புதிய கிசான் கடன் அட்டை

குறிக்கோள்
விவசாயிகளுக்கு முதலீடு மற்றும் கடன் தேவைகளை பூர்த்தி செய்தல்
தகுதி
விவசாயிகள் மற்றும் எதிர் காலத்தில் விவசாயிகளாக வரப்போகும் நபர்கள்
தேவை
முதலீட்டுக் கடன் தேவைகள் மற்றும் இதர துறைகள், பயிர்களுக்கு சுழல் கடன் நிதி மற்றும் இதர துறைகள்.
தொகை
அதிகபட்சமாக ரூ. 50,000 /-

கடன் அட்டை கே.சி.சி.

குறிக்கோள்

இத்திட்டம் விவசாயிகளுக்கு கடன் உதவிகளை தேவையான நேரத்திற்கு பயிர் செய்வதற்கும் மற்றும் பண்ணை சாரா வேலைகள் செய்வதற்கும் உதவுகிறது.

கடன் தொகை உபயோகப்படுத்துவதில் ஒரு இணக்கத்தை ஏற்படுத்த உதவுகிறது.

தகுதி
நல்ல பதிவுகள் உள்ள விவசாயிகள் / படிக்கத் தெரியாத விவசாயிகள்
தேவை
பயிர் / அறுவடை மற்றும் இயந்திரங்களை நிர்வகித்தல்
தொகை

குறைந்தபட்சம் ரூ. 2000 அதிகபட்சத் தொகை இல்லை.

பயிர்களுக்கு 10 சதவிகிதம் மேல் நிதி செலவு.

கிசான் பச்சை அட்டை

குறிக்கோள்

வளர்ச்சிக்கு நீண்ட கால கடன் தேவைகள் மற்றும் விவசாயிகளின் உட்கொள்ளும் தேவைகளுக்கும்.
தகுதிகள்

கடந்த மூன்று வருடங்களாக கடனை சரியாக திருப்பிச் செலுத்தும் விவசாயிகள்.
தேவை

வளர்ச்சிக்கு நீண்ட கால கடன் தேவைகள் மற்றும் விவசாயிகளின் உட்கொள்ளும் தேவைகள்.
தொகை

ஆண்டு வருமானத்தில் 5 மடங்கு அல்லது அடகு வைத்த நிலத்தில் 50 சதவிகிதம் அல்லது 100 சதவிகிதம் சொத்துக்கள் - அதிகபட்சமாக 5 இலட்சம்.

விவசாய பொதுத் தேவைகளுக்கான கடன் அட்டை

குறிக்கோள்

விவசாயம் சார்ந்த முதலீடுகள் மற்றும் தேவைகளுக்கான நிதித் தேவைகளை வழங்குதல்.
தகுதி

கிராமப்புற மற்றம் நகர்ப்புற பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள்.
தேவை

நியாயமான தேவைகளுக்கு.
தொகை

அதிகபட்சமாக ரூ. 25000

விவசாய மருந்தகம்

குறிக்கோள்

அரசு வேளாண் விரிவாக்கத் துறையின் முயற்சிகளுக்கு உதவி செய்தல்.

தேவையான விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் சேவைகளை கிடைக்கப் பெறச் செய்தல்.

வேளாண் பட்டதாரிகளுக்கு வேளாண் துறையின் வளர்ந்து வரும் பகுதிகளில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருதல்.

தகுதி

வேளாண் பட்டதாரிகள், தோட்டக்கலை, கால்நடை, மீன் வளர்ப்பு, பால் பண்ணை, கோழிப் பண்ணை மற்றும் அதன் பிற துறைகளில் உள்ளவர்கள் இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.
தேவை

விவசாய மருந்தகம், வேளாண் இடுபொருட்களுக்கு விவசாய தொழில் நிலையம் மற்றும் விவசாயிகளுக்கான சேவைகள்.

மண் மற்றும் நீர் தரம் மற்றும் இடுபொருட்கள் ஆய்வுக்கூடம் (அட்டாமிக் அப்ஸார்ப்சன் ஸ்பெக்ரோமீட்டர்).

பூச்சி இருப்பு, ஆராய்தல் மற்றும் கட்டுப்படுத்தும் சேவைகள்.

