நெல் சாகுபடியில் விதைப்பு, நாற்று நடுதல், அறுவடை செய்தல், கதிரடித்தல் போன்ற பல வேலைகளை விவசாயிகள் இயந்திரங்களைக் கொண்டு தற்போது எளிதாகச் செய்கின்றனர்.

பொதுவாக, களை எடுப்பது மட்டும் மனித சக்தியின் மூலமாகவே நடைபெறுகிறது. ஆனால் மனிதனால் களை எடுத்தல் என்பது மிகவும் கடினமான வேலையாகவும் அதிக நேரம் ஆகக் கூடியதாகவும் உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு களை எடுத்தலை எளிமைப்படுத்தவும், விரைவுப்படுத்தவும் பல்வேறு விதமான களை எடுக்கும் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் களை கட்டுப்படுத்தப்பட்டு விளைச்சல் அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

களை எடுக்கும் கருவியின் மூலம் நிலத்தில் இருந்து களைகள் அனைத்தும் வெளியேற்றப்படுவதால் அவைகள் நிலத்தில் இருந்து எடுத்த உரங்கள், ஊட்டச் சத்துகள் அனைத்தும் வெளியேற்றப்படுகின்றன. நெற்பயிரின் வேர்ப் பக்கத்திலுள்ள மண், களை எடுத்த பின்பும் இறுக்கமாகவே இருக்கும். மேலும் களை எடுப்பதும் மண்ணின் தன்மையைப் பொறுத்து கடினமாகிறது.

களைகளை கருவிகளைக் கொண்டு எடுப்பதால் பல்வேறு பயன்கள் உள்ளன. அதிக தூர்கள், குறைந்த வேலை ஆள்கள், களைகளை அவைகளின் இளம் பருவத்திலேயே மண்ணிலேயே அமுக்கி விடுவதால் உள்கொள்ளும் சத்துக்களின் அளவு குறைந்து பயிருக்கு சத்துக்கள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு, களைகள் கட்டுப்படுத்தப்பட்டு அவை வயலுக்கே இயற்கை உரமாகவும் மாற்றப்படுதல், உருளும் களைக்கருவி மண்ணை பிரட்டி விடுவதால் காற்றோட்டம் கிடைத்தல், மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் ஊக்குவிக்கப்படுதல், மேலுரம் இடும் சமயத்தில் உரமிட்டபின் களை எடுக்கும் கருவியைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதால் உரங்கள் மண்ணில் கலந்து உபயோகத் திறன் அதிகரித்தல் ஆகிய பயன்கள் உள்ளன.

நட்சத்திர வடிவ உருளும் களை எடுக்கும் கருவி

இந்தக் களை எடுக்கும் கருவியானது களை எடுக்கும் உருளை, கைப்பிடி, நட்சத்திர வடிவ உருளை, மிதவை, உருளையை தாங்கும் சட்டம் ஆகியவற்றை கொண்டது. மிதவை களை எடுக்கும் உருளைக்கு முன்னால் பொருத்தப்பட்டு களை எடுத்தலை விரைவுபடுத்துகிறது. களை எடுக்கும் உருளையும் மிதவையும் பிரதான சட்டத்துடன் பொருத்தப்பட்டு முதன்மைக் கைப்பிடியுடன் இணைக்கப்பட்டுள்ளதால் களை எடுத்தல் எளிமையாகிறது.

சாய்வு உருளை களை எடுக்கும் கருவி

இந்தக் கருவியை வரிசையில் நடவு செய்யப்பட்ட வயல்களில் மட்டுமே பயன்படுத்த முடியும் இந்தக் கருவியை முன்னும் பின்னுமாக அசைத்து இயக்கும்போது உருளைப் பகுதியில் உள்வளைந்த கத்தி போன்ற அமைப்பு களையை வேருடன் பிடுங்கிப் போடுகிறது. கருவியை இயக்கி செல்பவர் அவற்றின் மீது நடந்து செல்லும்போது களைகள் மண்ணுக்குள் மிதிக்கப்பட்டு மக்கி அழுகுவதற்கு ஏதுவாகிறது.

நீண்ட கைப்பிடி கொண்ட களை எடுக்கும் கருவி

பயன் :   வரிசைப் பயிர்களில் களை எடுக்கலாம்
திறன் :   நாளொன்றுக்கு 0.05 எக்டர் நிலத்தில் களை எடுக்கலாம்

அமைப்பு : இக்கருவியில் ஆட்கள் நின்ற நிலையிலேயே களையெடுப்பதற்கு வசதியாக நீண்ட கைப்பிடி பொருத்தப்பட்டுள்ளது. களையெடுக்கும் கத்தி மற்றும் எளிதில் தள்ளிச் செல்வதற்கேற்ற உருளையும் கைப்பிடியின் அடிப்பாகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. மண்ணின் தன்மைக்கேற்ப நட்சத்திர வடிவ அல்லது முள் வடிவ உருளைகளை பொருத்தி இயக்குதல் அவசியம். கைப்பிடியை முன்னும் பின்னும் இயக்கும் போது கத்தி மண்ணிற்குள் சென்று களைச்செடிகளை வெட்டுகிறது.

