வீணாக்கப்படும் உணவும், உணவு பற்றாக்குறையும்

இன்றைய தேதியில் உலகத்தில் 700 கோடி பேர் உள்ளனர். 2050 ஆண்டு இந்த மக்கட்தொகை 900 கோடி எட்டும் என கணக்கிட பட்டு உள்ளது.

அமெரிக்காவில் அதிகமான வறட்சி. ஆஸ்ட்ரேலியா அப்படியே. 40% சதவீதம் குறைந்து சாகுபடி செய்த வருடங்கள் அவை. அப்படியும் உலகில் 2239 மில்லியன் டன் உணவு உற்பத்தி ஆனது. உலக உணவு நிறுவனம் கணக்கு படி இந்த உணவில் 1300 கோடி மக்கள் உணவு அளிக்க முடியும்!

அதாவது இன்றைய உணவு உற்பத்தியிலேயே இன்றைய மக்கள் தொகையை போன்று 2 மடங்கு தாக்கு பிடிக்க முடியும். அப்படியானால் உணவு எங்கே போகிறது?

மேற்கத்திய நாடுகளில் 40% உணவு வீணாக்க படுகிறது. ஒரு வருடத்தில் $165 பில்லியன் அளவு உணவு வீணாக போகிறது. தேவையில்லாமல் வாங்குவது, தூக்கி போடுவது, போன்று பல காரணங்கள். சூபர் மார்க்கெட்களில் 50% வரை காய்கறிகளும் பழங்களும் அழுகி தூக்கி போட படுகின்றன.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 66 மில்லியன் டன் உணவு ஸ்டாக்கில் இருந்தது. சரியாக சேமிக்காமல் மழையிலும் பூச்சிகளாலும் கெட்டு போனவை பல மில்லியன் டன்கள். இது போதாது என்று 9 மில்லியன் டன் அரிசி நாம் ஏற்றுமதி செய்கிறோம். நம் நாட்டில் பட்டினியும் பசியும் இருக்கும் போது இப்படி உணவை வீணாக்கி ஏற்றுமதி செய்து பற்றாக்குறை செயற்கையாக அரசுகள் செய்கின்றன.

இது முழுக்க முழுக்க விநியோகம் பிரச்னையே (Distribution problem) தவிர குறைந்த உற்பத்தி (Not production problem) மூலம் வந்த பிரச்னை அல்ல. விளைவதை நன்றாக சேமித்து விநியோகம் செய்தாலே பசி பட்டினி குறையும்

ஆதாரம்: பசுமை தாயகம்