தேனீ

விவசாயிகள், கூடுதல் வருமானத்திற்கு, விவசாயம் சார்ந்த தேனீ வளர்ப்பை, கையாளலாம்.

தேனீ’க்கள், மலர்த்தேனை சேகரித்து, தேனாக மாற்றி, அதை தேன் கூட்டில் சேமிக்கும். நீண்ட காலமாக, தேனை காட்டிலிருந்து சேகரிக்கும் வழக்கம் உண்டு. தேன் மற்றும் அதை சார்ந்த பொருட்களின் உபயோகம் அதிகரித்து வருவதால், தேனீ வளர்ப்பு ஒரு தொழிலாக முக்கியமடைந்துள்ளது. தேனீ வளர்ப்பில், தேன் மற்றும் மெழுகு, முக்கியமான வெளீயீட்டு பொருள்கள் ஆகும்

வருமானம் ஈட்டும் செயலான தேனீ வளர்ப்பின், சிறப்பம்சங்கள்

தேனீ வளர்ப்பிற்கு, குறைந்த நேரம், பணம் மற்றும் கட்டமைப்பு மூலதனமே தேவைப்படும்

குறைந்த மதிப்புள்ள விவசாய நிலங்களில், தேன் மற்றும் மெழுகினை தயாரித்திடலாம்.

தேனீ வளர்ப்பு, வேறு எந்த விவசாய செயலுக்கான வளங்களுடனும் போட்டியிடாது.

தேனீ வளர்ப்பு, சுற்று சூழலை மேம்படுத்த உதவும். பலவிதமான பூக்களுக்கு மகரந்த சேர்க்கைக்கு உதவுவதால் இந்த பயிர்களில், மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

தேன், ஒரு அதிக ஊட்டச்சத்து நிறைந்த விரும்பத்தக்க உணவாகும். முந்தைய தேனீ சேகரிப்பு முறையில் தேன் கூடுகளை அழிப்பதால் பலவிதமான தேனீக்கள் அழிக்கப்பட்டு வந்தது. ஆனால் தேனீ வளர்ப்பை கையாளுவதன் மூலம், இதை நாம் தடுக்கலாம்.

தேனீ வளர்ப்பு, தனி நபராலோ அல்லது குழுவாகவோ தொடங்கப்படலாம்.

தேன் மற்றும் மெழுகிற்கு சந்தையில் தேவை இருக்கிறது.

தேனீ வளர்ப்பதற்கு தேவையான உபகரணங்கள்

தேனீக்களை வீட்டிலோ அல்லது பண்ணைகளிலோ, பெட்டிகளில் வளர்க்கலாம்.

கூடு : இது, ஒரு நீளமான சாதாரண பெட்டியாகும். இதன் மேல் வாட்டில், பல அடுக்குகளை கொண்டுள்ளது. தோராயமாக 100 செ.மீ நீளம், 45 செ.மீ அகலம் மற்றும் 25 செ.மீ உயரத்தை உடையது. இந்த பெட்டியின் மொத்தம் 2 செ.மீ ஆகும். தேனீக்கள் உள்ளே நுழைவற்கு 1 செ.மீ அகலமுடைய ஓட்டைகளை கொண்டுள்ளது. மேல் அடுக்குகள் அடர்ந்த தேன் கூட்டை அமைப்பதற்கு தேவையான மொத்தத்தை பெற்று இருக்க வேண்டும். சுமார் 1.5 செ.மீ மொத்தம் இதற்கு போதுமானது. தேனீக்கள் தேன் கூட்டை கட்ட ஏதுவாக, அடுக்குகளுக்கிடையேயான இடைவேளி 3.3 செ.மீ இருத்தல் நல்லது.

புகைப்பான் : இது தேனீ வளர்ப்பில், இரண்டாவது முக்கிய உபகரணம் ஆகும். இதை, சிறிய தகரடப்பாவில் இருந்து செய்து கொள்ளலாம். இதனை தேனீக்களை கட்டுபடுத்துவதற்கும் மற்றும் தேனீக்கள் நம்மை கடிக்காமல் இருப்பதற்கும் பயன்படுத்தலாம்.

துணி : நாம் வேலை செய்யும் பொழுது, நம் கண்கள் மற்றும் மூக்குகளை பாதுகாக்க உதவும்.

கத்தி : மேல் அடுக்குகளை தனிப்படுத்துவதற்கும் தேன் கூடுகளை பிரிக்கவும் பயன்படுத்தலாம்.

