மீன் பிடிப்பு வலைகள்

நிறைய மீன்களை பிடிக்க மற்றும் நிறைய மீன்கள் தேவைப்படும் போது தீவிர அல்லது நேரடி மீன்பிடிப்பு முறை ஏற்றதாகும். ‘தீவிர’ என்றால் மனிதன், விலங்கு மற்றும் இயந்திர வலு மூலம் மீன் வலைகளை நேரடியாக தண்ணீரில் வீசி மீன் பிடிப்பது என்றாகும். பல வேலைகளில் ‘மிதமான’ மீன் பிடிப்பு வலைகளை விட (செவுள் வலை மற்றும் பொறி) தீவிர மீன்பிடிப்பு வலைகளின் ஆற்றல் திறன் அதிகமானது.

கோல் இழு வலை

இது ஒருவகையான இழு வலை, வலையின் வாயிலை ஒரு கோலின் ஒவ்வொரு முனையிலும் சேர்த்துவிட வேண்டும். அதை கடலின் மேல் போகும் படி செய்ய வேண்டும். இழு வலை பொருந்தியதும் அதனுடன் அடிமட்டச் சங்கிலி மற்றும் கனச்சங்கிலியையும் ஆழத்திற்கு ஏற்றமாதிரி பொருத்தினால் இன்னும் அதிக மீன்கள் கிடைக்கும். இந்த வலை இழுவையினால் மீன்களை கீழிருந்து மேலே இழுத்து வலையிள் பிடிபடுகிறது. நவீன கோல் இழு வலையின் அளவு 4-12செ.மீ மற்றும் கோல் நீளம் இவை அனைத்தும் உபயோகிக்கும் இயந்திரத்திற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.

அடிமட்ட பலகை இழு வலை

அடிமட்ட பலகை (அல்லது) கீழ் இழுவலை மிகவும் பெரியது. இது கடல்மேல் இழுத்து செல்லும் வலை. வலையின் முன் பக்கம் இறகை போன்ற ஆட்டர் பலகையில் பொருந்தியுள்ளது. மீன்கள் கூட்டமாக பலகையின் நடுவில் வரும் அதன்பின் வலைக்குள் மாட்டிக்கொள்ளும். கடைசியாக பொனல் மூலம் அனைத்து மீன்களையும் எடுத்துக்கொள்ளலாம்.

மிதவை இழுவலை

கடல் மேலிருந்து கடல் அடிமட்டம் வரை உள்ள ஆழத்தில் வரிப்பது மிதவை இழுவலை ஆகும். நீந்தும் மீன், மீன்திரளிளுள்ள மீன் மற்றும் கடற்பரப்பு மீன்களை பிடிக்க உதவுது மிதவை இழுவலை. அதாவது கொடுவா, கானாங்கத்தி, கெரிங் ஆகிய மீன்களை பிடிக்க மிதவை இழுவலை பயன்படுகிறது. வலையின் அளவுக்கு ஏற்றது போல் மீன்களை பிடிக்கலாம் பிடித்த மீன்களை பம்பு உதவியுடன் படகுக்கு இழுத்துக்கலாம். நடுகடலில் செல்லும்போது இழு பலகைகளை மாற்றிக்கொள்ள வேண்டும். வலையின் நீலம் 1/2 மையில் தூரம், அகலம் 1/4 மையில் என இருந்தால் நீரைய மீன்கள் கிடைக்கும்.

சூழ் வலை

சூழ்வலை ஒருவகையான கடல் அடிமட்ட மீன் பிடிப்பு வலையாகும். இதல் காட் மீன், ஆழ்கடல் மீன் மற்றும் தட்டை மீன் இனங்கள் போன்ற வகையான மீன்களை பிடிக்கலாம். இந்த வலையில் கயிறு சுற்றியும் இருக்க நடுவில் வலையிருக்கும். ஒரு வலைப்பிடிப்பில் மீன்கள் அனைத்தும் பிடிப்படும். இது ஒரு எளிமையான மீன்பிடிபபு வலையாகும், மற்ற வலைகளை விட இந்த வலை மீன்பிடிப்பிக்கு குறைந்த எரிபொருளே தேவைப்படும் மற்றும் தரமுள்ள மீன்கள் உற்பத்தியாகும்.

