காய்கறியில் பொதுவாக கத்திரி நாடு முழுவதும் அதிகமாக பயிரிடப்படுகிறது. இதன் சாகுபடியில் பூச்சிதாக்குதல், நோய் மற்றும் நூற்புழு தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. சில சமயங்களில் இது குறிப்பிடதக்க இழப்பையும் மகசூலில் ஏற்படுத்துகிறது. சாகுபடியானது அதிகமான ஈரப்பதம் உள்ள இடங்களில் செய்வதாலும் மேலும் அதன் மென்மை தன்மையாலும் இதனை பூச்சிகள் தாக்குகின்றன. பூச்சிகளால் கத்திரிக்கு ஏற்படும் இழப்பு தோராயமாக 35-40%. என்று மதிப்பிடப்பட்டுள்ளது அதிக பூச்சிகொல்லிகள் உபயோகிப்பதினால் ஏற்படும் பாதிப்புகள் பூச்சியினால் ஏற்படும் இழப்பை தடுப்பதற்கு அதிகமான பூச்சி கொல்லிகள் பயன்படுத்தப்படுகிறது, பூச்சிகொல்லி அடித்து குறுகிய காலத்தில் அறுவடை செய்யப்படும் காய்களில் பூச்சிகொல்லியின் தாக்கம் இருப்பதனால் அவை இக்காய்களை உட்கொள்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம். அதிகமாக இரசாயணங்களை உபயோகப்படுத்தினால் அவை பயிர்களின் பூச்சி எதிர்ப்பு திறன், பூச்சியின் மறு உற்பத்தி, சுற்றுபுறத்தை மாசுபடுத்துதல் போன்ற பாதிப்பையும், சில உயிரினங்கள் மற்றும் செடிகள் அழியவும் காரணமாக அமையும் முக்கிய பூச்சிகள் ஹட்டா வண்டு வண்டுகள் வெளிர் காப்பி நிறமும் அதன் நடுவே பல கறுப்பு புள்ளிகளுடனும் காணப்படும். புழு மஞ்சள் நிறத்தில் காணப்படும்.முட்டைகள் சுருட்டு போன்றும், மஞ்சள் நிறமாகவும், கூட்டாகவும் காணப்படும், புழு மற்றும் வண்டு, இலைகளின் பச்சையத்தை தின்று இலையை நரம்புபோல் ஆக்கும். அசுவனி இளம் மற்றும் முதிர்ந்த பூச்சிகள் இலையின் சாறை உரிந்து, செடி மஞ்சள் நிறமாக மாறி உருகொலைந்து காய்ந்து இறந்து விடும். இவை தேன் துளிகளை செடியில் இடுவதால் கரும்பூசனம் படிந்து ஒளிச்சேர்க்கையை பாதிக்கும். தண்டு மற்றும் காய் துளைப்பான் ஆரம்பத்தில் இதனின் புழு தண்டினை துளையிட்டு வளரும் பகுதியை பாதிக்கும். காய்ந்த, தொங்கும் கிளைகளே இதற்கான அறிகுறி. பின்னர் புழு காய்களை துளையிட்டு காய்களை வீணடிக்கும். சிகப்பு சிலந்தி புழு, சிறிய மற்றும் பெரிய சிலந்திகள் இலையின் அடிப்புறத்தை உணவாக உட்கொள்ளும். பாதிக்கப்பட்ட இலைகள் கொஞ்சம் கொஞ்சமாக வளைந்து, உதிர்ந்து போகும். ஃபோமோப்சிஸ் கருகல் நோய் மற்றும் காய் அழுகல் நோய் இலைகளில் வட்டவடிவிலான காப்பிநிற வட்டங்கள் தோன்றும். வெளிர்நிற உள்வாங்கிய புள்ளிகள் காய்களில் தோன்றும். இது கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி முழு காயிலும் பரவும். காயின் உட்புறம் அழுகி விடும். சிற்றிலை நோய் (குருட்டுச்செடி நோய்) இலைகள் சிறியதாகி இலைத்தண்டு சின்னதாகி கனுக்கிடை தண்டுகள் சிறுத்து, இலைகள் அகலம் கம்மியாகி, மென்மையாகவும், மஞ்சளாகவும் காணப்படும். செடி