் ஏற்று கொள்ள கூடிய மற்றும் அந்த நாட்டின் உணவு கழகத்தின் தேவைகளை ஒத்துபோகும் படியான உணவு பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். இலாபகரமான உணவு ஏற்றுமதி வர்த்தகத்திற்கு இறக்குமதி செய்யும் நாட்டின் உணவு கழகத்தின் தேவைகளை ஒத்துப்போவது என்பது தவிர்க்க முடியாத நிபந்தனையாகும். உணவு பாதுகாப்பு மிகவும் அவசியம் ஆவதால், ஒத்துப்போதல் மிக அவசியமாகி வருகின்றது. மேலும், பல இறக்குமதி செய்யும் நாடுகள், உணவு பொருளை ஏற்றுமதி செய்யும் அரசிடமிருந்து, உணவு தரம் மற்றும் பாதுகாப்பு தேவைகள் ஒத்துப்போவதற்கான சான்றிதழ்களை கேட்பதாலும், தரக்கட்டப்பாடு மிக அவசியமாகும். “கோடக்ஸ் அலிமன்டேரியஸ்” திட்டக் குழு கோடக்ஸ் அலிமன்டேரியஸ் (இலத்தீனில், “உணவு நெறி அல்லது உணவு விதி”) என்பது உணவு நெறிகள், பின்பற்றபட வேண்டிய நெறிகள் மற்றும் பரிந்துரைகள், ஒருமித்த வகையில் சேகரிக்கப்பட்ட அமைப்பாகும். கோக்டஸ் நெறிகள், விதிமுறைகள் மற்றும் ஏனைய பரிந்துரைகள், உணவு பொருட்கள் பாதுகாப்பாக நாடுகளுக்கிடையே வர்த்தகம் செய்யப்பட்டு, நுகர்வோர்க்கு தீங்கு இல்லாமல் பாதுகாத்து வருகிறது. உலகப் போருக்கு பின், 1940 மற்றும் 1950களில் இருந்த சூழ்நிலைகள், உணவு வர்த்தகத்தை, எளிதாக செய்வதற்காக, எல்லா நாட்டிற்கும், தேசிய உணவு சட்ட திட்டங்கள் பொருந்தும் படியாக, ஏற்றுமதியாளர்களுக்கும் அரசாங்கங்களுக்கும் தேவைப்பட்டது. இதற்கான, பல திட்டங்கள் தோல்வி அடைந்தது. இந்த முயற்சியின் பலனாக, இறுதியாக, ஐக்கியநாட்டு உணவு மற்றும் வேளாண் அமைப்பாண்மை, உலக சுகாதார அமைப்பாண்மையுடன் சேர்ந்து, 1962ல் கோடக்ஸ் அலிமன்டேரியஸ் கமிஷனை (CAC) நிறுவியது. இதன் முக்கிய நோக்கம் FAO/WHO வின் உணவு தரத்தை நிறுவுவதாகும். இதன் முக்கிய நோக்கமானது, நுகர்வோர் நல பாதுகாப்பு, உணவு வர்த்தகத்தில் நியாயமான வழக்கங்களை கொண்டு வருதல் மற்றும் சர்வேதச உணவில் நிலைப்பாட்டினை ஒருங்கிணைத்தல் ஆகும். CAC ஆனது 168 உறுப்பினர் நாடுகளை கொண்டது. கோடக்ஸின் பணிகள் உணவு தர நிர்ணயத்திலும், வல்லுநர்களின் கருத்துகளை ஒருங்கிணைத்து துல்லியப்படுத்துவதிலும், உணவு பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான செயல்பாடுகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பிலும், CAC உலகளவில் தலைமை வகிக்கிறது. இப்பொழுது உணவு பொருட்களுக்கான சட்டம் இயற்றுபவர்கள், கட்டுபாட்டு அலுவலர்கள், அறிவியலாளர்கள், நுகர்வோர் மற்றும் வர்த்தகர்கள், ஒரு பொருளுக்கான முடிவுக்கு வரும் முன்னர், கோடக்ஸ் இதைப்பற்றி என்ன கூறும் என்று சிந்திக்க தொடங்கியுள்ளனர். உலக வர்த்தக அமைப்பாண்மையின், உணவு பொருட்களில் சேர்ப்பவை, கால்நடை மருந்து மற்றும் பூச்சிக்கொல்லி எச்சம் கலப்படம், உணவு பகுப்பு, முகப்புசீட்டிடுதல், சுகாதாரத்திற்கான நெறி மற்றும் வழிமுறைகளுடன் தொடர்புடைய