விவசாயம் சார்ந்த பல்வேறு தகவல்களையும் மற்றும் தொடர்புடைய இதர சேவைகளையும் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக தமிழ்நாடு முதலமைச்சரால் 2018 ஆம் ஆண்டு உழவன் செயலி தொடங்கி வைக்கப்பட்டது. உழவன் செயலியின் முக்கிய சேவைகள் மானியம் மற்றும் திட்டங்கள்: வேளாண்மைத் துறை வழங்கும் மானியத் திட்டங்கள் பற்றிய தகவல்களை அறிவது மற்றும் பயிர் காப்பீடு விபரங்களைப் பெறுதல். இடுபொருள் முன்பதிவு: விதைகள், நாற்றுகள் மற்றும் உரங்களுக்கு முன்கூட்டியே முன்பதிவு செய்தல். கருவிகள் வாடகை: டிராக்டர், வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு எடுக்க உதவும் E-வாடகை வசதி. வானிலை மற்றும் சந்தை விலை: தினசரி வானிலை அறிக்கை மற்றும் சந்தைகளில் நிலவும் பயிர் விலைகளை அறிதல். வேளாண் ஆலோசனைகள்: பயிர் சாகுபடி தொடர்பான தகவல்கள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறுதல். பயிர் காப்பீடு விபரம் - அறிவிக்கப்பட்ட (Notified) கிராமங்களுக்கு பயிர் வாரியான காப்பீட்டுக் கட்டணம், காப்பீடு செய்வதற்குத் தேவையான ஆவணங்கள், அணுக வேண்டிய இடங்கள் மற்றும் பயிர்க்காப்பீட்டின் தற்போதைய நிலை பற்றிய தகவல்கள். ATMA பயிற்சி மற்றும் செயல்விளக்கம் அணை நீர்மட்டம்: தமிழகத்தின் முக்கிய நீர்த்தேக்கங்கள் மற்றும் மேட்டூர் நீர்த்தேக்கத்திற்க்கு ஆதாரமாய் விளங்கும் கர்நாடகாவின் உள்ள நான்கு முக்கிய அணைகளின் தினசரி நீர் அளவு. உழவன் இ-சந்தை: விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்தவும், கொள்முதல் செய்யும் வியாபாரிகள் மற்றும் தேவை விவரங்கள். உழவன் செயலி - பயன்படுத்தும் முறை உழவன் செயலியினை ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐபோன் (iPhone) ஆகிய இரண்டு கைபேசியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.