சிறப்பு அம்சங்கள் :

இக்கருவி மூலம் அதிகச் சோர்வு அடையாமல் முதுகை வளைக்காமல் நின்ற நிலையில் நடந்தவாறு களையெடுக்கலாம்

ஒரு நாளில் சாதாரண முறையை விட இரண்டு பங்கு அதிக பரப்பளவில் களையெடுக்கலாம்.

எஞ்சினால் இயங்கும் களை எடுக்கும் கருவி

பயன்  : வரிசைப்பயிர்களில் களை எடுப்பதற்கு பயன்படுகிறது.
திறன் : நாளொன்றுக்கு 1 முதல்1.2 எக்டர் வரை களை எடுக்கலாம்

அமைப்பு  : இக்கருவி 8.38 குதிரைத்திறன் கொண்ட டீசல் என்ஜினால் இயக்கப்படுகிறது. களையெடுக்கும் அமைப்பானது சுழல் கலப்பை போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளது. இக்கலப்பை பின்புறம் பொருத்தப்பட்டு, நன்செய் நிலங்களிலர் களை எடுக்க பயன்படுகிறது. இந்தக் கலப்பையில் வளைந்த இரும்புக் கொழுக்களைப் பொருத்தி சுழலும்படி ஏற்பாடு செய்திருப்பதால், மற்ற எல்லா வகையான களையெடுக்குமி கருவிகளைவிட மிகவும் சிறந்த முறையில் நிலத்திலுள்ள களைகள் மற்றும் புல் âண்டுகள் ஆகியவையும் வெட்டப்பட்டு மண்ணில் புதைக்கப்படுவதால் மண்ணின் உரத்தன்மையும் அதிகமாகிறது. மேலும் இக்கருவியில் களைவெட்டும் தகடு மற்றும் சால் அமைக்கும் இணைப்புக்களையும் பொருத்திக் கொள்ளலாம். களை வெட்டும் தகட்டின் பின்புறம் உள்ள சக்கரம்ளரே ஆழத்தில் சீராகக் களை எடுக்க உதவுகிறது. களை எடுக்கும் ஆழத்தைக் கூட்டவும் குறைக்கவும் இக்கருவியில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பருத்தி, மரவள்ள, மக்காச்சோளம், தக்காளி, கரும்பு போன்ற வரிசைப் பயிர்களில் (குறைந்தது வரிசைக்கு வரிசை இடைவெள 50 செ.மீ. இருக்க வேண்டும்) களை எடுக்க இக்கருவி ஏற்றது. இக்கருவியைக் கொண்டு தென்னை, பாக்கு மற்றும் பழத்தோட்டங்களிலும் களை எடுக்கலாம்

சிறப்பு அம்சங்கள் :

வரிசைப்பயிர்களின் நடுவே களை எடுக்க ஏற்றது

மற்ற களை எடுக்கும் கருவிகளில் ஒப்பிடுமபோது அதிக பரப்பில் எளிதில் களை எடுக்கலாம்

டிராக்டரால் இயங்கும் களையெடுக்கும் மற்றும் மண் அணைக்கும் கருவி

பயன் :  வரிசைப் பயிர்களில் களை எடுக்கலாம்
திறன் :  நாளொன்றுக்கு 1.6 எக்டர் நிலத்தில் களை எடுக்கலாம்

அமைப்பு : இக்கருவியானது வரிசைப் பயிர்களுக்கிடையே களை எடுக்கும் அமைப்பு மற்றும் மண் அணைக்கும் அமைப்பு ஆகிய இவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த களையெடுக்கும் – வடிவம் கொண்டு சுவீப் அமைப்பானது டிராக்டரால் இயங்கக்கூடிய சால் அமைக்கும் கருவியின் முன்புறம் பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவியில் மூன்று சால் அமைக்கும் பகுதியின் முன்புறம் 45 செ.மீ.அகலம் 120 கோணம் மற்றும் 15 சாய்வு கோணம் உள்ள மூன்று சுவீப் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவியை டிராக்டரை கொண்டு பருத்தி போன்ற வரிசைப் பயிர்களுக்கிடையே இயக்கும் பொழுது முன்புறம் பொருத்தப்பட்டுள்ள சுவீப் கத்தி அமைப்பானது ஆழமாக மண்ணுக்குள் சென்று களைகளை வேருடன் பிடுங்கி மேல் கொண்டு வந்து விடும். பின்னால் பொருத்தப்பட்டுள்ள சால் அமைக்கும் அமைப்பானது கிளறி போடப்பட்ட மண்ணை இருபுறமும் வரிசைப் பயிரை ஒட்டி அணைத்து கொடுத்துச் செல்கிறது.

