மல்பெரிச் செடியை பலவகை பூச்சிகள் தாக்கி சேதம் விளைவிக்கின்றன. அவற்றுள் சில முக்கியமான பூச்சிகள் மற்றும் அவற்றின் மேலாண்மை பற்றி இங்கே காணலாம். இலைப்பிணைக்கும் புழு குளிர் காலங்களில் இப்புழுவின் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இப்புழுக்கள் மல்பெரி செடியின் இலைகளைப் பிணைத்து, உண்கின்றன. இதன் தாக்குதலால் செடியின் வளர்ச்சி குன்றிவிடும். மேலாண்மை பாதிக்கப்பட்ட குருத்துப் பகுதிகளை கிள்ளி எடுத்து அழித்துவிடவேண்டும். விளக்குப் பொறிகளை வைத்து அந்துப் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். டைகுளோர்வாஸ் என்ற மருந்தினை ஒரு லிட்டர் நீருக்கு இரண்டு மில்லி என்ற அளவில் கலந்து தெளித்தும் கட்டுப்படுத்தலாம். இளஞ்சிவப்பு மாவுப்பூச்சி இந்நோய் கோடைப்பருவத்தில் அதிகமாகக் காணப்படும். குஞ்சுகளும் வளர்ந்த பூச்சிகளும் செடியின் இளந்தளிர் மற்றும் குருத்துத் தண்டுப்பகுதியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சி சேதம் உண்டாக்கும். பாதிக்கப்பட்ட செடியின் தளிர்ப்பகுதிகள் அடர் பச்சை நிறத்தில் சுருண்டும் தெளிந்தும் காணப்படும். இரண்டு கணுக்களுக்கிடைப்பட்ட இடைவெளி மிகவும் குறைந்து, செடிகளின் குட்டையான வளர்ச்சியுடன் இருக்கும். இலைகளின் தரம் குறைந்துவிடும். மேலாண்மை பாதிக்கப்பட்ட இலைகளைக் கிள்ளி சேகரித்து எரித்துவிடவேண்டும். இரை விழுங்கிகளான கிரிப்டோலிமஸ் (அ) ஸ்கிம்னஸ் போன்ற பொறிவண்டுகளை ஏக்கருக்கு முறையே 300 மற்றும் 400 என்ற அளவில் வெளியிடவேண்டும். சுருள் வெள்ளை ஈ இளநிலை மற்றும் வளர்ச்சியடைந்த பூச்சிகள் இலைகளின் சாற்றினை இலைகளின் தரம் மற்றம் மகசூல் பாதிக்கப்படுகிறது. இந்த இளநிலை மற்றும் வளர்ச்சியடைந்த பூச்சிகள், இலைகளின் அடிப்பாகத்தில் சுரள் வடிவில் கூட்டமாக இருக்கின்றன. இப்பூச்சிகள் இலைகளிலிருந்து சாற்றினை உறிஞ்சுவதால் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றுவதோடு, இலைகள் சுருட்டப்படுகின்றன. இப்பூச்சிகள் வெளியிடும் எச்சத்தினால் கரும்பூசண நோயும் வருவதற்கு வாய்ப்புள்ளது. மேலாண்மை பூச்சிகளால் பாதிக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்கவேண்டும். மஞ்சள் ஒட்டுப்பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் குறைக்கலாம். களை நிர்வாகத்தின் மூலம் பூச்சிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தலாம். ‘மெனோகைலஸ் செக்ஸ்மேக்குலேட்டஸ்’, ‘ஸ்கிம்னஸ்’, ‘காக்சினெல்லா செப்டம்பங்க்டேட்டா’ ஆகிய பொறிவண்டுகள் பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. இலைப்பேன் இளம் மற்றும் வளர்ந்த பூச்சிகள் இலையில் உள்ள பச்சையத்தை சுரண்டி, சாற்றை உறிஞ்சுதலால் இலைகள் சுருண்டு, பளபளப்பான பழுப்பு திட்டுக்களுடன் காணப்படும். இப்பூச்சியின் தாக்குதல் கோடைக்காலத்தில் அதிகமாகக் காணப்படும். மேலாண்மை டைகுளோர் வாஸ் என்ற மருந்தினை 1 மில்லி லிட்டர் அளவில் கலந்து தெளிக்க வேண்டும். தத்துப்பூச்சி இளம் குஞ்சுகள் மற்றும் தத்துப்பூச்சிகளின் இலையின் அடிப்பகுதியில் இருந்துகொண்டு சாற்றை உறிஞ்சி உண்ணுவதால் இலைகள் மஞ்சளாக மாறிவிடும். சேதம் அதிகமாகும் நிலையில் இலைகள் பழுப்பாகி பின்னர் கருகி கீழே விழுந்துவிடும். கரையான் இதன் தாக்கம் மணற்பாங்கான நிலங்களில் அதிகம். இப்பூச்சியானது இளம் மற்றும் செடியின் வேர் மற்றும் பாகங்களைத் தாக்குகின்றன. தாக்குதல் அதிகமாகும் போது செடிகள் இறந்துவிடுகின்றன. மேலாண்மை கரையான் புற்றுக்களை அழித்தல். குளோர்பைரிபாஸ் 2 மில்லி லிட்டர் என்றளவில் கரையான் உள்ள இடங்களில் தெளித்தல். நூற்புழுக்கள் உலக அளவில் 32 வகையான நூற்புழுக்கள் மல்பெரியைத் தாக்குகின்றன. அவற்றுள் மிக முக்கியமானது ‘மெலாய்டோகைன் இன்காக்னிட்டா’ என்ற நூற்புழு. அது மல்பெரியில் வேரினைத் தாக்கி வேர் முடிச்சுகளை உண்டு பண்ணுகின்றன. இச்சேதத்தினால் செடி வளர்ச்சி இன்றி, பச்சையமிழந்து, வாடிக் காணப்படும். இந்நூற்புழுக்களின் சேதம் மல்பெரி தோட்டங்களில் ஆங்காங்கே காணப்படும். மேலாண்மை புங்கம் இலை மக்குகளை 1 டன், எக்டர் என்ற அளவில் இட்டு நூற்புழு சேதத்தைக் கட்டுப்படுத்தலாம். ஊடுபயிராக சாமந்திச் செடிகளைப் பயிரிட்டு நூற்புழு சேதத்தைக் குறைக்கலாம். மக்கிய குப்பை, தொழு உரம், வேப்பம்புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு மற்றும் மக்கிய கரும்புச்சக்கை கழிவு ஆகியவற்றை இடுவதினால் சேதம் குறைகிறது. கார்போபியூரான் 5 கிராம் மற்றும் போரேட் 2 கிராம் என்ற அளில் செடிகளில் வேர்ப் பகுதியில் இடுவதனால் சேதம் குறைகிறது. ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் - பட்டு வளர்ச்சித் துறை