ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவம் நெற்பயிரின் இயல்பான வளர்ச்சிக்கு கீழ்காணும் முக்கிய ஊட்டச்சத்துக்கள் (உரச்சத்து) தேவைப்படுகின்றன. கார்பன் (கரிமம்) தழைச்சத்து கால்சியம் நீரகம் மணிச்சத்து மெக்னீசியம் உயிரியம் சாம்பல்சத்து சல்பர் இரும்பு துத்தநாகம் குளோரின் மேங்கனீஸ் போரான் தாமிரம் மாலிப்டினம் இவற்றில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய மூன்றும் முதன்மை தாவர ஊட்டச்சத்துக்கள். கால்சியம், மெக்னீசியம் மற்றும் கந்தகச்சத்து ஆகியவை இரண்டாம் நிலை துணைச்சத்து. ஊட்டச்சத்துப் பொருட்கள் இரும்புச்சத்து, மேங்கனீஸ், தாமிரச்சத்து, துத்தநாகம், போரான், மாலிப்டினம் மற்றும் குளோரின் ஆகியவை நுண் ஊட்டச்சத்துப் பொருட்கள். முதன்மை மற்றும் துணை ஊட்டச்சத்துப் பொருட்களை முதன்மை தனிமங்கள் என்றும் கூறுவர். ஊட்டச்சத்து பொருள்களின் ஒப்பீட்டு பரவல் தன்மையைப் (அளவு) பொருத்துத்தான் இங்கு பங்கீட்டு முறை ஏற்பட்டுள்ளது. அதன் ஒப்பு முக்கியத்துவத்தைப் பொருத்து அல்ல. நுண் ஊட்டச்சத்துக்கள் குறைந்த அளவிலேயே தேவைப்படுகின்றன. இருப்பினும், தாவர ஊட்டத்தில் முதன்மை தனிமங்களைப் போலவே இவையும் முக்கியத்துவம் பெறுகின்றன. தழைச்சத்து நெற்பயிரின் முக்கிய ஊட்டச்சத்தான தழைச்சத்து பொதுவாக நெல் உற்பத்தித் திறனை வரையீடு செய்கின்றது. இலைகளுக்கு நன்கு ஆரோக்கியமான பச்சை நிறத்தை அளித்து, தழைப்பகுதி வளர்ச்சியை மேம்படுத்துகின்றன. தழைச்சத்தானது, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துப் பொருளை பயிர்கள் நன்கு எடுத்துக் கொள்ள உதவுகின்றது. குறைந்த அளவு தழைச்சத்து (25 கிலோ தழைச்சத்து/எக்டர்) உள்ள பகுதிகளில் “இன்டிகா” இரகங்கள் அதிகளவில் நன்கு வளர்கின்றன. அதிக அளவு தழைச்சத்து அளிப்பதால், பயிர் சாய்தல் மற்றும் அதன் தொடர்ச்சியாக மகசூல் இழப்பும் ஏற்படும். காற்றில்லா நிலைகளில் கரிமப்பொருள் சிதைவுறுதல் ஏற்படும்போது நெற்பயிருக்குத் தேவையான தழைச்சத்தினை கரிமப்பொருளிலிருந்து எடுத்துக் கொள்கிறது. மேலும் பயிரின் முன் வளர்ச்சி நிலைகளில் அதற்குத் தேவைப்படும் தழைச்சத்தினை, நீர் முழ்கிய மண்ணில் தழைச்சத்தின் நிலையான தன்மையான அமோனியா வடிவத்தில் பயிர் எடுத்துக் கொள்கிறது. நெற்பயிரில் தழைச்சத்து அதிகமாய் தேவைப்படும் இரு வளர்ச்சி நிலைகள்: முன் தழை வளர்ச்சி நிலை மற்றும் பூங்கொத்து உருவாகும் நிலைகள் முன் தழை வளர்ச்சி பருவத்தில் பயிருக்கு உரமளித்தால் துார்கள் உற்பத்தி அதிகரித்து, அதிக மகசூல் கிடைக்கும். பூங்கொத்து உருவாக்க நிலை அல்லது முன் கதிர் வைக்கும் பருவத்தில் உரம் அளிப்பதால், பயிர்கள் ஒரு பூங்கொத்திற்கு அதிகமான மற்றும் கனமான நெல்மணிகளை உற்பத்தி செய்ய உதவுகின்றது. மணிச்சத்து மணிச்சத்து, குறிப்பாக முன் வளர்ச்சிப் பருவத்தில் முக்கியமாகத் தேவைப்படுகின்றது. மணிச்சத்து நெற்பயிருக்குள்ளேயே இயங்கும் தன்மை கொண்டு, வேர் வளர்ச்சியைத் துாண்டுகின்றது. (குறிப்பாக சல்லி வேர்கள்), மேலும் துார்கள் வைப்பது