களை எடுத்தல் மற்றும் இடை உழவு முறைகள்

குறிப்பிட்ட கால இடைவெளிகளில் களை எடுத்து தென்னங்குழிகளை சுத்தமாக வைக்க வேண்டும்.

நிலப்போர்வைகளை தென்னங்கன்றின் கழுத்துப் பகுதியில் நீக்க வேண்டும். இக்கன்று மரமாக வளர்ந்தவுடன் குழிகளை பக்கவாட்டில் உள்ள மண்ணை வைத்து நிரப்ப வேண்டாம்.

முறையான இடை உழவு முறைகளின் மூலம் களைகளை கட்டுப்படுத்தி அக்களைகளையே நிலப்போர்வையாக பயன்படுத்தலாம். சுற்றுப்புறச் சூழலுக்கேற்ற வகையில் களைகளை கட்டுப்படுத்த மற்றும் நிலப் போர்வையாக அவற்றை பயன்படுத்த உழவு முறைகளை முறையே உழுதல், தோண்டுதல், துார்வாருதல், மண் குவித்தல் போன்றவற்றில் ஏதேனும் ஒரு முறையை கையாளலாம்.

மரங்களுக்கிடையேயுள்ள இடைவெளியானது வருடத்திற்கு இரு முறை ஜூன் - ஜூலை மற்றும் டிசம்பர் - ஜனவரி மாதங்களில் உழவு செய்யப்படுகிறது.

செம்புறை மண், மணல் மற்றும் மணல் கலந்த பசலை மண் பகுதிகளில் இரண்டு உழவுகள் அல்லது இரண்டு கொத்துகள் முறையே மே - ஜூன் மற்றும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் ஜனவரி மாதத்தில் தூர்வாருதல் பணியை மேற்கொள்ள வேண்டும்

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்