சுகாதாரம் மற்றும் பயிர் சுகாதார அளவுகளின் ஒப்பந்தத்தில் உணவு பாதுகாப்பு, நிலைப்பேறுகளை குறிப்பிட்டுள்ளது. இப்படி குறிப்பிடுவதற்கு, கோடக்ஸின் உணவு பாதுகாப்பு நிலைப்பேறுகளை, ஆதாரமாக WTO எடுத்துக் கொண்டுள்ளது. கோடக்ஸ் நிறுவியதிலிருந்து, உணவு சுகாதாரத்தை முக்கியமான நடவடிக்கையாக கொண்டுள்ளது. கோடக்ஸின், உணவு சுகாதார வாரியம், 1963ல் நிறுவப்பட்டது. உணவு உற்பத்தி மற்றும் பதனிடும் பொழுது சுகாதாரம் சிறப்பாக ஒழுங்குபடுத்த முடியும். ஆதலால், இந்த தத்துவத்தை ஒருபடி மேலே எடுத்து செல்லும் விதத்தில், உணவு சுகாதார வாரியமானது, HACCP என்னும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. தேசிய கோடக்ஸ் தொடர்பு மையங்கள் இம்முனைகள், உறுப்பினர் நாட்டிலுள்ள, கோடக்ஸ் தேசிய அதிகாரிகளையும் FAO தலைமையகத்திலுள்ள கோடக்ஸின் அமைச்சகத்தையும் ஒருங்கிணைக்கும் முனைகளாக விளங்குகிறது. இம்முனைகள், கோடக்ஸ் பத்திரங்கள், வெளியீடுகள் மற்றும் ஏனைய தொடர்புகளை பெறுவதில் முதலாவதாகவும் மற்றும் விதிமுறைகளின் நெறிகள் மற்றும் அதை சார்ந்த பத்திரங்களை பரிமாறுவதுற்கும் உதவுகிறது. மேலும் இவைகள் CAC மற்றும் அதன், உபகுழுக்களின் நோக்கம், வேலை பற்றிய செய்திகளை, அறிவதற்கும் உதவுகிறது. தேசிய கோடக்ஸின் வாரியங்கள் கோடக்ஸ் சம்பந்தமானவை, வரைவு நெறிமுறைகள் மற்றும் ஏனைய பத்திரங்கள் பற்றி ஆராய்வதற்கான மன்றங்களை அளிப்பதற்காக, பல கோடக்ஸ் உறுப்பினர் நாடுகளில் “தேசிய கோடக்ஸ் வாரியம்” அமைக்கப்பட்டது. இவை NCCP-க்கு உதவுவதுடன், எல்லா பயனாளிகளையும் (அரசாங்க நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நுகர்வோர் கழகங்கள் உட்பட) ஈடுபட செய்கிறது. FAO வின் உதவி உணவு மற்றும் வேளாண் சார்ந்த அனைத்து அம்சங்களையும், நிறுவகிப்பதில் முதன்மையான நிறுவனமாவது, ஐக்கிய நாட்டு உணவு மற்றும் வேளாண் அமைப்பு ஆகும். உணவு மற்றும் ஊட்டசத்து பிரிவானது தனது உணவு தரம் மற்றும் நெறிமுறை சேவையில், கொள்கை அறிவுரை மூலம் திறன்மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வருகிறது. இது உணவு தரக்கட்டுப்பாடு மற்றும் உணவு பாதுகாப்பு மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் உணவு உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு தேவையான உணவு தர மேம்பாடு, தொழில் நுட்ப ஒழுங்குமுறைகள் மற்றும் உணவு தரம் மற்றும் பாதுகாப்பில் உறுதிக்கான திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மேலும், தேசிய உணவு ஏற்றுமதிக்கான சான்றிதழ்கள் வழங்கும் திட்டங்களையும் நடத்தி வருகிறது. மேலும், இது உணவு கட்டுபாடு சம்பந்தமான, மண்டல மற்றும் தேசிய கருத்தரங்கையும் நடத்தி வருகிறது. FAO-வின் உறுப்பினர் நாட்டில் கட்டுப்பாட்டு திட்டங்களையும், இந்த திறன்மேம்பாட்டு திட்டத்தில் செய்யலாம். இதில், சில