மற்றும் முன்னரே பூத்தல் ஆகியவற்றை மேம்படுத்துகின்றது. மண் இயற்கையாய் பெற்றிருக்கும் மணிச்சத்து போதுமானதாக இல்லையென்றாலும், நெற்பயிரின் வேர் அமைப்பு நன்கு வளர்ச்சியடையாத நிலையிலும், மணிச்சத்து கூடுதலாக தேவைப்படுகின்றது. பயிரின் முன் வளர்ச்சி நிலையில் போதுமான மணிச்சத்தை எடுத்துக் கொண்டால், பின் வளர்ச்சி நிலைகளில் மணிச்சத்து நெற்பயிருக்குள்ளேயே மறு இயங்கும் தன்மை பெற்று செயல்படுகிறது. மேலும் மணிச்சத்து நோய் எதிர்க்கும் திறனை அதிகரித்து, தானியப் பயிர்களை வலிமையாக்குகிறது. இதனால் பயிர் சாய்தல் தன்மையை குறைக்கிறது. மேலும் பயிருக்கு தீங்கு விளைவிக்கும் அளவு அதிகமாக தழைச்சத்து இருப்பின் அதனை மணிச்சத்து ஈடு செய்கிறது. சாம்பல்சத்து நெற்பயிருக்கு போதுமான நோய் எதிர்க்கும் ஆற்றல், பூச்சித் தாக்குதலை தாங்கும் திறன், அதிக குளிர் மற்றும் இதர சாதகமற்ற நிலைகளைத் தாங்குவதற்கும் சாம்பல் சத்து போதுமான திறனை அளிக்கிறது. சாம்பல் சத்தானது, மாவுச்சத்து உருவாகுவதற்கும், சர்க்கரை உற்பத்தி மற்றும் இடமாற்றத்திற்கும், மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. மாவுச்சத்து நிறைந்த பயிர்களுக்கு தனி மதிப்பை வழங்குகிறது. நொதிப் பொருள் செயற்பாட்டில் பங்கு வகிக்கிறது. ஒளிச்சேர்க்கைப் பொருள் உற்பத்தியாகவும், அவைகளை வளரும் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யவும் உதவுகிறது. மற்ற ஊட்டச்த்துக்களை முறையாக எடுத்துக் கொள்ளவும் உதவுகிறது. துார்கள் வைப்பது, பயிர்ச்செடி கிளை உருவாக்கம் மற்றும் தானியத்தின் அளவு மற்றும் எடை அதிகரிக்கவும் துணைபுரிகிறது. பயிர் எடுத்துக்கொண்ட சாம்பல் சத்தில் 80 சதவிகிதம் அளவு வைக்கோலில் தான் காணப்படுகின்றது. மணல் கலந்த மண்ணில் தான் சாம்பல்சத்தின் தேவை அதிகமாய் காணப்படுகிறது. சுண்ணாம்புச்சத்து பயிரில் உள்ள பெக்டினுடன் “கால்சியம்” இணைந்து “கால்சியம் பெக்டேட்” உருவாகிறது. இவை உயிரணு சுவரின் முக்கியமான ஆக்கக் கூறாக விளங்குகிறது. காற்றில் உள்ள தடையில்லா தழைச்சத்தினை நிர்ணயிக்கவும் கரிம வடிவத்திலிருக்கும் தழைச்சத்திலிருந்து, நைட்ரேட் உருவாக்குவதற்கும் துணை புரிகின்றன. மண் நுண்ணுயிரிகளின் செயற்திறனை அதிகப்படுத்த உதவுகிறது. மேலும், சுண்ணாம்புச்சத்து சிறந்த வேர் வளர்ச்சிக்கு தேவைப்படுகிறது. மெக்னீசியம் பச்சையத்தின் முக்கிய ஆக்கக் கூறாக விளங்குகிறது மெக்னீசியம். பொதுவாக குறைந்த அளவு மெக்னீசியமே பயிர்களுக்குத் தேவைப்படுகின்றன. அதனால் சாம்பல்சத்து பற்றாக்குறைக்கு அடுத்தே, மெக்னீசியத்தின் பற்றாக்குறை காணப்படுகிறது. கந்தகச்சத்து பச்சையம் உற்பத்தி, புரதச்சேர்க்கை மற்றும் பயிர் வடிவம் மற்றும் அதன் செயல்பாட்டிற்கு கந்தகச்சத்து முக்கிய பங்களிக்கிறது. வைக்கோல் மற்றும் செடித்தண்டுகளின் முக்கிய ஆக்கக்கூறாக கந்தகம் விளங்குகின்றது. இரும்புச்சத்து பச்சையம் சேர்க்கைக்கு இரும்புச்சத்து தேவைப்படுகிறது. மேட்டுப்பாங்கான நில மண்ணில் முக்கிய பிரச்சினையாக உள்ளது. துத்தநாகம் மாவுச்சத்து