சிறப்பு அம்சங்கள் :

ஒரே நேரத்தில் களை எடுக்க மற்றும் மண்ணை அணைக்கவும் பயன்படுத்தலாம்.

வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளிக்கு ஏற்ப சுவீப் இடையே உள்ள இடைவெளியை
60.75 மற்றும் 90 செ.மீ. வரை மாற்றிக் கொள்ளலாம்

இக்கருவியை 35-45 குதிரை திறன் கொண்ட டிராக்டரை பயன்படுத்தி இயக்கலாம்.

நெற்பயிரில் களையெடுக்கும் கருவி

பயன் :  வரிசையில் நடவு செய்த நெல் பயிரில் களை எடுக்கலாம்
திறன் :  நாளொன்றுக்கு 0.18 எக்டர் நிலத்தில் களை எடுக்கலாம்

அமைப்பு : இக்கருவியானது எளிதில் சுழலும் வண்ணம் பொருத்தப்பட்டுள்ள ஒன்று அல்லது இரண்டு உருளைப் பகுதிகளையும். சேற்றில் எளிதாகத் தள்ளிச் செல்வதற்கேற்ற் மிதப்பான் போன்ற அமைப்பையும் மேலும் இயக்குபவர் நடந்தவாறே தள்ளிச் செல்ல நீண்ட கைப்பிடியொன்றையும் கொண்டது. ஒரு உருளையைக்கொண்ட கருவியால் ஒரு வரிசையிலும் அதேபோல் இரண்டு உருளைப் பகுதியைக் கொண்ட கருவியில் ஒரே சமயத்தில் இரண்டு வரிசைகளிலும் எளிதில் களையெடுக்கலாம்

சிறப்பு அம்சங்கள் :

இக்கருவியை உபயோகிக்க ஒரு வேலையாள் போதுமானது

ஒரு உருளைப் பகுதியைக் கொண்ட கருவியை உபயோகித்து ஒரு நாளில் 25 செட் வரையிலும்.
இரண்டு உருளைகளைக் கொண்ட கருவியால் 40 சென்ட் வரையிலும் களையெடுக்க முடியும்.

ஒரு உருளை மற்றும் இரண்டு உருளைகளைக் கொண்ட இக்கருவிகளை உபயோகித்து ஒரு எக்டருக்கு களையெடுக்க ஆகும் செலவை குறைக்கலாம்.

இரு வரிசை விரல் வடிவ சுழலும் களையெடுக்கும் கருவி

சிறப்பு அம்சங்கள் :

நெல் வயல்களில் வரிசைகளுக்கிடையே களையெடுப்பதற்கு ஏற்றது

வரிசைகளுக்கடையே உள்ள இடைவெளியை 20 செ.மீ. மற்றும் 25 செ.மீக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ளலாம்

ஒருவர் இக்கருவிளை தொடர்ந்து எளிதில் இயக்கலாம்

முன்னும் பின்னுமாக இயக்குவதன் மூலம் களைகள் சேற்றில் புதைக்கப்படுவதுடன் மண்ணில் காற்றோட்டமும் ஏற்படுத்தப்படுகிறது.

மின்கலத்தினால் இயங்கும் நெல் வயலில் களை எடுக்கும் கருவி

களையெடுத்தலை துரிதப்படுத்தும் நோக்கத்துடனும் மின் கலத்தினால் இயங்கும் களை எடுக்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருவியைக் கொண்டு களை எடுப்பவருக்கு பெரிதாக களைப்பு ஏற்படுவதில்லை. இக்கருவியில் களை எடுக்கும் உருளை சுழன்று களைகளை வேரோடு பிடுங்கி எடுக்கிறது. மேலும் களைகள் மண்ணோடு சேர்க்கப்படுவதால் அவை நன்கு மக்கி உரமாகின்றன. இது மண்ணின் காற்றோட்டத்தையும் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டையும் அதிகப்படுத்தி அதிக மகசூலுக்கு வழிவகுக்கிறது.

"களை எடுத்தலை எளிமைப்படுத்தவும், விரைவுப்படுத்தவும் பல்வேறு விதமான களை எடுக்கும் கருவிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறைந்த நேரத்தில் குறைந்த செலவில் களை கட்டுப்படுத்தப்பட்டு விளைச்சல் அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது."

சிறப்பு அம்சங்கள் :

செம்மை நெல் சாகுபடி நெல் வயலில் களை எடுக்க மிகவும் ஏற்றது

கோனோ (உருளை) களை எடுக்கும் கருவியை விட பயன்படுத்த எளிதானது களைப்பின்றி தொடர்ந்து இயக்கவல்லது

களையெடுக்கும் கருவி

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்