புதரை போல் காட்சியளிக்கும். இதில் காய்ப்பு இருக்காது. சிகிலீரோஷ்யானா கருகல் நோய் கிளைகள் கீழ்வாட்டமாக முக்கிய தண்டினை நோக்கி வளைந்து வரும். தாக்கம் அதிகமாகும் போது இனைப்புகளில் பூசனம் கானப்படும். கடைசியில் முழு செடியும் வாடிவிடும். வேர் முடிச்சி நூற்புழு வேர் பகுதியில் முடிச்சிகள் காணப்படும். செடிகுள்ளமாக காணப்படும். பாதிக்கப்பட்ட நிலத்தில், ஒருசில இடங்களில் மட்டும் செடிகள் அடர்ந்தது குள்ளமாக காணப்படும். ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக யுக்திகள் நாற்றங்கால் விதைத்தல் எப்போதும் நிலப்பரப்பிலிருந்து 10செமி உயரமுள்ள மேட்டுபாத்தி நாற்றாங்காலிலே விதைக்கவும். இதனால் நிர் சரியாக வடிவதால் நாற்றழுகல் வராமல் பாதுகாக்கப்படும் ஜுன் மாதத்தில், மூன்று வாரங்களுக்கு நாற்று பாத்தியை 45 காஜ் (0.45மி.மி மொத்தமுடைய பாலீதீன் ஷீட் கொண்டு மூடிவைக்க வேண்டும். இதனால் மணல் வெப்பமூட்டப்பட்டு, மணல் சார்ந்த நோய், பாக்டீரியா வாடல் நோய் மற்றும் நூற்புழு ஆகியவற்றை கட்டுப்படுத்தும். இருப்பினும் வெப்பமூட்டப்படும் போது போதுமான ஈரப்பதம் இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும் . 3 கிலோ பண்னை தொழுவுரத்துடன், பூஞ்சானின் எதிரியான ட்ரைகோடெர்மாவை 250 கிராம் கலந்து 7 நாட்கள் வைக்க வேண்டும். இதனை பின்னர் 3 சதுர மீட்டர் நாற்றாங்கால் படுக்கையில் கலக்கவும். F1-321, போன்ற வீரிய இரக விதைகளை ஜூலை முதல் வாரத்தில் விதைக்கலாம். விதைப்பதற்கு முன் விதைகளை, ஒரு கிலோ விதைக்கு, 4 கிராம் டைக்கோடெர்மா பயன்படுத்தி விதை நேர்த்தி செய்ய வேண்டும். களைகள் அவ்வப்போது எடுக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நாற்று மற்றும் வேண்டாத நாற்று ஆகியவற்றை நீக்க வேண்டும். நடவு செய்யப்பட்ட பயிர் புழுக்களை தின்னும் பறவைகள் நிற்பதற்காக ஒரு ஏக்டருக்கு, 10 பறவை நிற்கும் குச்சிகளை வைக்க வேண்டும். தத்து பூச்சி, அசுவனி மற்றும் வெள்ளை ஈ போன்றவற்றை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு 2-3 டெல்டா மற்றும் மஞ்சள் ஒட்டும் பொறியை வைக்க வேண்டும். உறிஞ்சும் பூச்சிகளுக்கு எதிராக, இரண்டிலிருந்து மூன்று 5% வேப்பங்கொட்டை கரைசலை தெளிக்க வேண்டும். வேப்பங்கொட்டை கரைசலை தெளிப்பதன் மூலம், துளைப்பான் பாதிப்பையும் குறைக்க முடியும். வேப்ப எண்ணெய் (2%) கரைசல் அளிப்பதன் மூலம் துளைப்பான் பாதிப்பை குறைக்கலாம். இலை தத்து பூச்சி மற்றும் ஏனைய உறிஞ்சும் பூச்சின் எண்ணிக்கை பொருளாதார சேதத்தை உண்டாக்கும். அளவுக்கு மேல் இருப்பின், ஒரு ஹெக்டருக்கு 150 மில்லி, இமிடாகோலோபிரிட் 17.8 SL தெளிக்க வேண்டும். தண்டு மற்றும் காய் துளைப்பான் (Leucinodes orbonalis) மொத்தமாக பிடிப்பதற்கு ஒரு எக்டருக்கு 5 என்ற வீதத்தில் இனக்கவர்ச்சி பொறி வைக்க வேண்டும். 