எண்ணெய் நீக்கப்பட்ட சால் விதைத்தூள்

சால் விதையிலிருந்து எண்ணெய் எடுக்கும் போது கிடைக்கும் உபபொருட்களே இத்தூள்கள். இவை பார்ப்பதற்கு தானியங்களைப் போல் இருக்கும். இதில் டேனின் அதிகம் இருப்பதால் குறைந்தளவே தீவனத்தில் பயன்படுத்த வேண்டும்.

மரவள்ளித்தூள்

இது மரவள்ளிக் கிழங்கிலிருந்து பெறப்படுகிறது. இதில் ஆற்றல் அதிகம். சில இரகங்களில் சைனோஜென்க் என்னும் பொருட்கள் உள்ளன. கிழங்கை சிறிது நேரம் வெயிலில் உலர்த்தி, கூடு செய்வதன் மூலம் இதைப் போக்கலாம்.

உலர்த்திய கோழிக்கழிவுகள்

கலப்படமற்ற கூண்டு முறையில் வளர்க்கப்பட்ட கோழிகளின் கழிவுகளில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் 10-12 சதவிகிதம் தூய புரதம் உள்ளது. இது சரியாகச் சுத்தம் செய்யப்பட்டால் தீவனக் கலவையில் 10 சதவிகிதம் வரை சேர்த்துக் கொள்ளலாம்.

கரும்புச்சக்கை

தானிய வகைகளுக்குப் பதில் இவை 45 சதவிகிதம் வரை பயன்படுத்தலாம். இதில் தாதுக்கள் அதிகம் இருப்பதால் அதிக அளவு கொடுத்தால் கழிவுகள் நீராக வெளியேற வாய்ப்புள்ளது.

சிறுதானியங்கள்

சாமை, பனிவரகு போன்ற சிறுதானியங்கள் மஞ்சள் சோளத்திற்குப் பதில் 20 சதவிகிதம் வரை பயன்படுத்தலாம். ராகி, கம்பு, சோளம் போன்றவையும் தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படுகின்றது.

ஆதாரம்: இந்திய கோழிப் பண்ணை நிறுவன ஆண்டு மலர்