உருமாற்றத்திற்கு முக்கியமானது. சர்க்கரை உட்கொள்ளும் திறனை கட்டுப்படுத்துகிறது. நெற்பயிரில் துத்தநாகத்தின் செயலானது, நொதிப் பொருளின் உலோக செயல் ஊக்கியாக விளங்குகிறது. தாழ்வான நில நெற்பயிரில் துத்தநாகத்தின் பற்றாக்குறை பொதுவாக களர்மண் குறிப்பாக சுண்ணாம்புச்சத்து நிறைந்த மண்ணில் காணப்படுகிறது. நீர் மூழ்கிய மண்ணை விட மேட்டுபாங்கான மண்ணில், மண் மற்றும் இடப்பட்ட துத்தநாகத்தின் அளவு அதிகமாய் காணப்படுகிறது. மண் அமிழ்வு ஏற்படுத்தினால், மண் கரைசலில் துத்தநாகத்தின் செறிவு குறைகிறது. ஒரு டன் நெல்லுக்கு, 30-40 கிராம் துத்தநாகத்தை நெற்பயிர் அகற்றுகிறது. போரான் மாவுச்சத்து உருமாற்றத்திற்கு முக்கியமானது. சர்க்கரை உட்கொள்ளும் திறனை கட்டுப்படுத்துகிறது. நெற்பயிரில் துத்தநாகத்தின் செயலானது, நொதிப் பொருளின் உலோக செயல் ஊக்கியாக விளங்குகிறது. தாழ்வான நில நெற்பயிரில் துத்தநாகத்தின் பற்றாக்குறை பொதுவாக களர்மண் குறிப்பாக சுண்ணாம்புச்சத்து நிறைந்த மண்ணில் காணப்படுகிறது. நீர் மூழ்கிய மண்ணை விட மேட்டுபாங்கான மண்ணில், மண் மற்றும் இடப்பட்ட துத்தநாகத்தின் அளவு அதிகமாய் காணப்படுகிறது. மண் அமிழ்வு ஏற்படுத்தினால், மண் கரைசலில் துத்தநாகத்தின் செறிவு குறைகிறது. ஒரு டன் நெல்லுக்கு, 30-40 கிராம் துத்தநாகத்தை நெற்பயிர் அகற்றுகிறது. தாமிரசத்து “பிளாஸ்டோசையனின்” (தாமிரச்சத்து கொண்ட புரதம்) என்பதின் முக்கியக்கூறு தாமிரம். சில உயிர்வழி நொதிப் பொருள்களின் முக்கியக் கூறாகும். இனப்பெருக்க வளர்ச்சிக்கு முக்கியமானது. வேர் வளர்ச்சிப் பொருள் ஆக்கம் மற்றும் புரதச்சத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. மாங்கனீசு மாங்கனீசு, நைட்ரேட் குறுக்கம் மற்றும் நிறைய சுவாச நொதிகளின் செயற் ஊக்கியாகும். ஒளிச்சேர்க்கையின் போது உயிரியம் பரிமாற்றத்திற்கு மாங்கனீசு தேவைப்படுகிறது. மாவுப் பொருள் மற்றும் தழைச்சத்து ஆக்கநிலைகுழைவில் பங்களிக்கும் நொதிப் பொருள் அமைப்புகளுடன் செயலாற்றுகிறது. மண் இயற்கையாய் பெற்றிருக்கும் மாங்கனீசு சத்து போதுமானதாக இருக்கும். சிலிக்கான் நெற்பயிர் வளர்ச்சிக்கு உதவுகிறது. பயிர் வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்புத்திறனுக்கு முக்கிய தனிமமாக சிலிக்கான் விளங்குகிறது. உயிரற்ற மற்றும் உயிரிலுள்ள நோய்களின் தாக்குதலுக்கு சில பயிர்கள் இலக்காகும் தன்மையை சற்றே குறைக்கும் ஆற்றல் பெற்றது. சிலிக்கான் அளிப்பதால், பயிரின் வலிமை மற்றும் விறைப்புத் தன்மையை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் சிறந்த நெற்பயிர் மகசூல் கிடைக்கிறது. பயிர் வேர்கள் சிலிக்கான் சத்தை, சிலிக்கான் அமிலமாக எடுத்துக் கொள்கிறது. நீரில் உள்ள சிலிக்கான் அமிலத்தை வேர்கள் உறிஞ்சிக் கொள்ளும் அளவும் சிலிக்கான் சத்தை நெற்பயிர் எடுத்துக் கொள்ளும் அளவும் சமமனாது. அதிக அளவு நீராவிப் போக்கு இருந்தால், சிலிக்கான் சத்தை எடுத்துக்கொள்ளும் அளவும் அதிகமாகும். ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்