ஆயிரக்கணக்கில் கோழிகளை ஒரே இடத்தில் வளர்க்கும் போது நோய் எளிதில் பரவ வாய்ப்புள்ளது. எனவே ஒரு இலாபகரமான கோழிப்பண்ணைக்கு திட்டமிட்ட நோய்க் கட்டுப்பாடு முறை இன்றியமையாததாகிறது. அதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகள் உதவுகின்றன. நோய் கட்டுப்பாடு ஒரு புதிய கோழிகளை கொட்டகையினுள் விடுவதற்கு இரு வாரங்களுக்கு முன்பே கொட்டகையை சுத்தம் செய்து வைக்கவேண்டும். பழைய கோழியின் எச்சங்களை கூடிய சீக்கிரம் அகற்றிவிடவேண்டும். சுவர், மேல்கூரை போன்றவைகளையும் அவ்வப்போது சுத்தப்படுத்தவேண்டும். ஒரு நல்ல கிருமி நாசினிக் கொண்டு இவையனைத்தையும் சுத்தம் செய்தல் வேண்டும். பயன்படுத்தும் அனைத்துக் கருவிகளையும் கிருமி நாசினிக் கொண்டு சுத்தம் செய்து உலர வைத்த பின்பே உபயோகிக்கவேண்டும். ஒளி எதிரொளிப்பான் மற்றும் வளி உமிழும் விளக்குகளை அவ்வப்போது கண்காணித்துக் கொள்ளவேண்டும். பயனற்ற விளக்குகளை அகற்றி புதிய விளக்குகளைப் பொருத்தவேண்டும். எலி, நாய், பூனை போன்ற விலங்குகளை பண்ணைக்கருகே அண்ட விடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். பார்வையாளர்களை அதிகம் உள்ளே வராமல் தடுப்பது நன்று. இறந்து போன கோழிகளை உடனே தொலைவில் கொண்டு சென்று புதைத்து விடுதல் வேண்டும்ட. 1 சதவிகிதம் அம்மோனியாக் கரைசல் கொண்டு நீர் மற்றும் தீவனத் தொட்டிகளைத் தினமும் சுத்தப்படுத்த வேண்டும். உள்ளே செல்லும் பாதை அமைப்புகளை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கவேண்டும். பண்ணையைச் சுற்றிலும் நல்ல சுகாதாரமான முறையைக் கடைபிடிக்கவேண்டும். ஈரமானக் கூளங்களை உடனே நீக்கி புதிய கூளங்களை மாற்றவேண்டும். ஒவ்வொரு நாளும் கோழிகள் ஆரோக்கியமாக இருக்கின்றனவா, இல்லை சோர்ந்து ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை தீவனமிடும்போதும் மற்றும் உள்ளே சென்று வரும் போதும் கவனிக்கவேண்டும். நல்ல உற்பத்தி நேரத்திலும் மற்றும் இதர அட்டவணை நேரப்படியும் குடற்புழுநீக்க மருந்து அளிக்கவேண்டும். கேள்வி பதில் 1. கோழிகளில் இறப்பிற்கான பொதுவான காரணங்கள் யாவை? சுகாதாரமற்ற கோழி பண்ணை பராமரிப்பு முறையாக இறந்த கோழிகளை அப்புறப்படுத்தாமல் இருத்தல் முறையற்ற கோடைக்காலப் பராமரிப்பு இதர காரணிகள் 2. கோழிகள் இறப்பிற்கான இதர காரணிகள் யாவை? கோழிகள் ஒன்றை ஒன்று கொத்திக்கொள்ளுதல் முடக்குவாதம் கொழுப்பு செரிந்த ஈரல் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு நோய் கூண்டுகோழி வாதம் உடலின் அமிலகாரச் சமச்சீரின்மை 3. இறந்த கோழிகளை அப்புறப்படுத்தும் முறைகள் யாவை? புதைத்தல் காற்றுபுகாக் குழியில் சிதைத்தல் எரித்து சாம்பலாக்குதல் மலைச்சரிவுகளில் அப்புறப்படுத்துதல் மறுசுழற்சி செய்தல் ஆதாரம்: இந்திய கோழிப் பண்ணை நிறுவன ஆண்டு மலர்