சுருக்குவலை

சுற்றியுள்ள மீன் கூட்டங்களை பெரிய மீன் வலையினால் பிடித்து வலையை சுருக்கிக் கொள்ளும் இந்த சுருக்குவலை. இந்த வலையின் மூலம் நிறைய மீன்கள் பிடிப்படும் சூரை மீன்கள், கானாங்கத்தி என பெரிய வகையான மீன்கள் பிடிப்படும்.

ஓடு கயிறு வலை

கயிறு நுனியில் கொக்கி வைத்து மீன் களை கவருதல் ஓடு கயிறு வலையாகும். இந்த முறை மீன் பிடிப்பை பயன்படுத்தி அதிக தரமுள்ள மிதவை மீன்களை பிடிக்கலாம். (எ.கா) கெண்டை, உழி மற்றும் சால்மோன் மீன்கள்.

குத்தீட்டி

இந்த முறையான மீன்பிடிப்பு உயர்ந்த வகையான மீன்களை பிடிக்க உதவும். அதாவது சுவார்ட் மீன் மற்றும் சூரை மீன்கள். குத்தீட்டி குறிப்பிட்ட மீன் வளர்ப்பில் மட்டும் பயன்படுத்தலாம். முன்னதாகவே மீன்னின் அளவு, வயது என தெரிந்து அதன் பின் பிடிக்க வேண்டும்.

மிதமான மீன் பிடிப்பு வலைகள்

செவுள் (அ) பொருத்தப்பட்ட வலைகள்

செவுள் வலை என்பது வலையை கடல் அடிமட்டம் வரை அல்லது கடல் மத்தியில் விரித்துவிடுவார்கள். அதில் மீன்கள் மாட்டிக் கொள்ளும். இது ஒரு பலமையான மீன்பிடிப்பு முறையாகும். வலைகளில் மாட்டிய மீன்கள் வெளியே செல்ல முயற்சிக்கும். பெரிய வகை மீன்கள் செல்ல முடியாமல் மாட்டிக்கொள்ளும். மீன் இனம் மற்றும் மீன் அளவுக்கு ஏற்றது போல் வலை விரிக்க வேண்டும்.

மா பாச்சு வலை

இவ்வகை வலையில் மூன்று அடுக்குகள் உள்ளன. வெளி மற்றும் உற்பகுதியை சாதாரண கண்ணி மூலம் ஆனது. ஆனால் நடுபகுதியை உயர்ந்த கண்ணியால் பொருத்தப்பட்டுள்ளது. வலையை செங்குத்தாக மிதக்கும் படி தொங்கவிடும் போது மீன்கள் மாட்டிக்கொள்ளும்.

சிக்க வைக்கும் வலை

இந்த வலை செவுள் வலையை போன்றது. ஆனால் பிரிந்திருக்கும். சிறிய அளவு மற்றும் குறைவாக மிதக்கும். இதில் செவுள் வலையை விட நிறைய மீன்களை பிடிக்கலாம்.

ஆயிரங்கால தூண்டில்

இது ஒரு எரிபொருள் ஆற்றல்மிக்க மீன் பிடிப்பு வலையாகும். இந்த வலையில் மிதவை மற்றும் அடிமட்டத்தில் உள்ள சுறா, சுவாட் போன்ற மீன்களை பிடிக்கலாம், பெரிய வகை தூண்டில் (50-100 கி.மி). இதில் மென் வலை மற்றும் கொக்கிகளை இடைவெளி விட்டு பொருத்திவிட வேண்டும். இதில் மீன்கள் இன கவர்ச்சிக்கு ஏற்றவாறு மாட்டிக்கொள்ளும்.