வேளாண் இயந்திரங்கள் மற்றும் நீர்பாசனத் திட்டங்களான சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசன முறைகள் ஆகியவற்றை நிர்வகித்தல் மற்றும் பழுது பார்த்தல்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள மூன்று வேலைகளில் விவசாய நிலையங்கள் இணைத்து குழு நடவடிக்கை.

விதை மையச் செயலகம்

திசு வளர்ப்புக் கூடம், உயிர் உரங்கள், உயிர் பூச்சிக்கொல்லிகள், உயிர் முறை கட்டுப்பாடு முறைகள்

தேனீ வளர்ப்பு, தேன் மற்றும் அதன் சார்ந்த பொருட்களை பதப்படுத்தும் செயலகம்.

மீன் குஞ்சு வளர்ப்பு

கால்நடை ஆரோக்கியத்திற்கான காப்பீடு, கால்நடை பராமரிப்பு நிலையங்கள் மற்றும் சேவை நிலையம் அமைத்தல், மற்றும் உறைபனியில் விந்து திரவ நைட்ரஜனில் சேமிக்கும் வங்கி.

வேளாண் சார்ந்த இணையதளத்தின் மூலம் தகவல் தொழில்நுட்ப கியோஸ்கிஸ் - கிராமப்புறங்களில் ஏற்படுத்துதல்.

உணவு பதப்படுத்துதல் மற்றும் சோதனை நிலையம்

மதிப்பு கூட்டப்பட்ட நிலையங்கள்.

பண்ணைகளில் இருந்து குளிர் பதன தொடர் சங்கிலியை ஏற்படுத்துதல்.

பதப்படுத்தப்பட்டட வேளாண் பொருட்களுக்கு சில்லரை வர்த்தக நிலையங்களை ஏற்படுத்துதல்.

வேளாண் இடுபொருள் மற்றும் வெளியேற்றும் பொருட்களை கிராமப்புற சந்தையில் வியாபாரிகள் மூலம் விற்பனை செய்தல்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துறைகளில் பொருளாதார ரீதியில் சரிவர முற்பட்டால், அதை வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்து வங்கியின் ஒப்புதலுக்குக் கொடுக்கலாம்.
தொகை

தனி நபர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் மற்றும் 5 நபர் கொண்ட குழுவாக உள்ளவர்களுக்கு ரூ. 50 லட்சம்

விவசாயிகளுக்கு வண்டி

குறிக்கோள்

விவசாயிகளுக்கு ஸ்கூட்டர் , மோட்டார் சைக்கிள் வாங்க நிதியளித்தல்
தகுதி

குறைந்தபட்சம் 3 ஏக்கர் பாசன நிலம் அல்லது 5 ஏக்கர் வறண்ட நிலம் மற்றும் விவசாயிகள் வங்கியுடன் நல்ல தொடர்பு நிலையில் இருப்பின் அவர்களுக்கு வழங்கப்படும்.

தேவை

புதிய மொப்பட்/ஸ்கூட்டர்/மோட்டார் சைக்கிள்

தொகை

அதிகபட்சமாக ரூ.50,000

விவசாய நிலம்

குறிக்கோள்

சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு விவசாய நிலம் வாங்குவதற்கு நிதியளித்தல்

தகுதி

சிறு மற்றும் குறு விவசாயிகள் 5 ஏக்கர் பாசன வசதி இல்லாத நிலம் அல்லது 2.5 ஏக்கர் பாசன வசதியுடன் உள்ள நிலம் வாங்க மற்றும் பயிர் உற்பத்தியை நில உரிமையாளரிடம் பகிர்ந்து கொள்ளும் விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.

தேவை

கிராமத்தைச் சுற்றி 3 முதல் 5 கி.மீ சுற்றளவு உள்ள பகுதிகளில் நிலம் வாங்குவதற்கு கடன் வழங்கப்படும்.

தொகை

அதிகபட்சமாக ரூ.2 இலட்சம்

விவசாய தொழில் ஆலோசனை

இந்திய பொருளாதாரத்தில் அந்நிய முதலீடுகள் நுழைந்தவுடன், விவசாய மற்றும் அதன் துறைகளின் மதிப்பு உணரப்பட்டது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இதற்கு பல ஆலோசனை சேவைகளை அளித்துள்ளது. வேளாண் மற்றும் அதன் சார்ந்த தொழில்களில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதே இதன் குறிக்கோள்

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்