சம்பா முடிந்ததும் அவசியம் கோடை உழவு செய்யவேண்டும். தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வடகிழக்கு பருவக்காற்று மழைபெய்யும் மானாவாரி நிலங்களில் இருபோக பயிர்சாகுபடி நடைமுறையில் உள்ளது. முதற்பயிர் சாகுபடி ஆனி-ஆடி மாதங்களில் துவங்கி, இரண்டாவது பயிர் தை மாதத்தில் அறுவடை செய்யப்படுகிறது. இடைப்பட்ட காலமான மாசி-வைகாசி வரை நிலம் உழவின்றி பல்வேறு இழப்புகளுக்கு ஆளாகும் நிலையில் தரிசாக உள்ளது. அப்பொழுது நம் வயலை உழுது புழுதிக்கலாக செய்யவேண்டும்.

கோடை உழவின் அவசியம்

1.தைமாத அறுவடையின் போது, சாகுபடி செய்த பயிரிலிருந்து கொட்டிய இலைச்சருகுகள் நிலத்தின் மேல் போர்வையாக இருக்கும்.

2.அறுவடைக்குப்பின் வேரின் அடிக்கட்டைகள் மக்குவதற்கு அதிக வாய்ப்பின்றி இருக்கும்.

3.மேல்மண் இறுக்கமாக காணப்படும். இதனால் மழை நீர் பூமிக்குள் இறங்காமல் மேல் மண்ணுடன் மழை நீர் வெளி ஏறும்.

4.நிலத்தோடு மக்க வேண்டிய பயிர்கள் சருகுகள் காற்றுவீசும் போது வேறு இடங்களுக்கு எடுத்து செல்லப்படும்.

5.முந்தைய பயிரின் தூர்கள் கரையானின் தாக்குதலுக்குட்பட்டு பயனின்றி விரயமாகும்.

கோடை உழவு செய்தல்

1. பயிர் அறுவடையான உடன் உழவு செய்தல் வேண்டும்.

2. ஒவ்வொரு மழைக்குபின் உழவு அவசியம்

3. நிலச்சரிவில் குறுக்கா, மணற்பாங்கான நிலத்தில் மேலாகவும் உழவும்.

4. 2-3 வருடத்திற்கு ஒருமுறை சட்டிக் கலப்பை கொண்டு உழவு செய்யவேண்டும்.

கோடை உழவு செய்வதால் கிடைக்கும் பயன்கள்

1. மண் மிருதுவாகி மழை நீரை ஈர்க்கும் திரன் அதிகமாகிறது.

2. மண் அரிமானம் கட்டுப்படுத்தப்பட்டு சத்துக்கள் விரையமாவது தடுக்கப்படுகிறது.

3. முதற்பயிரின் தூர்கள் மக்கி களைகள் கட்டுப்படுத்தப்படுகிறது.

4. சிகப்பு கம்பளிப்புழு அழிக்கப்படுகிறது.

ஆதாரம்: இன்றைய வேளாண்மை