இந்தியாவில் பறவைக் காய்ச்சல்

மனிதர்களைப் போல் பறவைகளுக்கும் காய்ச்சல் வருகிறது. ஏவியன் புளு, ஏவியன் இன்புளுயென்சா, ஹச்-5-என்-1 வைரஸ் என பரவலாக அழைக்கப்படும் இந்த வைரஸ் நோய்க்கிருமி பறவைகளை, முக்கியமா கோழி மற்றும் வாத்துகளை தாக்குகிறது. எனினும், பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவி உடல் நலக்கேடுகளை உண்டு பண்ணலாம். 1997 -ல் ஹாங்காங்கில் பறவைக் காய்ச்சல் வைரஸ் ஹச்-5-என்-1, பறவையில் இருந்து மனிதனுக்கு பரவிய செய்தி முதன்முறையாக கண்டறியப்பட்டது. அன்றிலிருந்து இப்பறவைக் காய்ச்சல் வைரஸ் ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பரவி வருகிறது.

இந்தியாவில், மேற்கு வங்கத்தில், ஜனவரி மாதத்தில் இந்த வைரஸ் தாக்கியது. இவ்வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, நாடு முழுவதும் சுமார் 3.9 மில்லியனுக்கு மேலான கோழிக் குஞ்சுகளையும், வாத்துகளையும் அழித்துள்ளதாக உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 2ஆம் தேதிக்கு பின் எங்கும் நோய்த்தாக்கம் தென்படவில்லை என உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு தெரிவிக்கிறது. ஏவியன் இன்புளுயென்சா, பறவைகளையே பெரும்பாலும் தாக்குகிறது. ஆனால், ஹச்-5-என்-1 வைரஸ் 2003ஆம் ஆண்டிலிருந்து சுமார் 234 மனிதர்களை கொன்றுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

பறவைக் காய்ச்சல் பரவும் பொழுது, மனிதர்கள், நோய்வாய்ப்பட்ட பறவைகளுடன் இருந்தால் அவர்களும் நோய்வாய்ப்பட நேர்கிறது. நன்கு சமைக்காத கோழிக்கறியை உண்டாலோ அல்லது நோய் தாக்கப்பட்ட மனிதர்களுடன் இருந்தாலோ நோய் தொற்றிக் கொள்ளும். பறவைக்காய்ச்சல் தாக்கும் பொழுது, உடல் நலக்கேடு ஏற்படுவேதாடு அல்லாமல் இறக்கவும் நேரிடலாம். தற்பொழுது, இந்நோய்க்கு எந்த தடுப்பூசியும் இல்லை.

ஆதாரம்: www.nlm.nih.gov/