முக்கியமான செயல்களுக்கான கொள்கை அறிவுரை நிறுவன மேம்பாடு மற்றும் திடம்படுத்துதல்; உணவு சட்டத்தை மறு ஆய்வு மற்றும் புதுப்பித்தல். கோடக்ஸ் மற்றும் ஏனைய சர்வேதச ஓழுங்குமுறை நிறுவனங்களுடன் உணவு நெறிமுறைகள் மற்றும் கட்டுபாடுகளை பொருந்தும் படி செய்தல் உணவு பாதுகாப்பு சார்ந்த துறைகளில் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக ஊழியர்களை பயிற்றுவித்தல். குறிப்பிட்ட உணவு சார்ந்த பாடங்களில் ஆராய்ச்சி புரிதல். உணவு பாதுகாப்பு சம்மந்தமான விஷயங்களில், மண்டல மற்றும் தேசிய அளவிலான கருத்தரங்குகளை நடத்துவதும், திறன் மேம்பாட்டில் அடங்கும். மேலும், உணவு கட்டுபாடு மற்றும் உணவு பாதுகாப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கான கையேடு, நெறிமுறைகள், பயிற்சிக்கான பொருட்களை தயாரித்து மற்றும் பரப்புவதும் ஆகும். உணவு கட்டுப்பாட்டுக்கான அலுவலக பணியாளர், அரசாங்க அதிகாரிகள் மற்றும் உணவு பொருள் தொழிற்சாலையில் உணவு தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியாளர்களையும் பயிற்றுவிப்பது, FAO வின் முக்கிய நோக்கமாகும். FAO வின் தொழிற்நுட்ப ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ், ஒரு பகுதியாக, TCP/IND/0067 எனும் திட்டத்தை, இந்தியாவின் உடல்நலம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் இந்தியாவின் NCCP யுடன் இணைந்து FAO நிறுவியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், உடல் நல அமைச்சகத்தில், தேசிய கொடக்ஸ் ஆதார மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், உணவுதரம் மற்றும் உணவு பாதுகாப்பு செயல்பாடுகளை புரியும் எல்லா பயனாளிகளும், தகவல்களை பெறலாம். மேலும் தகவல்களை பெற ‘கோடக்ஸ் பயனீட்டாளர் கையேட்டை’ (ஆங்கிலத்தில்) காணவும். தரமற்ற உணவை வாங்கக் கூடாது கேள்வி பதில்கள் 1. பதப்படுத்தப்பட்ட பொருட்களின் வைப்புத் திறன் யாது? குறைந்த பட்சம் 6 மாத காலங்கள் குளிர் பெட்டியைக் கொண்டு வைப்புத் திறனை இரட்டிப்பாக்கலாம். 2. பதப்படுத்தப்பட்ட பொருட்களை வெற்றிட அடைத்தல் மூலம் பதப்படுத்துவதின் நன்மைகள் யாது? பொதுவாக பொருட்கள் நெகிழி அல்லது அலுமினிய பாயில் கொண்டு அடைத்தால், காற்று முதலியன அகற்றப்படுவதால் உணவு வகைகள் புதுமையாக காணப்படும். (எ-டு) மசாலா பொருட்கள். 3. பதப்படுத்த பயன்படும் வேதி பொருட்கள் மனிதர்களுக்கு தீமையா? ஆம், ஆட்டு இறைச்சியை பதப்படுத்த பயன்படும் வேதி பொருட்கள் வயிற்றில் புற்று நோய் வர காரணமாகும். எனவே குறைந்த அளவு உபயோகிக்க வேண்டும். 4. பதப்படுத்தலின் செயல்பாடுகளுக்கு எவ்வித இடம் உகந்தது? பதப்படுத்தலின் செயல்பாடுகளுக்கு சிறந்த இடம் யாதெனில் குறைந்த உற்பத்தி செலவு, போக்குவரத்து மற்றும் நீர் கிடைக்கும் திறன், வேலையாட்களின் எண்ணிக்கை அதிகம் உள்ள இடமாகும்.