கழிதூண்டில் மீன் பிடிப்பு

கழிதூண்டில் மூலம் ஒரே இன மேற்பரப்பில் உள்ள மீன்களை பிடிக்கலாம். சூரை மீன்களை பிடிக்க இந்த தூண்டில் மிகவும் ஏற்றதாகும். இந்த தூண்டிலில் இறையை பயன்படுத்தி படகுக்கு பக்கததில் உள்ள மீன்களை கவர்ந்து பிடிக்கலாம். தூண்டிலில் கொக்கி பொருத்தப்பட்டிருக்கும். இதை இயக்க இயந்திரம் அல்லது விசை மூலமாக மீன்களை பிடிக்கலாம்.

போலி இரை மீன் பிடிப்பு

கணவாய் மீன்களை பிடிக்க போலி இரை மிகவும் உதவுகிறது. போலி இரை என்பது ஒரு வகையான ஈர்க்கும் இரை. இதை தூண்டிலுடன் இணைத்து இயந்திரம் மற்றும் கை மூலமாக மீன்களை பிடிக்கலாம். மீன்கள் இரையை இழுக்கும் போது மாட்டிக்கொள்ளும். ஒளி ஈர்ப்பு மூலம் எப்பொழுதும் இரவில் போலி இரை மீன்பிடிப்பை பயன்படுத்துவார்கள்.

பொறி

மீன்பிடி பொறி

ஒரு குறிப்பிட்ட இடத்தில் வலைகளை வீசிவிடுவார்கள். மாட்டிய மீன்களை வலையிலிருந்து தப்பி செல்லாமல் இருக்க நங்கூரத்தை உபயோகிப்பார்கள். ஒரு சில வேலையில் பெரிய வலைகளை பயன்படுத்தி மீன்களை பொறிக்குள் சிக்க வைப்பார்கள். கெரிங், சூரை போன்ற மீன்களை இந்த பொறி மூலம் பிடிக்கலாம்.

வலைக்கு ஏற்றவாரு பொறியை தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தேவையில்லாத (அ) குறைந்த இடைகொண்ட மீன்களை திரும்ப கடலிலேயே விட்டுவிடுவரர்கள். இந்த பொறியில் கடல் பறவை மற்றும் பாலூட்டிகள் மாட்டிக்கொள்ளும்.

மீன்களை கவரும் சாதனங்கள்

மீன் இனங்களில் பல, மற்ற உயிர் இனங்களுடன் இணைந்து வாழ்கின்றன. அல்லது மிதக்கும் பொருள்களை சார்ந்து வாழ்கின்றது. இதனால் மீன்களும் மேலே மிதக்கும் தன்மை கொண்டுள்ளது. அப்பொழுது சில சாதனங்களை பயன்படுத்தி மேலே உள்ள மீன்களை பிடிக்கலாம். மீனவர்கள் இந்த சாதனங்ளை படகுடன் இணைத்து மீன்களை கவர்ந்து பிடிக்கின்றனர். (எ.க) ஓடுகயறு, மீன்பிடி பொறி, தூண்டில், இன்னும் பல.

மீன்பிடிப்பு கலன்கள்

பெரிய அளவில் மீன்பிடிக்க மிகவும் முக்கியமானவை மீன்பிடிப்பு கலன்கள். கடல் மற்றும் நன்னீர் மீன்பிடிப்பிற்கு பெரிய வகையான மீன் பிடிப்பு படகுகள் வடிவமைத்துள்ளனர். இந்தியாவில் இரண்டு வகையான மீன் பிடிப்பு கலன்கள் உள்ளன. இயந்திரம் மற்றும் இயந்திரமில்லாமல் இயங்கக்கூடிய படகுகள்.

இயந்திரமற்ற படகுகள்

கட்டுமரம், கடல் தோண்டி, தோணி, மரப்பலகை தோணி, மிதவை தோணி, மசுலா படகு, கட்டமைப்பு படகு ஆகியவை இயந்திரமற்ற படகுகள் ஆகும்.

