நெல்

பிராசினோஸ்டீராயிருட்ஸ் தழை தெளிப்பான் 0.3பிபிஎம் ல் பூர்க்கும் பருவத்திற்கு முன் இதை தெளித்தால் தானிய உற்பத்தியை அதிகரிக்கும்

25 பிபிஎம் ஜபிஏ-வில், வேர்களை நட்டு வைப்பதுபோல் நனைத்து வைத்தால் வேர் பிடிப்பு அதிகரிக்கும்

வேர் பிடிப்பு தொடங்கும் முன் தையமின் கரைசலில் 16 மணி நேரம் வேரை அந்தக் கரைசலில் மூழ்குபடி வைக்கவும்

தானியங்கள்

தழை தெளிப்பான் பிராசினோஸ்டீராயிட்ஸ் 0.1 பி.பி.எம் யை முப்பதாவது மற்றும் ஐம்பதாவது நாட்களில் தெளித்தால் கம்பு தானிய மகசூலை அதிகரிக்கும்

சைட்டோகையனின் 10 பிபிஎம் தழை தெளிப்பானை விதைத்த நாற்பதாவது மற்றும் ஐம்பதாவது நாட்களில் தெளித்தால் ராகி மகசூலை அதிகரிக்கும்

யூரியா 2% தழை தெளிப்பானை நாற்பதாவது மற்றும் ஐம்பதாவது நாட்களில் தெளித்தால் ராகி தானிய மகசு{லை அதிகரிக்கும்

மானாவாரி நிலையில் விதையை கடினமாக்க kcl 1% + cacl 2 1% - ல் போட்டால் ராகி தானிய மகசூலை அதிகரிக்கும்

பயிறு அல்லது பருப்பு வகைகள்

மெப்பிக்குவேட் குளோரைடு 150 பிபிஎம் தழைத்தெளிப்பானை நாற்பது மற்றும் ஐம்பதாவது நாட்களில் தெளித்தால் தானிய மகசூலை அதிகரிக்கும், மற்றும் என்.ஏ.ஏ. 40 பிபிஎம்-ஐ தெளித்தால் துவரப்பருப்பு விதை உற்பத்தியை அதிகரிக்கும்

டி.ஏ.பி 2 தழை தெளிப்பானை முப்பது மற்றும் நாற்பத்தி ஐந்தாவது நாட்களில் தெளித்தால் பச்சைப்பயிறு தானிய மகசூலை விரிவுபடுத்தும்

பச்சைப்பயிறை வெள்ளத்தைக் கட்டுப்படுத்த பிரேசிநோலிட் 0.1 பி.பி.எம். தழைத் தெளிப்பானை உபயோகித்தால் வெள்ளத்தின் அழுத்தத்தை சீர்படுத்தும்

யூரியா 2 தழை தெளிப்பானை முப்பது மற்றும் நாற்பத்தி ஐந்தாவது நாட்களில் ளெித்தால் உளுந்துப்பருப்பு மற்றும் பச்சைப்பயிறு தானியங்களின் மகசூலை அதிகரிக்கும்

100 பிபிஎம் சாலிசிலிக் அமிலத் தழை தெளிப்பானை முப்பது மற்றும் நாற்பத்தி ஐந்தாவது நாட்களில் தெளித்தால் பச்சைப்பயிறு, உளுந்துப்பருப்பு மற்றும் சோயாபீன் தானியங்களின் மகசூலை அதிகரிக்கும்

தட்டைப்பயிறு மற்றும் பச்சைப்பயிறு வெள்ளத்தைக் கட்டுப்படுத்த பிரேசினோலைடு 0.3 பிபிஎம் தழை தெளிப்பானை உபயோகமானது என்று அறிமுகப்படுத்தப்பட்டது

Iron chloroisis-ஐ குறைக்க 0.5 பெரஸ் சல்பேட் தழை தெளிப்பானை உபயோகிக்கலாம்

0.5% ஜிங்க் சல்பேட் தழை தெளிப்பானை ஜிங்க் பற்றாக் குறையை சரி செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது

தழை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த நெல் பயிரிடப்படாத, 125 பிபிஎம் மெபிகுவேட்குளோரைட் தழை தெளிப்பானை உபயோகித்தால் நல்ல பயனைத் தரும்

எண்ணெய் வித்துக்கள்

நிலகடலையின் விதை பிடிப்பை மற்றும் விதை மகசூலை உயர்த்த மெப்பிக்குவேட் குளோரைடு, 125 பிபிஎம் தலை தெளிப்பானை உபயோகிக்கலாம்

நிலக்கடலையில் முளைவிடுதலை அதிகரிக்க 100 பிபிஎம் எத்ரலில் விதையை மூழ்குபடி வைக்கவும்

நிலக்கடலையை அறுவடைக்கு முன் 5 % prosopsis pod

பிரேசினோலைடு 0.5 பிபிஎம் தழை தெளிப்பானை பூர்க்கும் மற்றும் விதை உருவாகும் பருவத்தில் தெளித்தால் நிலக்கடலையின் விதை மகசூலை அதிகரிக்கம்

பூர்க்கும் பருவத்திலும், capsule filling பருவத்திலும் சாலிசிலிக் அமிலத்தை 100 பிபிபஎம் தழை தெளிப்பானை தெளித்தால் எள்ளின் விதை பிடிப்பையும், விதை மகசூலையும் அதிகரிக்கும்

தேங்காய் வேர் ஊட்டத்திற்கு 40 பிபிஎம் என்.ஏ.ஏ-வை தெளித்தால் button shedding குறைக்கும் மற்றும் பருப்பு மகசூலை அதிகரிக்கும்

தேங்காய் ஊட்டத்திற்கு macro நுண்ணூட்டம், சாலிசிலிக் அமிலம் மற்றம் என்.ஏ.ஏ-வை பயன்படுத்தினால் தேங்காயில் பருப்பு உற்பத்தியை பெருக்கலாம்

பருத்தி

பிரேசினோலைடு 0.1 பிபிஎம் தழை தெளிப்பானை தாவரம் வளரும் பருவத்தில் மற்றும் பருவத்திலும் தெளிப்பானை தெளிக்க வேண்டும்

சோளம்

யூரிய 1% மற்றும் பிரேசினோலை 0.1 பிபிஎம் தழை தெளிப்பானை இருபத்தி ஐந்து மற்றும் நாற்பத்தி ஐந்தாவது நாட்களில் தெளித்தால் சோ மகசூலை அதிகரிக்கலாம்

பழப்பயிர்கள்

1000 பிபிஎம் சிசிசி தழை தெளிப்பானை நடவு செய்த பிறகு தெளித்தால் கொத்தின் எடை கூடும்

ஜிங்க் சல்பேட் 0.5% தழை தெளிப்பானை வருடத்திற்கு இரு முறை தெளித்தால் குளோரோசிஸ் மற்றும் பழ மகசூலை அதிகரிக்கும்

கொய்யா

ஜிங்க், மேன்கனீசு, மெக்னீசியம் (0.5%அனைத்திலும்) மற்றும் தாமிரம், இரும்பு (0.25% யையும்) கலந்து தெளித்தால் கொய்யாவில் புது இலைகள் வளர உதவும்

சப்போட்டா

% பேரிக் அமில தழை தெளிப்பானை ஜீன் மாதத்திற்கு இடை இடையில் நான்கு முறை தெளித்தால் சப்போட்டா பழ மகசூலை அதிகரிக்கும்

குறிப்புகள்

1% - 1 கிராம், 100 மில்லியில் கரையும் (100மில்லிக்கு கலக்கவும்)

1பிபிஎம் - 1 மில்லிகிராம், 1லிட்டரில் கரையும் (1லிட்டருக்கு கலக்கவும்

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்