வறட்சி வருவதை கண்டறிதல்

அனுபவங்களை கொண்டு, வேளாண் பட்டங்களில் / பருவங்களில் வரப் போகும் வறட்சியை குறிப்பிடும் சில எச்சரிக்கை சூழ்நிலைகள் கண்டறியப்பட்டுள்ளன. அவையாவன:

கரீஃப் (ஜுன் - ஆகஸ்ட் காலக்கட்டத்தில் விதைப்பு)

தென் மேற்கு பருவ மழை காலதாமதமாகுதல்

தென் மேற்கு பருவ மழை செயல்பாட்டில் அதிக இடைவெளி

ஜுலை மாதத்தில் போதுமான மழை பொழியாது இருத்தல்

கால்நடை தீவனத்தின் விலை அதிகரித்தல்

நீர் சேமிப்பு அணைகளில், நீர் வரத்து அதிகமாகாமல் இருத்தல்

கிராமபுற குடிநீர் தேவைகளை சந்திக்கும் நீரிநிலைகள் வற்றுதல்

வறட்சியற்ற நல்ல வருடத்தில் காணப்படும் அளவிற்கு, நிலங்களில் தொடர் விதைப்பு செயல்பாடுகள் குறைவுபடுதல்

ரபி (நவம்பர் - ஜனவரி காலக்கட்டத்தில் விதைப்பு)

தென்மேற்கு பருவமழை காலத்தின் கடைசியில் (செப்டம்பர் 30ல்) போதுமான மழை இல்லாது இருத்தல்

வறட்சியற்ற வருடத்தில் உள்ள நிலத்தடி நீரை விட, நிலத்தடி நீர் கம்மியாதல்

அணைகளில் நீர் மட்டம் வழக்கத்தை விட குறைவாக இருத்தல். இது தென் மேற்கு பருவ மழைக்கு பின்பு, குறைந்த அளவு நீர்வரத்தை குறிக்கும்

மண்ணின் ஈரப்பதம் மிகவும் குறைந்து காணப்படுதல்

கால்நடை தீவனத்தின் விலை அதிகரித்தல்

தமிழ் நாடு மற்றம் புதுச்சேரிக்கு, வடகிழக்கு பருவ மழை, மிக அவசியமாகும் (அக்டோபர் - டிசம்பர்)

ஏனைய பருவங்களுக்கு

குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், மராத்வாடா மற்றும் கர்நாடகாவின் வடக்கு உள் பகுதிகளுக்கு, மார்ச் அல்லது ஏப்ரல் முக்கிய மாதங்களாகும். இந்த சமயங்களில், போதிய நீர்வரத்து இல்லாமல் இருந்தால், பல பகுதிகளில் தீவிர குடிநீர் தட்டுபாடு காணப்படும்.

சில மாநிலங்களுக்கு, சில பயிர்களுக்கு வருடத்தில் குறிப்பட்ட நேரத்தில் ஏற்படும் மழை மிக முக்கியமானதாகும் உதாரணத்திற்கு, கேரளாவில் பணப்பயிர்களுக்கு, பிப்ரவரியில் மழை அவசியமாகும்

மூலம்: வேளாண் துறை

இந்தியாவின் வறட்சி - சில தகவல்கள்

இந்தியாவில், பெரும்பாலும் தென்மேற்கு பருவ மழை (ஜுன் - செப்டம்பர்) பொய்க்கும் போது, வறட்சி ஏற்படுகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள், அடுத்த பருவகாலம் வரும் வரை பயிரிடுவதற்கு காத்திருக்க வேண்டும். ஏனென்றால், நாட்டின் 73% வருடாந்திர மழை, தென் மேற்கு பருவ மழைக் காலத்திலேயே கிடைக்கிறது.

நாட்டின் மழை அளவு பற்றிய புள்ளி விவர குறிப்புகள் அடிப்படையில், வறட்சி சம்பந்தப்பட்ட கீழ்கண்ட தகவல்களை அறியலாம்.

நம் நாட்டின் மொத்த பரப்பளவில், 16% வறட்சியடைவதற்கான வாய்ப்பும், வருடத்தில் 50 மில்லியன் மக்கள் வறட்சியின் தாக்கத்திற்கும் ஆளாகின்றனர்.

Êசாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பில், 68% வெவ்வேறு அளவிளான வறட்சி சூழ்நிலைகளை சந்திக்கிறது

35% பரப்பளவு, 750 - 1125 மீ.மீ மழையை பெறக்கூடியவை. இவை வறட்சிக்கு உட்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

பெரும்பாலும் வறட்சிக்கு உட்படும் பகுதிகள், வறண்ட நிலப்பகுதி (19.6%), பகுதி வறண்ட நிலப்பகுதி (37%) மற்றும் மிதமான ஈரப்பசையை உடைய நிலப்பகுதி (21%) ஆகிய பகுதிகளே ஆகும். இவை நாட்டின் மொத்த நிலப்பரப்பான 329 மில்லியன் ஹெக்டரில், 77.6% ஆகும்.

நாட்டின் சராசரி வருடாந்திர மழை அளவு 1160 மீ.மீ ஆகும். இதில் 85%, 100-120 நாட்களுக்குள்ளேயே (அதாவது தென்மேற்கு பருவ மழையின் போது) பெறக்கூடியது.

33% பரப்பளவு, 750 மீ.மீ -க்கும் குறைவான மழையை பெறக்கூடியவை. இவை கடுமையான வறட்சிக்கு உட்படும் வாய்ப்பு அதிகம்.

21% பரப்பளவு, 750 மீ.மீ -க்கும் குறைவான மழையை பெறக்கூடியது (இராஜஸ்தான் மற்றும் இந்தியாவின் தீபகற்ப பகுதி)

பத்து வருடத்தில், நான்கு வருடங்கள் நிலையற்ற மழையை பெறக்கூடியது இந்திய வானிலை.

இந்நியாவின் பாசன திறன் 140 மில்லியன் ஹெக்டர் ஆகும் (76 மில்லியன் ஹெக்டர் நிலமட்ட நீர்ப்பாசனம் + 64 மில்லியன் ஹெக்டர் நிலத்தடி நீர் பாசனம்)

குறைந்து வரும் நிலத்தடி மற்றம் நிலமட்ட நீர் வசதிகள், சாகுபடி செய்யப்படும் அனைத்து நிலங்களும் பாசனம் செய்வதற்கு ஏதுவானதாக இல்லை என்பதை குறிக்கிறது.

பெருகி வரும் மக்கள் தொகை, தொழிற்சாலைகளின் வளர்ச்சி, நகரமயமாதல், தீவிர சாகுபடி மற்றும் குறைந்து வரும் நிலத்தடி நீர் ஆகியன, தனி நபருக்கான நீர் கிடைக்கும் நிலையை குறைய செய்கிறது. இப்பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும்.

இதனால், வறட்சி சில பகுதிகளிலோ அல்லது பல பகுதிகளிலோ வருவதை தவிர்க்க இயலாது.

மூலம்: வறட்சி - தேசிய நெருக்கடி மேலாண்மை திட்டம், இந்திய அரசின் வேளாண் அமைச்சகம்