இறக்கை : தேனீக்களை கூட்டிலிருந்து அப்புறபடுத்துவதற்கு

இராணி தேனீ பிரிப்பான்

தீப்பெட்டி

தேனீக்களின் வகைகள்

இந்தியாவில் உள்ள தேனீக்களின் வகைகள்:

மலை தேனீ (ஏபிஸ் டார்சேடா) : இவை சிறந்த தேன் சேகரிக்கும் வகைகள். சராசரியாக, ஒரு காலனிக்கு 50-80 கிலோ தேன் கிடைக்கும்.

சிறு தேனீ (ஏபிஸ்ப்லோரியா) : இவை ஓரு காலனியில், 200 - 900 கிராம் தேனை சேகரிக்கும் வகைகள்

இந்தியத் தேனீ (ஏபிஸ் செரானா இன்டிகா): இவை சராசரியாக தேனை சேகரிக்கும் வகை. ஒரு வருடத்தில், தலா ஒரு காலனியில், 6 -8 கிலோ தேனை சேகரிக்கும்.

ஐரோப்பா தேனீ (ஏபிஸ் மெல்லிபஃரா) : சராசரியாக ஒரு காலனிக்கு  25-40 கிலோ தேனை சேகரிக்கும்.

கொடுக்கற்ற தேனீ (ட்ரைகோனா இரிடிபெனிஸ்): மேலே கொடுக்கப்பட்டுள்ளவைகள் இல்லாமல், கேரளாவில் கொடுக்கற்ற தேனீ வகைகள் உள்ளன. இவைகளுக்கு, கொடுக்குகள் சரியான முறையில் வளர்ந்து இருக்காது. மகரந்த சேர்க்கையில் அதிக திறன் கொண்டவைகள். இவைகள் ஒரு வருடத்திற்கு, 300-400 கிராம் தேனை சேகரிக்கும்.

தேன்கூடுகளை நிறுவும் முறை

தேன் வளர்க்கும் இடமானது, நல்ல வடிகால் வசதியையுடைய திறந்த இடங்களாகவும், குறிப்பாக பழத்தோட்டத்திற்கு அருகாமையிலும், மேலும் நிறைய மதுரம், மகரந்தம் மற்றும் நீர் கிடைக்கக்கூடிய இடமாகவும் இருக்க வேண்டும்.

சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு மிக அவசியமானதாகும். எனெனில் அப்பொழுதுதான், மிதமான வெப்பத்தை கொடுக்க இயலும்.

தேன் கூட்டிற்குள் எறும்பு ஏருவதை தடுக்க தேன் கூட்டின் கால்கள் தண்ணீருள்ள சிறு பாத்திரத்தில் நனையுமாரு இருத்தல் வேண்டும்.

வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்கும் வகையில் தேனீக்களின் காலனிகளை, கிழக்கு திசை நோக்கி அமையுமாரு தேன் கூட்டை அமைக்க வேண்டும்.

தேனீக்களின் காலனிகளை, கால்நடைகள், ஏனைய விலங்குகள் , பரபரப்பான வீதிகள் மற்றும் தெரு விளக்குகள் இவைகளிலிருந்து தூரத்தில் அமைக்க வேண்டும்.

தேனீ காலனிகளை அமைக்கும் முறை

தேனீ காலனிகளை அமைக்க இயற்கையான கூட்டில் உள்ள தேனீக்களை மாற்றவோ அல்லது வழி செல்லும் தேனீக்களை கவரவோ செய்ய வேண்டும்.

இதற்கு முன்பு, பெட்டிகளை பழைய கூட்டின் உதிரிகளை கொண்டோ அல்லது தேனீ மெழுகினைக் கொண்டோ தடவினால் பெட்டியானது தேனீக்களுக்கு பழக்கப்பட்ட வாசனையை உடையதாக அமைக்கப்படும். முடிந்தால், இராணீ தேனீயை பிடித்து கூட்டினுள் வைத்தால், இது ஏனைய தேனீக்களை கவர்ந்து இழுக்கும்.

சில வாரங்களுக்கு பாதி கப் சுடுநீரில் பாதி கப் சர்க்கரையை கலந்து தேனிக்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் பெட்டியுனுள், வேகமாக கூட்டினை கட்ட இயலும்.

அதிக நெரிசலை தவிர்க்கவும்.

காலனி நிர்வாகம்

தேன் அதிகமாக கிடைக்கும் காலங்களில், வாரம் ஓரு முறை அதிகாலை வேளையில், பெட்டிகளை கண்காணிப்பது அவசியம்.

பெட்டியினை, கூரை, உற்பத்தி அறை, தளம் என்ற முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.