15-20 நாள் இடைவெயியில் கவரும் பொருளை (லூர்) மாற்ற வேண்டும். தண்டு மற்றும் காய் துளைப்பானை கட்டுப்படுத்த, வார இடைவெளியில், 4-5 முறை முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா பிரசிலியன்சிலை 1-1.5 இலட்சம்/ஹெக்ட்ர் என்ற அளவில் வெளியிட வேண்டும். நூற்புழு மற்றும் துளைப்பான் சேதத்தை கட்டுப்படுத்த, செடிகளின் வரிசையில், ஒரு ஹெக்டருக்கு 250 கிலோ வேப்பம்புண்ணாக்கை (இரண்டு தடவையாக- நட்ட 25 மற்றும் 60 நாட்கள் கழித்து) மண்ணில் இட வேண்டும். காற்று வேகமாக அடிக்கும் போதோ அல்லது வெப்பம் 300 செல்சியசிற்கு மேல் இருக்கும் போது, வேப்பம் புண்ணாக்கு அளிக்க கூடாது. துளைப்பானால் பாதிக்கப்பட்ட தண்டுகளை மற்றும் காய்களை சேகரித்து, அழிப்பதன் மூலமும் துளைப்பானை கட்டுப்படுத்தலாம். துளைப்பானின் பாதிப்பு பொருளாதார சேத நிலையை (5% பாதிப்பு) கடக்கும் நிலையில் பின்வருவனவற்றை அடிக்கலாம். சைபர் மெத்திரின் 25 EC - 200 கிராம் a.i/ எக்டர் (0.0005%) கார்பரில் 50 WP - 3 கிராம்/ஒரு லிட்டர் நீரில் திரும்ப திரும்ப கத்திரி பயிரிடுவதலாலும், துளைப்பான் பாதிப்பு அதிகம் இருக்கலாம். எனவே கத்திரி குடும்பத்தில் சேராத பயிர்கொண்டு, பயிர் சுழற்சியை மேற்கொள்ளலாம். ஹட்டா வண்டின் முட்டைகள், புழுக்கள் மற்றும் வண்டுகளை அவ்வப்போது முறையாக சேகரித்து அழிக்க வேண்டும். சரியான இடைவெளியில் சிற்றிலை நோயினால் பாதிக்கப்பட்ட செடிகளை நீக்க வேண்டும். பாக்டிரியா வாடல் நோயைக் கட்டுப்படுத்த முறையாக பசுந்தாள் உரம், பாலீதீனால் முடாக்கு மற்றும் பிளிசிங் பவுடர் மண்ணில் இடலாம். செய்யக்கூடியது மற்றும் கூடாதது செய்யக்கூடியது செய்யக்கூடாதது சரியான காலத்தில் விதைப்பது வயல் சுகாதாரம் புதிதாக தயார் செய்யப்பட்ட வேப்ப கொட்டை கரைசலை (NSKE) உபயோகிக்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டும் பூச்சி கொல்லிகளை உபயோகிக்க வேண்டும் உபயோகிப்பதற்கு முன்னர் கத்திரி காய்களை கழுவ வேண்டும் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட பூச்சி கொல்லிகளை அதிகம் உபயோகிக்க கூடாது ஒரே பூச்சி கொல்லியை திரும்ப திரும்ப அடிக்க கூடாது பூச்சி கொல்லிகளை கலந்து அடிக்கக்கூடாது மோனோகுரோட்டோபாஸ் போன்ற அதிக பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சி கொல்லிகள் உபயோகிக்க கூடாது அறுவடைக்கு முன் பூச்சிகொல்லியை அடிக்க கூடாது பூச்சிகொல்லி அடித்து, 3-4 தினங்களுக்குள் காய்களை திண்ணக்கூடாது. மூலம்: தேசிய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்னம மையம்