கட்டுமரம்

இது ஒரு எளிமையான மீன்பிடிப்பு கலனாகும். சில வளைவு மரத்துண்டுகளை இணைத்து கட்டுமரமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் இதை கிழக்கு கடற்கரை பகுதிகளில் உபயோகிக்கின்றனர். இந்தியாவில் நான்கு வகையான கட்டுமரம் உள்ளது. ஒரிசா வகை, ஆந்திரா வகை, கோரமண்டல் வகை மற்றும் கன்னியாகுமரி வகை கட்டுமரம்.

கடல்தோண்டி தோணி

இதும் ஒரு எளிமையான மீன்பிடிப்பு தோணி வகை. இதை வைத்து கடற்கரை அருகில் இருக்கின்ற மீன்களை பிடிக்க உதவும். சிறு அளவுடைய தோணி மரபலகையினால் செய்யப்பட்டது.

இந்தியாவின் தென்கிழக்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் ஓடம், தோணி, வன்சியஸ் ஆகியவற்றை மீன் பிடிக்க பயன்படுத்துகின்றனர்.

மரப்பலகை தோணி

இது பெரிய வகையான தோண்டி தோணி, மரப்பலகையினால் ஆனது. கேரளாவில் பயன்படத்துகின்றனர்.

மசுலா படகு

மசுலா படகு ஆந்திராவில் அதிகம் உள்ளது. பாய்மரத்தை தென்னை நாரால் ஆன கயிறு மூலம் இணைத்து பயன்படுத்துகின்றனர்.

திங்கி

செதுக்கிய படகுகளை திங்கி என்பர். இது பல விதமாக மீன்பிடிக்க பயன்படும்.

வெளிமரத்தோணி

மரப்பலகையுடன் வெளியே ஒரு மரதோணியை இணைத்தால் வெளிமரத்தோணி. இது ரம்பணி படகு போன்றது. கர்நாடகாவில் பயன்படுத்துகின்றனர்.

இயந்திர படகுகள்

மீன் பிடிக்க சிறு அல்லது நடுத்தர (10-15 மி.நீளம்) படகுகளில் இயந்திரம் மூலம் தொலைவான இடஙகளுக்கு சென்று மீன்பிடிக்கின்றனர். தூண்டில் படகு,பொறி படகு, செவுள் வலை, விசை மீன்பிடிப்பு கலன் ஆகியவை இயந்திர படகுகளாகும்.

கை தூண்டில் படகு

கைத்தூண்டில் படகு கடல் ஆழமில்லாத மற்றும் ஆழமுள்ள இடங்களில் உபயோகிக்கலாம். இந்திய மீன்பிடிப்பு படகில் கொக்கியுடன் 0.5மி.மீ-1மி.மீ அளவில் அமிழ்கட்டையில் ஒரு சிறு கல்லை கட்டி இயந்திரம் மூலம் இயக்குவார்கள். இந்த படகில் அனைத்து மீன்களையும் பிடிக்கலாம்.

கழி மூலம் மீன்பிடிப்பு

படகில் கழிகளை இணைத்து படகு தளத்தின் மேல் கலன்களை சேர்த்து அட்டியை முன்பகுதியில் அம்பு வடிவத்தில் கழிகளை வைத்து மீன் பிடிப்பார்கள். இந்தியாவில் இதை ‘மஸ் ஒடி’ என்பார்கள்.

செவுள் வலை

செவுள் வலைக்கு ஏற்றவாறு கலன் அளவை பயன்படுத்தலாம். வலையின் எண்ணிக்கை கலன் அளவை பொருத்தே அமையும். படகின் முகப்பு முதல் அட்டி வரை உள்ள மீன்பிடிப்பு கலன்கள் ஒரு கூட்ட மீன்களை பிடிக்கலாம். இதில் இயந்திர அரை உள்ளது. படகில் செவுள் வலை வைக்க பின்புறம் இடம் அமைந்தள்ளது. படகு முழுவதும் இயந்திரம் மூலம் இயக்கப்படும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. மீன்குளம் அமைப்பது பற்றி கூறவும்?

