கரும்பு

ஒரு வருடத்தில் சராசரியாக 12000 ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டு வருகின்றது.

கரும்பு பயிரில் நடவுப் பயிரை விட மறுதாம்பு பயிரில் நுண்ணூட்டச் சத்துப் பற்றாக்குறையால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

தாளை பூத்தல்

மறுதாம்பில் இளம் கரும்பு பயிரில் இரும்புச் சத்துப் பற்றாக்குறையில் இலைகள் மஞ்சள் நிறமாகி நாளடைவில் கரும்பின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதற்கு தாளை பூத்தல் என்று பெயர்.

வழிமுறைகள்

இதனைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு பெரஸ் சல்பேட் 4 கிலோ, சிங்க் சல்பேட் 2 கிலோ 2 நுண்ணூட்டச்சத்தையும் முதள் நாள் இரவில் 10 லிட்டர் (1 குடம்) தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் 2 எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நன்கு கலக்கி வடிகட்ட வேண்டும்.

அத்துடன் 4 கிலோ யூரியாவைச் சேர்த்து கலக்கி அந்தக் கரைசலைக் கைத்தெளிப்பான் கொண்டு 14 டேங்க் காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும்.

இதன்படி தெளித்தால் 10 நாள்களுக்குள் மஞ்சள் நிறம் மாறி துளிர்த்து வரும் இலைகள் பச்சை நிறமாக வளரும்.

ஒருமுறை தெளித்து மஞ்சள் நிறம் மாறவில்லை எனில் 15 நாள்கள்

கழித்து மறுமுறையும் மேற்கண்டவாறு தெளிக்க வேண்டும்.

இதனால் பயிர்கள் நன்றாக வளர்ந்து, கரும்பு எடை கூடி மறுதாம்பு வயலிலும் அதிக மகசூல் பெற முடியும்.

எனவே கரும்பு விவசாயிகள் மேற்கண்ட தொழில் நுட்பத்தைக் கடைப்பிடித்து அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம்.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைத்துறை