வலிமையான ராணீ தேனீ, உற்பத்தி மேம்பாடு, தேன் மற்றும் மகரந்த சேகரிப்பு, ராணீ தேனீயின் அறை, தேனீக்களின் வலிமை, மற்றும் ஆண் தேனீயின் வளர்ச்சி ஆகியவற்றை கண்காணிக்க தேனீக்களின் காலனிகளை தவறாமல் சோதிப்பது அவசியம்.

கீழே உள்ள, தேனீயின் எதிரிகளின் தாக்குதல் இருக்கிறதா, என்று சோதிக்க வேண்டும்.

- மெழுகு மாத் : பெட்டியிலுள்ள புழு, பட்டு வலைகளை நீக்க வேண்டும்.
- மெழுகு வண்டு : வளர்ந்த வண்டுகளை சாகடிக்க வேண்டும்.
- மைட் : புதிதாக தயாரித்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசலில் நனைக்கப்பட்ட பஞ்சுத் துண்டை கொண்டு, பிரேம் மற்றும் தரைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

தேன் குறைவாக கிடைக்கும் காலத்தில் நிர்வாகம்

தேன் கூடு அமைக்க தேவைப்படும் அடிப்படை தகட்டை அகற்றி, இளம் வளமான தேனீக்களை உற்பத்தி அறையில் கூட்டாக வைக்கவும்

தேவைப்பட்டால் தடுப்பு போர்டுகளை பயன்படுத்தவும்

ராணி தேனீ மற்றும் ஆண் தேனீ செல்கள் தென்பட்டால் அழிக்கவும்

ஒரு காலனிக்கு, 200 கிராம் என்ற விதத்தில் சர்க்கரை கரைசல் (1:1) இந்திய தேனீக்களுக்கு வாரம் ஒரு முறை அளிக்கவும்

எல்லா காலனிகளுக்கும், ஒரே சமயத்தில் அளிப்பதன் மூலம் திருட்டை தவிர்க்கலாம்.

தேன் நிறைய கிடைக்கும் காலங்களில் நிர்வாகம்

இக்காலத்திற்கு முன்னரே, காலனிகளை தகுந்த வலிமையுடன் வைத்து இருக்க வேண்டும்

தேன் கூடு அமைக்க தேவைப்படும் முதல் அடிப்படை தகடு மற்றும் இளம் தேனீக்கள் இருக்கும் அறைகளிடேயே தகுந்த இடைவெளி அளிக்க வேண்டும்

இளம் தேனீக்கள் இருக்கும் அறையிலேயே ராணி தேனீ இருக்குமாரு, தேன் கூடு அமைக்க தேவைப்படும் முதல் அடிப்படை தகடு மற்றும் இளம் தேனீக்கள் இருக்கும் அறைக்கிடையே இராணி தேனீ பிரிப்பான் தாளை இடவும்

காலனி வாரம் ஒரு முறை சோதித்து, தேன் அதிகமுள்ள பிரேம்களை தேன் கூடு அமைக்க தேவைப்படும் அடிப்படை தகட்டின் பக்கவாட்டிற்கு, எடுத்து செல்ல வேண்டும். எந்த ஒரு பிரேமில், 3\4 பாகம் தேன், 1\4 பாகம் மூடப்பட்ட அறைகள், இருக்கிறதோ அதனை உற்பத்தி அறையிலிருந்து வெளியே எடுத்துவிட்டு அந்த இடங்களில் காலியான பிரேம்களை இட வேண்டும்

எந்த ஒரு கூடுகள் முழுவதுமாக மூடப்பட்டு அல்லது 2\3 மூடப்பட்டு இருக்கிறதோ, அவைகளை தேன் எடுப்பதற்கு எடுத்து கொள்ளலாம்

தேன் அறுவடை

எந்த பகுதிகள் அறுவடைக்கு தயாரோ, அந்த பகுதிகளுக்கு புகையை அடித்து, தேனீக்களை விரட்டி அறுவடை செய்ய வேண்டும்.

பொதுவாக, இரண்டு முக்கிய பூக்கும் காலங்களான அக்டோபர்/நவம்பர் மற்றும் பிப்ரவரி - ஜூன் மாதங்களிலும், அதற்கு சற்றே பின்பு வரும் மாதங்களிலும் அறுவடை செய்யலாம்

அறுவடைக்கு தயரான கூடுகள், வெளிர் நிறத்தில் தேன் நிரப்பப்பட்டு இருக்கும். பாதிக்கும் மேல் அறைகள் மெழுகினால் மூடப்பட்டு இருக்கும்.

மூலம்: vuatkerala.org