ஒரு மீன் வளர்ப்புக் குளத்தைக் குறைந்தது ¼ ஏக்கர் (1000 ச.மீ) பரப்பிலாவது அமைத்தால், இலாபகரமாக மீன் வளர்ப்பை மேற்கொள்ளலாம். மீன் வளர்ப்புக் குளங்களைச் செவ்வக வடிவத்தில் சுமார் 1 ஏக்கர் முதல் 2.5 ஏக்கர் (1 எக்டர்) கொண்டவைகளாக அமைத்துக் கொள்ளலாம். குளங்களைச் சதுர வடிவில் அமைக்கும் போது அமைக்க வேண்டிய கரையின் நீளம் குறைகிறது. இருப்பினும், மீன்களை எளிதாக அறுவடை செய்வதற்கு செவ்வக வடிவ குளங்களே ஏற்றவை. தற்போது தண்ணீர் பற்றாக்குறை அதிகரிப்பதால் குளங்களை ¼ முதல் 1 ஏக்கர் பரப்பளவு கொண்டவைகளாகவும் அமைத்துக் கொள்ளலாம்.

2. குளங்களை ஏன் காய வைக்க வேண்டும்?

இதனால், குளங்களின் அடிப்பகுதியிலுள்ள அங்ககக் கழிவுகள் மற்றும் சேற்றிலுள்ள நச்சுயிரினங்கள், போன்றவை அழிக்கப்படுவதோடு, அடிப்பகுதியிலுள்ள நச்சு வாயுக்களும் வெளியேறுகின்றன. குளத்தை வடித்த நிலையில் கரிய நிறத்துடனும் துர் வாடையுடனும் காணப்படும் அடிப்பகுதி காய்ந்த பிறகு அங்குள்ள நச்சுத்தன்மை குறைவதால், நிறம் மாறி துர்வாடையின்றி இருக்கும். குளங்களை வருடம் ஒருமுறை நன்கு காயவிடுவதால், குளங்களின் உற்பத்தித் திறனைச் சிறப்பாகப் பராமரிக்கலாம்.

3. ஒரு எக்டர்க்கு எத்தனை மீன் குஞ்சுகளை இருப்பு செய்யலாம்?

ஒரு எக்டர்க்கு 5,000 முதல் 10,000 வரை விரலளவு வளர்ந்த குஞ்சுகள் என்ற அளவில் இருப்புச் செய்யலாம். மீன்குஞ்சுகளைப் பொறுத்தமட்டில் குறைந்தபட்சம் 3 - 4 அங்குல நீளும் வளர்ந்தவையாக இருத்தல் நல்லது.

4. மீன்களை எத்தனை முறை அறுவடை செய்யலாம்?

பொதுவாக தற்போது கடைப்பிடிக்கப்படும் வளர்ப்பு முறைகளில் குளங்களில் விடப்படும் மீன்கள் அனைத்தும் ஒரே எடையுடன் சீரான வளர்ச்சியை பெறுவதில்லை. எனவே மீன்களை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்வதைவிட அவ்வப்போது வளர்ந்த மீன்களை பகுதி பகுதியாக அறுவடை செய்வது நல்லது. வளர்ந்த மீன்களை அவ்வப்போது அறுவடை செய்வதன் மூலம் குளத்திலுள்ள மீத மீன்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம். நமது பகுதியில் விற்பனைக்கு உகந்த எடையை மீன்கள் அடையும் போது மீன்களை அறுவடை செய்யலாம். விரால்களை இருப்புச் செய்து வளர்க்கும் பண்ணைகளில், சாதாரணமாக ஆறு மாதங்களுக்கு மேல், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யலாம்.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்