திட்டத்தின் பெயர்

மீனவர்களிடமுள்ள மீன்கலங்களை முறையாக பதிவு செய்திருந்தால் அதனை மேம்படுத்திக் கொள்வதற்கு மானியம் பெறலாம். இதன் மூலம் வருமான வாய்ப்பை தொடர்ந்து உயர்த்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

உதவி பெறுவதற்குரிய முறைகள் / தகுதிகள்

மீனவர்கள் தங்கள் மீனபிடிக் கலன்களை மீன்துறையில் பதிவு செய்து, உரிமம் பெற்றிருத்தல் வேண்டும்.

கூட்டுறவு சங்க உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

வெளிப் பொருத்தம் (out board) இயந்திரத்தின் வலையில் 50 விழுக்காட்டிற்கு மிகாமல் ரூ.30,000/- மானியம் வழங்கப்படும்.

ஏற்கனவே இதே நோக்கத்திற்கு மானியம் பெற்றிருந்தால் மீண்டும் மானியம் பெற நான்கு ஆண்டுகள் இடைவெளி இருத்தல் வேண்டும்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் மற்றும் அலுவலகங்கள்

சம்பந்தப்பட்ட மாவட்ட மீன் வளத்துறை உதவி இயக்குநர் (கடல்வளம்)

ஆதாரம்: தமிழ்நாடு மீன்வளத்துறை