இப்போது நடைமுறையில் உள்ள கரும்பு நடவுமுறையில் ஆட்கள், நேரம் மற்றும் செலவு அதிகமாகிறது. மத்திய பிரதேசம் மாநிலம் மேக் கிராமத்தை சார்ந்த விவசாயி திரு. ரோஷன்லால் விஸ்வகர்மாக்கு கரும்பு நடவு சிரமமாக இருந்தது. மேலும் அவருக்கு கரும்பு கரணைகள் தட்டுப்பாடும் இருந்தது. அவருக்கு கரும்பு கரணைக்கு பதிலாக கரும்பு குருத்துகளை எடுத்து உருளைக்கிழங்கு போல விதைக்கலாம் என்று தோன்றியது.

கடின வேலை

திரு.ரோஷன்லால் இது சம்பந்தமாக தொழிற்நுட்ப வல்லுநருடன் கலந்தாலோசித்தார். தொழில்நுட்ப வல்லுநர் ஊக்கப்படுத்தியதன் விளைவாக இரண்டு வருட கடின தொடர் முயச்சிக்கு பின்பு ஒரு எளிதான இயந்திரத்தினை கண்டுபிடித்தார்.

அவர் கண்டுபிடித்த கரும்பு குருத்து வெட்டும் கருவி தரையில் வைத்து உபயோகிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் கரும்பு குருத்துகளை சேதாரமின்றி முறையாக வெட்டுவதற்காக அரை வட்ட வடிவ வெட்டும் முனையுடைய ஒரு கத்தி பொருத்தப்பட்டுள்ளது.

இக்கரும்பு குருத்து வெட்டும் கருவியினை பயன்படுத்தி ஒரு மணி நேரத்தில் ஒரு ஆள் 100 குருத்துகளை வெட்ட முடியும்” என்று திரு.ரோஷன்லால் கூறுகிறார்.

கருவியின் கையாளும் திறன்

இக்கருவி கரும்பினை சிறிய துண்டுகளாக வெட்டும். மேலும் இக்கருவி மடக்கக்கூடிய வகையிலும் இருக்கிறது மற்றும் இக்கருவி கொண்டு வெவ்வேறு அளவுகளிலும் ஆரத்திலும் கரும்பு துண்டுகளை வெட்ட முடியும்.

கருவி பற்றிய விவரம்

கரும்பு வெட்டும் கருவியில் ஒரு தட்டு போன்ற அமைப்பும், அதனை தாங்குவதற்கு குச்சி போன்ற அமைப்பும், மாற்றி அமைக்கக்கூடிய அளவுக்கு ஸ்குருக்களும், U வடிவிலான வெட்டும் கத்தியும் இருக்கும்.

இக்கருவி ஐந்து வருட உத்திரவாதத்துடன் ரூ. 600க்கு கிடைக்கிறது. மேலும் இக்கருவி உபயோகிக்கும் போது இதனை உபயோகிப்பவர் நன்கு வசதியாக அமர்ந்து கொண்டு, வலது கையில் கருவியினை இயக்கிக் கொண்டே தொடர்ச்சியாக இடது கையினால் கரும்பை கருவியினுள் செலுத்தலாம்.

கரும்பு வெட்டும் கருவி கொண்டு கரும்பினை சுத்தமாக வெட்டுதல்

அரை வட்ட வடிவிலான கத்தி கொண்டு கரும்பினை இரு கணுக்கள் கொண்ட துண்டுகளாக சுத்தமாகவும் முழுமையாகவும் வெட்டலாம். இக்கருவியினை இயக்குவதற்கு மின்சாரமோ அல்லது எரிபொருளோ தேவையில்லை. மேலும் இது சில கிலோ எடையுள்ளது எனவே தூக்குவது எளிதானது.

இது கரும்பினைத் துண்டாக்குவது மட்டுமன்றி பெரிய செடிகளையும் துண்டுகளாக வெட்டலாம்.

“நான் இக்கருவியினை இதனை உபயோகிப்பவர் எளிதாக தரையில் உட்கார்ந்துகொண்டே எந்த அளவு கரும்பினையும் வெட்டுமாறு வடிவமைத்துள்ளேன் என்றும் மேலும் வெவ்வேறு வடிவில் கரும்பினை வெட்டுவதற்கு இரும்பு சுருள் கொண்ட கைப்பிடியை கொண்ட ‘ U ’ வடிவ வெட்டும் அமைப்பினால் மீதமுள்ள கரும்பு பகுதி சேதாரமாகாமல் வெட்டலாம்.

மேசை மேல் வைக்கும் அமைப்புக் கொண்ட கருவி

தரை மீது வைக்கும் கருவிக்கு பதிலாக மேசை மேல் வைக்கும் கருவி வடிவமைப்பில், கரும்பை சரியான உயரத்தில் கருவியில் வெவ்வேறு உபயோகப்பாளர்கள் வைப்பதில் சிரமம் ஏற்பட்டதை உணர்ந்தார்.

மேலும் கிராமத்தினர்க்கு தரை மேல் வைக்கும் கருவி ரொம்ப வசதியாக இருந்ததை உணர்ந்தார்.

அவர் மடக்கக்கூடிய கருவியை உருவாக்கினார். ஆனால் இதற்கு கிராமத்து மக்களிடையே வரவேற்பு இல்லை. ஆதலால் இந்த மடக்ககூடிய கருவியை உருவாக்குவதை நிறுத்தி கொண்டார். இன்று பல கரும்பு விவசாயிகள் திரு. ரோஷன்லால் விஸ்வகர்மா கருவியை உபயோகிப்பதால் நேரமும் பணமும் மிச்சமாகிறது.

தொடர்புக்கு

திரு.ரோஷன்லால் விஸ்வகர்மா
மேக் அஞ்சல். கோண்டிகான், நார்சிங்கபுர்
மத்திய பிரதேசம் 487 002
அலைபேசி எண் 09300724167
மின்னஞ்சல் : info@nifindia.org and bd@nifindia.org
தொலைபேசி : 079- 26732456 and 26732095

மூலம்: தி இந்து